Thursday, February 18, 2010

சென்ற வார உலகம்

The World This Week என்றொரு நிக்ழச்சி 80 களின் இறுதியில் வந்தது. தொகுத்து வழங்கியவர் இன்றைய NDTV உரிமையாளர் திரு.பிரணாய் ராய். மிகச் சிறந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக அக்காலகட்டத்தில் வந்து கொண்டிருந்தது. Alpha Plus மற்றும் நஸ்ருதீன் ஷா வழங்கிய TurinignPoint இரண்டும் எனக்குப் பிடித்த மற்ற நிகழ்ச்சிகள்.

TWTW சென்ற வாரம் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு மணி நேரத்தில் சுவைபட வழங்கிய ஒரு நிகழச்சி. மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் வழக்கம் போலவே இருக்க இந்நிகழ்ச்சி மட்டும் வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். காலவெள்ளத்தில் அவரும் தனியார் தொலைக்காட்சி உரிமையாளராக ஆகி, மற்ற தொலைக்காட்சிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார். சில சமயம் நல்ல நிகழ்ச்சிகளும் வருகிறது.

அதே போலத்தான் பதிவுலகில் அநேகப் பதிவுகள் எழுதப்பட்டாலும் எல்லாப் பதிவுகளும் எல்லாராலும் படிக்கப் படுவதில்லைல்; அந்த நோக்கத்தில் எழுதப் படவில்லை என்றாலும். சில நல்ல பதிவுகள் பெரும் கவனத்தைப் பெறாமல் போவதும் சில சுமாரான பதிவுகள் (அளவு கோல் ஆளாளுக்கு மாறுபடும்) அதிக வோட்டுக்கள் வாங்கி பரிந்துரையில் இருப்பதும் தொழில்நுட்பக் குளறுபடி மற்றும் கூட்டுமுயற்சி போன்ற காரணங்கள்தான்.

குழுமங்களில் இருப்பவர்களுக்கு குழும உறுப்பினர் ஒருவர் ஒரு நல்ல பதிவைப் படித்தால் அதை உடனே சுட்டியுடன் குழுமத்தில் வெளியிடுகிறார். உடனே அனைவரும் அதைப் படிக்க ஏதுவாகிறது. அந்தப் பதிவும் போதிய கவனம் பெறுகிறது.

என்னுடைய கதம்பத்தில் சில கவிதைகளையும், சிறுகதைகளையும் அறிமுகப் படுத்தினேன். அதே போல மேலும் சிலரும் செய்கிறார்கள். என்றாலும் இதை ஒரு தனி வலைப்பூவில் செய்தால் ஒரு பொதுவெளியில் அனைவரும் பார்க்க, படிக்க ஏதுவாகும் என்ற மாதவராஜின் சிந்தனை வரவேற்கப் ப்டவேண்டியது.

பொதுவாக கீழ்கண்ட விஷய்ங்களைச் செய்வதாக முடிவு செய்திருக்கிறோம்.

1. பதிவர்கள் / பதிவரல்லாத வாசிப்பாளர் எவராக இருந்தாலும் மின்ன்ஞ்சல் அனுப்பலாம்.
2. கடந்த வாரத்தில் தாங்கள் படித்ததில் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தலாம்.
3. அந்தப் பதிவுக்கான சுட்டி இணைத்தல் அவசியம்
4. ஏன் பிடித்தது என்பதற்கான ஒரு குறிப்பும் குறைந்தது 10 வரிகள் இருத்தல் நலம்.
5.பதிவை விமர்சிக்கலாம். பதிவை எழுதியவ்ர் மீதான விமர்சனத்தை வெளியிட இயலாது.
6. ஒருவரே தொடர்ந்தும் எழுதலாம்.
7. அதிகப் பதிவர்கள் இருக்கும் பட்சத்தில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.
8. இங்கு வெளியிடப் படுவது மட்டுமே அது நல்ல பதிவுகள் மற்றவை அவ்வாறல்ல என்ற கொள்ளக் கூடாது.
9. தங்கள் சொந்தப் படைப்பைப் பற்றி எழுதுதல் கூடாது.
10.இங்கே பதியப்படும் கருத்துகள் பரிந்துரைத்தவரின் கருத்துக்கள். இந்த வலைப்பூவை நடத்துபவர்களின் கருத்துக்கள் உடன்படவோ அல்லது மாறுபட்டோ இருக்கலாம்.

வாடாத பக்கங்களை வாசிக்க இங்கே வாருங்கள்.

உங்கள் பங்களிப்பை jothi.mraj@gmail.com அல்லது vadakaraivelan@gmail.com க்கு மின்னஞ்சல் மூலம் செய்யலாம்.

16 பேரு பாராட்டியிருக்காங்க:

ஜோசப் பால்ராஜ் said...

நல்ல முயற்சி அண்ணாச்சி.
உங்கள் இருவரின் நோக்கமும் சிதையாமல் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

மாதவராஜ் said...

அருமை... வேலன்!
அருமையான செயல் வடிவம் தந்துவிட்டீர்கள். விதிமுறைகள் தெளிவாக வடிவமைத்து விட்டீர்கள். அவைகளில் ’வாடாத பக்கங்களில்’ ஒரு widgetஆக இணைத்துவிடலாம்.

நன்றி.

கபீஷ் said...

second Joseph thambi

அகநாழிகை said...

வரவேற்கப்பட வேண்டிய முயற்சி. வாழ்த்துகள்.

அக்பர் said...

நல்ல முயற்சி அண்ணாச்சி.

வெற்றி பெற வாழ்த்துகள்

செ.சரவணக்குமார் said...

மாதவ் அண்ணனின் பதிவில் இந்தச் செய்தி பற்றி அறிந்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. அருமையான முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் அண்ணாச்சி.

ரோஸ்விக் said...

நல்ல முயற்சி அண்ணாச்சி.

வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்லதொரு முயற்சி . அருமை வேலன் சார் .

அனுஜன்யா said...

ஆஹா, நமக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று பார்த்தேன். 9 வது விதி மட்டும் பிடிக்கவில்லை.

Jokes apart, it is a good initiative. உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல முயற்சி

Itsdifferent said...

நல்ல முயற்சி.
ஒரு வேண்டுகோள்: மீண்டும், மீண்டும, தமிழ், இலக்கியம், காதல், சண்டை, சினிமா, தமிழக அரசியல் என்று எழுதி கொண்டிராமல் இந்திய/உலக அரசியல், வணிகம், அறிவியல் தொழில் நுட்பம், சமூகத்தை உயர்த்தும் முயற்சிகள் போன்ற பதிவுகளை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

Sangkavi said...

நல்லதொரு முயற்சி வேலன் சார்...

பரிசல்காரன் said...

@ அனுஜன்யா

ஹலோ.. அதுக்கென்ன போச்சு? நமக்குள்ள ஒரு டீலிங் வெச்சுக்குவோம். நான் உங்களுத எழுதறேன்.. நீங்க என்னோடத எழுதுங்க.. எப்பூடி?


@ மாதவ/வேலன் அண்ணாச்சிகளுக்கு..

வெல்டன். இதுனால புதியவர்களின் பதிவைப் படித்து வாடாத பக்கங்கள்ல எழுதலாம் என்பதற்காகவே பல புதிய பதிவர்களின் பதிவை பலரும் படிப்பார்கள். நல்லதொரு முயற்சி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நல்ல முயற்சி அண்ணாச்சி.
உங்கள் இருவரின் நோக்கமும் சிதையாமல் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.!

(என்னோடதை அங்கே போட பர்மிஷன்லாம் கேட்க வேண்டாம். நீங்களே போட்டுக்குங்க.. ஹிஹி)

தோழன் said...

ரொம்ப நன்றி தல. பிளாக் பிளாக்கா சுத்தி சுத்தி தல சுத்தறப்ப ஆறுதலா ஒரு டைரக்டரி கிடைச்சாப் போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

abul bazar/அபுல் பசர் said...

சீரிய முயற்சி.நல்லதொரு தொடக்கம்.
வாழ்த்துக்கள்.