.
அன்புள்ள செல்வராகவன்,
எதுக்கய்யா இப்படி ஒரு படத்தை எடுத்தீர்கள்? ஆளாளுக்குப் பிரிச்சு மேய்கிறார்கள். கொஞ்ச நாளாக டல்லடித்துக் கொண்டிருந்த பதிவுலகிற்கு நல்ல வேட்டை.
சென்ற வருடம் மொத்தம் 99 தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளனவாம். ஒன்றைக் கூடவா நீங்கள் பார்க்கவில்லை. அந்தப் படங்கள் அனைத்திலும் நிறைந்து வழிந்த லாஜிக் என்ற வஸ்து உங்கள் படத்தில் ஒரு இடத்தில்கூடத் தென்படவில்லையே? அது ஏனய்யா? குறைந்த பட்சம் லாஜிக் என்ற வார்த்தையைக் கூட ஒரு பாத்திரமும் பேசவில்லையே. அது ஏன்?
அது ஏனய்யா வியட்னாமுக்கு விமானத்தில் செல்லாமல் கப்பலில் செல்கிறாகள். விமானத்தில் செல்லலாமே? என்ன மூன்று மடங்கு செல்வாகும் என்று யோசிக்கிறீர்களா? அதுதான் புனைவுன்னு முதலிலேயே கார்டு போட்டாச்சே. அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை வாடகைக்கு பிடித்துப் போனார்கள் எனக் காட்ட வேண்டியதுதானே?
காரின் ஜன்னல் வழியாக கார்த்தி இறங்க வேண்டிய அவசியம் என்ன? கார் கதவு ரிப்பேர் என எங்காவது கார்டு போட்டீரா? இல்லை கதாபாத்திரம்தான் எங்காவது சொல்லுகிறதா? 35 கோடி செலவில் படம் எடுத்தும் அவருக்கு ஒரு சட்டை வாங்கித் தர மனதில்லையே உமக்கு? என்ன ஆளய்யா நீர்?
கடலுக்குள்ளிருந்து மனிதர்களைக் கவ்விப்பிடிப்பது என்ன என கார்டு போட்டீரா? என்ன என நாங்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் அவ்வளவுதானே?
பாம்பு வரும்னு ஆண்ட்ரியாவுக்கு எப்படித் தெரியும்? அவங்க என்ன படிச்சிருக்காங்க? எங்க படிச்சாங்க? எதையுமே சொல்லவில்லை. காலேஜ் அட்மாஸ்பியரில் ஒரு குத்துப் பாட்டு வைத்திருக்கலாம்? வடை போச்சே!
பாம்புங்க எல்லாம் ஏன் மொத்தமா வருது? தனித்தனியா வந்து ஹீரொகிட்ட அடிவாங்குற வில்லன் அடியாட்கள் மாதிரி ஒண்ணொன்னா அனுப்பியிருக்கலாமே?
தண்ணிக்குள்ளே விழுந்தவங்க எப்படி 3 பேரும் ஒண்ணா ஒரே இடத்துல இருக்காங்க? குறைந்தது 10 மீ இடைவெளி வேணும்னு அரசுப் பேருந்துகளின் பின்புறம் எழுதியிருப்பதைப் படித்ததில்லையா?
புதைகுழி மேல் நிழல் விழுந்தால் புதைகுழி ஃப்யூசாகிடும்னு எந்த புத்தகத்தில் இருக்கு? நீங்க சொன்னா நாங்க நம்பனுமா?
அவ்வளவு பெரிய கல்லை எப்படி உருட்டினார்கள்? அதுவும் பசியுடன் இருக்கும் மூவரும்? இதெல்லாம் ஆங்கில படத்தில் ஓக்கே. தமிழ்ப் படத்தில் செய்தால் நாங்க கேள்வி கேப்பம்ல?
இப்படி அடுக்கடுக்கா கேள்வி கேட்க இடம் கொடுத்து ஒரு படத்தை எடுத்த உங்களை என்ன செய்ய?
அடுத்த படம் பாகம் இரண்டு எனச் சொல்லி இருக்கிறீர்கள். நான் சொல்லுவது போல் நடந்தால் நீங்களும், உங்கள் படமும் தப்பிக்கலாம்.
1. ஸ்க்ரிப்டை எழுதி எங்களிடம் கொடுக்க வேண்டும். எங்களிடமுள்ள பதிவர்களில் சிலரைக் கொண்ட வலைக்கமிட்டி அமைத்து, அதில் லாஜிக் உள்ளதா எனத் தரப் பரிசோதனை செய்து தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் அதைத் திரைப் படமாக எடுக்கலாம்.
2. படம் எடுக்க எவ்வளவு கால அவகாசம் எனச் சொல்ல வேண்டும். அதிலிருந்து தாமதமாகும் நாள் ஒவ்வொன்றிற்கும் 36% வட்டி வசூலிக்கப்படும். 12% நிர்வாகச் செலவுகளுக்கு வைத்துக் கொண்டும் மீதி 24% தயாரிப்பாளருக்கு வழங்கப் படும். தவறும் பட்சத்தில் உங்களுக்கு வழங்கப் படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வலைக் கமிட்டியாருக்கு அதிகாரம் உண்டு.
3. தயாரிப்பாளர் தரும் பணம் எவ்வளவு? என்ன வகையில் அதைச் செலவு செய்தீர்கள் என நாளதுவாரியாக கணக்கை எங்களிடம் காண்பிக்க வேண்டியது, அதைக் வலைக் கமிட்டியார் ஆய்வு செய்து தனிக்கை செய்தபின் அடுத்த கட்டப் பணம் வழங்கப் பரிந்துரைக்கப் படும்.
4. ஒரு(வழியாகப்) படம் எடுத்து முடிந்ததும் வலைக் கமிட்டியிடம் திரையிட்டுக் காட்ட வேண்டியது. வலைக் கமிட்டியார் அதிருப்தி தெரிவிக்கும் பட்சத்தில் வெளியிடத் தடை விதிக்கப் படும்.
5. வலைக் கமிட்டியார் ஒரு வேளை திருத்தங்கள் ஏதேனும் பரிந்துரைத்தால் அதை உம் சொந்தச் செல்வில் எடுக்க வேண்டும். வலைக் கமிட்டியோ அல்லது தயாரிப்பாளரோ பொறுப்பேற்கமாட்டார்கள்.
6. திரைப்படம் வெளியாகி அதிருப்தியைச் சம்பாதிக்கும் பட்சத்தில், வலைக் கமிட்டி ஒன்று கூடி நீங்கள் மேலும் திரைப்படம் எடுக்கலாமா, அதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா என விவாதித்து முடிவு செய்யும்.
குறிப்பு : இந்தக கட்டுப்பாடுகள் நீங்கள் எடுக்கும் படத்திற்கு மட்டும்தான். பிறர் எடுக்கும் படத்தைப் பற்றி கவலைப் பட மாட்டோம். முடிந்தால் ஆங்கிலத்தில் எடுத்துத் தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிடுங்கள் அப்பொழுது லாஜிக் பார்க்க மாட்டோம். கேமரூனெல்லாம் எங்களிடம் ஸ்கிரிப்ட்டைக் காட்டினார் தெரியுமா? வரவு செலவுக் கணக்கெல்லாம் நாங்கள்தான் ஆடிட் செய்தோம்.
................................................................... வேலனின் கடிதம் தொடரும்
.
எந்திரன் - கார்ட்டூன்
40 minutes ago

51 பேரு பாராட்டியிருக்காங்க:
அட்டகாசமான கருத்து உங்களுடையது.
முடிந்தால்
www.susenthilkumaran.blogspot.com
வந்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தமிழீழ முழக்கம்
என்ற என் கட்டுரையைப்
படியுங்கள். நன்றி
அழகு..,
சரியா சொன்னீங்க
தேவையான பதிவு
செம்ம குத்து :-)
அண்ணாச்சி ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ!
கொங்கு நாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ ஒத்துக்கோ!
ரைட்டு :)
கலக்கல் அண்ணாச்சி
1) 99 படத்திற்கும் நன்றி செல்வான்னு போட்ட மாதிரி பதிவு போடவில்லையே.
2) இவரிடம் தந்தால் நன்றி சொல்லலாமா வேண்டாமா என்றும் சொல்லுவார். அதுதான் மிக முக்கியம்
3) எல்லாப் படத்திற்கும் பதிவர்கள் கிழித்துக் கொண்டுதான் இருக்காங்க.
உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? அவன் ஒரு இத்துப் போனவன். நீங்க ஒரு மாமேதை.வந்துட்டானுங்க ஆட்டிக்கிட்டு.
Same Blood அண்ணாச்சி..!
@ மிஸ்டர்.நோ
This is For Your Reference.
:-)
................................................................... வேலனின் கடிதம் தொடரும்
அண்ணே அந்த ரெண்டு டேசிலும் என்ன பில் செய்யனும்?:)))
உங்கள் ஆதங்கம் புரிகிறது.
@குசும்பன்
//அண்ணே அந்த ரெண்டு டேசிலும் என்ன பில் செய்யனும்?:)))//
படிக்கும் போது பக்கத்து பெஞ்சுகிட்ட கேட்ட மாதிரி இப்பவும் கேட்டா எப்படிண்ணே.
:)))
சென்சாருக்கு போரதுக்கு முன்னாடி நமக்கு போட்டு காட்டணும்னு சொல்லலியே? :)
அது சரி :))
:-))
:))))))))))))
:-)
கலக்கல்
//தமிழ் சப் டைட்டிலுடன் வெளியிடுங்கள் //
ம்ஹூம்ம்... அதெல்லாம் படிக்க பொறுமையில்ல...
டப்பிங் வாய்ஸ் கொடுக்கச் சொல்லுங்க... அதுவும் ஜாக்கிசான் மெட்ராஸ் பாஷை பேசுற மாதிரி..
// உங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லையா? அவன் ஒரு இத்துப் போனவன். நீங்க ஒரு மாமேதை.வந்துட்டானுங்க ஆட்டிக்கிட்டு. //
உங்களுக்கு ஏதும் எருமைமாடு மேய்க்கற வேலை இருந்தா அதைப்போய் பாக்கறதுதான ஏன் வந்து ஆட்டிகிட்டு பின்னூட்டம் போடறீங்க..
சரியா சொன்னீங்க :))
அன்பு No,
பின்னூட்டங்களைப் பெரும்பாலும் நன்றி எனச் சொல்லிக் கடப்பதே என் வழக்கம். என்றாலும் சில சமயங்களில் விவாதங்களைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் இருந்தால் சிரத்தை எடுத்துப் பதில் சொல்வதும் உண்டு.
உங்களுக்கும் பதில் சொல்லலாம் என நினைத்து க்ளிக்கினால் வெற்றிடத்திற்குப் போகிறது. நேரடியாகவே பதில் சொல்லலாமே? ஏன் அங்கு போக வேண்டும்? எனக் கேட்கலாம். இருந்தாலும் கேட்பவரின் தகுதி என்ன? எந்தத் தளத்தில் இருந்து கேட்கிறார் எனத் தெரிந்தால் கேள்வியின் தொனி புரியும் என்பதால்தான்.
ஆனால் நீங்கள் ஒரு முகமற்றவர் எனத் தெரிந்ததும், இது எந்தப் பதிலையையும் எதிர்பார்த்து வீசப்பட்ட கேள்வி அல்ல. வெறுமே பரபரப்புக்காக வீசுவது எனப் புரிந்தது.
அய்யா, தலையில் ஒன்றுமில்லாதவனுடன்கூடப் பேசலாம். ஆனால் தலையே இல்லாதவனிடம் எப்படிப் பேச?
நீங்கள் முழுமையாக உங்களை வெளிப்படுத்தினால் பதில் சொல்கிறேன்.
மொட்டைக் கடுதாசி எழுதும் பழக்கம் மறைந்து விட்டதாக நான் எண்ணியது தவறுதான் போலிருக்கிறது வேறு உருவத்தில் இன்னும் இருக்கிறது.
annachi kalakola kalakal
:)
இதைத்தான் எதிர்பார்த்தேன் அண்ணாச்சி
நல்ல பகிர்வு..
அண்ணாச்சி நல்லா சொன்னீங்க
சரியா சொனீங்க.
முன்பு கிரிக்கெட் போட்டி முடிந்ததும் , திண்ணைகளிலும் , குட்டிசுவர்களிலும் உக்காந்து பேசி தீர்ப்போம்.
சச்சின் இப்படி பாட் seidhu இருக்க வேண்டும், ஹர்பஜன் இந்த பாலை இப்படி போட்டு இருக்க வேண்டும் என்று பேசுவோம்.
இப்போது அதை மென்பொருள் அலுவலகங்களில் உக்காந்து கணினி திரையில் எழுதி தீர்க்கிறோம்.
ஹா ஹா ஹா
ரொம்ப நல்லக் கடிதம் அண்ணாச்சி.
ஆனா எனக்கு இப்ப என்ன பயம்னா, மறுபடியும் எல்லாரும் ஆளாளுக்கு கடிதம் எழுத ஆரம்பிச்சுருவாய்ங்களோன்னு தான்.
நீங்க பாருங்க, காமரூன், ஆ.ஒ தயாரிப்பாளர், துணை நடிகர்களுக்கு எல்லாம் கூட கடிதம் போடப்படும் விரைவில் . ( நடக்காம போன ரொம்ப நல்லது)
விமர்சனமே செய்யக் கூடாது என்பதுதான் உமது கருத்தா..?
மாயக்கண்ணாடி, சிவாஜி, தசாவாதாரம் நான் கடவுள், உன்னைப் போல் ஒருவன் - இப்படி பல திரைப்படங்களுக்கும் இதேபோல் கொத்து புரோட்டா போட்டுவிட்டுத்தான் விட்டார்கள் பதிவர்கள்..
இதிலொன்றும் தவறில்லையே..! கருத்துப் பரிமாற்றங்கள் வெளியில் வந்தால்தான் திரைப்படங்களுக்குள் இருக்கும் விபரீதங்களும், அனர்த்தங்களும், அர்த்தங்களும் வெளியில் வரும்..!
காசு கொடுத்து திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு விமர்சிக்கும் உரிமைகூட இல்லை என்றால் எப்படி..?
இந்தப்பதிவின் நோக்கம் என்ன? தமிழ்படங்களில் லாஜிக்கே எதிர்பார்க்க கூடாதா, இல்லை மற்ற தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் லாஜிக் இல்லையென்று சொன்னவர்கள் மட்டும்தான் இந்தப்படத்தை விமர்சனம் செய்யவேண்டும் என்பதா, இல்லை அவர்கள் சொல்லும் லாஜிக் ஓட்டைகள் எல்லாமே தவறான வாதம் என்பதா? ஒருவர் ஒரு திரைப்படத்தை விமர்சனம் செய்தால், அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்குமேயானால், அந்த விமர்சனத்தை விமர்சியுங்கள். அதை விடுத்து விமர்சிப்பவரை விமர்சிப்பது உங்கள் இயலாமையையே காட்டுகிறது.
வாங்க உண்மைத் தமிழன்.
விமர்சனம் செய்யக் கூடாதுன்னு நான் எங்கேயும் சொல்லலியே? நீங்க பதிவ நல்லா மீண்டும் ஒரு முறை படிங்க.
வாங்க prosaic. பதிவை மீண்டும் ஒருமுறை நன்றாகப் படிக்கவும். இது புரியலைன்னா, சுஜாதா சொன்னதுதான் உன்மை. நமக்கு நகைச்சுவை உணர்ச்சி மங்கிக்கிட்டே வருது. ஆனா உங்க பெயரின் பிற்பகுதியைப் பார்த்தால் எனக்கு மைல்டா ஒரு சம்சயம் வருது?
கலக்கல்.
நீங்கள் பதிவில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் லாஜிக் இல்லைன்னு சொல்றவங்களை பகடி செய்துள்ளதாகவே எனக்குப்படுகிறது. அப்படி இல்லன்னா என்ன எழுதி இருக்கீங்கன்னு கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.
கலக்கல் அண்ணாச்சி.. :-)
அவ்வளவு அப்பாவியா நீங்க?
நான் பதிவில் பகடி செய்துள்ளது செல்வாவை. பொழைப்புக் கெட்டு இப்படி ஒரு படத்தை எடுப்பானேன் சிரமப்படுவானேன்.
விஜய் மாதிரி மாஸ் ஹீரோவப் போட்டு ஒரு குத்துப்பாட்டு ஒரு ஃபைட்டு ஓரு ரொமன்ஸ் அப்படின்னு மாத்தி மாத்தி எடுக்கலாம். எப்படியும் நல்லா கல்லாக் கட்டும்.
சென்னை புதுப்பேட்டையில இருக்கவன் எப்படி ஸ்விஸ்ல டூயட் பாடுவான்னு எவனும் கேட்கமாட்டான்.
அப்புறம், எனக்கு இருந்த சந்தேகம் முற்றிலும் தீர்ந்தது. நன்றி.
இப்படி சொதப்பலாக முயற்சி செய்ததர்காகவா இல்லை நல்ல முயற்சி பலரால் விமர்சிக்கப்படுகிறதே என்பதற்காகவா? எதுக்கு அவரைப் பகடி செஞ்சிருக்கீங்க அண்ணாச்சி?
//Prosaic said...
இப்படி சொதப்பலாக முயற்சி செய்ததர்காகவா இல்லை நல்ல முயற்சி பலரால் விமர்சிக்கப்படுகிறதே என்பதற்காகவா? எதுக்கு அவரைப் பகடி செஞ்சிருக்கீங்க அண்ணாச்சி?//
வெளியே வந்து உண்மையான பெயரில் கேள்வி கேட்டால் பதில் சொல்வேன்.
naan yaaroda fake id-yum illeenga.. :)
Dear prosaic,
You are who i think u are. even if u are not u should come out in public and ask.
Dear Annaachi, I am what I am, not what you think I am! :P
If thats true, then come and show ur face.
If you dont show, i am sure, u are what i think u are.
//Main Entry: pro·sa·ic
Pronunciation: \prō-ˈzā-ik\
Function: adjective
Etymology: Late Latin prosaicus, from Latin prosa prose
Date: circa 1656
1 a : characteristic of prose as distinguished from poetry : factual b : dull, unimaginative
2 : everyday, ordinary
— pro·sa·i·cal·ly \-ˈzā-ə-k(ə-)lē\ adverb //
is that u my dear? selection of a nic name tells about u. so sad.
IP address vechi aala kandupidikkalaam.. dictionary vechi aala kandupidikkureengale, neenga engiyooo poyitteenga thala! :P
I know IP address can be faked.
more ove i am not a computer literate as u are.
அன்பின் அண்ணாச்சி
உட்டுடுங்க பாவம் - இதுல தொடரும் வேறயா
ம்ம்ம்ம்
கலக்கல் அண்ணாச்சி.
இருக்கிற ஒன்னு இரண்டு நல்ல இயக்குனரையும் இப்படி விமர்சனம் செய்வது நியாயம் இல்ல.
1000 ஓட்ட உள்ள ஆங்கிலபடத்த பார்ப்பீங்க?
உங்களாள ஒரு சிரியல்ல ஒரு எபிசோடு எடுக்க முடியுமா இல்ல வேன்னாம்யா ஒரு குறும் படம் ? ம் ம் ம் ம் ம்.
kuththi kizichchiteena i'm ur side annaachchi
Laagic paaththaa entha thamiz padamum oodaathu.
Selvaa voda muyarchchiyap paaraattanum.
well said.
அண்ணாச்சி,
சென்னை வடபழனி கமலாவில் படம் பார்த்தேன், மொத்த மக்களும் ஓரே அமைதியாக பார்த்தார்கள். ஒரு சலசலப்பு இல்லை.
படத்தின் பாதிப்பு இந்த 24 மணினேரமும் கடந்து என் மனதை விட்டு அகலவில்லை.
செல்வாவை பார்த்து கைகோர்த்து, கட்டி அணைத்து, வாழ்த்து சொல்லவேண்டும் என்ற பூரிப்பு இன்னும் அடங்கவில்லை. ஒட்டை, உடசல்கள் , தவறுகள் எல்லாவற்றையும் விட்டால் , making என்ற விசயம் ஆச்சரியப்படுத்துகிறது.
இதோ தனுசிடம் செல்வா எண்னை வாங்க முயற்சிக்கிறேன். பேசியவுடன் தெரிவிக்கிறேன்.
இன்னும் 3 தடவை படம் பார்க்க தூண்டுகிறது.
வாழ்த்துக்கள் ஆ.ஒ குழுவிற்கு
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து நிறைய விமர்சங்கள் வலைப்பதிவுலகில் காணக்கிடைக்கிறது.
அத்திரைப்படத்தை ஒரு நல்ல முயற்சியாக காணும் விமர்சகர்கள் / வாசகர்கள் கணிசமாக இருப்பதும், வெவ்வேறு தளங்களில் இயங்குபவர்களும் அவ்வாறு கருதுவதும் ஆச்சர்யம் அளிக்கிறது.
வெகுஜன தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா குறைகளையும் (பொருத்தமற்ற இடங்களில் ஆடல் பாடல்கள், சண்டைக்காட்சிகள்,(choreographed stunt sequences), வக்ர நகைச்சுவை, காட்சிகளின் நியாயத்தை மீறிய பாலியல் வெளிப்பாடு,) கொண்ட ஒரு தரம் தாழ்ந்த படமாகத்தான் இதுவும் இருக்கிறது.
எண்ணிலடங்காத மோசமான படங்கள் வந்து கொண்டிருந்தாலும் அவை தயாரிப்பிலிருக்கும் நாளிலிருந்தே அவை தம்மை ஒருவாறு வெளிப்படுத்திக்கொள்வதனாலும், படத்தை பார்க்காமலே கூட அவற்றை மதிப்பிடலாம் என்பதனாலும் அவை குறித்து நாம் அலட்டிக்கொள்வதில்லை.
மாறாக இப்படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினர் இப்படத்தை தமிழின் முக்கிய முயற்சியாக அறிவித்ததும், வரலாறு (அதுவும் சர்ச்சைக்குரிய), கையாளப்பட்டிருப்பதனாலும், சிலர் அதனை கொண்டாடுவதனாலும், ஒரு சிறந்த படத்தை மதிப்பிடப் பயன்படுத்தும் அளவுகோள்களுடன் இதனை அணுக முயல்வதுதான் சரியானதாக இருக்கும். எனவே தமிழின் ஏனைய சராசரி படங்களோடு ஒப்பிட்டு அவற்றிலிருக்கும் குறைகளை மனதில் கொண்டு சலுகைகளோடு விமர்சிக்கவேண்டுமென்பது வெகுஜனப்பத்திரிகைகளுக்கான நிர்ப்பந்தமாக இருக்கலாமே ஒழிய, புதிய, சுயமான, சிந்தனைகளுக்கு களமாக இருக்கவேண்டிய வலைதளங்களுக்கு அல்ல.
படத்தை எடுத்தவர்கள் மாமேதைகள் போல் தோற்றம் கொண்டு தொலைக்காட்சிகளில் பேட்டி அளிக்கிறார்கள். படம் வர்த்தகரீதியாக வெற்றி பெற்றால் கோடிகளில் திளைக்கப்போகிறார்கள். இந்நிலையில் எளிய வலைப்பதிவர்கள் ஏன் சமரசங்களுடன் விமர்சிக்கவேண்டும்.
சிலர் எழுதியிருப்பது போல, வரலாறு, போர், அதிகாரம், ஏகாதிபத்தியம், இவை குறித்த தெளிவான புரிதலோடு குறியீட்டுரீதியாக அவற்றை இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பதாக நம்ப எந்த முகாந்திரமும் இல்லை. இயக்குனருக்கு அத்தகைய புரிதல் இல்லை என்பதற்கு படம் நெடுகிலும் உள்ள மலினமான ரசனையுடைய காட்சிகளே சாட்சி.
மேலும் சிலர் பின்நவீனத்துவ அணுகுமுறைகள், காட்சியின்பக்காட்சிகள் என்றெல்லாம் துணிவது அர்த்தமற்றது.
தமிழ் சிறுபத்திரிகைகளில், தொண்ணூறுகளில் ஒரு கோட்பாட்டுருவாக்க முயற்சியின்போது, அதுவரையிலான இலக்கிய விமர்சனங்களில் இருந்த மேட்டிமைத்தனத்திற்கும் அதன் மூலம் நிறுவப்பட்டிருந்த அதிகாரத்திற்கும் எதிராக ஒடுக்கப்பட்டவர்களின் நோக்கிலும், துயரமும் வலியும் நிரம்பிய சூழலில் தவிர்க்கமுடியாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் அடையாளங்களாக இகழப்பட்ட, குடி, அசுத்தம், வெளிப்படையான பாலியல் சொல்லாடல்கள், போன்றவற்றை அவற்றைக்கொண்டே மீட்டெடுக்க அவர்கள் தன்னம்பிக்கை கொள்ளும் நோக்கிலும் கொண்டாடும் வகையில், உருவாக்கிய சொல்லாடல்களை அதற்கு சம்மந்தமே இல்லாத சூழலில் வாழ்பவர்கள் கையாள்வதும் இது போன்ற வெகுஜனப்பிரதிகளில் அவற்றை பொருத்திப்பார்ப்பதும் ஆபத்தானது.
நவீனத்துவ காலத்தின் கலை வடிவத்திலேயே தமிழ் மக்களின் பலதரப்பட்ட வாழ்வியலை மிகையின்றி நேர்மையாக பதிவு செய்யாத, இந்தியாவின் பிற மாநிலங்களில் முயன்று வெற்றி கண்ட பாதையில் அடிபதிக்காத, அதீத வர்த்தக நோக்கங்கள் கொண்ட தமிழ்த்திரையுலகம், பின் நவீனத்துவ கலை வடிவங்களை பரிசோதிப்பதாக கருதுவது, நமது ஆர்வக்கோளாறெயன்றி வேறில்லை.
தமிழில் சமீபத்தில் வெளியான படங்களில், முகமற்ற மக்களின் துயர வாழ்வை பதிவு செய்த ”குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்”,(குமரி மாவட்ட வட்டார வழக்கில் உரையாடல் அமையாதது உட்பட பல குறைகள் உண்டென்றாலும்), போலி ஜனநாயக அரசியல்வாதிகளிடம் பலிகடாவாகும் இளைஞர்கள், அவர்களின் வன்முறை, அவர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடு, ஆகியவற்றை பேசிய ”சுப்ரமண்யபுரம்”,(இது முழுக்க ஆணிய நோக்கிலான படம் என்றாலும்), கடலூர் மாவட்ட (பண்ருட்டி) விவசாயக்குடும்பம், அவர்களின் சாதியபிமானம்,வேற்று சாதி காதல் கலப்பால் குலைந்து தடுமாறும் அவர்கள் வாழ்வு ஆகியவற்றை பிராந்திய அடயாளங்களோடு சொன்ன ”ஒன்பது ரூபாய் நோட்டு”(இப்படத்திலும் மிகை நடிப்பு உண்டென்றாலும்) தமிழ் சிறுவர் சிறுமியரின் பால்ய காலத்தை கதைக்களமாக்கி அவர்களின் உணர்வுகளை ஓரளவிற்கு படமாக்கிய “பசங்க” போன்ற சிறிய படங்களை அவைகளின் குறைகளை சமரசம் செய்து கொண்டு உற்சாகப்படுத்தலாமே ஒழிய பிரம்மாண்டம் என்ற் பெயரில் அச்சுறுத்தும் இது போன்ற முயற்சிகளை அல்ல.
ராஜகாந்தன்.
அன்பின் ராஜகாந்தன்,
உங்கள் நீஈஈஈஈஈண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.
உங்களுக்கு ”நான் ஆதவன்” என்ற நண்பர் எழுதிய விமர்சனத்தைப் பரிந்துரைக்கிறேன்.
மேலும் இன்னொன்று Wednesday, November 19, 2008 அன்று ஒரு வலைப்பூவை ஆரம்பித்த நீங்கள் இதுவரை ஒரு பதிவும் எழுதவில்லை என்பதும் வெறும் தலைப்பு மட்டும்தான் வைக்க உங்களுக்கு நேரமிருக்கிறது என்பதும் நீங்கள் நேரமினையால் எவ்வளவு அவதிப்படுகிறீர்கள் எனத் தெரிகிறது.
நல்ல ஆழ்ந்த வாசிப்பனுபவமும், உலக திரைப்படங்களில் நல்ல தேர்ச்சியும் உள்ள தாங்கள் தங்கள் வலைபூவில் ந்ல்ல திரைப்படங்களை அறிமுகப்படுதலாமே?
இது மோசம் எனச் சொல்ல ஓராயிரம் பேருண்டு இங்கே எது நல்லது எனச் சொல்லத்தான் எவருமில்லை.
நல்ல படைப்புக்களை உங்கள் வலைப்பூவில் பதிவேற்றம் செய்யலாமே?
இதையும் படித்துவிட்டேன்.
Post a Comment