
Doordarshan’s social objectives include that it has to:
a) act as a catalyst for social change;
b) promote national integration;
c) stimulate a scientific temper in the minds of the people;
d) disseminate the message of family planning as a means of population
control and family welfare;
e) provide essential information and knowledge in order to stimulate greater agricultural production; and
f) promote and help preserve environment and ecological balance
-(Doordarshan Handbook 1997, p.23).
தமிழ் தொலைக்காட்சிகளில் ச்மீபத்தில் வருபவை எல்லாம், சீரியல் கில்லர்களே.நம்மைக் கொல்வதாலும், ஒருவரை ஒருவர் மாத்தி மாத்திக் 'கொல்லுவதாலும்'
பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பதில்லை. இருபாலரும்தான். பெண்கள் அதிகமாகப் பார்க்கிறார்கள் அவ்வளவுதான் அதன் பின்னுள்ள மனநிலை ஆராயப்படவேண்டும்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு சுவராஸ்யம் தேவைப்படுகிறது. அதை சினிமாவில் அனுபவித்துக் கொண்டிருந்தோம். இப்பொழுது தொ கா தருகிறது. இப்பொழுதெல்லாம் சினிமாவிற்குச் சென்று வருவதே ஒரு வேலையாக இருக்கிறது. . சினிமாவிற்கு ஆகும் செலவு எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாததாக இருக்கிறது.
இவை எல்லாம் புறக்காரணங்கள், அகக்காரணம் புறக்கணிக்கப்படுதலைத் தாங்க முடியாதது.
திருமணமான புதிதில், நிறைய வேலை இருக்கும். கணவன் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். ஆண்களும் ஒரு கவர்ச்சியின் காரனமாகவும், புது சொந்தம் என்பதாலும், அதிக நேரம் மனைவியுடன் செலவிடுகின்றனர். நாட்கள் செல்லச் செல்ல இது படிப்படியாகக் குறைகிறது. இடைப்பட்ட காலத்தில் ஒரு குழந்தையும் பிறந்த்து விடுகிறது. புது வரவினால் வந்த கூடுதல் வேலை, குழந்தை பெற்றுத் தந்ததால் கணவனிடமிருந்து கிடைக்கும் திடீர்ப்பாசம் மற்றவர்களின் கூடுதல் அன்பு என்று சிறிது காலம் சென்றுவிடும்.
பிறந்த குழந்தை பள்ளி செல்ல ஆரம்பித்தவுடன், திடீரென்று ஒரு வெறுமை சூழ்கிறது. நிறைய நேரம் இருப்பது போல் தெரிகிறது. மெதுவாக தொ.கா வில் ஆர்வம் செல்கிறது. யாரும் இல்லாத பொழுது பார்க்க ஆரம்பித்து, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பார்த்தே தீருவது என்ற நிலைக்கு அடிமையாக்குகிறது.
ஆண்கள் மட்டுமே அதிக சிரமப்படுவதாகவும், பெண்கள் அவர்களைப் பராமரிக்கவே பிறந்தவர்களாகவும் சிறு வயதிலிருந்தே இருபாலருக்கும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவே அலுவலகத்திலிருந்து வருபவன், வீட்டிலிருப்பவளைக் கண்டு கொள்வதில்லை. He takes her for granted. பெண்களுக்கும் அவனுக்குச் சேவை செய்தே பழக்கப்பட்டுவிடும். பரஸ்பரம் சேர்ந்தே இருந்தாலும், மனதளவில் பிரிந்துதான் இருக்கிறார்கள்.
கொஞ்சம் சுவராஸ்யம், திகில், சஸ்பென்ஸ், சவால் செண்டிமெண்ட் என்று கலந்து சீரியல்களில் வருவதால் தனக்குப் பிடித்ததில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
இடம் மாறிய டைனிங் டேபிள், புதிதாக விரித்த படுக்கை விரிப்பு,ஸ்பெசலாகச் செய்து கொண்ட அலங்காரம் எதுவ்ம் எதிர்பார்த்த பாராட்டைப் பெற்றுத் தருவதில்லை. மனைவிக்குப் பிறந்த நாள் பரிசாக சர்ப்ப்ரைஸாக என்ன வாங்கித் தருவாய் என்று கேட்டால் ஆண்கள் சொல்லும் பதில் சிரிப்பைத்தான் வரவைக்கும். சொல்லப்படும் பதில், பெரும்பாலும், அவர்களுக்குத் தனிப்பட்ட பரிசாக அல்லாமல், மொத்தக் குடும்பத்திற்கானதாகவே இருக்கும்.
இது இளவயதினருக்கானது. முதியவருக்கோ வேறு விதமான சிரமங்கள். ஒரு குடும்பத்தையே தாங்கியவர்கள், எந்தவிதமான முக்கியத்துவமும் இல்லாதவர்களாக ஆகிவிட்டோமோ என்று யோசிக்கத் துவங்குகிறார்கள். புறக்கணிக்கப்படுவதாகவும், ஒதுக்கப்படுவதாகவும் நினைத்து உள்ளுக்குள் சுருங்கி விடுகிறார்கள்.
தன் மகனுடன் அளவாகப் பேசும் பெரியவர்கள், மகனின் நன்பர்களுடன் தோழமையுடன் பேசிப்பழகுவதைப் பார்க்கலாம். காரணம்?. மகனின் நன்பன், அவரது வயது கருதி அனுசரித்துப் போவதும், அவரைப் பற்றிய விமர்சனங்களை நேருக்கு நேர் சொல்லாததுமாகும். அதை விட முக்கியம் மகனின் தயவில் வாழ்வது ஒரு தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கியிருப்பதுதான்.
புறக்கணிப்பின் வேதனையும், ஒதுக்கப்படுதலின் வலியும், வாழ்க்கை குறித்த நிச்சயமின்மையும் அதனால் வரும் நம்பிக்கையின்மையும்தான் காரணம். அவர்களுடன் அமர்ந்து பேசினாலே பிரச்சினையின் வேர்கள் புலப்படும், சரி செய்ய வழியும் தென்படும். செய்ய முனைவதில்லை என்பதுதான் நிதர்சனம்.
மேலும் சீரியலல்லாத மற்ற எந்த நிகழ்ச்சியும் குடும்பத்துடனமர்ந்து பார்க்கும் தரமன்று. போர்வக்குள் பூப் பூக்கச் செய், வேர்வைக்குள் விவசாயம் செய் என்று பாடும் பொழுது அம்மா(60), மகள்(18), இள்யவள்(13) முதலியவர்களுடன் அமர்ந்து எப்படிப்பார்ப்பது? நெளிய வைக்கிறது.
ஜோடி நெ 1 போன்ற நிகழ்சிகளில் தங்கள் அங்கங்கள் குலுங்க ஆடுபவர்கள் எதைச் சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களது குழந்தைகள் என்ன பாடுபடப்போகின்றனரோ?
என் வீட்டில் 2001 முதல் கேபிள் கனெக்க்சன் இல்லை. நாங்கள் இழந்தது எதுவுமில்லை. என் மனைவி பள்ளி ஆசிரியை. காலையும் மதியமும் சேர்ந்து சாப்பிட முடியாது. இரவு இருவரும் குழந்தைகளுடனும் என் அம்மாவுடனும் சேர்ந்த்தே சாப்பிடுவோம். அப்பொழுது பள்ளியில் நடந்தது அல்லது அலுவலகத்தில் நடந்தது என்று ஏதாவது பேசிக்கொண்டே சாப்பிடுவோம். சில நேரம் யாராவது ஒருவரை எல்லோரும் சேர்ந்து ஓட்டுவோம். பெரும்பாலும் மாட்டிக்கொள்வது நானாகத்தானிருக்கும். கேபிள் இருந்திருந்தால் இது சாத்தியமில்லை. எல்லோரும் தட்டில் போட்டுக் கொண்டு தொ கா முன் அமர்ந்து மெளனமாகத்தான் சாப்பிடக் கூடும்.
ஒருமுறை உறவினர் வீட்டிற்கு இரவு 10 மணிக்குச் செல்ல வேண்டி இருந்த்தது. வெளியே இருந்து எவ்வளவு கத்தியும் யாரும் வரவில்லை. இருட்டில் காலிங் பெல் எங்கிருகிறது என்று தெரியவில்லை. மெயின் ச்விட்சை ஆப் செய்தால் மொத்தக் குடும்பமே அலறியடித்து வருகிறார்கள். அவ்வளவு பேரும் (அம்மா, அப்பா, பையன், மருமகள், பேரன்) சீரியஸாக சீரியல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
Disclaimer : All logos are properties of respective owners. Logos acknowledged with thanks.
.