12 சிறுகதைகள். ஒவ்வொன்றிலும் கதாசிரியன் ஏதோ ஒரு பாத்திரத்தில். சிலதில் முக்கியமானவராக சிலதில் சாதாரணமானவராக, சிலதில் வந்து போகிறவராக. தொடர்ச்சியாக வாசிக்கையில் ஒரு நாவலாக விரியும் இப்படைப்பின் பிற்பகுதியில் இன்னொரு நுட்பம் இருக்கிறது.
சிறுகதைகளின் முடிவு குறித்து வாசகனுக்கு வேறு விதமான கருத்து இருப்பது உண்மை. இந்தச் சிறுகதைகளுக்கு ஒன்றிற்கு மேல் சாத்தியப்பட்ட முடிவுகளையும் கொடுக்கிறார். சில முடிவுகளை நம்மைக் கற்பனை செய்துகொள்ளச் செய்கிறார்.
நாவலாகப் பார்த்தால் நாவல். சிறுகதைகளாகப் பார்த்தால் சிறுகதைகள். என்றாலும் இதில் கிடைக்கும் சாத்தியக்கூறுகள் ஆச்சர்யமானவை. உங்களுக்குத் தேவையான சாத்தியக்கூறுகளை எடுத்துக் கொண்டு நீங்களே ஒரு நாவலைக் கட்டமைக்க முடியும்.
க்யூபிஸம் என்ற முறையில் சொல்லப்பட்ட இந்த நாவலில் வெளிப்படும் அங்கதத்தை நான் மிகவும் ரசித்தேன்.
நாவலின் தலைப்பு “அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்” ஆசிரியர் எம் ஜி சுரேஷ்.
எம்.ஜி சுரேஷ் பற்றி மேலும் அறிந்து கொள்ள.
ஆசிரியரின் மற்றொரு நாவல் சிலந்தி. பொதுவாக எழுத்தாளர் தன்மை ஒருமையில் எழுதுவார்கள் அல்லது அவன் அவள் என ஒருமையில் அழைத்து எழுதுவார்கள். இவர் ஒரு வித்தியாசமாக நீங்கள் என நம்மை அழைத்து எழுதியிருக்கும் நாவல் இது.
ஒரு வித்தியாசமான கண்ணாமுச்சி விளையாட்டு இந்நாவலைப் படிப்பது. ஆசிரியர்தான் கொலைக் குற்றம் செய்தவர். நாம் அதைக் கண்டுபிடிக்கும் துப்பறிவாளர். வழக்கமான அங்கதம் இக்கதையிலும் விரவியிருக்கிறது.
அதிலும் ஆசிரியர் சொல்லும் நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் அல்லது பெண்ணாக இருந்தால் என இரு சாத்தியப்பாட்டிலும் கதை பயனிக்கிறது. இந்நாவல் விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற அடிப்படையில் எழுதப்பட்ட நாவல். வாசிக்கும் நாமே வாசிக்கும் கதையில் ஒரு கதாபாத்திரமாக மாறும் விந்தை.
இவ்விரு நாவல்களையும் தேடி வாசிக்கத் தூண்டியது சாருவின் கீழ்கண்ட ஒரு பத்தி ( தாந்தேயின் சிறுகதை என்ற பதிவில் )
// எழுத்தாளர்களல்லாத எழுத்தாளர்களைக்கூட(தமிழவன், பெருமாள் முருகன், யுவன் சந்திர சேகர்) என்னால் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் எம் ஜி சுரேஷ் போன்ற விபத்துக்கள் தமிழ்சூழலில் மட்டுமே சாத்தியம்//
சுரேசும், யுவனும் சம்பிரதாயக் கதைசொல்லலிருந்து விலகி மொழியின் பல்வேறு பட்ட சாத்தியங்களை முயற்சித்திருக்கிறார்கள். நவீன இலக்கியத்திற்கு தன்னை விட்டால் வேறெவரும் அத்தரிட்டி இல்லை என முழங்கிவரும் சாரு இவர்களை வெறுப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் பெருமாள் முருகன்?
ஏறு வெயில் மற்றும் கங்கணம் மாதிரியான நாவல்கள் மூலம் திருச்செங்கோட்டு வாழ்க்கை முறைகளையும் அந்த மக்களை அவர்கள் வேர்வை வீச்சத்துடனும் உழைப்பின் உவர்ப்புடனும் கண்முன்னே நடமாடவிட்டவர் பெருமாள் முருகன்.
ஒரு எழுத்தாளரை இப்படி மொத்தமாகப் புறக்கனிக்க என்ன காரணம்?
எப்படி இருந்தாலும் தேடி வாசிக்கத் தூண்டிய சாருவிற்கு நன்றி.
.
எந்திரன் - கார்ட்டூன்
42 minutes ago

26 பேரு பாராட்டியிருக்காங்க:
நான் விரும்பி படித்த நாவல் இது!
இதே போல் ”யூரேகா என்றொரு
நகரம்” சுரேஸின் மாஸ்டர் பீஸ்!
”37” நல்ல புனைவு!
”சிலந்தி” ஆங்கில படம் போலிருக்கும்!
”அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்” படித்தால் ஒருநாள் அதே சிந்தனையாக இருக்கும்!
எம்.ஜி.சுரேஷ் தமிழ் வாசகர்கள் கவனிக்க மறந்த ஒரு புனைவு எழுத்தாளர்!
சாரு நிராகரிக்கிற எழுத்தாளர்களைத் தேடி படித்தால் உன்னத வாசிப்பனுபவம் கேரண்டி போலிருக்கிறது.
@வால்
நீங்கள் எந்தளவிற்கு எம்.ஜி.சுரேஷைப் படித்திருக்கிறீர்கள் என்று ரமேஷ் வைத்யா பலமுறை என்னிடத்தில் வியந்திருக்கிறார்.
பெருமாள் முருகனிம் ஒரு நாவல் எதோ விருதுக்கு பரிந்துரைக்கபட்டிருப்பதாக அறிகிறேன்!
அந்த எரிச்சலில் சொல்லியிருக்கலாம்!
“பீ” என்ற தலைப்பு என்று நினைக்கிறேன்!
//நீங்கள் எந்தளவிற்கு எம்.ஜி.சுரேஷைப் படித்திருக்கிறீர்கள் என்று ரமேஷ் வைத்யா பலமுறை என்னிடத்தில் வியந்திருக்கிறார்.//
அவரு சொல்றதையெல்லாம் நம்பாதிங்க! அவருக்கு உங்களையும், என்னையும் ரொம்ப பிடிக்கும்! இருந்தாலும் உங்களை பற்றி அவரு சொன்னதையெல்லாம் நான் நம்பிகிட்டா இருக்கேன்!
:)
(ஸ்மைலிய பாக்காம விட்றாதிங்க)
பட்டியலுக்கு நன்றி வால். 37 கைல இருக்கு படிக்க ஆரம்பிக்கணும். கான்க்ரீட் வனம் கிடைக்கல. உங்ககிட்ட இருக்கா?
நன்றி செல்வா. அதுதான் கருத்து.
நான் சில திரைப்படங்களைப் பார்ப்பதே இப்படித்தான் சிலரை அழைத்துக் கேட்பேன். குப்பை என்றால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என அர்த்தம். அவரவர் ருசி அவரவருக்கு.
//கான்க்ரீட் வனம்//
இல்ல அண்ணாச்சி!
நான் எதையும் சேமிச்சு வச்சிகிறதில்ல, படிச்சவுடனே ஓசி போயிரும்! என்னுடய வேண்டுகோளெல்லாம் அடுத்தவங்களுக்கு படிக்க கொடுங்க, எடைக்கு மட்டும் போட்றாதிங்க!
:)
வால் என்னோட பாலிசியும் அதுதான். எந்தப் புத்தகமா இருந்தாலும் படித்ததும் கொடுத்துடுவேன்.
யாருக்கும் வேண்டாமென்றால் என்னிடம் இருக்கும். சில மாதங்களுக்குப் பின் அதையும் நூலகத்திற்குக் குடுப்பேன்.
//
யாருக்கும் வேண்டாமென்றால் என்னிடம் இருக்கும். சில மாதங்களுக்குப் பின் அதையும் நூலகத்திற்குக் குடுப்பேன்.//
புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைக்கவும். பெற்றுச் செல்கின்றேன். :)
பல புத்தகங்கள் படிக்க வேண்டும், படிப்பு புத்தகங்களோடு எனது பயணம் நின்று போகிறது.
//
சென்ஷி said...
//
யாருக்கும் வேண்டாமென்றால் என்னிடம் இருக்கும். சில மாதங்களுக்குப் பின் அதையும் நூலகத்திற்குக் குடுப்பேன்.//
புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைக்கவும். பெற்றுச் செல்கின்றேன். :)
//
தனியா தூக்கிட்டு போக அவருக்கு கஷ்டமா இருக்கும். கொஞ்சமா அவருக்கு வச்சது போக மீதிய நான் எடுத்துட்டு போய் உங்க ரெண்டு பேருக்கும் உதவி பண்ண ஒரு வாய்ப்பு கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்
//நான் சில திரைப்படங்களைப் பார்ப்பதே இப்படித்தான் சிலரை அழைத்துக் கேட்பேன். குப்பை என்றால் கண்டிப்பாக நன்றாக இருக்கும் என அர்த்தம். அவரவர் ருசி அவரவருக்கு.//
நான் கூட இப்டி தான் அண்ணாச்சி.. கோவா பார்த்தே ஆகனும்னு 2 பேர் கூப்ட்டாங்கன்னா புரிஞ்சிப் போய்டும். எஸ்கேப் ஆய்டுவேன்.. :)))
இந்தப் புத்தகங்களை எங்க வாங்கலாம்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
அறிமுகத்திற்கு நன்றி சித்தப்பு. அப்படியே புத்தகங்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னால் வாங்கிப் படிக்க உதவும்.
எங்க கிடைக்குது அண்ணாச்சி????
நல்ல அறிமுகம் அண்ணாச்சி.
'கான்கிரீட் வனம்' ஜெயகாந்தனின் சாயல் கொண்ட யதார்த்தவாத கதைகள் அடங்கிய 80களில் வெளிவந்த தொகுப்பு. அதை வாசிக்காவிட்டாலும் ஒன்றும் நஷ்டமாகிவிடாது :)
80களின் இறுதிக்கு பிறகு தமிழ் புனைக்கதைச் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தை ஆராய்ந்து 90களின் இறுதியில் எம்.ஜி.சுரேஷ் அதற்கேற்ப எழுத ஆரம்பித்தார். அந்தப் பட்டியலைத்தான் நீங்களும் நண்பர் வால் பையனும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
மிலோரட் பாவிச் படைப்புகள் எம்.ஜி.யிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
புகழ்பெற்ற இந்திய பேரிலக்கியமான குர்அதுல் ஐன் ஹைதர் எழுதிய `அக்னி நதி’ நாவலை முடிந்தால் வாசித்துப் பாருங்கள் அண்ணாச்சி. தமிழ் எழுத்தாளரான சௌரி 1971இல் இதை மொழி பெயர்த்திருக்கிறார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது.
இந்த நாவல் முழுக்க கெளதம நீலாம்பரன், கமால் உட்பட பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஒரே பெயரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் திரும்பத் திரும்ப வருவார்கள்.
வாய்ப்பும், நேரமும், மனநிலையும் இருந்தால் 'அக்னி நதி'யை வாசியுங்கள் அண்ணாச்சி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பதிவுலக நண்பர்களுக்கு,
'அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்', 'அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்', 'சிலந்தி', '37', 'யுரேகா என்றொரு நகரம்' ஆகிய எம்.ஜி.சுரேஷின் படைப்புகளை சென்னை அயனாவரத்திலுள்ள 'புதுப்புனல்' பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முழுமையான முகவரியை நாளை சொல்கிறேன். அல்லது தெரிந்த நண்பர்கள் இன்றே மறுமொழியில் தெரியப்படுத்துவார்கள்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
புதுப்புனல்
5/1, Palani Andavart koil st.,
1st Floor, Ayanavaram ,
Chennai - 23
நன்றி சிவராமன்.
படிக்கும் ஆர்வம் எல்லோரும் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது. சரியான தூண்டுதல்தான் தேவை.
உங்கள் பின்னூட்டம் என்னை மேலும் மகிழ்ச்சி கொள்ளச் செய்தது.
பதிப்பக முகவரியை நண்பர் சர்புதீன் அளித்துள்ளார். திரு சுரேஷின் முகவரியும் தொலைபேசி எண்ணும் அவரிடம் இருக்கிறது வேண்டுபவர்கள் தனி மெயில் அனுப்பவும்.
முதல் க்யூபிச நாவல் என்று வாங்கி படித்தேன். இதில் சுரேஷ் இசத்தை வலிய திணித்து எழுதியிருந்தது போல எனக்கு பட்டது. கதை தீடீரென கொல்லிமலைக்கு போய் ஜல்லியடிக்க ஆரம்பிக்கும். கொல்லிமலை நாடி ஜோதிடம்- எல்லாருடைய வாழ்வின் கதைகளும் இங்கு ஏடுகளில் இருக்கும். குறுக்குவெட்டுத்தோற்றம். அட்ரா சக்கை...அட்ரா சக்கை... அதற்கு பிறகு எனக்கு நாவல் சிரிப்பாகத்தான் வந்தது. சிலந்தியும் இப்படி வாங்கி படித்து பார்த்தேன். பைத்தியம் பிடித்துவிட்டது.
இவர் ஒரு முறை சாருவை இப்படி விமர்சித்திருந்தார். 'தேவதைகள் கால் வைக்க தயங்கும் பிரதேசத்தில் முட்டாள்கள் குதித்தாடியபடி செல்வார்கள்' :)
ஆனால் எம்.ஜி.சுரேஷின் இசங்கள் பற்றிய கட்டுரை தமிழில் படிக்க எளிமையாக இருக்கும். இவர் அளவு எளிமையாக யாரும் சொன்னதில்லை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வி.மு.
ஆனால் கொல்லிமலைக்கு ஏன் செல்கிறோம் என்ற காரணத்தைத் தெளிவாகவே வைத்திருக்கிறார் ஆசிரியர். மேலும் அந்த இடத்திலிருந்துதானே கதை வேறு வடிவம் கொள்ள ஆரம்பிக்கிறது. இது வரை பார்த்த சிறுகதைகளுக்கு வேறுமுடிவும் இருக்கிறது எனத் தட்டையாக எழுதாமல் கொஞ்சம் மாயவாதத்துடன் வைத்திருக்கிறார்.
அதைக் கடந்தால் நாவல் நன்றாகத்தானே இருக்கிறது? அடிநாதம் பல்வேறுபட்ட சாத்தியப்பாடுகள் என்பதுதானே?
சிலந்தி உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது? எனக்குப் பிடித்தது போலவே உங்களுக்கும் பிடிக்காமல் போயிருக்கலாம்.
மேலும் எல்லாக் கதைகளும் ஏற்கனவே சொல்லப் பட்டவைதாம். எப்படிச் சொல்லப் படுகிறது என்பதில்தான் வித்தியாசமே.
அந்த வகையில் வாசகனே ஒரு கதபாத்திரமாக உலவும் சிலந்தி ஒரு நல்ல நாவல் என்பது என் அபிப்ராயம்.
என்னைப் பொருத்தவரை யார் யாரைப் பற்றி என்ன சொன்னார்கள் என்பது முக்கியமல்ல அதன் மூலம் நமக்கு என்ன கிடைக்கிறது என்பதுதான்.சாருவின் அந்த வரிகளிலிருந்து சுரேசைக் கண்டுகொண்டேன். பெருமாள் முருகனை மறுவாசித்தல் செய்யவேண்டும் எனவும் முடிவு செய்துள்ளேன். வாசகனை வாசிக்கத் தூண்டும் எந்த எழுத்தும் நல்ல எழுத்துத்தான்.
எழுத்தாளர்களின் குழாயடிச் சண்டையை ரசிக்க ஆரம்பித்தால் அவர்கள் படைப்பை ரசிக்க முடியாது.
'முன்னிலை' நிலையில் கதை சொல்தல் குறித்து ஒருமுறை சுந்தர்ஜி சொல்லியபோதே வாயைப்பிளந்தேன், அது சாத்தியமா என்று. சிலந்தியில் அது சாத்தியமாகியிருந்தால் கடுமையான ஆவலில் இருக்கிறேன் அதை வாசிக்க.
இது குறித்து போனில் அழையுங்கள்/க்கிறேன்.
எனக்கு இவரோட நாவல்ல ரொம்ப புடிச்சது அலக்சாண்டரும் ஒரு கோப்பை தேனீரும் தான் அப்புறம் தான் மத்ததெல்லாம்.
யுரேக்கா என்றொரு நகரம் ஆங்கில படம் பாக்குர மாதிரிருக்கும் காரணம் அந்த கதாபாத்திரத்தின் பெயர்கள் அப்படி இருக்கும்
சிலந்தில வர்ர அந்த MLM கத இன்னும் நல்லாருக்கும்.
ஆனா இவரோட பின்னவீனத்துவம் என்றால் என்ன தான் டரியலாக்கும்
யுவன் கூட ரொம்ப அழகான எழுத்துக்கு சொந்தக்காரர் தான் பெரும்பாளும் முடிவு நாமளே தீர்மானிப்பது மாதிரி விட்டுடுவார்.
பெருமாள் முருகன் சொல்லவேவேணாம் திருச்செங்கோடு நிழல்முற்றம் படிச்சிருக்கேன் வட்டார வழக்குல பின்னி எடுப்பார் மனுசன்
ஈரோடு புத்தக கண்காட்சில புதுப்புனல் ஸ்டால்ல எம்ஜி சுரேஸ் புத்தகள் எல்லாம் 50 % தள்ளுபடில வித்தாங்க.நான் தேடி தேடி வாங்குனது.
என் ஊர்லையே ரொம்ப கம்மிவிலைக்கே கிடச்சுதுங்க.
பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி :-))
ஆனா இதுவரைக்கும் சாருவைத்தான் வாசித்ததில்லை :-((
பாராட்டி எழுதறதைவிட திட்டி எழுதினா நிறைய பேரோட கவனத்தை கவரும்னு செஞ்சிருப்பார் போல :)
அறிமுகத்துக்கு நன்றி அண்ணா.
I also like M.G Suresh very much. Not sure why he is not writing more now. I have read almost all his books except: Taj mahalukkul sila elumbu koodugal. any comments about that book?
I also like M.G Suresh very much. Not sure why he is not writing more now. I have read almost all his books except: Taj mahalukkul sila elumbu koodugal. any comments about that book?
Post a Comment