Saturday, February 27, 2010

விதைகள் விழுந்த நிலம்



விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை

திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை

விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்

புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே

பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.

7 பேரு பாராட்டியிருக்காங்க:

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிகவும் அருமை

இரா.சிவக்குமரன் said...

good one!

தராசு said...

//விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை//

நச், நச், நச், ச், ச், ச், ச்,

கும்க்கி said...

ஆழ்ந்த அர்த்தம் செரிந்த கவிதை..

பிடித்திருகிறது அண்ணாச்சி,

Vijayashankar said...

Nice! :-)

பா.ராஜாராம் said...

//பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை. //

மாறாக நிறைகிறது.

இல்லையா வேலன்?

ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா!

ஜீவன்சிவம் said...

நல்லாயிருக்கு சார்..
இன்னும் கூட கொஞ்சம் எழுதியிருக்கலாம்.