Saturday, January 16, 2010

ஆயிரத்தில் ஒருவன் - நன்றி செல்வா

.

தமிழில் ஃபேண்டசிப் படங்கள் இரண்டே வகைதான். மாயா ஜால விட்டலாச்சார்யா வகை மற்றும் ராமநாராயணன் வகைக் கடவுள் படங்கள். சமீபத்தில் வந்த ஈரம் வித்தியாசமான விதிவிலக்கு.

தற்பொழுது வரும் தமிழ் மொழியாக்கப் படங்கள் ஓரளவுக்கு ஓக்கே என்றாலும் கோட்டும் டையும் அணிந்த ஒருவன் சென்னை பாஷை அல்லது பொருந்தாத பழமொழிகளைக் கொண்டு வட்டார வழக்கில் பேசுவது எரிச்சல் ஊட்டுகிறது.

இந்தப் பின்புலத்தில் ஆயிரத்தில் ஒருவன் ஒரு நல்ல முயற்சி. இரண்டு விஷயங்களுக்காக செல்வராகவனைப் பாராட்ட வேண்டும். இது போல ஒரு ஃபேன்டசிக் கதையை எடுக்க நினைத்ததற்காகவும், அதை சிறப்பாக எடுத்ததற்காகவும்.

ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகளை இப்பொழுது சொல்ல முடியும் என்றாலும் படம் பார்க்கும் பொழுது அடுத்து என்ன என்ற ஆவலும், படத்தை பிரசெண்ட் செய்த விதமும் அதை மறக்கடித்திருப்பது உண்மை.

தொல் பொருள் ஆராய்ச்சியும், அதன் சாதக பாதகங்களும் ஆங்கிலப் படங்கள்மூலம் ஏறகனவே பார்த்ததுதான் என்றாலும் ஆரம்பக் காட்சிகளே அசத்தலாக இருக்கின்றன. குறிப்பாக சட் சட் என மாறும் காட்சியமைப்பு.

படத்தின் கதை என்ன என்பது கிட்டத்தட்ட மனப்பாடப் பகுதி செய்யுள் போல எல்லோரும் ஒரு முறை சொல்லி விட்டார்கள். படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களாக நான் கருதுவது:-

1. கார்த்தியின் பாத்திரப் படைப்பு. சுஜாதா கதையில் வரும் வசந்தைப் போல. கதையோட்டத்தில் தன் தனித்தன்மையை இழந்து முக்கியமானவனாக மாறுவது. (முத்துக்குமரன் பாத்திரத்திற்கு சரியான ஆசாமி யாராவது அந்தக் கதையை முயலலாம் கார்த்தியை வைத்து)

2. தமிழ்த் திரைப் படங்களில் பெரும்பாலும் கதாநாயகர்களை ஒட்டியே பெண் பாத்திரங்கள் சித்தரிக்கபடும். மாறாக இப்படத்தில் பெண்பாத்திரங்கள் இரண்டுமே தன்னிச்சையாக சுய சிந்தனை உள்ளவர்களாக வேறு ஒரு நோக்கம் உள்ளவர்களாகக் காட்டியிருப்பது.

3. லாஜிக் என்ற வஸ்து கடைசி வரை எங்குமே தட்டுப்படாமல் இருப்பதை கதையின் ஓட்டத்திலும் காட்சிப்படுத்துதலிலும் மறக்கடித்திருப்பது. அடுத்து என்ன என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறதே தவிர. லாஜிக் இடிப்பது தெரியவில்லை.

4. எது நிகழ்காலம், எது கனவுலகம் எனத் தெரியாமல் ஒன்றிலிருந்து ஒன்று என முன் பின்னாகச் சென்று வரும் ஃபேண்டசித்தன்மை.

5. மிக நேர்த்தியான ஒளிப்பதிவு, நகரம், காடு, மலை, பாலைவனம், நீர் நிலை என அனைத்துப் பிரதேசங்களையும் அருமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

செல்வாவிடம் கேட்கச் சில கேள்விகள்.

1. ஜி வி பிரகாஷிடம் இன்னும் நன்றாக வேலை வாங்கயிருக்கலாமே?

2. சோழ மக்களைக் காண்பிக்கும்போது இருக்கும் இருட்டுக்கு என்ன குறியீடு. ஏன் அவர்களைக் கறுப்பர்களாகக் காட்ட வேண்டும்?

வடவள்ளி ஸ்ரீராம் தியேட்டரில்தான் இப்படத்தைப் பார்த்தேன். வழக்கமாக நக்கல் நையாண்டி என படத்தின் இடை இடையே கத்தும் கூட்டம் அமைதியாகப் படம் பார்த்தது ஆச்சர்யமானது. படம் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். வெளிவரும்போது குடும்பப் பெண்கள் பேச்சிலிருந்து (”இங்கிலீஷ் படம் பார்த்த மாதிரி இருக்கு”) படம் அவர்களுக்கும் பிடித்திருக்கிறது எனத் தெரிகிறது.

ஹாலிவுட் திரைப்படங்களை DVDயில் பார்த்து ரசிக்கும் மேல்தட்டு மக்களுக்கு இப்படம் பிடிக்காமல் இருக்கலாம். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. DVD கிடைத்தாலும் மொழிப் பிரச்சினை இருக்கிறது. எனவே என்னைப் போன்ற மத்திய தர ரசனை உள்ள ஆசாமிகளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி செல்வா.


.

36 பேரு பாராட்டியிருக்காங்க:

ச.செந்தில்வேலன் said...

மாறுபட்ட கோணத்தில் அலசியிருக்கிறீர்கள்.

ஊரில் உள்ள என் நண்பர்கள், படம் பிடித்திருப்பதாகவே கூறுகிறார்கள்.

வடவள்ளி ஸ்ரீராம் திரையரங்கில் தான் பார்த்தீர்கள் என்றால், கோவை நகரில் உள்ள பிரதான திரையரங்குகளில் டிக்கட் கிடைக்கவில்லையா? கோவையில் எத்தனை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார்கள்?

குசும்பன் said...

//சோழ மக்களைக் காண்பிக்கும்போது இருக்கும் இருட்டுக்கு என்ன குறியீடு. ஏன் அவர்களைக் கறுப்பர்களாகக் காட்ட வேண்டும்?//

அண்ணே, சோழபரம்பரையில் வந்த குசும்பன் கருப்பாக இருக்கும் பொழுது அவர்கள் முன்னோர்களும் கருப்பாகதானே இருக்கவேண்டும் இந்த சின்ன லாஜிக்க் கூட தெரியாம நீங்க எல்லாம் என்ன படம் பார்க்கிறீங்க....:)


சோழபரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ என்று சத்தியராஜ் சொல்வது மாதிரி இருக்கா?:)))

வடகரை வேலன் said...

நன்றி செந்தில்,

நகரத் திரையரங்குகளைத் தவிர்த்து வடவள்ளியில் பார்த்ததற்கு காரணம் என்னைப் போன்ற சாமானியர்களைப் படம் எப்படிக் கவர்ந்திருக்கின்றது எனப் பார்க்கத்தான்.

நன்றி சரவணவேல் MA, MLA

பரிசல்காரன் said...

கடைசி வரிக்கும் முதல் பாராவுக்கு ரிப்பீட்டு!

அனுஜன்யா said...

கேபிள் - பார்க்காதே

சரவணகுமார் MSK - வாவ், பின் நவீனம் ! இது படம். அவசியம் பார்க்கணும்.

கார்க்கி - பார்க்கவே கூடாது

பரிசல் - ஆண்கள் மட்டும் பார்க்கலாம்

வேலன் - பார்க்கலாம்

இப்ப நான் என்ன செய்யட்டும்?

அனுஜன்யா

வடகரை வேலன் said...

அனுஜன்யா,

நான் எந்த விமர்சனத்தையும் படிக்காமல் படம் பார்த்தேன். நன்றாக இருக்கிறது.

படம் வெளியாகி ஒரு மாதம் வரை பிளாக்கில் யாரும் விமர்சனம் எழுதக்கூடாது என ஒரு சுய கட்டுப்பாடு கொண்டுவந்தால நன்றாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.

மருந்தைக் குடிக்கும்போது குரங்கை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

ஈரோடு கதிர் said...

படம் குறித்து அருமையான அலசல்

நிஜமா நல்லவன் said...

/வடகரை வேலன் said...

படம் வெளியாகி ஒரு மாதம் வரை பிளாக்கில் யாரும் விமர்சனம் எழுதக்கூடாது என ஒரு சுய கட்டுப்பாடு கொண்டுவந்தால நன்றாக இருக்குமோ எனத் தோன்றுகிறது./

அண்ணாச்சி...உங்க ஐடியா நல்லா தான் இருக்கு. விமர்சனம் படிக்காம படம் பார்க்கனும்னு நினைச்சி படம் பார்க்கிறதுக்குள்ள ஒண்ணு ரெண்டுன்னு ஆரம்பிச்சி எல்லோருடைய விமர்சனமும் படிச்சிட்டேன்:)

நர்சிம் said...

நல்ல கோணம்

@ அனுஜன்யா..

பற்றியும் பற்றாமலுமில் இந்தப் படம் குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று வெயிட்டிங்.

கும்க்கி said...
This post has been removed by the author.
கும்க்கி said...

--பேரு பாராட்டியிருக்காங்க.

அப்படின்னு கமெண்ட்டுக்கு மேல போட்டிருக்குது.
இதென்னடா வம்பாப்போச்சுன்னு கமெண்ட்ட டெலீட்டிட்டேன்.

என்னத்த சொல்றது.........

வடகரை வேலன் said...

கும்க்கி,

உங்க கிட்ட பிடிச்சதே அந்த நக்கல் நையாண்டிதான். ஆனால் அதை எல்லா சமயத்திலும் உபயோகிப்பதுதான் பிடிக்கவில்லை.

இந்தப் படத்தில் என்ன குறைன்னு எழுதலாம். அதை விட்டு விட்டு இது மாதிரி எல்லா பிளக்குலயும் நக்கல் பண்ணுவது என்ன விமர்சனம்?

ஆனால் விமர்சனம் என்பது நேர்மறையாக இருக்க வேண்டும். தவறைக் கூடச் சுட்டிக் காட்டும் போது திருத்திக் கொள்ளும் விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை.

அதை விட்டு வாந்தி என்பதும் உங்களைப் போல பகடி செய்வதும் உங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பே தவிர படைப்பின் மீது வைக்கப்பட்ட விமர்சனமல்ல.

நான்தான் பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே. ஹாலிவுட் திரைப் படங்களைப் பார்த்து வியந்து கொண்டிருப்போருக்கான படமல்ல இது.

கான்வெண்ட்டில் படித்து தஸ் புஸ் என ஆங்கிலம் பேசும் உங்கள் குழந்தையை நிங்கள் உச்சி முகர்வதுபோல தமிழ் மீடியத்தில் படித்து க்கு ங்ஙு சொல்லும் என் குழந்தையை பாராட்டுவதில் என்ன தவறு?


//பலரின் விமரிசனங்களை படித்தால் ‘மவனே ! பாயிண்ட் பாயிண்டா’ பிரிச்சு மேஞ்சுடணும்’ -னு நோட்டும் கையுமா போய் குறிப்பெடுத்துக் கொண்டு எழுதுவார்களோ என சந்தேகமாயிருக்கு .அதிலும் ஆங்கிலப்படங்களை அதிகமாக பார்ப்பவர்கள் தங்கள் மேதமையை காட்டுவதற்காக ‘சொதப்பிட்டான்யா’ என 1000 கோடி செலவில் எடுத்த ஆங்கிலப்படத்தையும் 30 கோடியில் எடுத்த இந்த படத்தையும் ஒப்பிட்டு ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்குவது நல்ல தமாசு .//

நன்றி : http://cdjm.blogspot.com/2010/01/blog-post.html

வடகரை வேலன் said...

கும்க்கி,

மேலும் ஒன்று சொல்ல விடுபட்டுவிட்டது.

Continous improvement is always better than prolonged perfection.

விக்னேஷ்வரி said...

வித்தியாசமான கண்ணோட்டம் சித்தப்பு. படம் பார்க்கனும்னு தோணுது உங்கள் அலசல் பார்த்ததும்.

துபாய் ராஜா said...

நியாயமான, நேர்மையான, அழகான, அருமையான நடுநிலையான விமர்சனம்.

//கான்வெண்ட்டில் படித்து தஸ் புஸ் என ஆங்கிலம் பேசும் உங்கள் குழந்தையை நிங்கள் உச்சி முகர்வதுபோல தமிழ் மீடியத்தில் படித்து க்கு ங்ஙு சொல்லும் என் குழந்தையை பாராட்டுவதில் என்ன தவறு?//

//படம் வெளியாகி ஒரு மாதம் வரை பிளாக்கில் யாரும் விமர்சனம் எழுதக்கூடாது என ஒரு சுய கட்டுப்பாடு கொண்டுவந்தால நன்றாக இருக்குமோ எனத் தோன்றுகிறது.//

திரைப்படம் வந்த அன்றே போட்டி போட்டு விமர்சனம் எழுதி கிழிக்கும் நண்பர்கள் கவனிக்க வேண்டிய அருமையான கருத்துக்கள்.

இதே கருத்தை ஒட்டி நான் எழுதிய பதிவு. சோழன் செல்வராகவனும் பதிவுலக பாண்டியர்களும்.... http://rajasabai.blogspot.com/2010/01/blog-post_16.html

திகழ் said...

அருமை

தங்களின் திரைப்பார்வைக்கு நன்றிங்க‌

அத்திரி said...

good review ..nice annachi

Sabarinathan Arthanari said...

கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
நன்றி அண்ணாச்சி

http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post.html

கும்க்கி said...

http://kumky.blogspot.com/2010/01/blog-post.html

அண்ணாச்சி,
சொல்ல வந்ததில் ஒரு 10 சதவீதம் மட்டும்.
தொடருமானால் அலசி துவைத்து காயப்போடவும் தயார்.

அஹோரி said...

//ஹாலிவுட் திரைப்படங்களை DVDயில் பார்த்து ரசிக்கும் மேல்தட்டு மக்களுக்கு இப்படம் பிடிக்காமல் இருக்கலாம். எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. DVD கிடைத்தாலும் மொழிப் பிரச்சினை இருக்கிறது. எனவே என்னைப் போன்ற மத்திய தர ரசனை உள்ள ஆசாமிகளுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.//

ரொம்ப சரியாய் சொனீங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான விமர்சனம் ..

நல்லாருக்கு வேலன் சார் .

||| Romeo ||| said...

\\ஆயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகளை இப்பொழுது சொல்ல முடியும் என்றாலும் படம் பார்க்கும் பொழுது அடுத்து என்ன என்ற ஆவலும், படத்தை பிரசெண்ட் செய்த விதமும் அதை மறக்கடித்திருப்பது உண்மை.//

கரெக்டா சொன்னிங்க தலைவரே .

பித்தன் said...

//கான்வெண்ட்டில் படித்து தஸ் புஸ் என ஆங்கிலம் பேசும் உங்கள் குழந்தையை நிங்கள் உச்சி முகர்வதுபோல தமிழ் மீடியத்தில் படித்து க்கு ங்ஙு சொல்லும் என் குழந்தையை பாராட்டுவதில் என்ன தவறு?//

Nachchchchchchch............. answer.

EINSTEEN RAVI said...

மிக்க நன்றி வடகரைவேலன் அவர்களே.எனக்குத் தெரிந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை பாராட்டியது நீங்கள் ஒருவர் தான்.ஒரு நல்ல படத்தை ரசிக்க மக்களுக்குத் தெரியவில்லையே..... என்ற வருத்தம் என்னிடம் உள்ளது.


EINSTEEN.R
tirunagarmadurai@gmail.com

வடகரை வேலன் said...

கும்க்கி,

ஒரு திரைப்படத்தைத் திரைப்படமாக அணுகாமல் உங்கள் மேதமையைக் காட்டும் விதமாகப் பார்த்திருக்கிறீர்கள்.

இரண்டு தவறுகள்.

1. உங்கள் அமைப்பு சார்ந்த சிந்தனை
2. பொதுவாக திரையரங்குகளில் அதிகமும் படம் பார்த்திராத நீங்கள் இந்தப் படத்தைப் பார்த்தது.

நீங்கள் ஒரு மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர் என வைத்துக் கொள்வோம். அங்கிருந்து சில காரணங்களால் வெளியேற்றப் பட்டு ஒரு நகராட்சிப் பள்ளியில் பணியாற்றும் சூழ்னிலை வருகிறது. அப்பொழுது நீங்கள் அங்கிருக்கும் மாணவர் ஒருவர் எடுத்த 80% மதிப்பெண்களைப் பாராட்டுவீர்களா அல்லது உங்கள் மெட்ரிக் மாணவன் எடுத்து 96% உடன் ஒத்துப் பார்த்து அவரை வைவீர்களா?

உங்கள் செயல் இரண்டாம் வகை.

அதே நேரம் உங்கள் உழைப்பைக் கொடுத்து நீங்கள் நகராட்சி மாணவர்களை மெட்ரிக் மாணவர்கள் அளவுக்கு உயர்த்தினால் நான் மகிழ்வேன்.

சமீபகாலத் திரைப்படம் எதையும் பார்க்காமல் இத்திரைப்படத்தை மட்டும் பார்த்துவிட்டுச் செய்யப்படும் உங்கள் விமர்சனம் நியாயமானதா என நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். கிடைக்கவில்லை எனினும் பரிசுக்கு முயலும் மனதாவது வாய்க்கும்.

வன்முறை, லாஜிக் இல்லாதது என்பதெல்லாம் என்ன வாதம்?

சரி அய்யா உங்களுடன் ஒத்துப் போகிறேன். சமீபத்தில் வந்ததில் வன்முறை இல்லாததும், லாஜிக் உள்ளதுமான ஒரு திரைப் படத்தைப் பரிந்துரைங்களேன். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்.

இருப்பதற்குள் சிறந்ததை பார்க்கத்தான் நமக்கு வாய்த்திருக்கிறது. வருகிற ஒன்றிரண்டையும் தூற்றிக் கொண்டிருந்தால் இதுவுமற்று இருக்க வேண்டியதுதான்.

உடனே உலகத் திரைப் படத்தைப் பாருங்கள் கேரளாவைப் பாருங்கள் என மொழியாதீர்கள்.

கலாச்சாரம், மொழி, வியாபார நிர்பந்தம் என எத்தனையோ இருக்கிறது. அதையும் தாண்டி வரும் இது போன்ற ஒரு சில முயற்சிகளை கைதட்டி வரவேற்கவில்லை எனினும், தடைக்கல்லாக இருக்க வேண்டாமே ப்ளீஸ்.

இன்னும் சொல்ல ஆசைதான் அது தனிநபர் தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் நிறுத்துகிறேன்.

கார்க்கி said...

ஆங்..ஆங்.. அண்ணனோட பாட்டு

ஆங்..ஆங். ஆட்டம் போடுடா

வடகரை வேலன் said...

நன்றி கார்க்கி.

வாழக இளய தளபதி.

வாழ்க விசய். வாழ்க அவர்தம் கலைச்சேவை.

உடல் மண்ணுக்கு உயிர் விசய்க்கு.

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே

தமிழன்-கறுப்பி... said...

செல்வாவும் இதை fantasy and adventure என்றுதான் சொல்லி இருக்கிறார். அந்த வகையில் ஆங்கிலப்படங்களை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு இதை ஏற்க முடியாமல் போவது ஏனென்றுதான் பரியவில்லை.

தமிழன்-கறுப்பி... said...

பின் குறிப்பு:
நான் இன்னும் படம் பாக்கல.

:)

Thamizhmaangani said...

ரெண்டாவது பகுதியில வந்த தமிழ் புரிஞ்சுதா??:(

வடகரை வேலன் said...

தமிழ்,

எனக்குப் புரிந்தது.

கபீஷ் said...

நல்ல அலசல்.படம் எனக்குப் பிடிச்சிருக்கு. வன்முறை அதிகம் இல்லை, கட் பண்ணிட்டாங்கன்னு நினைக்கறேன்.

கார்க்கி said...

//வடகரை வேலன் said...
நன்றி கார்க்கி.

வாழக இளய தளபதி.

வாழ்க விசய். வாழ்க அவர்தம் கலைச்சேவை.

உடல் மண்ணுக்கு உயிர் விசய்க்கு.

ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக் கட்டு//

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. அண்ணாச்சி இது சூப்பர்ஸ்டார் பாட்டு. அட, ரஜினி பாட்டுங்க. நீங்க சூப்பர்ஸ்டாரும் விஜய்தான் நினைச்சுக்க போறீங்க.. :)))

ஆ.ஒ. தமிழ் புரிஞ்ச உங்களுக்கு இது தெரியல பாருங்க

அப்புறம் இதையும் பாருங்க..
http://www.karkibava.com/2010/01/blog-post_20.html
அவங்கள நிறுத்த சொல்லுங்க. நான் நிறுத்தறேன் :)))

வடகரை வேலன் said...

கார்க்கி,

பதில் சொல்லிச் சொல்லி ஆயாசமாக இருக்கிறது. லாஜிக் இல்லை, ஸ்கிரிப்ட் எழுதல, 3 வருசம் ஆச்சு, 35 கோடி ஆச்சு என்பதான உன் ஆதங்கம் படத்தின் மீதான விமர்சனமா? அதை எடுத்த டீமின் மீதான விமர்சனமா?

அது சரி வாந்தி எனத் தலைப்பு வைத்து எழுதும் அளவுக்கு பெரிய எழுத்தாளனாகிவிட்ட உன்னிடம் லாஜிக் பார்த்தது என் குற்றம்தான்.

எல்லோரும் படிக்கும் ஒரு பொது இடத்தில் வாந்தி என, அதுவும் தலைப்பில் வைத்து எழுதுகிறாயே உன் மேதமையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

எழுத வரும்பொழுது இருக்கும் பணிவு தலைக்குப் பின் ஒளிவட்டம் வந்ததும் காணாமல் போய்விடுவது சாபக்கேடுதான்.

இனி நீ விஜய் படம் மட்டும் பார்; வாந்தி எடுக்க வேண்டியதிருக்காது. அதுதான் உனக்கும் நல்லது பதிவுலகத்திற்கும் நல்லது.

ஆனால் ஒன்று தம்பி, விஜய் படம் பார்த்து பேதி வந்ததாக யாரும் பதிவெழுதியதாக ஞாபகம் இல்லை.

கும்க்கி said...

ரிவர்ஸில் கொஞ்சம் பார்க்கலாம்...

என் மீது உங்களுக்கு இருக்கும் உரிமையை இப்படி காட்டியமைக்கு நான் வருத்தப்பட மாட்டேன் என உங்களுக்கே தெரியும்...இருந்தாலும்...

1) இந்தப் படத்தில் என்ன குறைன்னு எழுதலாம்..

எழுதியாச்சு...

எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேரிடையான பதில் இல்லை....

கார்க்கி பதிவிற்கும் சேர்த்துதான்......


2) இன்னும் சொல்ல ஆசைதான் அது தனிநபர் தாக்குதலாக எடுத்துக் கொள்ளப்படும்..ஆபத்து..?

:)உங்கள் மேதமையைக் காட்டும் விதமாகப் பார்த்திருக்கிறீர்கள்

:))உங்கள் அமைப்பு சார்ந்த சிந்தனை

:)))பொதுவாக திரையரங்குகளில் அதிகமும் படம் பார்த்திராத நீங்கள்

:))))உங்கள் செயல் இரண்டாம் வகை

:)))))சமீபகாலத் திரைப்படம் எதையும் பார்க்காமல்

:))))))எனினும், தடைக்கல்லாக இருக்க வேண்டாமே ப்ளீஸ்.

இது எனக்கு.


இனி கார்க்கிக்கு...

:)அது சரி வாந்தி எனத் தலைப்பு வைத்து எழுதும் அளவுக்கு பெரிய எழுத்தாளனாகிவிட்ட

:))உன் மேதமையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை

:)))எழுத வரும்பொழுது இருக்கும் பணிவு தலைக்குப் பின் ஒளிவட்டம் வந்ததும் காணாமல் போய்விடுவது

:))))இனி நீ விஜய் படம் மட்டும் பார்; வாந்தி எடுக்க வேண்டியதிருக்காது. அதுதான் உனக்கும் நல்லது பதிவுலகத்திற்கும் நல்லது

:)))))ஆனால் ஒன்று தம்பி, விஜய் படம் பார்த்து பேதி வந்ததாக..




பதில் சொல்லிச் சொல்லி ஆயாசமாக இருக்கிறது.
இது உங்களுக்கு...இல்லையில்லை...
உங்கள் மனச்சாட்சிக்கு..

(உதைப்பதாக இருந்தால் முன்னரே சொல்லிவிட்டு செய்யவும்...ஆஸ்பிட்டல் செலவுக்கும் சேர்த்து)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஜாரி.. கொஞ்சம் லேட்டாயிருச்சு. பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கச்சொல்லோ வாய் நமநமங்குது கருத்துச்சொல்ல.. தாமதமாகிவிட்டதால் பதிவில் எனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொண்டு ஓடிவிடுகிறேன். :-)

ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கவா.? படம் எப்படியும் ஓடிவிடும் என்ற உள்மன ஆசையை வெளிப்படுத்தும் நோக்கில் (விஜய் ரசிகர்கள் எழுதும் பாணியில்) கூட்டமே அமைதியாக படம் பார்த்தது, குடும்பப்பெண்களுக்கு பிடித்திருக்கிறது, ஹவுஸ் புல்லாகிவிட்டது என்கிற ரீதியில் நீங்கள் எழுதியிருப்பதின் அவசியம் என்ன என்றுதான் புரியவில்லை.