.
என் பதிவென்றிற்கு பின்னூட்டமிட்ட சிவராமன் அதை அழைத்துச் சொன்னவிதம் பிடித்திருந்தது. சொன்ன காலமும் அப்படியே என்னுள் உறைந்திருக்கிறது. ஒரு மாலை நேரம் புது வீட்டின் மாடியில் மேற்கே மறையும் சூரியன் தீட்டிய செக்கர் வான ஓவியத்தை ரசித்துக் கொண்டிருந்தபோது சிவராமன் அழைத்ததால் அந்தக் காட்சியை சிவராமனுக்கு அடையாளமாக ஆக்கிவிட்டது மனது.
என் பக்கத்தையெல்லாம் சிவராமன் படிக்கிறார் எனபதே பெருமை என்கின்றபோது பின்னூட்டமிட்டு அதையும் அழைத்துப் பாராட்டிய பெருந்தன்மை பாராட்டிற்குரியது.
அதன் பிறகான தொடர் அழைப்புக்களில் நெருக்கம் அதிகமாகியது. சிறுகதைப் பட்டறை குறித்த அறிவிப்பும், தொடர் விளக்கமும் என் பங்கேற்பு குறித்த அக்கறையும் என அடுத்தடுத்த அழைப்புக்கள் ப்ரியத்திற்குரியவராக அவரை மாற்றியது.
பட்டறை நடக்கும்போதுதான் முரளி மூலம் அறிந்தேன் கைக்காசைப் போட்டு நடத்துகிறார் என்பதும், செலவு கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது என்பதும். செலவைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றதற்கு மறுத்து விட்டார். சரி ஓரளவுக்கு வசதியான ஆளாக இருப்பார் போல என இருந்து விட்டேன்.
நட்சத்திர வாரத்தின் முதற்பதிவு புரட்டிப் போட்டுவிட்டது என்னை. ஒரு எழுத்தாளனாக இதுவரை அவர் மீது நான் வைத்திருந்த பிம்பத்திற்கும் சிவராமன் என்ற தனிமனிதனுக்கும் இருக்கும் இடைவெளி கடந்துவிட முடியாததாக இருக்கிறது.
ஒரு சாமானியனாக அன்றாட வாழ்வைக் கடத்த, கடும் இன்னல்களுக்கிடையில் இலக்கிய சேவை செய்வதென்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்றாலும் எப்படியும் வாசகர்களைப் படிக்க வைப்பதிலும் ஒருத்தனையாவது உருப்படியாக எழுத வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதிலும் சிவராமனை மிஞ்ச ஆளே இல்லை.
அவரது வாசிப்பின் பரப்பும், ஆழமும் மிகுந்த ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது. நல்ல எழுத்து தன்னுடைய மேதமையப் பறைசாற்றாமல் அதே நேரம் பிற நல்ல படைப்புக்களை அறிமுகப் படுத்தும்.சிவராமன் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் அதைத் தொடர்ந்து செய்தவாறே இருக்கிறார்.
மார்ட்டினி அருந்திவிட்டு தங்கள் நாய்க்கு அடுத்த வேளைச் சோற்றுக்கு இல்லையே என விசனப்படும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கும் காலத்தில் பட்டினி இருந்தாவது இலக்கியச் சேவை செய்யும் சிலரும் இருக்கிறார்கள்.
நல்ல நகைமுரண் இது.
.
எந்திரன் - கார்ட்டூன்
41 minutes ago

37 பேரு பாராட்டியிருக்காங்க:
பதிவுக்கு நன்றி அண்ணாச்சி. பொது வாழ்க்கையில் தனிப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியான சிரமங்கள் என்பது மனித குலத்துக்கே பொதுவானது. அவரவர் தளத்தில் அவரவர் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
'உரையாடல்' அமைப்பாகட்டும், சிறுகதை - கவிதை போட்டியாகட்டும், அதை தொடர்ந்து நடத்தப்படும் பட்டறைகளாகட்டும் அனைத்தும் 'பைத்தியக்காரன்' என்ற தனி நபரை சார்ந்ததல்ல. ப்ரியத்துக்குரிய ஜ்யோவ்ராம் சுந்தருடன் இணைந்ததாலேயே இவைகள் சாத்தியமாயிற்று; சாத்தியமாகிறது.
நண்பர் நர்சிம், குறைந்த செலவில் ஹாலை ஏற்பாடு செய்து கொடுத்ததால் சிறுகதைப் பட்டறையில் பெரிதாக பணம் கையை கடிக்கவில்லை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
நன்றி சிவராமன்.
பொருளாதாரச் சிரமங்களுக்குக் கை கொடுத்தார்கள் என்ற போதிலும் அதன் பின்னுள்ள உங்கள் அயராத உழைப்பைப் பாராட்டியே தீரவேண்டும்.
புதிதாகத் தொழில் தொடங்கிய ஒருவன் தன்னை நிலைநிறுத்தச் செய்யும் பிரயாசைகளை அதில் கண்டேன். முன்னெடுத்தல் யார் வேண்டுமானாலும் செய்யலாம், எடுத்ததை முனைந்து வெற்றிகரமாக முடித்தலுக்குத்தான் அதிக உரம் வேண்டும்.
ராஜேந்திரன்..என் எண்ணங்களின் பிரதிபலிப்பே உங்களது இந்த இடுகை.சென்ற மாதம் 'வே ஹோம்" திரைப்படம் அன்றுதான் சிவராமனை சந்தித்தேன்..புகைப் பிடித்துக் கொண்டிருந்தவரிடம்..என்னை அறிமுகப் படுத்திக் கோண்டதும்..கட்டியணைத்து..'சாரி ..உங்க எதிரே..' என மன சங்கடப் பட்டதும்..என்னை அறியாது அவரிடம் எனக்கு பெரு மதிப்பை ஏற்படுத்தி விட்டது.தாங்கள் சொன்னது போல கை காசை செலவு பண்ணி..இலக்கிய சேவை செய்யும் அவர்..இன்றைய கால கட்டத்தில் பைத்தியக்காரன் தான்.
{மார்ட்டினி அருந்திவிட்டு தங்கள் நாய்க்கு அடுத்த வேளைச் சோற்றுக்கு இல்லையே என விசனப்படும் எழுத்தாளர்கள் நிறைந்திருக்கும் காலத்தில் பட்டினி இருந்தாவது இலக்கியச் சேவை செய்யும் சிலரும் இருக்கிறார்கள்.}
வேலன் சார்,நானும் 'ரௌடி'தான்னு சங்கமமா?
:))
TVRK சார் நன்றி.
அறிவன் நன்றி. அப்படி எல்லாம் எந்த எண்ணமும் இல்லைங்க. இருக்கும் முரணைக் காட்டி இருக்கிறேன். அவ்வளவே.
பைத்தியக்காரன்!!??
சொல்லக் கேட்டு,சொல்லக் கேட்டு மனசு வளர்த்து வரும் குழந்தையின் முகமாய் வளர்ந்து வருகிறார் சிவராமன்.பகிர்வுக்கு நன்றி வேலன்.
’பைத்தியத்தன்மை’ என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமானது.
எனினும் இந்த நல்லப் பதிவுக்கு இப்படி ஒரு பரபரப்புத்தன்மை கொண்ட தலைப்பு தேவையில்லாதது!
நன்றி தண்டோரா.
நன்றி ராஜாராம்.
நன்றி லக்கி. பரபரப்புக்காக எழுதுபவன் நானல்ல என்பது உங்களுக்குத் தெரியும். எனினும் இப்படி ஒரு பின்னூட்டத்தின் அவசியம் என்ன?
ரொம்ப சரியா எழுதியிருக்கீங்க. சிவாவை பலருக்கும் பிடிக்கும். இப்படி தனி பதிவா போட்டு பாராட்டுவது ரொம்ப சரி. அதுக்கு ஒரு பெரிய மனது வேண்டும். (எல்லோரும் செய்வதில்லை அப்படி). உங்களிடம் அது இருக்கு.
சிவா இது போன்ற நிகழ்வுகளை நடத்துவதே பெரிது. அதற்கான எண்ணமும், முயற்சிகளும் செய்வதே மிக அற்புதமான விஷயம். அவற்றுக்கு ஆகும் செலவுகளை என்னை போன்ற சில நண்பர்களையாவது share செய்ய அவரும் சுந்தரும் ஒப்பு கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணம்.
அடிகடி எழுதுங்கள் சார், அப்புறம் அப்துல்லா., "எனக்கும் ஒருத்தர் சப்போர்ட்டுக்கு கிடைதார்னு" இன்னும் மெதுவா பதிவு போட்டுடுவார்
ishes to vadakarai velan and sivaraaman
wishes to vadakarai velan and sivaraaman
இவர் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கையைக் கேட்டு மூர்ச்சையடைந்துவிட்டேன் நான். இவருடன் பேசுவதையும், இவரால் கவனிக்கப்படுவதையும் மதிப்பென எண்ணிக் கொண்டிருக்கிறேன்...
நன்றி மோகன். என்னுடைய ஆதங்கமும் அதுதான்.
நன்றி சர்புதீன்.
நன்றி ராம்ஜி. பின்னூட்டம் சரியாப் போடுங்க. கிஸ்ஸஸ்னு யாராவது நினைச்சிடப் போறாங்க.
நன்றி பரிசல். பெரிய ஆட்கள் சாதாரணமாக இருப்பது அசாதாரணமாதுதானே?
ஆனால் சிவராமன் இப்படி இருபது நமக்கு ரணமாக இருக்கிறதே என்பதுதான் நான் சொல்லவந்தது.
இந்த நல்ல மனிதருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்..
நல்ல பதிவு அண்ணாச்சி.
//கடும் இன்னல்களுக்கிடையில் இலக்கிய சேவை செய்வதென்பது //
But why?
Is it like who ties the bell to the cat?
//இவர் எழுதிய சிறுகதைகளின் எண்ணிக்கையைக் கேட்டு மூர்ச்சையடைந்துவிட்டேன்//
:-)
நல்ல பதிவு!
இவரத்தான் வாசிக்கிறேன்னு தெரியாமையே இவர்க்கு ரசிகனா இருந்திருக்கேன் :-))
நல்ல பதிவுங்க அண்ணாச்சி
சிவராமனை சென்னையில் சந்தித்திருக்கிறேன். இனிமையாக பழகும் நண்பர்.
எனினும் இந்த நல்லப் பதிவுக்கு இப்படி ஒரு பரபரப்புத்தன்மை கொண்ட தலைப்பு தேவையில்லாதது!/////
இதன் பெயர் பாஸிஸம். :))))
பைத்தியக்காரனுக்கு என்னுடைய வாழ்த்துக்களும். ஆனால் கைக்காசை போட்டு செலவு செய்து இலக்கியம் வளர்ப்பது முட்டாள்த்தனமானது. :))
இதுவும் ஒரு பாஸிஸ கருத்தே...
என்றாலும் எப்படியும் வாசகர்களைப் படிக்க வைப்பதிலும் ஒருத்தனையாவது உருப்படியாக எழுத வைத்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருப்பதிலும் சிவராமனை மிஞ்ச ஆளே இல்லை. //
ம்ம். உண்மை.
:-) இலக்கியம் வளர்க்கும் எங்கள் இரும்புகோட்டை முரட்டு சிங்கத்திற்கும் அதை எடுத்தியம்பிய அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்ல உணர்வை வளர்க்குது
உள்ளே...
நன்றி பரிசல்
நன்றி சஞ்செய்
நன்றி நர்சிம்
நன்றி விஜயசங்கர்.
நன்றி கார்த்திக்
நன்றி கோவி
நன்றி ரவி
நன்றி அமித்து அம்மா
நன்றி அதிஷா
நன்றி நேசமித்ரன்
அன்பின் ddd உங்கள் பின்னூட்டங்களை நீக்குவது இங்கே அவசியமாகிறது. மன்னிக்கவும்.
எனக்கு சிவாவை மிகவும் பிடிக்கிறது , என் அன்பு உங்களுக்கு நண்பரே
நல்ல மனிதரைப் பற்றிய நல்ல பதிவு அண்ணாச்சி!
தலைப்பு இருபொருள்பட அமைந்திருக்கிறது.
நானும் கிட்டத்தட்ட இதேமாதிரியான உணர்வில்தான் அவர் பதிவில் பின்னூட்டமிட்டிருந்தேன்.
நண்பர்கள் உதவினார்கள் என்று அவர் பெருந்தன்மையாய் சொன்னாலும், சிவராமன் செலவு செய்யாமலில்லை என்பதும் புலனாகிறது அல்லவா? அதை நானே நேரிலும் ஊகித்திருக்கிறேனே.
பொருளாதார ரீதியிலான பங்களிப்பை அவர் செய்யாமல் நண்பர்களிடம் ( நானும்தான்)விட்டுவிடவேண்டும் என்பது கோரிக்கை.
ஆரோக்கியமான பகிர்வு...நல்ல அறிமுகம்...விடுங்கள் வேலன்! தமிழகத்தில் பொழியும் கொஞ்சமே கொஞ்சமான மழையும் உங்களுக்கு பிடிக்கவில்லையா?
படித்தவுடன் ஒரு வித சந்தோஷம் மனதில்.பூங்கொத்து உங்களுக்கும், சிவராமனுக்கும்!
அண்ணாச்சி,
நட்சத்திர வாரத்தில் அவர் எழுதிய முதல் பதிவை படிச்சுட்டு அதன் பாதிப்பில் இருந்து இன்னும் நான் வெளிவரலை.
உங்கள் பதிவு மிக அருமை.
நிறைய சொல்லணும். நேர்ல பார்கிறப்ப பேசுறேன் அண்ணாச்சி.
அண்ணே நான் பெரும்பாலும் படங்களை மற்றும் மொபைலில் வந்த நகைச்சுவைகளை தான் போடுவேன்,என்னாலும் கதை எழுத முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு தோன்றியது உரையாடல் கதை போட்டியின் போதுதான்...
நன்றி அண்ணே....(சிவராமன் மற்றும் வேலன் அண்ணே)
என் அன்பு அண்ணன் பைத்தியக்காரனைப் பற்றி நல்பதிவொன்றை வழங்கியமைக்கு நன்றி ஸார்.!! :-))
(அப்படியே அண்ணன் போட்டோ ஒன்றையும் போட்டிருக்கலாமே.. கேட்டிருந்தால் தந்திருப்பேனே)
http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
I think it is important to know what is the Christian groups are doing in our country. They are doing such an atrocity, that our MSM will never report. If we let them continue this way, India becoming a christian nation is not too far.
I am requesting all the Tamil Bloggers to raise awareness among our population, and fight against such acts of conversion, which is nothing but exploitation of poor of their condition.
See how much advanced data collection they have here.
http://www.joshuaproject.net/countries.php?rog3=IN
கோவையில் ஒரு சந்திப்பு வைங்களேன்
உங்க ஜிமெயில் ஐடி அனுப்பவும்
manjoorrasa@gmail.com
Post a Comment