Friday, January 01, 2010

காற்றிலிருந்து நீளும் கைகள்

.
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்தப் புத்தாண்டு துவக்கத்தை கண்ட்ரி கிளப்பில் கொண்டாடுவதென்று முடிவு செய்தோம். ஸ்பான்சர் நமது எதிர்காலப் பிரதமர் சஞ்செய்.

7.30 மனிக்கு கோவையில் இருக்க வேண்டும் என்ப் படித்து படித்து சொல்லியும் பரிசல் 7.30க்குத்தான் திருப்பூரிலிருந்து கிளம்பினார். 9.00 மணிக்கு அவரும் வெயிலானும் கோவை வந்து சேர நானும் செல்வாவும் சஞ்செய் மற்றும் ராமைப் பிக்கப் செய்து கொண்டு இன்னொரு காரில் கிளம்பினோம்.

அகோரப் பசி என அனைவரும் அரற்றவே, ஆச்சியப்பரில் தஞ்சம் புகுந்தோம். நன்றாக உண்டபின் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம். கிட்டத்தட்ட பாலக்காடே வந்துவிடுமோ என்ற அச்சத்தில், ”சஞ்செய் உனக்கு வழி தெரியுமா?” என்றேன்.

“போங்க அண்ணாச்சி நானே ஒருதடவைதான் வந்திருக்கேன் அதுவும் பகலில், இப்படி நடுராத்திரியில் கூட்டி வந்தால் யாருக்குத் தெரியும் ?” என்றான். நல்ல வேளையாக கூட இருந்த செல்வேந்திரன் தயவால் இடத்தை அடைந்தோம்.


உஷா ஊதுப் கூட்டத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இரவு 11.30 மனிக்கும் அவரது உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது. "And then sing with me at the banks of the Cauvery" என்று 70 களில் பாடிய அதே குரலை இன்னும் தக்க வைத்திருக்கிறார். மட்டுமல்லாது கூட்டத்தை மயக்கும் வித்தையில் கை தேர்ந்தவர்.

சரியாக 12.00 மணிக்கு எல்லோரையும் வாழ்த்திப் பாடி விட்டு மேலும் இரண்டு பாடல்களைப் பாடினார்; சமீபத்தில் வெளியான படத்திலிருந்து. கூட்டம் கொத்துக் கொத்தாகக் கலைய ஆரம்பித்தது. என்ன பாட்டு என்பது உங்களுக்கே இன்னேரம் தெரிந்திருக்கும்.

நாங்களும் கூட்டம் ஓரளவுக்குக் குறைந்த பின் இடத்தைக் காலி செய்தோம். காரருகே வந்து பார்த்தால் பின் சக்கரத்தில் காற்று இல்லை. ஜாக்கி போட்டு சக்கரத்தைக் கழட்டிவிட்டு ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்துப் பார்த்தால் அதிலும் காற்றில்லை. என்ன செய்ய என்று புரியாமல் தவித்தோம்.

பரிசல், “ஸ்டெப்னி இருக்காப்பா” என்றால்

”இருக்குண்ணா, ஆனா திருப்பூர்ல ” என்று கடித்தான். உமா நோட் திஸ் பாயின்ட். பரிசல் காரிலிரிந்த ஸ்டெப்னியை எடுத்து மாட்ட முயற்சிக்கையில் இரண்டும் வேறு வேறு அமைப்பில் இருந்தது.

என்ன செய்வதென்ற யோசனையில் இருக்கும்போது ராம் சொன்னது, “ ஏங்க இன்னொரு ஆல்ட்டோ இருக்கான்னு பாக்கலாம்” எல்லாக் கார்களும் கிளம்பிச் சென்றுவிட்ட நிலையில் வாய்ப்புக் குறைவென்றாலும் முயன்று பார்க்கலாம் என நானும் செல்வேந்திரனும் சென்று ஒரு ஆல்ட்டோவைக் கண்டுபிடித்து விட்டோம். கார் உரிமையாளரிடம் பேசியதில் ஆரம்பத்தில் அவர்கள் தயங்கினாலும் எங்கள் நிலையறிந்து உதவினார். அவருடைய சக்கரத்தை மாட்டியபின் எங்களுடனே பஞ்சர் போடும் கடை வரை (மெயின் ரோட்டிலிருந்து உள்ளே 5 கி மீ யும், மெயின் ரோட்டில் கிட்டத்தட்ட 7 கி மி ) பொறுமையாக வந்து இருந்து அவர்களது சக்கரத்தைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றனர்.

சிக்கலான தருணங்களில் எதிர்பாராஇடங்களிலிருந்து கிடைக்கும் இது போன்ற உதவிகள் வாழ்க்கை மீதான நம்பிக்கையையும் பிடிப்பையும் அதிகப்படுத்துகின்றன.

கதிரின் ஒரு பயணமும், பெரிய பாடமும் பதிவைப் படித்துவிட்டு அவருடன் சாட் செய்யும்போது நான் சொன்ன வரி இங்கே பொருத்தமாக இருக்கும்.

காற்றில் கைவீசித் துழாவும்போது சட்டெனப் பற்றியிழுக்கும் கைகள் கடவுளின் கைகள்.

.

35 பேரு பாராட்டியிருக்காங்க:

அனுஜன்யா said...

வருடத்தின் முதல் கணங்களிலேயே ஸ்டெப்னி தேடும் நண்பர்கள் பற்றி என்ன சொல்ல....

சுவாரஸ்யம். புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும் .

அனுஜன்யா

அத்திரி said...

அண்ணாச்சிக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Vijayashankar said...

ஒருவரை மொட்டை அடிக்க வேண்டும் என்றால் வருங்கால முதல்வர், எதிர்கால பிரதமர் என்று சொன்னால் போதும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

( எனக்கு பைனான்ஸ் துறை கிடைத்தால் போதும்! )

கே.ரவிஷங்கர் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள். டெம்பிளேட் சிம்பிளா நல்லா இருக்குங்க.பதிவும் நல்லா இருக்கு.

மாயாவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

ஸ்டெப்னியில காத்து இருக்கானு பெரும்பாலும் பாக்குறதேயில்லீங்க

இதுவும் பாடம்தான்

மயில் said...

:))) வாழ்த்துக்கள் ..

கும்க்கி said...

அனுஜன்யா said...
வருடத்தின் முதல் கணங்களிலேயே ஸ்டெப்னி தேடும் நண்பர்கள் பற்றி என்ன சொல்ல....

அடாடாடா....
இதத்தான் மனசுல நெனச்சிட்டே வந்தா தலைவர் போட்டு தாக்கிட்டார்..

இங்க நம்ம காதுல வந்த பொகதான் அங்க வேலைய காமிச்சிருச்சு போல...

எதிர்கால பிரதமரிடம் வெளியுறவுத்தொறைக்கு சொல்லி வைக்கவும்..

அதே கதிர்தான் செல்போனை அணைத்து வைக்ககூடாது என சொல்லியிருந்தார்...

SanjaiGandhi™ said...

//காரருகே வந்து பார்த்தால் பின் சக்கரத்தில் காற்று இல்லை. ஜாக்கி போட்டு சக்கரத்தைக் கழட்டிவிட்டு ஸ்டெப்னி சக்கரத்தை //

தொடர்ச்சி,

சக்கரத்தைக் கழட்டிவிட்டு ஸ்டெப்னியை மாட்டினோம். அருகில் இருந்த கர் ட்ரைவர் சொன்னார். ”சார் இதுல சுத்தமா காத்தில்லை பாருங்க.” அடப்பாவிகளா.. ஸ்டெப்னில காத்து இருக்கான்னு கூடவா பார்க்காம வீல் மாத்துவீங்கன்னு நெனைச்சிருப்பார். :). சரின்னு அதையும் கழட்டியாச்சி. ஸ்டெப்னியை பரிசல்காரன் காரில் கொண்டு சென்று பஞ்சர் போட்டு பிறகு வந்து அண்ணாச்சி காரில் பொருத்த திட்டம். அதுவரை ஜாக்கியில் இருக்க வேண்டாம் என்று இன்னொரு வீலை காரில் மாட்டினோம். அப்போ திடிர்னு இன்னொரு யோசனை. பரிசல் ஸ்டெப்னி( காருக்கு தான் ) அண்ணாச்சிக்கு செட் ஆகுமான்னு பார்த்தோம். அதனால மீண்டும் வீலைக் கழட்டி பரிசல் கார் ஸ்டெப்னியை முயற்சித்தோம். அது பொருந்தவில்லை. ஆகவே பஞ்சர் போட்டுவிடுவதைத் தவிற வேறு வழி இல்லை. மீண்டும் கழட்டிய ஸ்டெப்னியை மாட்டினோம். அப்புறம் தான் வேறு ஆல்டோவின் உதவியை நாடும் யோசனை. ஒருவர் தவ முன்வந்தார். மாட்டிய வீலை மீண்டும் கழட்டிவிட்டு அந்த நண்பர்களின் ஸ்டெப்னியை மாற்றினோம். ஸ்ஸ்ஸ்ஸபாஆஆஆஆ.. ஒரு வழியா பஞ்சர் க்டை கண்டுபிடிச்சி வந்தாச்சி.

எம்.எம்.அப்துல்லா said...

//எனக்கு பைனான்ஸ் துறை கிடைத்தால் போதும்! //

no.no. i am MBA(finance). athu yenakkuthaan. :))

happy new year to all.

SanjaiGandhi™ said...

அந்த நண்பர்களின் உதவியை மறக்க முடியாது. அவர்களிடம் பேசும் போது “ புது வருஷமும் அதுவுமா உங்களை கஷ்ட படுத்திட்டோம் . மன்னிச்சிடுங்க சார். ரொம்ப நன்றி ” என்றேன்

அதுக்கு ஒருவர் சொன்னார் ”என்னங்க இப்டி பேசறிங்க. வருஷத்தோட முதல் நாள் எங்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு குடுத்த உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்”

மாண்புமிக்கவர்களை சந்தித்ததில் பெருமையாய் உணர்ந்தோம். நம் வாழ்தலுக்கான காரணங்கள் இவர்கள் தான்.

T.V.Radhakrishnan said...

புத்தாண்டு வாழ்த்துகள்

(ஆமாம்..உங்க பதிவில் பிழைகள் வரலாமா?

கும்க்கி said...

ஏனுங் எதிர்கால பிரதமரே.,
அப்புடியே ஒவ்வொரு வீலா கழட்டி கழட்டி மாத்தி வெளாண்டுட்டிருந்திருந்தீங்கன்னா விடிஞ்சுருக்குமே...அப்புறம் போய் பஞ்சர் பாத்திருக்கலாமுல்ல...

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

அனுபவங்கள் கற்பிக்கும் பாடங்கள் நாம் மறக்கக்கூடாதவை ஆகிவிடுகின்றன. உலகில் நல்லவர்கள் இருக்கிறார்கள்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

அண்ணாச்சி இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணாச்சி,
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மாண்புமிகு எதிர்கட்சி தலைவர் எப்ப பிரதமர் ஆனாரு ? நம்ம கட்சி ஒன்னும் தோற்கிற கட்சி இல்லையே? பின்ன ஏன் பிரதமர் பதவிய எதிர்கட்சி தலைவருக்கு குடுக்குறீங்க?

அன்புடன் அருணா said...

/காற்றில் கைவீசித் துழாவும்போது சட்டெனப் பற்றியிழுக்கும் கைகள் கடவுளின் கைகள்./
வருடத்தின் முதல் நாளில் கடவுள் கைகள்!!!நன்று.

அனுஜன்யா said...

@ சஞ்சய்

நல்ல வேளை, நன்றி சொல்லும் போது உணர்ச்சி வசப்பட்டு, 'சார் நாங்க எல்லாம் பதிவர்கள்; இந்த மாதிரி எல்லாம் எழுதுவோம்' னு சொல்லாம இருந்தியே. தெரிஞ்சிருந்தா, எல்லா வீல் காத்தையும் இறக்கி இருப்பார்கள் :)

நீ சூப்பர் இன்டல்லிஜண்டு மாமு.

அனுஜன்யா

பரிசல்காரன் said...

இது தொடர்பாக சில விளக்கங்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். (சோடா ப்ளீஸ்..)

நான் வெயிலானை அழைத்தது சரியாக 6.30. அவர் என் வீடு வந்து சேர்ந்தது 7.25.

நானும் உமாவும் வெயிலானும் நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் வந்து சேர்ந்தது 9. நீங்கள் வந்து சேர்ந்தது 9.38.

நாமெல்லாம் ஹோட்டலில் ஐட்டம்ஸ் ஆர்டர் செய்தது 10.02. ஆர்டர் செய்த ஐட்டங்கள் வந்தது 10.39.


இதையும் சபைக்குறிப்பில் சேர்க்குமாறு மாண்புமிகு சபாநாயகர் வடகரைவேலன் அண்ணாச்சி அவர்க்ளை அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பரிசல்காரன் said...

அண்ணாச்சி..

ஒரு வேண்டுகோள் -

ச்சாட்-டின்போது நீங்கள் உதிர்க்கும் சில வசனங்களைத் தொகுத்து பதிவாக இடுங்கள்.

வெகு சுவாரஸ்யம்.

பரிசல்காரன் said...

ஹோட்டல்ல சாப்பிடும்போது கார்ல எதுவோ இருக்குன்னீங்க... கடைசி வரைக்கும் எடுக்கவே இல்லையே?

கும்க்கி said...

பரிசல்காரன் said...
ஹோட்டல்ல சாப்பிடும்போது கார்ல எதுவோ இருக்குன்னீங்க... கடைசி வரைக்கும் எடுக்கவே இல்லையே?

என்னாது....சோடாவா..?

தண்டோரா ...... said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி....

அப்பாவி முரு said...

வாழ்த்துகள் அண்ணாச்சி...

நல்ல அனுபவம்.

கலகலப்ரியா said...

=))... புத்தாண்டு வாழ்த்துகள்...

☼ வெயிலான் said...

// ஹோட்டல்ல சாப்பிடும்போது கார்ல எதுவோ இருக்குன்னீங்க... கடைசி வரைக்கும் எடுக்கவே இல்லையே? //

என்னது எடுக்கவே இல்லையா? அதால தான் பிரச்சனையே.....


ஸ்டெப்னி!

Rajasurian said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

இய‌ற்கை said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணாச்சி

இய‌ற்கை said...

//ஈரோடு கதிர் said...
ஸ்டெப்னியில காத்து இருக்கானு பெரும்பாலும் பாக்குறதேயில்லீங்க

இதுவும் பாடம்தான்
//

இவரக் கொண்டுபோய் ஸ்கூல்ல விடுங்கப்பா.. எப்போ பார்த்தாலும் பாடம் நடத்தறாரு..இல்லன்ன பாடம் கத்துக்கறாரு:-)

Cable Sankar said...

ஸ்டெப்னியோடவா ராத்திரியெல்லாம் சுத்துனீங்க.. புத்தாண்டு வாழ்த்துக்கள்

குடுகுடுப்பை said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

குசும்பன் said...

அனைவருக்கும் ஸ்டெப்னி அமைய வாழ்த்துக்கள்!

சென்ஷி said...

//காற்றில் கைவீசித் துழாவும்போது சட்டெனப் பற்றியிழுக்கும் கைகள் கடவுளின் கைகள்.//

:)

வாட்ச், மோதிரம்லாம் பத்திரம்...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பித்தன் said...

happy new year

செல்வேந்திரன் said...

உஷா உதுப்பிற்கு 16 வயது என்று பொய் சொல்லி என்னை அழைத்துப் போனவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.