Tuesday, January 05, 2010

கதம்பம் - 6/01/10

.

அவியல், என்ணங்கள், காக்டெயில், துவையல் போன்ற பெயர்களில் எழுதப் படும் கதம்பத்தின் ஆதார உள்ளடக்கத்தை சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து எழுதுகிறார் சங்கர்; கொத்து பரோட்டா என்ற தலைப்பில். ஒரு வாரம் அவரது கொத்து பரோட்டாவைச் சாப்பிடவில்லை எனில் ஏதோ ஒன்றை இழந்தாற்போல் இருக்கிறது. நல்ல சுவை.


********************************************************************

புத்தகச் சந்தை பற்றிய பதிவுகளைப் படிக்க சந்தோஷமாக இருக்கிறது. பதிவர்கள் புத்தகங்களை வாங்குவதும் அது குறித்து பதிவிடுவதும் நல்லது. நானும் சில புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்.

1. சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கெளதமன். ( 40+ வயதிலிருப்போருக்குப் பிடிக்கும்)
2. ஆழி சூழ் உலகு - ஜோ டி க்ரூஸ். ( மிகச் சிறந்த ஆக்கம்; மிக இள வயதில் (39). நல்ல தேர்ந்த ஆய்வுக்குப் பின் எழுதிய நாவல்)
3. கடவு - திலீப் குமார் ( குறிப்பாக மூங்கில் குருத்து சிறுகதை. வெகு குறைவாக எழுதும் நல்ல எழுத்தாளர்)
(கடவு, மூங்கில் குறுத்து இரண்டும் வேறு வேறு சிறுகதைத் தொகுதிகள் என அழைத்துச் சொன்ன சிவராமனு(பைத்தியக்காரன்)க்கு நன்றி. மேலும் இரண்டின் பிரதிகள் இப்பொழுது கிடைப்பதில்லை எனவும் சொல்கிறார்)

4. நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பு
5. ஜெயமோஹன் குறுநாவல்கள் தொகுப்பு
6. கோரை - கண்மணி குண சேகரன் ( ஒரு சாதாரண கோரைப் புல் ஒரு மனிதனை வாழ்க்கையின் விளிம்பிற்கே துரத்தித் துரத்தி அடிப்பதை விவரித்திருப்பார்)
7. அளம் - சு.தமிழ்ச்செல்வி (உப்பளத்தையும் அதன் வாழ்க்கைமுறைகளையும் மையமாகக் கொண்ட நாவல்)
8. எனது வீட்டின் வரைபடம் - ஜே பி சாணக்யா. (சிறுகதைகளின் தொகுப்பு)
9. குறுக்குத் துறை ரகசியங்கள் - நெல்லைக் கண்ணன். (நெல்லைத் தமிழில் எள்ளல் கட்டுரைகள்)

********************************************************************

பிரம்மரம் என்ற மோகன்லாலின் திரைப்படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை நேற்றுவரை. நான் வழக்கமாக சிடி வாங்கும் கடையில் சொல்லி வைத்து ஒரிஜினல் VCD வாங்கிப் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு மோகன் லாலிடமிருந்து!

செய்யாத குற்றத்திற்காக சிறைசெல்லும் லால் திரும்ப வந்து வேறு பெயரில் வாழ்கிறார். குடும்பம் குழந்தை என அமைதியானவாழ்க்கை. ஒரு திருமண நிக்ழவொன்றில் சந்திக்கும நபர் அவரது பழைய வாழ்க்கையின் அடையாளங்களைத் தெரிந்தவர். வெளிச்சத்துக்கு வருகிறது. அவரது குழந்தையே அவரைக் கொலைகாரன் என்கிறது. தான் கொலைகாரன் அல்ல என்பதை நிரூபிக்க தன் வகுப்புத் தோழர்களைத் தேடிச் செல்கிறார்.

அவர்களிடம் தன் தரப்பைச் சொல்லி உதவி கேட்கிறார். மறுப்பவரைக் கிட்டத் தட்ட கடத்தி வருகிறார். அவர் குழந்தைக்கு உண்மை தெரிந்ததா? அதன் பின் அவரது வாழ்க்கை செல்லும் திசை என்ன என்பதே மீதக் கதை.

இவ்வளவு அடர்த்தியான ஒரு கதையை எடுத்துக் கொண்டு நேர்த்தியாகப் படைத்திருக்கிறார். பிளஸ்ஸி. இவரது மற்ற படங்களும் நல்ல படங்களே; கருத்த பக்‌ஷிகள், தன்மத்ரா, கல்கத்தா ந்யூஸ்.

நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு.

********************************************************************

இந்த முறை மதனின் கவிதை ஒன்று

பொய்க்கால் கவிதை

சற்று வலுவாகத் தட்டினால்
உடைந்துவிடும்படி சொல்லிவிட்ட
ஒரு பொய்யை
ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
இறுதியில் கவிதைக்குள்
இட்டு வைத்தேன்.
பின்னந்தக்
கவிதையை ஒளித்து வைக்க
இடம் தேடியலைந்தலைந்து
கிடைக்காமல்,
இறுதியில்
நான் பொய்யே சொல்லவில்லையே
என்று கவிதையிடம்
சொல்லிவிட்டேன்.

கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்தால் வேறு வேறு படிமானங்கள் கிடைக்கின்றன, வீட்டில், அலுவலகத்தில், வெளியிடத்தில் என.


********************************************************************

இந்த வார மொக்கை.

தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது - ஆர் எம் வீரப்பன்

அப்புறம் எதுக்கு செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துறாங்க?



********************************************************************
.

26 பேரு பாராட்டியிருக்காங்க:

கோவி.கண்ணன் said...

கதம்பம் அரை முழம் தான் இருக்கு, இன்னும் கொஞ்சம் (கூட்டிக்)கட்டி இருக்கலாம்

குசும்பன் said...

அண்ணாச்சி நேற்று சொன்னீங்களே யாரு அது ஜெப்ரி ஆசாரியோ ஆச்சரோ அவுங்க புக்க பத்தி எல்லாம் ஒன்னும் சொல்லவே இல்லை!

யூ நோ ஒன் திங், ஐ ரீட் ஒன்லி இங்கில்ஸ் புக்ஸ்யா!!!

குசும்பன் said...

//கோவி.கண்ணன் said...
கதம்பம் அரை முழம் தான் இருக்கு, இன்னும் கொஞ்சம் (கூட்டிக்)கட்டி இருக்கலாம்
//

மல்லி கிலோ 1350 ரூபாயாம், அவரு என்னா உங்கள மாதிரியா ஷேவ் செய்ய 1000 கொடுக்கும் ஆளு நீங்க!

குப்பன்.யாஹூ said...

Brammaram is great movie, Ayyanaar (tanimayin Isai) has written a detailed post , when u get time, please read that.

பின்னோக்கி said...

வெளிநாட்டில் வாழும் தமிழர்கள், தமிழைத் தேடுவதால், அதன் மேல் காதலுடன் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து தமிழை இறக்குமதி செய்வதற்காக கோவையில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன :)

கேபிளாரின் கொத்து அருமையாக இருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

தமிழ் வெளிநாட்டில்தான் வாழ்கிறது - ஆர் எம் வீரப்பன்

அப்புறம் எதுக்கு செம்மொழி மாநாட்டைக் கோவையில் நடத்துறாங்க?

//

கும்பாபிஷேகம் கோயிலுக்கு வெளியியில் இருக்கும் கோபுரத்தில் சிறப்பாக நடந்தாலும், அர்ச்சனை மட்டும் எப்போதும் கர்பகிரகத்தில்தான் பண்ணியாகனும்.

:)

பரிசல்காரன் said...

தன்மாத்ரா பார்த்தே அழுதுட்டேன்ணா..
இதுவுமா.. அவ்வ்வ்... அந்தாளு நடிச்சே கொல்லுவாரு...

தராசு said...

கடைசி மொக்கைதான் சூப்பர்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

மூங்கில் குருத்து முதலில் வந்தது. கடவு பிறகு வந்தது. மூங்கில் குருத்து கதைகள் கடவு தொகுதியிலும் ரிபீட் ஆகும்.

T.V.Radhakrishnan said...

கதம்பம் சூப்பர்

ஆதிமூலகிருஷ்ணன் said...

சரி.

இரா.சிவக்குமரன் said...

கதம்பத்துல ஒரு சில பூவ காணோம், வெலவாசி ஏறிடுச்சோ?

KVR said...

கவிதை நல்லா இருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த முறை புத்தகக்கண்காட்சியிலும் நீங்கள் பரிந்துரைத்த க்.குணசேகரனின் அஞ்சலை நாவலும், கோரையும் கிடைக்கவில்லை :(((

Cable Sankar said...

பாராட்டுக்கு மிக்க நன்றி அண்ணாச்சி..

ப்ளெஸ்சி எனக்கும் மிகவும் பிடித்த இயக்குனர். இது வரை என்னுடய் திரையுலக அனுபவத்தில் வெகு சிலபேரிடம் மட்டுமே பேச தயங்கி எக்
ஸைட் ஆகியிருக்கிறேன். அதில் ஒரு வர் பிளெஸ்சி.. வெரி சாப்ட் அண்ட் கொயட்.

அனுஜன்யா said...

ஆமாம், கேபிள் கொத்து பரோட்டா எப்பவுமே சரியான சமயத்தில் வரும். நம்பி வரும் வாசகர்களுக்கு அது மிக முக்கியம்.

பிரம்மரம் பத்தி நேத்தே சொன்னீங்க. இப்பதான் ஐய்ஸ் இத பத்தி எழுதியது ஞாபகம் வருது.

மதன் கவிதை - ரொம்ப நல்லா இருக்கு. அவரோட கவிதைத் தொகுப்பு வரப் போகிறது தெரியுமா? நம்ம வாசு தான் :) (வா.மணிகண்டன் பதிவில் படித்தேன்).

நீங்களும் கதம்பம் கொஞ்சம் ரெகுலரா எழுதுறது!

அனுஜன்யா

ச்சின்னப் பையன் said...

பிரம்மரம் தேடிப் பார்க்கிறேன்...

Mahesh said...

கவிதை அருமை...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி....

கும்க்கி said...

அந்த..பார்த்த மளையாள சி டி க்களை கொஞ்சம் அனுப்பிவைக்கறது.....

புத்தகங்களின் தேர்வு கச்சிதம்.
சு.வேணுகோபாலனை பட்டியலில் விடுபட்டிருக்கிறது....

கேபிள் பத்தியெல்லாம் எழுத மனசு வந்திருக்கிறது....தம்பி கோச்சுக்கபோறார்...

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு அண்ணாச்சி. தன்மாத்ரா எனக்கு மிகப் பிடித்த திரைப்படம். ப்ரம்மரம் பார்க்கவேண்டும்.

வடகரை வேலன் said...

நன்றி கோவி
நன்றி குசும்பா
நன்றி ராம்ஜி
நன்றி பின்னோக்கி
நன்றி அப்துல்லா
நன்றி பரிசல். இதில் மிக அனாயசமாகச் செய்திருக்கிறார்.
நன்றி தராசு. இதைப் போன்ற ஆட்களால்தான் இன்னும் நகைச்சுவை உணர்ச்சி சாகாமல் இருக்கிறது
நன்றி சுந்தர். நானும் அப்படித்தான் நினைத்துப் பதிவெழுதினேன். பின்னர் சிவராமன் அழைத்துச் சொன்னதும் மாற்றி விட்டேன்.
நன்றி TVRK சார்
நன்றி ஆதி
நன்றி சிவா
நன்றி KVR
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா. விசாரித்துச் சொல்கிறேன்
நன்றி கேபிள்
நன்றி அனுஜன்யா. உங்க தங்கமனிக்கு நிச்சயம் பிடிக்கும்.
நன்றி சத்யா.
நன்றி மகேஷ். எனக்குத்தான் அதிக சந்தோஷம்
நன்றி கும்க்கி. நான் வாங்கும் அனைத்து சிடிகளையும் நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன். மேலும் இந்தப் பட சிடி 60ரூபாய்தான். வாங்கினால் பரிசாக உள்ளே இன்னொரு படத்தின் சிடியும் கிடைக்கிறது.
நன்றி சரவணக்குமார்

அக்பர் said...

கதம்பம் அருமை.

வாசனை கிறங்கடிக்கிறது.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான வாசம் வீசும் கதம்பம்

எனக்கு ரொம்ப பிடித்தது

பித்தன் said...

kathambam inthamuarai manam athigam malargal kammi.... why?

மதன் said...

இன்றுதான் படித்தேன் அண்ணாச்சி. வேலைப்பளு காரணமாக வாசிப்பு குறைந்து விட்டது. நீங்கள் கொடுத்த அங்கீகாரத்துக்கும், அன்புக்கும், அனுஜன்யா உட்பட அனைத்து நண்பர்களின் நட்புக்கும் மிக்க நன்றி.

SanjaiGandhi™ said...

கும்பாபிஷேகம் கோயிலுக்கு வெளியியில் இருக்கும் கோபுரத்தில் சிறப்பாக நடந்தாலும், அர்ச்சனை மட்டும் எப்போதும் கர்பகிரகத்தில்தான் பண்ணியாகனும்.

:)//

நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா..