Monday, March 15, 2010

கதம்பம் - 15/03/10

கதம்பம் என்ற தலைப்பில் நான்தான் முதலில் எழுதிவந்தேன் என நமது மரியாதைக்குரிய மூத்த பதிவர் திரு.லதானந்த் அவர்கள் தனது வலையில் எழுதியிருப்பதாக நண்பர் சுட்டி தந்தார். முதலில் எழுதிய தேதி முதற்கொண்டு ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் நமது சக பதிவர் ஜாக்கி சேகர் முதலில் காக்டெயில் என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்தார். நான் பின்னூட்டத்தில், “ இதே தலைப்பில் கார்க்கி எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் வேறு தலைப்பில் எழுதினால் நலம்” என்றேன். அவரும் உடனே நன்றி சொல்லி சேண்ட்விச் என்ற பெயரில் எழுதுகிறார். இதே போல் திரு.லதானந்த் அவர்களும் சுட்டியிருந்தால் உடனே சரி செய்திருக்கலாம்.

அது சரி பெயரில் என்ன இருக்கிறது? உள்ளடக்கம்தானே ராஜா.

அவரது வயது மற்றும் அனுபவம் இரண்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்தப் பத்தியை இனி வேறு பெயரில் எழுத உத்தேசம். நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்.

இது வரை வந்த பரிந்துரைகள்
வானவில் / கலைடாஸ்கோப் / தோரணம்

************************************************************

இந்தப் பெயர் வைக்கும் விவகாரத்தில் வைரமுத்து கில்லாடி. அவர் எழுதிய இரண்டு நாவல்களில் ஒன்று இதிகாசம் மற்றொன்று காவியம்.

படைப்புகள் காலத்தால் அழியாமல் காவியம் என்றும் இதிகாசம் என்றும் நிலைத்திருக்கையில் அன்னார் தலைப்பு வசீகரம். புத்தகம் தலைப்புக்கு நேர்மை செய்யவில்லை என்பது வேறு விஷயம்.

அவர் நல்ல திரைப்பாடலாசிரியர் என்பது உண்மை. நல்ல நாவலாசிரியரா?


************************************************************

அனல்காற்று - ஜெயமோஹன் எழுதி தமிழினி வெளியிட்ட நாவல்.

பொருந்தாக் காமம் மற்றும் பருவக் காதல் இரண்டிற்கும் இடையில் அல்லாடும் ஒருவனின் கதை.

சீன் பை சீன் ஆக ஒரு திரைக்கதை மாதிரியே எழுதி இருக்கிறார். படித்து முடித்து பின் முன்னுரையைப் படிக்கும்போதுதான் தெரிகிறது பாலு மகேந்திரா கேட்டதற்காக எழுதிய கதையாம் அது. படமாக எடுக்கப்படாமல் நின்று விட்டது.

ஒரே மூச்சில் படிக்க வைத்தது ஜெ மோ வின் எழுத்து. காமத்தையும் காதலையும் அதனதன் இயல்புடன் வெகு நேர்த்தியாகச் சொல்லி இருக்கிறார். கதாசிரியர் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல் விஷயத்தை அதன் போக்கில் சொல்லி இருப்பது சிறப்பு.

நல்ல நாவல்.

************************************************************

இந்த முறை மண்குதிரையின் கவிதை.

எங்கள் ஊருக்கு கடவுள் வந்திருந்தார்

எதிர் வீட்டு கருப்பசாமி அண்ணன்
தன் குடும்ப அட்டையை
30 ருபாய்க்கு வாடகைக்கு விடுவதை
பார்த்துவிடுகிறார்

எங்கள் வீதியின் முடிவில் இருக்கும்
ஒரு நியாயவிலை அங்காடியில்
தராசு முள் சரிவதை
தன் நுட்பமான பார்வையால்
கண்டுபிடித்து விடுகிறார்

வட்டாச்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற
நகரின் முக்கியமான சந்திப்பில்
தேநீர் அருந்த நுழையுமவர்
பின்பக்கம் சில ஆயிரம் ரூபாய்க்கு
ஒரு அரசு அதிகாரி தன் கையெழுத்தை
விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறார்

புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது
அங்கொரு ஏழைப் பெண்ணின் கற்புக்கு
நெடிய பேரம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ச்சியடைகிறார்

நிதானமின்றித் துடிக்கும் தன் மனதை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
சன்னதி தெருவிலிருக்கும் பெரிய கட்டிடத்திற்கு வருகிறார்
அங்கே எங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வர் காட்சியளித்துக் கொண்டிருப்பதே
அந்த அதிகாரியின் கையெழுத்தை விற்ற காசில்தான்

விரக்தியடைந்து
தேர்ந்த மொழியால் எங்களைச் சபித்தவாறு
விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தவர்
முக்கியமான சாலையைக் கடக்கும் போது
நாங்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ கட்டிய பாலம் இடிந்து
சிகிச்சை பலனின்றி
எங்கள் அரசு பொது மருத்துவமனையில் மரணமடைகிறார்

ஒரே கவிதையில் இப்படி சமூகச் சீரழிவுகள் அனைத்தையும் சாடமுடியுமா? சாடியிருக்கிறார். நன்றாக இருக்கிறது. உண்மை சுடுகிறது.

************************************************************

சின்னவளின் சைக்கிள் பஞ்சர் ஆகி விட்டதால் அதை ஒட்ட சைக்கிள் கடை தேடினோம். ஒரு கடையைக் கண்டதும் நான் நின்றேன். அவள் இங்கே வேண்டாமென்றாள்.

“ஏண்டா?” என்றதற்கு பெயர்ப்பலகையைச் சுட்டிக் காட்டினாள்.

“இங்கு பஞ்சர் போடப்படும்”

நல்லா இருக்க டியுபைப் பஞ்சர் செய்வார்களோ?


80 பேரு பாராட்டியிருக்காங்க:

தண்டோரா ...... said...

just for a hello!

செல்வராஜ் ஜெகதீசன் said...

நல்லா இருக்குங்க வேலன்.
குறிப்பாய் மண்குதிரை கவிதையும் வைரமுத்து பற்றிய
குறிப்பும்.

மஞ்சூர் ராசா said...

நல்லாவே கலந்துக்கட்டியிருக்கீங்க.


“ கலந்துக் கட்டியவை “ இந்த பெயர் கூட வைக்கலாமே!

கவிதை நன்றாக இருக்கு.

எறும்பு said...

அண்ணாச்சி,

கவிதை அருமை..

தலைப்பு கூட்டாஞ்சோறு (எங்கூர்ல எல்லா காய், வடாம் எல்லாம் போட்டு பண்ணுவோம்)

பிரகாசம் said...

மலர்ச்செண்டு என்ற பெயர் யாரும் உபயோகப்படுத்தாமல் இருந்தால் வையுங்கள்

மஞ்சூர் ராசா said...

கதம்ப மாலை என்று வைக்கலாம், புதிய பெயர், அதே நேரத்தில் பழைய பெயரும் இருப்பதால் மக்களுக்கும் குழப்பம் ஏற்படாது

இரும்புத்திரை said...

மகரந்தம், துகள்கள், அல்லது மகரந்தத் துகள்கள் என்று வைக்கலாம்.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க அண்ணாச்சி!

கலை டாஸ்கோப்பு சரி வருமா பாருங்களேன்

:)

கோவி.கண்ணன் said...

//அவரது வயது மற்றும் அனுபவம் இரண்டுக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்தப் பத்தியை இனி வேறு பெயரில் எழுத உத்தேசம். நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்.//

'கலக்கல்' !

:)

(என்னுடைய பரிந்துரை தலைப்பு.

தராசு said...

அண்ணாச்சி,

வைரமுத்து இன்னும் நிறைய நாவல்கள் எழுதியிருக்கிறார்.
வானம் தொட்டு விடும் தூரம்தான் என ஒன்று, தண்ணிர் தேசத்தை நாவலில் சேர்ப்பதா, இல்லை கவிதையில் சேர்ப்பதா என தெரியவில்லை.

அப்புறம் தலைப்பு - ஹி, ஹி, தெரிஞ்சா சொல்லுவம்ல.....

சுடுதண்ணி said...

/நல்ல பெயரைப் பரிந்துரையுங்களேன்/

தோரணம் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

சொல்லப்பட்டதில் கதம்பமாலை, மலர்ச்செண்டு இரண்டும் நன்று. நீ ஏதாவது பேர் சொல்லப்பாங்கிறீங்களா? நான் எனக்கே பேர் கிடைக்காம அலைஞ்சுக்கிட்டிருக்கேன். :-)

இரும்புத்திரை said...

@ஆதி

நீங்க சரவெடி என்ற பெயரில் எழுதலாம்.

விக்னேஷ்வரி said...

"வேலன் கதம்பம்"ன்னு வெச்சுக்கலாம் சித்தப்பு.

வைரமுத்துவை நல்ல திரைப்படப்பாடல் ஆசிரியராக மட்டுமே அறிவேன்.

நாவலைப் பத்திரமாக வைத்திருங்கள் கோவை வரும் போது வாங்கிச் செல்கிறேன்.

கவிதை நல்லாருக்கு.

பொண்ணு உங்களை மாதிரி இல்ல, அம்மா மாதிரி. :)

அதிஷா said...

பெயரில் என்ன இருக்கிறது?

அன்புடன் அருணா said...

பேல்பூரி! இதெப்பிடியிருக்கு!

வடகரை வேலன் said...

நன்றி தண்டோரா.
நன்றி செல்வா
நன்றி ராசா.
நன்றி எறும்பு. கூட்டாஞ்சோறு பெயரில் லக்கி எழுதினார்.
நன்றி பிரகாசம்.
நன்றி அரவிந்த்
நன்றி நேசமித்ரன
நன்றி கோவி

நன்றி அரசு. பாடல் இயற்றும்போது இருக்கும் வீச்சு அவருக்கு நாவலில் கைகூடவில்லை. அதுதான் நன்ன் சொல்ல வருவது. ஆனால் அவரது காவியமும் இதிகாசமும் கர்வத்தின் உச்சகட்டம்.

காவியம் என்ற நாவல் கண்மணி குணசேகரனின் அஞ்சலைக்கு உறைபோடக் காணாது.
இதிகாசம் விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் அருகில்கூட வராது.

விளம்பர வெளிச்சம் படுத்தும்பாடு இதெல்லாம்.

நன்றி சுடுதண்ணி
நன்றி ஆதி
நன்றி விக்கி
நன்றி அதிஷா. எப்படி இருக்கிறது மணவாழ்க்கை?
நன்றி அருணா.

அறிவன்#11802717200764379909 said...

வேலன் சார்,
வடகரை வடகறி என்று வையுங்களேன்...(வித்தியாசமாக இருப்பதால்!)..அல்லது வேலன் சொல் என்று கூட வைக்கலாம்..

மண்குதிரை தொடர்பான ஆக்கத்தின் கருத்து நன்றாக இருக்கிறது;ஆனால் அதை கவிதை என்று சொல்கறீர்கள் பாருங்கள்,அதுதான் கஷ்டமாக இருக்கிறது !

நர்சிம் said...

கலம்பகம்.

நாளும் நலமே விளையட்டும் said...

மண்குதிரை எழுதியது கவிதையா?
என்னவோ நெடுங்க சொன்ன குட்டி வரிகள் மாதிரி இருந்தது.
யார் இவர்களிடம் அழுதது? வாழ்க்கை எல்லாவற்றையும் ஒரே "பத்திக்குள் "
அடக்குங்கள் என?

இன்னைக்கு பார்த்தோம்ல பிரபல பதிவர் ஆகணும்னா பின்னூட்டம் திட்டி திட்டி எழுதனும்னு.
அதான்.

மணிகண்டன் said...

கிச்சடின்னு வைங்க. நல்லா இருக்கும்.

வடகரை வேலன் said...

நன்றி அறிவன் சார்.

நல்ல கவிதை என்பதற்கான தங்கள் வரையறை என்ன? எது நல்ல கவிதை?
சமகாலத்தைப் பத்திப் பேசும் இந்தக் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது. அதில் ஒளிந்திருக்கும் நையாண்டியைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வரிகள் நீளநீளமாக இருப்பதா பிரச்சினை? கொஞ்சம் விளக்குங்களேன்.

நன்றி நர்சிம்
நன்றி நாளும் நலமே விளையட்டும்
நன்றி மணிகண்டன். அது துக்ளக் மகேஷ் எழுதும் தலைப்பு.

திகழ் said...

மண்குதிரை அவர்களின் வரிகள் அருமை

தோரணம் என்னும் தலைப்பு நன்றாக இருக்கிறது

தண்டோரா ...... said...

அவல்,பொறி,கடலை...
பஞ்சாமிர்தம்...

கலகலப்ரியா said...

mixed salad... healthy-ngo annachi..

T.V.ராதாகிருஷ்ணன் said...

கவிதை அருமை..

வால்பையன் said...

கார்க்கி காகிடெயில் எழுதுவதற்கு முதல் நாள் தான் பரிசலிடம் நான் சொல்லி கொண்டிருந்தேன் அந்த பெயரில் எழுதப்போவதாக, பரிசல் கார்க்கியிடம் சொல்ல, சகா தாமாகவே முன் வந்து நான் வேண்டுமானால் பெயர் மாற்றி கொள்ளட்டுமா என்றார்!

பெயருக்கா பஞ்சம் என்று யோசித்தவன் முதலில் தேர்ந்தெடுத்தது ”சாக்கடை”, எனது பதிவுகள் அனைத்தும் பலருக்கு அப்படி தான் தெரிவதால் “குவியல்” என்று எழுத ஆரம்பித்தேன்!

எனக்கென்னமோ சரக்கின் பெயரை விட சரக்கே மப்பு தருவது மாதிரி தெரியுது! சரக்கில் கவனம் செலுத்துவோம்!

Vijayashankar said...

கோவை பூக்கள் என்று எழுதலாம்!

செல்வேந்திரன் said...

அடுத்து காப்பியம் ஏதாவது எழுதலாம் என்றிருக்கிறாராம் டயமண்ட் கவிஞர்!

Mehar said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)

Rajalakshmi Pakkirisamy said...

வீடு திரும்பல் மோகன் குமார் அவர்கள் எழுதுற தலைப்பு வானவில் ஆச்சே?

S said...

முத்துச்சரம்
ஸ்வீட் காரம் காப்பி
நவரத்தினம்
மசாலா

~~Romeo~~ said...

நாவல் அறிமுகம் அருமை.

Mahesh said...

அண்ணாச்சி நம்ம ரெகமண்டேஷன்ஸ் :

மசால்பொரி
பேல்பூரி

இது எப்பிடி??

குடுகுடுப்பை said...

வடைகறி”வேலன்”

இய‌ற்கை said...

அண்ணாச்சி.. இந்த பேர் சரி வருமான்னு பாருங்க "தொடுத்தவை"

வேற யாரும் இந்த பேர்ல எழுதறாங்களான்னு தெரில‌

ஈரோடு கதிர் said...

பூக்கூடை

கூடுதுறை

முச்சந்தி

பிரிவுசாலை

ஆலமரத்தடி

ஜீவன்சிவம் said...

கூட்டஞ்சோறு

விடு பூக்கள்

லதானந்த் said...

நண்பர்கள் சுட்டி தராமல் போய்விட்டால் என்ன ஆவது! அதனால் நானே சுட்டி தந்திருக்கிறேன். பின்னூட்டத்தை இந்தச் சுட்டியில் பார்க்கலாம்.
http://lathananthpakkam.blogspot.com/2010/03/blog-post_16.html

SanjaiGandhi™ said...

அண்ணாச்சி, கையெழுத்து சூப்பரு.. போகிற போக்கில் என தலைப்பு வைத்துக் கொள்வதில் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை.. :)

கதம்பம் என்ற தலைப்பில் இந்தியா டுடேவில் சில காலம் கலவை செய்திகள் வந்தன..

பார்வை
வேலன் பார்வை
அலைகள்
சில்லுகள்
வடகரை வடகறி :))
பலநானூறு
.. எப்புடீஈஈஈஈ..

சின்ன அம்மிணி said...

வேலனின் வரப்போரம் அப்படின்னு பெயர் வையுங்க

அறிவன்#11802717200764379909 said...

{நல்ல கவிதை என்பதற்கான தங்கள் வரையறை என்ன? எது நல்ல கவிதை?}

முழுக்க சந்த நயம் இல்லா விட்டாலும் சிறிதாவது சொல்அழகு,ஒசை நயம் இருக்க வேண்டாமா?
அது எப்படி புதுக்கவிதையில் இதை எதிர் பார்க்கலாம் என்று கேட்பீர்கள்..மரபளவுக்கு எதிர் பார்க்க முடியாது,நிச்சயம்.ஆனால் ஒரளவுக்கு-ஒரு 10 சதவிகிதமாவது-இருக்க வேண்டும்..
முக்கியமாக மடித்துப் போட்ட உரைநடையாக இருக்கக் கூடாது;இது இருக்கிறது!

வடகரை வேலன் said...

அன்பின் திரு.லதானந்த்,

தங்களது நீண்ட பின்னூட்டத்தைப் பதிவாக வெளியிட்டதற்கு மகிழ்ச்சி.

1. முதல் சுட்டி சரியாக இல்லை. பக்கம் காணப்படவில்லை எனச் சொல்கிறது.

2. தங்களது அடுத்த பதிவுக்குப் பின்னூட்டமிட்டவன் முந்தைய பதிவைப் படித்திருக்கலாம், மறந்திருக்கலாம் ஏன் படிக்காமலும் இருந்திருக்கலாம்.

3. வலையுலகில் பலருக்கு வழிகாட்டிய தாங்கள் இது குறித்து எனக்கு ஒரு மெயில் அல்லது குறைந்தபட்சம் குறுஞ்செய்தியாவது அனுப்பி இருக்கலாம்.

4. என் தொ பே எண் தங்களிடம் இல்லை எனச் சொல்ல வேண்டாம்.

5. ஜாதகம் பார்க்கச் செல்ல வேறொரு பதிவரின் அலைபேசி எண் வேண்டுமெனக் கேட்டது 6 மாதத்திற்கு முன். அப்பொழுதுகூட தாங்கள் இதைப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கலாம்.

6. ஒரு வேளை தங்கள் அபிப்ராயப்படி நான் தவறு செய்திருக்கிறேன் என்றால் அழைத்துச் சொல்லவிடாமல் தடுத்தது எது?

7. நேரில் சொல்ல தயக்கம் எனில் நண்பர் சஞ்செய்யும் தாங்களும் நமக்கல்லில் சந்தித்துக் கொண்டபோதுகூடச் சொல்லி இருக்கலாமே?

8. இப்பொழுதும் என் தவறை உணர்ந்து நான் வேறு தலைப்புத் தேடுகையில் ஏன் வீனாக ஒரு பதிவு அதுவும் தவறான சுட்டியுடன்?

9. ஆக்கப்பூர்வமாகச் செய்யவேண்டியவை அனேகம் இருக்க இந்த அக்கப் போரெல்லாம் வேண்டாம் என்பதுதான் என் கொள்கை. வலையில் என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

10. என் அலை வரிசையில் ஒத்து வராதவர்களுடன் நான் எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை, அவர்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என ஒதுங்கி இருப்பவன் நான்.

11. இதிலும் என்னை நேரடியாக, ஏதோ நான் விரும்பி அந்தத் தலைப்பை எடுத்துக் கொண்டேன் என்ற தொனி இருப்பதுதான் என்னை எழுதத் தூண்டியது.

12. என்னதான் மனதளவில் தாங்கள் இளைஞர் என்றாலும் என்னைவிட வயதில், அனுபவத்தில், அறிவில், பதவியில், பத்திரிக்கை உலகப் பங்களிப்பில் மூத்தவர் என்ற உண்மையத் தானே சொல்லி இருக்கிறேன். இதில் தாங்கள் காயப்பட ஏதும் முகாந்திரமில்லையே.

13. அப்படி ஏதேனும் தங்களைக் காயப்படுத்தி இருந்தால் அது என் தவறுதான். ஆனால் அது உள் நோக்கம் இல்லாதது என்பதை தாங்கள் அறிய வேண்டுகிறேன்.

14. இதற்கு மேலும் இதைத் தொடர எனக்கு விருப்பமில்லை. தொடர்வதில் ஏதும் அர்த்தமுமில்லை.

15. தன்னிலை விளக்கம் அளிக்க வாய்ப்புத் தந்தமைக்கு நன்றிகளும், நமஸ்காரங்களும்.

அறிவன்#11802717200764379909 said...

(வட)கரையோரம்..

வடகரை வேலன் said...

அன்பின் அறிவன்,

தங்கள் விளக்கம் நன்று(றி).

என்றாலும் நான் மாறு படுகிறேன். சந்தம் ஓசைநயம், சொல்லழகு, மொழியின் வீச்சு என கவிதைக்கு இலக்கணம் இருந்தாலும் புதுக்கவிதை என்பது வேறு வகை.

நல்ல தீவிரமான விஷயங்களைப் பற்றி எழுதப்படும் கவிதை உள்ளடங்கிய விஷயத்தின் அடர்த்தியில் நிற்பது; இந்தக் கவிதை போல.

அது காட்சிப்படுத்தும் படிமங்கள்தான் நம்முன்னே எழுகின்றன. அதன் பாதிப்பு நம்முள்ளே கொஞ்ச நேரம் இருக்கும்.

அதே சமயம் இதை நல்ல மொழி நயம், சொல் நயமிக்க கவிதையாக எழுதியிருந்தால் அந்த அழகுதான் நம் மனதில் நிற்குமே தவிர அது எழுப்பவேண்டிய எணர்ச்சிகளை எழுப்பாது.

அவலத்தைச் சொல்லும் பாடலகளில் கண்ணதாசன் தத்துவத்தைச் சொல்லி இருப்பார். ஆனாலும் அதிலுள்ள சந்தம்தான் நின்றதே தவிர தத்துவம் மறந்துவிட்டது.

பேரை நீக்கிப் பிணம் என்று பெயரிட்டு என்ற பாடல் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது தராத அதிர்ச்சியும் தாக்கதத்தையும் ”இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்” என்ற வசனம் தருகிறதல்லவா? இதைத்தானே நெருநல் உளனொருவன் என்றார் வள்ளுவர்.

நீயும் நானும் ஒரே ஊர் வாசுதேவ நல்லூர் கவிதை படித்திருப்பீர்கள் இதில் என்ன சந்தம் இருக்கு? ஆனாலும் அந்தக் கவிதை காலத்தைத் தாண்டி நிறபதற்குக் காரணம் அதனுள் இருக்கும் நையாண்டிதான்.

கருணாநிதி கையில் பவர்
அவருக்கு உடம்பில் சுகர் என வாலி ஜல்லியடித்தது ஒரு வகை. ஆனால் அதில் கலைவடிவம் ஏதுமில்லை; கொலைவடிவம் உண்டு.

பின்னூட்டம் நீண்டு விட்டது பிறிதொரு நாள் மின்னரட்டையில் விவாதிப்போம்.

நல்லதொரு விவாதம். நன்றி.

இரா.சிவக்குமரன் said...

I don't think so, the above title issue is the serious one.

I suggested, you just keep the title''கதம்பம்'' with Mr.lathanth's permission.

one more thing i need to ask,'why Mr.Lathananth has raised this issue after so many days/years. What is the reason behind this?

வடகரை வேலன் said...

Dear Siva,

Thanks for the comment.

Since i have committed i wont comment on this furhter," NO COMMENTS"

As for your question you may ask the same with Mr.Lathananth, who will be in a better postition to make it clear than me; right?

நாளும் நலமே விளையட்டும் said...

போற போக்குல கண்ணதாசன் தத்துவப் பாடல்ல தத்துவம் விட்டுட்டு
சந்த நயம் தான் மிச்சம் அப்படின்னு சொல்லிடிங்க!

நான் நிறைய கவிதை படிச்சது இல்லனாலும் நீங்க போட்டாத என்னால கவிதையா ஏத்துக்க முடியல.
இன்னொருவர் சொன்ன மாதிரி இது என்னவோ ஒரு கதைய ஒடச்சு ஒடச்சு எழுதுன மாதிரி இருக்கு.
"மண்குதிரை" பேரால் தான் இது கவிதை.

வடகரை வேலன் said...

இல்லைங்க. இன்னைக்கு கண்ணதாசன் பாட்டுக்கள வரிக்கு வரி அப்படியே பாடுறவங்க பாத்தீங்கன்னா 40+ வயசுக்காரங்களா இருப்பாங்க.

புதுக் கவிதையின் வசதியே எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காததுதான்.

அறிவன்#11802717200764379909 said...

{கருணாநிதி கையில் பவர்
அவருக்கு உடம்பில் சுகர் என வாலி ஜல்லியடித்தது ஒரு வகை. ஆனால் அதில் கலைவடிவம் ஏதுமில்லை; கொலைவடிவம் உண்டு.}

வேலன் சார்,
ஐயையோ,வாலி செய்வது எல்லாம் வார்த்தை விளையாட்டு சார்...

மற்றபடி புதுக்கவிதைக்கான உங்கள் description எல்லாம் சரி;ஆனால் அந்த வரையறைக்குள்ளும் கவிதைக்கான ஒரு கட்டு இருக்க வேண்டும்.

அது இல்லை என்பதுதான் என் பார்வை..

புதுக்கவிதை பற்றி இந்தியா டுடேயில் சுஜாதா 80 களில் ஒரு கட்டுரை எழுதினார்.அது ஒரு மாஸ்டர் பீஸ்.அதைப் பகிர்ந்து கொள்ள நிரம்பவும் தேடினேன்,கிடைக்கவில்லை இணையத்தில்.

துரதிருஷ்டவசமாக புதுக்கவிதைக்கான இலக்கணங்களை விதிகளுக்குள் கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம்;ஆனால் சுஜாதா அதையும் அந்தக் கட்டுரையில் செய்திருந்தார்..

எளிதாகச் சொல்லப்போனார் புதுக்கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதை விட எப்படி இருக்கக் கூடாது என்பதை எளிதாகச் சொல்லி விடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது !

உங்களுக்கு நேரமிருப்பின் எனது இந்தப் பதிவைப் பாருங்கள்! நன்றி.

☀நான் ஆதவன்☀ said...

//வானவில் /./

இதே தலைப்பில் நண்பர் இளைய பல்லவனும் பல விசயங்களை தொகுத்து எழுதி வருகிறார்.

வடகரை வேலன் said...

அறிவன்,

சந்தோஷமாக இருக்கிறது; இப்படி ஒரு விவாதம் செய்து நெடு நாட்களாகி விட்டது.

நேசமித்ரன், அனுஜன்யா, இசை போன்றோர் கவிதகளை வாசித்துப் பாருங்கள் எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காமல் துள்ளித் திரியும் வகை அவை.

ஆனாலும் என்ன? அவை கடத்த விரும்பிய உனர்ச்சிகளை, ஏன் அதற்கும் கூடுதலாகவே கடத்தி விடுகின்றனவல்லவா?

http://poetthenpandian.blogspot.com/2009/10/blog-post.html

http://anujanya.blogspot.com/2010/02/blog-post_17.html

http://nesamithran.blogspot.com/2010/02/blog-post.html

மேலும் பிறரது கவிதைகளைச் செப்பனிடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. சிலருக்கு அவ்வாறு நான் செய்து தந்திருக்கிறேன் என்றாலும் அது தனிப்பட்ட பரிமாற்றம் இருவருக்குமிடையில் என்ற அளவிலேதான் இருக்கும்.

இன்னொருவருடைய படைப்பை செப்பனிடுவது அவரது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடுவதை ஒப்பதல்லவா?

இந்தக் கவிதை இந்தவிதமாக எனக்குப் பிடித்திருக்கிறது. இது வேறு விதத்தில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமெனில் அவ்வடிவத்தில் நாமேதான் ஒன்றைப் படைக்கவேண்டும். நம்மைப் போல கவிதை எழுத மண்குதிரை எதற்கு?

தெற்றுப் பல்லைச் சரி செய்தால் முகம் இன்னும் பொலிவு பெறுமென்பது உங்கள் வாதம். இருக்கட்டுமே தெற்றுப் பல்லும் ஒரு அழகுதானே?

மேலும் எல்லோருமே குறைவற்ற அழகுடன் இருந்துவிட்டால் திகட்டிவிடுமல்லவா?

நாளும் நலமே விளையட்டும் said...

தெத்துப் பல்லும் அழகு தான்!
அதற்கு முதலில் பல் வேண்டுமே!
கவிதை எனவே சொல்ல முடியாத ஒன்றை கவிதை என்று வரிந்து கட்டிக் கொண்டு
ஏன் போராடுகிறீர்கள்?

மஞ்சூர் ராசா said...

ஒருவருக்கு கவிதையாக தோன்றுவது மற்றொருவருக்கு கவிதையற்றதாக தோன்றலாம்.

இங்கு குறிப்பிட்டிருக்கும் மண்குதிரையில் கவிதை நயம் சிலருக்கு குறைவாக இருக்கலாம்.

அது அவரவர் எண்ணத்தை பொருத்தது.

ஆனால் படிக்கும் போது நம்மை யோசிக்கவைக்கிறது என்பதை யாரும் மறுக்கவும் முடியாது கவிதையே அல்ல என ஒரேயடியாக ஒதுக்கவும் முடியாது.

அறிவன்#11802717200764379909 said...

{மேலும் பிறரது கவிதைகளைச் செப்பனிடுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. சிலருக்கு அவ்வாறு நான் செய்து தந்திருக்கிறேன் என்றாலும் அது தனிப்பட்ட பரிமாற்றம் இருவருக்குமிடையில் என்ற அளவிலேதான் இருக்கும்.

இன்னொருவருடைய படைப்பை செப்பனிடுவது அவரது படைப்புச் சுதந்திரத்தில் தலையிடுவதை ஒப்பதல்லவா? }

வேலன்,
ஒத்துக் கொள்கிறேன்.
கவனித்தீர்கள் என்றால் அக்கவிதைகள் எழுதப்பட்டு காலங்கள் ஆகி விட்டது;மேலும் திருத்துங்கள் என்று நான் அவர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
எனது பார்வையில் கூர்மைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறேன்;அது ஒரு கவிதா வாசகனின் கடமை என்றும் நான் உணர்கிறேன்.
அது ஆசிரியனை ஊக்கப்படுத்துவதோடு அவனின் எண்ணத்தை,பார்வையை,வார்த்தைகளை மேலும் கூர்ப்படுத்துகிறது என்பது எனது எண்ணம்.

அது கூடாது எனில் கவிதைகள் அனைத்தும் தனக்காகவே எழுதிக் கொள்ளப்படவேண்டும்,இல்லையா?

கம்பனின் கவியையே அலசி விட்டுத்தான் இந்த நாடு ஏற்றுக் கொண்டது;நாமெல்லாம் எம்மாத்திரம்?

சமீபத்தில் கூட பதிவர் நர்சிம் ஒரு கவிதை எழுதி இருந்தார்;அது சிறிது மாற்றப்பட்டால் ஒரு ஒப்பற்ற கவிதையாக மாறியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது;அதைத் தெரிவித்தே கமெண்டி'னேன்.

மாற்றங்கள் என்னவென்று நானும் சொல்லவில்லை;அவரும் வினவவில்லை.உங்கள் பார்வையின் படி அவர் அதை ரசிக்காதிருக்கலாம்..

பார்வைகள் பலவிதம்-Perception Differs.

மற்றபடி கவிதைகள் என்ற லேபலின் கீழ் நானும் சில சொந்தக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்;பல இன்னும் இருட்டுப் பக்கங்களில் உறங்குகின்றன...

அறிவன்#11802717200764379909 said...

{மேலும் எல்லோருமே குறைவற்ற அழகுடன் இருந்துவிட்டால் திகட்டிவிடுமல்லவா?}

:))

மற்றபடி எனக்கு,நான் குறைவற்ற அழகுடன் இருக்கிறேன் என்ற மேட்டிமைத் தனமெல்லாம் கிடையாது என்றும் சந்தடி சாக்கில் சொல்லி வைக்கிறேன் !

வடகரை வேலன் said...

//நாளும் நலமே விளையட்டும் said...

தெத்துப் பல்லும் அழகு தான்!
அதற்கு முதலில் பல் வேண்டுமே!
கவிதை எனவே சொல்ல முடியாத ஒன்றை கவிதை என்று வரிந்து கட்டிக் கொண்டு
ஏன் போராடுகிறீர்கள்?//

அறிவன் இதை தகுந்த உதாரணங்களுடன் மறுக்கிறார். நான் அதை கவிதான் என்பதற்கான உதாரனங்களுடன் பேசுகிறேன். நீங்கள் அதைமொத்தமாக மறுதலிக்கிறீர்கள. அப்படிப் பேசுபவர்களுடன் என்னத்தை வாதாட?

வடகரை வேலன் said...

நன்றி அறிவன்.

யார் சரி யார் தவறு என்பதல்ல இங்கே. அவரவர் எண்னத்தைப் பகிர ஒரு வாய்ப்பு அவ்வளவே.

எழுதியதை ரசிக்கலாமே? என்பதுதான் என் எண்ணம்.

மஞ்சூர் ராசா சரியாக்ச் சொல்லி இருப்பதாக எண்ணுகிறேன்.

வடகரை வேலன் said...

//நாளும் நலமே விளையட்டும் said...

தெத்துப் பல்லும் அழகு தான்!
அதற்கு முதலில் பல் வேண்டுமே!
கவிதை எனவே சொல்ல முடியாத ஒன்றை கவிதை என்று வரிந்து கட்டிக் கொண்டு
ஏன் போராடுகிறீர்கள்?//

அறிவன் இதை தகுந்த உதாரணங்களுடன் மறுக்கிறார். நான் அதை கவிதான் என்பதற்கான உதாரனங்களுடன் பேசுகிறேன். நீங்கள் அதைமொத்தமாக மறுதலிக்கிறீர்கள. அப்படிப் பேசுபவர்களுடன் என்னத்தை வாதாட?

நாளும் நலமே விளையட்டும் said...

என் மனதில் பட்டதை முதலில் சொன்னேன். அதற்கு நீங்கள் கவிதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றீர்கள்.
இன்னொருவர் கவிதை எப்படி இருந்தாலும் அது கவிதை தான் என்றார். கவிதையாக தெரியாத ஒன்றை கவிதை என ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை.
மற்றவர் வைரமுத்து எழுதுவது வார்த்தை விளையாட்டு என்கிறார். நாம் எல்லோருமே அதைத் தான் செய்கிறோம்?

வடகரை வேலன் said...

// நாளும் நலமே விளையட்டும் said...

என் மனதில் பட்டதை முதலில் சொன்னேன். அதற்கு நீங்கள் கவிதை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றீர்கள்.
இன்னொருவர் கவிதை எப்படி இருந்தாலும் அது கவிதை தான் என்றார். கவிதையாக தெரியாத ஒன்றை கவிதை என ஏற்றுக் கொள்ள என்னால் முடியவில்லை.
மற்றவர் வைரமுத்து எழுதுவது வார்த்தை விளையாட்டு என்கிறார். நாம் எல்லோருமே அதைத் தான் செய்கிறோம்?//

கவிதைக்கும் கட்டுரைக்கும் என்ன வித்தியாசம். பத்துப் பக்கங்களில் எழுத வேண்டியதைப் பத்து இருபது வரிகளில் சொல்லிச் செல்வதுதானே?

அதன்படிப் பார்த்தால் இந்தக் கவிதையைப் படிக்கும்போது மனதில் காட்சிகள் விரிகிறதல்லவா? பின் என்ன பிரச்சினை? முதலிலேயே நீங்கள் முடிவு செய்துவிட்டீர்கள் அது கவிதை அல்லவென.

உங்களது அளவுகோல்படி அது கவிதை அல்ல. என் வரையறையின்படி அதுநல்ல கவிதை. நோக்கம் நிறை வேறுகிறது.

ராம்ஜி_யாஹூ said...

I am not criticisng man kudirai, but I remember, similar kind of poem has come in the book, KADAVUL VARUKIRAAN JAAKKIRATHAI, i guess it is the first poem in that book.

வடகரை வேலன் said...

// ராம்ஜி_யாஹூ said...

I am not criticisng man kudirai, but I remember, similar kind of poem has come in the book, KADAVUL VARUKIRAAN JAAKKIRATHAI, i guess it is the first poem in that book.//

பொதுவான குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்தல் நல்லது ராம்ஜி. நீங்கள் சொல்வது உன்மை எனில் புத்தகத்தின் பெயர் என்ன? யார் எழுதியது? எங்கு கிடைக்கும்? என்பதைச் சொல்லுங்கள்.

முகிலன் said...

எண்ணச் சிதறல்கள்னு உங்க ப்ளாக் பேர்லயே எழுதலாமே?

வைரமுத்து எழுதின கருவாச்சி காவியம் எனக்குப் பிடித்துத்தானிருந்தது.

அனல்காற்று படிக்கவில்லை. படிக்கத் தூண்டுகிறது உங்கள் குறிப்பு.

பலர் சொல்கிற மாதிரி மண்குதிரையின் படைப்பை கவிதை என்று சொல்ல மனம் வரவில்லை. இன்னும் கொஞ்சம் நீட்டித்து ஒரு சிறு கதையாகத் தீட்டியிருக்கலாம்.

அறிவன்#11802717200764379909 said...

{யார் சரி யார் தவறு என்பதல்ல இங்கே. அவரவர் எண்னத்தைப் பகிர ஒரு வாய்ப்பு அவ்வளவே.

எழுதியதை ரசிக்கலாமே?}

வேலன் சார்,

மிகச் சரி.ரசிப்புத் தன்மைதான் அளவுகோல்.விவாதத் திறன் அல்ல!

நன்றி.

யுவகிருஷ்ணா said...

எதிர் வீட்டு கருப்பசாமி அண்ணன் தன் குடும்ப அட்டையை 30 ருபாய்க்கு வாடகைக்கு விடுவதை பார்த்துவிடுகிறார். எங்கள் வீதியின் முடிவில் இருக்கும் ஒரு நியாயவிலை அங்காடியில் தராசு முள் சரிவதை தன் நுட்பமான பார்வையால் கண்டுபிடித்து விடுகிறார்.

வட்டாச்சியர் அலுவலகம் அமைந்திருக்கிற நகரின் முக்கியமான சந்திப்பில் தேநீர் அருந்த நுழையுமவர் பின்பக்கம் சில ஆயிரம் ரூபாய்க்கு ஒரு அரசு அதிகாரி தன் கையெழுத்தை விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டு கோபமடைகிறார். புகார் கொடுக்க காவல் நிலையத்திற்குச் சென்றபோது அங்கொரு ஏழைப் பெண்ணின் கற்புக்கு நெடிய பேரம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

நிதானமின்றித் துடிக்கும் தன் மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள சன்னதி தெருவிலிருக்கும் பெரிய கட்டிடத்திற்கு வருகிறார். அங்கே எங்கள் மீனாட்சி சுந்தரேஸ்வர் காட்சியளித்துக் கொண்டிருப்பதே அந்த அதிகாரியின் கையெழுத்தை விற்ற காசில்தான்.

விரக்தியடைந்து தேர்ந்த மொழியால் எங்களைச் சபித்தவாறு விரைந்து வெளியேறிக் கொண்டிருந்தவர் முக்கியமான சாலையைக் கடக்கும் போது நாங்கள் தேர்ந்தெடுத்த எம் எல் ஏ கட்டிய பாலம் இடிந்து சிகிச்சை பலனின்றி எங்கள் அரசு பொது மருத்துவமனையில் மரணமடைகிறார்.

- இப்போ படிச்சிப் பாருங்க :-)

இது ஒரு சுமாரான குமுதம் ஒரு பக்கக் கதைன்னு வேணும்னா சொல்லலாம். கவிதைன்னு எப்படி அண்ணாச்சி மனச்சாட்சியே இல்லாம சொல்றீங்க? :-)

வைரமுத்து எழுதிய புத்தகங்களை எப்படி எந்த அடிப்படையில் நீங்கள் நிராகரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. கருவாச்சி கிழவியையும், பேயத்தேவரையும் ரத்தமும் சதையுமாக தமிழின் அச்சு அசல் கவுச்சி வாசத்தோடு உலவவிட்டதுதான் வைரமுத்துவின் வெற்றி. ஒருவேளை வெகுஜனத் தளத்தில் பரவலாக இயங்குகிறவர் என்ற காரணத்துக்காக அவரை இங்கே இழிவுப்படுத்தி இருக்கிறீர்களோ என்று கருதுகிறேன்.

தேர்ந்த வாசகர் என்று உங்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பீட்டை இப்பதிவு மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது :-(

வடகரை வேலன் said...

லக்கி,

நல்லா இருக்கு. அனேகமாக எல்லாக் கவிதைகளையும் நடுவில் இப்படி மானே தேனே எல்லாம் போட்டால் அதுவும் கட்டுரைதான். இதற்கு இத்தனை பெரிய முயற்சி எடுத்திருக்க வேண்டாம் நீங்கள். இத்தனை வருடப் பத்திரிக்கைத் துறை அனுபவம் இதைக்கூடவா உங்களுக்குக் கத்துத் தரவில்லை?

அது சரி, கவிதை பற்றிய உங்கள் தனிப்பட்ட அபிப்ராயம் அது.

ஆனால் வைரமுத்து? என்ன லக்கி நீங்களா? எத்தனை பெரிய எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்பு உங்களுக்கு? மிகவும் வருத்தமாக இருக்கிறது.

நான் சொன்ன இரண்டு புத்தகங்களைப்யும் படியுங்கள். முடிந்தால் பெருமாள் முருகனின் ஏறு வெயிலையும். பின் மீண்டும் இந்த காலத்தால் அழியா காப்பியத்தையும் இதிகாசத்தையும் படியுங்கள்.

எந்தப் படைப்பையும் எழுத்தாளன் தன்னை முன்னிறுத்தாமல் படைக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் நான் இருக்கிறேன் நான் இருக்கிறேன் எனத் தெரியப் படுத்தும் எழுத்து வை முவினுடையது.

அவர் நல்ல பாடலாசிரியர். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனாலும் தீக்குச்சிக்குத் தின்னக் கொடுக்கச் சொல்லிவிட்டு அதிலேயே குளிர்காய்ந்த நேர்மையாளர் அவர்.

இந்த இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டு அவர் பண்ணிய அலப்பறை இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கு லக்கி. உலக உயரத்தில் தமிழாம். என்ன ஜல்லியடி இது?

தமிழுக்கு இலக்கிய சேவை செய்பவர்களெல்லாம் சத்தமில்லாமல் அதைச் செய்து கொண்டிருக்க இப்படிப்பட்ட சிலர் செய்யும் சத்தம் எனக்கு நாராசமாக இருக்கு. என்ன செய்ய? இவர்களைத் தாண்டித்தான் நாம் மற்றவர்களைக் கண்டு கொள்ள வேண்டி இருக்கு.

வைரமுத்துவின் இரண்டு புத்தகங்களை விமர்சிப்பதாலேயே என் வாசிப்பை நீங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றால் உங்கள் அளவுகோலின் தரம் என்ன? வைரமுத்து எழுதுவது காவியம், இதிகாசம் என்றால் அவன் நல்ல வாசகனா? இது எனக்குத் தெரியாதே?

ஒரு நாள் இருவரும் சாவகாசமாக அமர்ந்து விவாதிக்கலாம். அச்சிலோ எழுத்திலோ சிலவற்றை விவாதிக்க முடியாது.

யுவகிருஷ்ணா said...

அண்ணாச்சி!

வைரமுத்து குறித்து விவாதிப்பதற்கு இது இடமல்ல என்ற உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். நேர்விவாதத்தில் விவாதிக்க வேண்டிய பல அம்சங்கள் நிறைந்த விஷயம் இது. ஆயினும் பராசக்தி எப்படி ஒரு தலைமுறையை தாக்கப்படுத்தி தமிழின் பால் ஈர்த்ததோ, அதுபோலவே வைரமுத்துவின் தமிழ்பணியும் குறிப்பிடத்தக்கது என்ற முறையில் அவர்மீது எனக்கு மதிப்பு அதிகமே. குறிப்பாக வெகுஜன இதழான குமுதத்தில் கூட அவரது பெய்யென பெய்ந்த இலக்கிய மழையில் நனைந்த தலைமுறையை சார்ந்தவன் நான். வேப்பமர(ன்)ம் உங்களுக்கும் ஒருவேளை நினைவிருக்கலாம்!

வைரமுத்து தன்னுடைய கவிதைகளுக்கு சந்தநயம், உரைநடைக்கு பேச்சுமொழிக்கும், எழுத்துமொழிக்கும் இடையிலான லாவகமொழி என்று பாரதியை பின்பற்றியவர். எட்டாக்கனியாக சாமானியனுக்கு இருந்த இலக்கியத்தை எட்டச் செய்தவர்களில் அவரும் ஒருவர். அவருடைய தமிழ்ச்சேவை குறிப்பிடத்தக்க ஒன்று என்பதில் நான் உறுதியாகவே இருக்கிறேன்.

//நல்லா இருக்கு. அனேகமாக எல்லாக் கவிதைகளையும் நடுவில் இப்படி மானே தேனே எல்லாம் போட்டால் அதுவும் கட்டுரைதான். இதற்கு இத்தனை பெரிய முயற்சி எடுத்திருக்க வேண்டாம் நீங்கள். இத்தனை வருடப் பத்திரிக்கைத் துறை அனுபவம் இதைக்கூடவா உங்களுக்குக் கத்துத் தரவில்லை?//

அதிருக்கட்டும். இதென்ன அபாண்டம்?

நானெங்கே மண்குதிரை கவிதைக்கு இடையில் மானே தேனே போட்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்திருந்த உடைத்து உடைத்து எழுதப்பட்டிருந்த உரைநடையை நேராக்கி தந்திருக்கிறேன். அவ்வளவுதான்! :-)

அப்படியென்றால் உரைநடையை உடைத்து உடைத்து எழுதினால் அது கவித்துவ வெளிப்பாடு என்று தாங்கள் கருதுகிறீர்களா?

தாங்கள் இங்கே சிறந்த கவிதையாக மதிப்பிட்டு தந்திருக்கும் கவிதை(?) வைரமுத்து எழுதியதிலேயே மட்டரகமான சினிமாப் பாடலின் தகுதிக்கு கூட உறை போட காணாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம்.

வடகரை வேலன் said...

லக்கி,

விவாதம் வைரமுத்துவின் அந்த இரண்டு புத்தகங்களைப் பற்றி.

மற்றபடி அவரது தமிழ்ச்சேவையைப் பற்றி எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் அது காவியம், இதிகாசம் எனக் கொண்டாடப்படும் அளவுக்கு அதில் என்ன இருக்கு?

அதை விட அதிகமாகக் குருதி கொப்பளிக்கும் வலியும் வேதனையும் மிக்க மக்களைப் பற்றி எழுதிய இலக்கியங்களில் நடுவே இது ஏற்படுத்திய சலசலப்புக்கு நேர்மை செய்யவில்லை என்பதே என் வாதம்.

பிரபலமானவர் எழுதியதெல்லாம் நல்ல எழுத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே?

அந்த இரண்டு நாவல்களை வேறு ஒருவர் எழுதியிருந்தால் சாதாரணமான நாவலாக இருந்திருக்கும். பிரபல வெளிச்சத்தில் அதை விற்றுக் காசாக்கிக் கொண்டார் என்பதே உண்மை.

மேலும் அவரது களம் பாடல் இயற்றுவது. அதில் அவர் ராஜா. ஆனால் நாவல்? நான் மாறுபடுகிறேன்.

மற்றபடிக் கவிதையில் மானே தேனே எல்லாம் நீங்கள் போடவில்லை பிற கவிதைகளுக்கும் போட்டால் கட்டுரை ஆகிவிடும் என்பதுதான் என் வாதம்.

மன்குதிரையின் கவிதை வைரமுத்துவினுடையதை விட மட்டமானது என்பது உங்கள் கருத்து. அதே போல க கு சேகரனின் எழுத்துக்களுக்கு முன் வை மு வின் நாவல் வெகு மட்டம் என்பது என் கருத்து. சரிதானே?

யுவகிருஷ்ணா said...

//ஆனால் அது காவியம், இதிகாசம் எனக் கொண்டாடப்படும் அளவுக்கு அதில் என்ன இருக்கு?//

இதிகாசம், காவியம் என்று நாவலுக்கு பெயர் வைத்து விட்டால் அதை காவியமாக, இதிகாசமாக கொண்டாடினார்கள் என்று பொருள் வருமா என்ன? :-(

இரண்டுமே வெகுஜன இதழ்களில் தொடராக வந்தவை. வெகுஜன இதழில் பதியப்படும் பிரதிகளுக்கு பரபரப்பான தலைப்பு அவசியம் என்பதை நான் சொல்லி தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

அதுவுமின்றி வாரத்துக்கு மூன்று பக்க வரையறை என்ற கட்டாயத்துக்கு ஏற்பவே அத்தியாயத்தின் தொடக்கமும், தொடரும் போட வேண்டிய அவசியத்துடனான இறுதியும் இருக்கும். இதுபோன்ற தொடராக இன்றி தனிநாவலாக எழுதப்படும்போது எழுத்தாளனுக்கு கிடைக்கும் சுதந்திரம் கட்டற்றது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் படைக்கப்பட்டாலும் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் அதனதன் அளவில் சிறப்பாக அமைந்திருந்தது என்பதே என் கருத்து.

குறிப்பாக கிழவி மகனை தேடி மொட்டை வெயிலில் செல்லும்போது வழியில் பாம்பை காணும் அத்தியாயம். அந்த அத்தியாயத்தில் பாம்புகள் குறித்த வர்ணனை. ஏ க்ளாஸ்!

பல லட்சம் தமிழர்களால் ரசிக்கப்பட்ட அவ்விரு படைப்புகளையும், தங்களால் ரசிக்க முடியவில்லை என்பது துரதிருஷ்டவசமானதே! :-(

மஞ்சூர் ராசா said...

கள்ளிக்காட்டு இதிகாசம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது. ஆனால் கருவாச்சி காவியம் செயற்கையாக அந்த அளவிற்கு வரவில்லை என்பது என் கருத்து.

மஞ்சூர் ராசா said...

கள்ளிக்காட்டு இதிகாசம் ஓரளவிற்கு நன்றாக இருந்தது. ஆனால் கருவாச்சி காவியம் செயற்கையாகவும் அதே சமயத்தில் கள்ளிக்காட்டு இதிகாசம் அளவிற்கு இல்லை என்பது என் கருத்து.

யுவகிருஷ்ணா said...

//மற்றபடிக் கவிதையில் மானே தேனே எல்லாம் நீங்கள் போடவில்லை பிற கவிதைகளுக்கும் போட்டால் கட்டுரை ஆகிவிடும் என்பதுதான் என் வாதம்.//

ம்ஹூம். இந்த வாதமும் ஏற்புடையதில்லை அண்ணாச்சி.

சில காலமாக நம் பதிவர்கள் நர்சிம், தண்டோரா, கார்க்கி போன்றவர்களும் கவிமுயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். சில கவிதைகள் சிறப்பானதாகவே - அச்சு ஊடகங்களில் வெளியிடும் தகுதியோடே - வந்திருக்கிறது.

ஆரம்பகால கவிஞர்களான இவர்களது கவிதைகளை மண்குதிரை கவிதைக்கு நான் செய்ததுபோல நேராக்கிப் பாருங்கள். கவித்துவ வெளிப்பாடு எதுவும் குறைந்து உரைநடைத்தன்மை வந்துவிடாது.

உரைநடைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் வேறுபாடு நிச்சயமாக இருக்கிறதல்லவா?

நான் கவிதைகளை ஆராதிக்கக் கூடியவனாகவும், ரசிகனாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் தமிழை எழுதப் படிக்க, புரிந்துகொள்ள கூடியவன் என்பதால் எது கவிதை, எது உரைநடை என்று பிரித்து உணரக்கூடிய அளவுக்காவது அறிவோடு இருக்கிறேன்.

மஞ்சூர் ராசா said...

வைரமுத்துவின் பிரபலத்தினாலெயே (திரைப்படங்கள் மூலம்) அவர் இன்று பெரிதாக மதிக்கப்படுகிறார் என்பதெ உண்மை. அவரைக் காட்டிலும் திறமையான பலர் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு சிறந்த எழுத்து வியாபாரி.

வடகரை வேலன் said...

//அதுவுமின்றி வாரத்துக்கு மூன்று பக்க வரையறை என்ற கட்டாயத்துக்கு ஏற்பவே அத்தியாயத்தின் தொடக்கமும், தொடரும் போட வேண்டிய அவசியத்துடனான இறுதியும் இருக்கும். இதுபோன்ற தொடராக இன்றி தனிநாவலாக எழுதப்படும்போது எழுத்தாளனுக்கு கிடைக்கும் சுதந்திரம் கட்டற்றது.

நெருக்கடிகளுக்கு மத்தியில் படைக்கப்பட்டாலும் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சிக் காவியமும் அதனதன் அளவில் சிறப்பாக அமைந்திருந்தது என்பதே என் கருத்து.//

பத்திரிக்கைத் துறையில் இருக்கும் உங்களுக்குத் தெரியாதா மொத்தம் 3 வாரத்துக்கான மேட்டரை முதலிலேயே வாங்கி விடுவார்கள் எனபது?

எழுதிக் கொடுத்ததை அப்படியேவா போடுவார்கள்?

மேலும் அந்த நாவல்கள் எப்படி எழுதப்பட்டன எப்படிச் செப்பனிடப்பட்டன எல்லாம் எனக்குத் தெரியும். அதனால்தான் சொல்கிறேன் சில விஷயங்களை அச்சிலோ எழுத்திலோ நாம் விவாதிக்க முடியாது.

மற்றபடி அது மிகச் சாதாரண நாவல்தான். அதைப் பிடிக்கவில்லை என்பது என் துரதிர்ஷ்டவசமா?

இன்னும் சிரிச்சிக்கிட்டேஏஏஏஏஏ இருக்கேன் லக்கி. எப்படி இப்படி எல்லாம்?

வடகரை வேலன் said...

//உரைநடைக்கும், கவிதைக்கும் அடிப்படையில் வேறுபாடு நிச்சயமாக இருக்கிறதல்லவா?//

நிச்சயமாக.

//நான் கவிதைகளை ஆராதிக்கக் கூடியவனாகவும், ரசிகனாகவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் குறைந்தபட்சம் தமிழை எழுதப் படிக்க, புரிந்துகொள்ள கூடியவன் என்பதால் எது கவிதை, எது உரைநடை என்று பிரித்து உணரக்கூடிய அளவுக்காவது அறிவோடு இருக்கிறேன்.//

மிகச் சரி.

யுவகிருஷ்ணா said...

//பத்திரிக்கைத் துறையில் இருக்கும் உங்களுக்குத் தெரியாதா மொத்தம் 3 வாரத்துக்கான மேட்டரை முதலிலேயே வாங்கி விடுவார்கள் எனபது? //

என்ன கொடுமை இது?

இந்த நடைமுறை எல்லாம் பொன்னியின் செல்வன் காலத்திலேயே முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் ஃபாரம் ரெடியாவதற்கு ஐந்து நிமிடம் முன்புதான் தொடர்கள் வந்து சேருகிறது :-(

//எழுதிக் கொடுத்ததை அப்படியேவா போடுவார்கள்? //

எழுதுவது வைரமுத்துவாகவோ, வாலியாகவோ, கலைஞராகவோ, கலாமாகவோ இருந்தால், ஆம். அப்படியேதான் போடுவார்கள்.

மற்றபடி உங்களுக்கு வைரமுத்து எங்கே எழுதினார் எப்படி எழுதினார் என்ற விவரங்கள் தெரிந்திருக்கலாம். அவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் எல்லோரிடமும் கிசுகிசு பாணியிலாவது பகிர்ந்துகொள்வதே நேர்மையானதாக இருக்க முடியும். ஏனெனில் பொய்யானவர்கள் கொண்டாடப்பட்டு விடக்கூடாது என்ற உங்கள் அக்கறையில் எனக்கும் கொஞ்சம் அக்கறையிருக்கிறது.

//மற்றபடி அது மிகச் சாதாரண நாவல்தான். அதைப் பிடிக்கவில்லை என்பது என் துரதிர்ஷ்டவசமா? //

உங்களுக்கு பிடிக்காதது எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. நல்ல வாசகரான உங்களுக்கு அவை பிடிக்காதது அப்படைப்புகளின் துரதிருஷ்டம்.

ஆனால் வைரமுத்து குறித்து நீங்கள் எழுதியிருக்கும் வரிகளும், அதற்கு வந்திருக்கும் அறிவுஜீவித்தனமான பின்னூட்டங்களும் நல்ல விவாதத்தை தொடங்கவோ, தொடரவோ செய்யவில்லை. மாறாக வைரமுத்து மீது சேறு வாரிப்பூசும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்பதே என் பார்வை.

வடகரை வேலன் said...

சரி லக்கி உங்களுக்கு விருப்பமில்லை எனில் இதை முடித்துக் கொள்வோம்.

நாளும் நலமே விளையட்டும் said...

அது எப்படிங்க எத்தனை பேர் வந்து சொன்னாலும் விடாமே "மண்குதிரை " கவிதைன்னு சொல்றிங்க?
மண்குதிரை கூட இந்நேரம் தப்பு தான் அப்படி ஒத்க்க்கிட்டு இருப்பார்!
முடியலப்பா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராஜேந்திரன்..தேனருவி என்று வையுங்கள்..உங்கள் எழுத்துக்கு சரியான பெயர்