Tuesday, February 16, 2010

ஊருக்குப் போயிருந்தேன்

70 களின் பிற்பகுதியில்தான் எங்கள் ஊருக்கு(வடகரை) பேருந்து வசதி கிடைத்தது. அது வரை 5 கி மீ தூரமுள்ள பம்புளி (பைம்பொழில் என்ற அழகான தமிழ்ப்பெயரின் மரூஉ) -இல் இறங்கி நடக்க வேண்டும் அல்லது மாட்டுவண்டிப் பயணம். அப்பொழுதெல்லாம் பழனியில் இருந்து செல்ல 12 மனி நேரம் ஆகும்; இப்பொழுது அதிகப்பட்சம் 7 மணி நேரம்தான் ஆகிறது.

12 மணி நேரப் பயணம் என்பதால் எங்களை வரவேற்க மாட்டுவண்டி கட்டி வந்து காத்திருப்பார்கள் என் மாமன்மார். அப்பா, அம்மா, நான் என மூன்றே பேர்தான் என்றாலும் 3 அல்லது 4 மாட்டு வண்டிகளில் படை திரண்டு வந்திருப்பார்கள்.

“எதுக்கு வீனா அலைச்சல்” என்ற அப்பவின் கேள்விக்கு அத்தானையும் மருமவனையும் பாக்கதவிட வேற என்ன பெரிய சோலி?” என்பதான பதில்தான் வரும். ஒரு கடாப் பெட்டி நிறைய அவித்த சோளம், தட்டைப் பயிறு, அவல் என பசியாற பண்டங்களுமிருக்கும். அதெல்லாம் அன்பில் முக்குளித்த தினங்கள். ஞாபக அடுக்குகளில் தூசு படிந்து போனவை.

40 வருட இடைவெளியில் மீண்டும் அதே அனுபவம் ஞாயிறு காலை.

எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பாகவே சென்று சேர்ந்தது நீல மலை விரைவுத் தொடர் வண்டி. முதலில் அப்துல்லா வந்தார் பின்னர் கார்க்கி, சங்கர் இருவரும். மூன்று வண்டிக்குத்தான் ஆட்கள் இருந்தோம் என்றாலும் நர்சிம் நானும் வருவேன் காத்திருங்கள் எனச் சொல்லி தன் பிரியத்தைப் பிடிவாதமாகப் பொழிந்தார்.

முதல் நாள் இரவு 2 மணிக்குத்தான் புதுக் கோட்டையிலிருந்து வந்திருக்கிறார் அப்துல்லா. இருந்தாலும் காலை 4 மணிக்கு எங்களை வரவேற்க வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. கார்க்கி, சங்கர் இருவருமே முதல் நாளிரவு சரியாக உறங்கவில்லை என அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்தன. ஆனாலும் அவர்கள் முகத்தில் பரவிய மகிழ்ச்சி அளபரியதாக இருந்தது.

நர்சிம் வரும்போதே ஒரு கவிதையுடன் வந்தார். “நீங்கள் எழுதியதிலேயே இதுதான் சிறந்த கவிதை என்றேன்”, வழக்கம் போல வழிந்தார். கால் முளைத்த அந்தக் கவிதையின் தலைப்பு அஸ்வின். அழகான கண்கள். குறும்பு கொஞ்சும் பாவனைகள் என எல்லோரையும் கவர்ந்தான்.

உறவினர் வீட்டு விசேசமொன்றில் முகம் முழுக்கச் சிரிப்புடன் கிடைக்கும் வரவேற்பிற்கும் மேலான ஒன்றாக இருந்தது.

பொருள் வயிற் பிரிவின் நிமித்தம் கைநழுவிய மாமன் மைத்துனர் உறவு இழைகளை மீட்டெடுக்கிறது இந்த வலை.

.

24 பேரு பாராட்டியிருக்காங்க:

கபீஷ் said...

வடகரைக்குப் போனத எழுதறீங்களோன்னு தலைப்பப் பாத்து நினைச்சேன்.

அழகான ஒப்புமை :-)

நர்ஸிம்மின் கவிதை பத்தி எழுதினது அழகு

கபீஷ் said...

//பொருள் வயிற் பிரிவின்//

அப்படீன்னா? சொத்து பங்கு வைப்பதில் ஏற்பட்ட பிரிவு?

வடகரை வேலன் said...

நன்றி கபீஷ். அது பொருள் தேடுதல் நிமித்தம் பிரிதல்.

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

சார், நீங்கள் சொல்லுவது அப்பழுக்கற்ற உண்மை. சற்றே புதியவனாகிய (பதிவுலக சந்திப்புகளுக்கு) எனக்கு உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது கல்யாணவீட்டை ஞாபகபடுத்தியது!

குசும்பன் said...

அண்ணாச்சி வருகிறார் என்றால் சும்மாவா! சும்மா அதிருதுல்ல:)
நம் மக்களின் பாசமே தனிதான்!

அண்ணாச்சி கூடவே வந்த இம்சை அரசன் பற்றி நாலுவார்த்தை "நல்லபடியா" எழுங்க அப்பதான் ஜாலியா இருக்கும்!

சரவணகுமரன் said...

அருமை :-)

அன்புடன் அருணா said...

ஓ இந்த ஊருக்கா???

குப்பன்.யாஹூ said...

i too came with so much interest to read about vadakarai, panpolil, ilanji, senkottai

கார்க்கி said...

:)))

~~~Romeo~~~ said...

உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அண்ணே.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சொந்தங்களை பிரிந்து மீண்டும் கூடும் போது உள்ள மனமகிழ்ச்சி வேறெதிலும் உண்டா ? .

மறக்க முடியாத அனுபவமா இருக்கும் சரியா வேலன் சார் .

உங்களை சந்திக்க வேண்டும் என்ற அவா . ஊருக்கு வரும் போது வாய்ப்பு அமைய வேண்டும் .

பரிசல்காரன் said...

எல்லாரும் காட்டிய அன்பை எப்படி எழுத்தில் கொண்டு வர என்று தெரியாமல் இன்னமும் தவித்துக் கொண்டிருக்கிறேன் அண்ணாச்சி...

சுரேகா.. said...

ஆஹா..அற்புதமா சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி!

உங்க மேல அன்புகாட்டாம யாராவது இருக்க முடியுமா!?

நம்ம அப்துல்லா,நர்சிம்,கார்க்கி,சங்கர் பற்றி கேட்கவும் வேண்டுமா?

SanjaiGandhi™ said...

நம்ப போனது நீலகிரிலு எக்ஸ்பிரசுலு.. நாட்டு ப்ளூ மவுண்டெய்னுலு.. இதுக்குத் தான் அப்போவே சொன்னேன்.. வெயிலான் குடுத்த குளிர்பானத்தை நம்பிக் குடிக்காதிங்கன்னு.. கேட்டா தான? ;))

நண்பர்கள் அனைவரின் கவனிப்பும் நெகிழ வைத்தது.. அப்துல்லாவும் கார்க்கியும் ரொம்பவே மெனக்கெட்டார்கள்.. நன்றி எல்லாம் சொல்லி தொலைவில் நிறுத்த விருப்பமில்லை.. கோவைக்கு வாருங்கள்.. எங்களுக்கும் வாய்ப்புத் தாருங்கள்.. அம்புட்டு தான்.. என்ன சொல்றிங்க அண்ணாச்சி?

அனுஜன்யா said...

அடப்பாவிங்களா! நான் சென்னை வந்து கூப்பிட்டா கூட, "அடாடா, வெளியூரில் இருக்கிறேன். நெக்ஸ்டு டைம் கண்டிப்பா மீட் பண்ணுவோம்"னு பதுங்குறாங்க - நீங்க சிலாகிக்கும் கார்க்கி, அப்துல் மற்றும் நர்சிம். இருக்கட்டும் இருக்கட்டும்
:((((

அனுஜன்யா

நர்சிம் said...

//அனுஜன்யா said...
அடப்பாவிங்களா! நான் சென்னை வந்து கூப்பிட்டா கூட, "அடாடா, வெளியூரில் இருக்கிறேன். நெக்ஸ்டு டைம் கண்டிப்பா மீட் பண்ணுவோம்"னு பதுங்குறாங்க - நீங்க சிலாகிக்கும் கார்க்கி, அப்துல் மற்றும் நர்சிம். இருக்கட்டும் இருக்கட்டும்
:((((

அனுஜன்யா
//

ரைட்ட்டு

மோகன் குமார் said...

நெகிழ்வா எழுதிருக்கீங்க வேலன் சார் ; நல்லா இருக்கு.

ஆடுமாடு said...

ஊர்க்காரங்க பாசக்காரய்ங்க!

ஊர்ல நடந்ததை எழுதலையே...

அன்புடன்-மணிகண்டன் said...

உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி வேலன் சார்..

தராசு said...

அண்ணாச்சி,

உங்களை மீட்டிங் பண்ணது ஷோக்கா இந்துச்சி,

அத்திரி said...

//அடப்பாவிங்களா! நான் சென்னை வந்து கூப்பிட்டா கூட, "அடாடா, வெளியூரில் இருக்கிறேன். நெக்ஸ்டு டைம் கண்டிப்பா மீட் பண்ணுவோம்"னு பதுங்குறாங்க - நீங்க சிலாகிக்கும் கார்க்கி, அப்துல் மற்றும் நர்சிம். இருக்கட்டும் இருக்கட்டும்
:((((//
அனுஜன்யா//

சென்னைக்கு வந்த பிறகும் கவித சொல்வேன்னு அடம்புடிச்சா அப்படித்தான்

ஜோசப் பால்ராஜ் said...

//அடப்பாவிங்களா! நான் சென்னை வந்து கூப்பிட்டா கூட, "அடாடா, வெளியூரில் இருக்கிறேன். நெக்ஸ்டு டைம் கண்டிப்பா மீட் பண்ணுவோம்"னு பதுங்குறாங்க - நீங்க சிலாகிக்கும் கார்க்கி, அப்துல் மற்றும் நர்சிம். இருக்கட்டும் இருக்கட்டும்
:((((
//

During the journey neenga ethuna kavithai eluthittu vanthu, irangunathum padichu katiruveengalonnu oru payam thaan.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பைம்பொழில் எனும் அழகான ஊர்ப்பெயரை பம்புளி என அழைப்பதை இனியும் ஏன் மாற்றக்கூடாது.நீங்கள் முயற்சி செய்யக்கூடாதா?
ஈழத்தில் திருநெல்வேலி எனும் ஊரை தின்னவேலி எனவும், ஊர்காவற்றுறை எனும் ஊரை ஊறாத்துறை என்பார்கள்...இப்போ பலர் அழுத்தம் திருத்தமாக
சரியாகக் கூறுகிறார்கள்.

வடகரை வேலன் said...

உங்க கருத்துக்கு நன்றி யோகன்.

ஆனால் விதையாக விழ்ந்தது அங்கேதான் என்றாலும் கிளைபரப்பியது கொங்கு மண்டலத்தில். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ துஷ்டிக்கும் பூப்புனிதநன்னீராட்டு விழாவுக்கும் வந்து போகும் இடமாக மாறிவிட்டது.

மேலும் இந்த ஊரிலேயே படித்து வளர்ந்த சிந்திக்கத் தெரிந்த இளஞர் கூட்டமே தற்பொழுது அமீரக நாடுகளில் தங்கள் வயிற்றுப்பாட்டுக்கான வேலைகளில் இருக்கிறார்கள்.

நினைப்புக்கும் கைகூடலுக்கும் இடையில் தட்டிப் பறிக்கும் மாயக் கரம் எங்கும் இருக்கும்.