
நம்ம தொழிலதிபர் சஞ்சய் உங்களுக்குத் தெரியும். AC சஞ்சயைத் தெரியுமா? இது அவர் விக்கிற ஏ சி பத்தின பதிவு இல்லை. அவர் Asst. Commisioner of Police ஆ அவதாரம் எடுத்த கதை.
ஞாயிறு இரவு 9.30 மணிக்கு வெளியே நிறுத்தியிருந்த பைக்கை உள்ளே எடுத்து வைக்கலாம் எனப் பார்த்தால், கேட்டுக்கு வெளியே ஒரு மப்பு மன்னாரு மல்லாந்த்திருந்தார். எழுப்பிப் பார்த்தால் ஏகாந்த்ததிலிருந்தார். ஒரு வாளி நிறையத் தண்ணீர் அபிசேகம் செய்ததும் எழுந்தார்.
“ங்ணா தேங்ஸ்ணா”
“சரி போப்பா”
“ங்ணா நீங்க தண்ணி ஊத்தி எழுப்புனதுக்குத் தேங்க்ஸ்ணா. ஆனா அப்ப உங்க காலு என் மேல பட்டுதுங்ணா. நீங்க எப்படிங்ணா என்னை மிதிக்கலாம்?”
என்னடா இது தேர இழுத்துத் தெருவுல விட்டுட்டோம் போல இருக்கேன்னு மலைத்தேன். ”ஏம்ப்பா வீதியில பைக் போற பாதையில் கிடந்தவன எழுப்பி விட்டது தப்பாப் போச்சே. சரி சரி எதா இருந்தாலும் நீ காலையில் நிதானத்தில் இருக்கும்போது பேசிக்கலாம் போ ” என சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தேன்.
மனி 10 இருக்கும் வெளியே யாரோ, “அண்ணா ” எனஅழைத்த சத்தம். கதவைத் திறந்து பார்த்தால் நம்ம மப்பு மன்னார்.
“சொல்லுப்பா”
“ங்ணா நீங்க தண்ணி ஊத்தி எழுப்புனதுக்குத் தேங்க்ஸ்ணா. ஆனா அப்ப உங்க காலு என் மேல பட்டுதுங்ணா. நீங்க எப்படிங்ணா என்னை மிதிக்கலாம்?”
”அட இப்பத்தானே எல்லாம் பேசி முடிச்சோம் போ போ போய்ப் படு காலையில் பேசிக்கலாம்”
“இல்லைங்ணா நீங்க இப்பவே வாங்க பேசலாம்”
கொஞ்சம் கொஞ்சமாக நிதானமிழப்பதும் வார்த்தைகள் ஏறுக்கு மாறாக வருவதுமாக இருந்தது. அவனைச் சமாதானப் படுத்த வந்த ஒருவரையும் வைதான்.
என் மொபைல் போனை எடுத்தேன்.
“சஞ்சய் சாருங்களா?”
“நான் சஞ்சய். ஆனா சாரு இங்க இல்லை சென்னைல இருக்காரு”
“நான் வேலன் பேசுறேன் சார்”
“அட அண்ணாச்சி என்ன ராத்திரிப் பத்து மணிக்கு விளையாடுறீங்க?”
“சார் வீட்டுல இருக்கீங்களா? இந்த நேரத்துல தொந்திரவு பண்ணீட்டேன்”
“என்ன அண்ணாச்சி என்னை வச்சு ஏதும் காமெடியா?”
“இல்ல சார் இங்க ஒருத்தன் தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுறான். அதான் உங்க கிட்டச் சொல்லலாம்னு”. சஞ்சய்க்கு இப்பத்தான் கதை வசனம் புரிஞ்சுது
”அவங்கிட்டக் கொடுங்க”
“இல்ல சார் அவம் பேசுற நிலையில இல்ல. அவங்க மச்சாங்கிட்டக் கொடுக்கிறேன்”
ஸ்பீக்கர் போனில் போட்டு அவன் மச்சனிடம் கொடுத்தேன். அதன் பிறகு சஞ்சய் ஒரு ருத்ரதாண்டவம் ஆடினார்.
“டேய் யார்ரா அவன் ஃபேமிலி குடியிருக்க இடத்துல ரப்சர் பண்ணுறது? நியூசென்ஸ் கேசுல உள்ள போட்டுருவேன்”
“இல்ல சார்”
“என்ன இல்ல சார் நொள்ள சார் நான் ரவுண்ட்ஸ்லதான் இருக்கேன் அங்க வரவா?”
“சார் வேணாம் சார்”
“வந்தன்னா அவன மட்டும் இல்லை உன்னையும் சேத்து உள்ள வச்சு முட்டியப் பேத்துருவேன். உங்களையெல்லாம் உள்ள ஜட்டியோட தலைகீழத் தொங்க விடணும்டா”
“இல்ல சார் இப்பக் கூட்டிட்டுப் போயிர்ரேன்.”
“ சரி போனை சார்கிட்டக் கொடு”
“சார் சொல்லுங்க சார்”
“பாருங்க ஏதும் பிரச்சினை பண்ணுனான்னாக் கூப்பிடுங்க வடவள்ளி ஸ்டேசன்ல இருந்து தங்க வேலை வரச் சொல்லுறேன்”
“சரிங்க சார். தேவைப்பட்டாக் கூப்பிடுறேன் சார்.”
அதுக்குள்ள மத்தவங்க எல்லாம் சேர்ந்து அவனை ரெண்டு சாத்துச் சாத்திக் கூட்டிச் சென்று விட்டனர்.
இரவெல்லாம் எனக்குத் தூக்கமில்லை. சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானேன்னுதான்.

39 பேரு பாராட்டியிருக்காங்க:
thappu illai, nanbargal enbathe entha nerathilum uthavatthaane...
அண்ணாச்சி..சஞ்சய சார் போட்டு கூப்ட பாவத்தை எப்படி தீர்க்கபோறீங்களோ தெரிலியே..
:-( :-))
இப்பத்தானே 'காக்கிச் சட்டை' பற்றி நல்லா எழுதினேன். இப்பிடிக் களங்கப் படுத்திட்டீங்களே அண்ணாச்சி! சஞ்சய்யை 'சார்' போட்டதற்கு, நீங்க அந்த மன்னார் காலில் விழுந்திருக்கலாம். ச்சே!
அனுஜன்யா
//சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானேன்னுதான்.//
விழுந்து விழுந்து சிரிக்க வைச்சுட்டீங்க அண்ணாச்சி :-))))
இப்பத்தானே 'காக்கிச் சட்டை' பற்றி நல்லா எழுதினேன். இப்பிடிக் களங்கப் படுத்திட்டீங்களே அண்ணாச்சி! சஞ்சய்யை 'சார்' போட்டதற்கு, நீங்க அந்த மன்னார் காலில் விழுந்திருக்கலாம். ச்சே!
hihihihihi
நன்றி தண்ஸ்.
நன்றி இயற்கை. அதுதாங்க எனக்கும் வருத்தமா இருக்கு.
நன்றி அனு. ஏன் இப்படி டேமெஜ் பண்ணுறீங்க?
நன்றி சென்ஷி.
நன்றி விஜி.
Darial aakkarathu engaluku porial sapdara mathiri. Ennidam pesiavar pammiathai eluthamal vitathai kandikiren - in coimbatore railway station. Sanjai .
அண்ணாச்சி இன்னையில் இருந்து உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவை காசுவெட்டி போட்டு முறிச்சுப்போம்!
ச்சே ச்சே நினைச்சு பார்க்கவே அருவருப்பா இருக்கு, எப்படி அண்ணாச்சி உங்களுக்கு மனசு வந்துச்சு... சஞ்சய்யை போய் ....உவ்வே:(
ஒருவாளி பினாயில் போட்டாவது வாயை கழுவுங்க அப்பதான் உங்க வாய் சுத்தம் ஆவும்... மாமனை போய் ....எப்படி அண்ணாச்சி உங்களுக்கு மனசு வந்துச்சு?:((((
SanjaiGandhi™ said...
in coimbatore railway station. Sanjai
//
போலீஸ் ஸ்டேசனில் கம்பிக்கு பின்னாடி இருக்கவேண்டிய ஆள் எல்லாம் ரயில்வே ஸ்டேசனில் என்று பின்னூட்டம் போடுது. இது எல்லாம் காலகொடுமை இல்லாம வேற என்ன?
நேரில் மட்டும் சஞ்சயை பார்த்து இருந்திருந்தான், மருதமலையில் வரும் வடிவேலை விட இதுதான் பக்கா காமெடி பீஸ் என்று வெளுத்து எடுத்து இருப்பான்:)
ஹா ஹா ஹா
:) :) :)
Pathivukkum, Commentsukkum :)
அன்பின் அண்ணாச்சி
தேவைதானா இது - நல்லது செய்யப்போனாலே இப்படித்தான்
ம்ம்ம் - பரவால்ல - அது யாரு சஞ்செய் - ஏன் அவருக்குப் போன் போட்டீங்க - ம்ம்ம்
பொடிப்பசங்கள எல்லாம் சார்னு கூப்பிட்டுக்கிட்டு .... ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள்
நல்வாழ்த்துகள்
;-)))
:-))
கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசுல குடிச்சுட்டு நிம்மதியா தூங்கிகிட்டு இருந்தவன தட்டி எழுப்பி பெரிய பாவம் பண்ணிட்டீங்க :)
:))))))))))
எல்லாரும் கமெண்ட் போட வந்திங்களா? இல்லை கலாய்க்க வந்திங்களா?
ரைட்டு.. எல்லார்க்கும் போனைப் போட்ற வேண்டியது தான்.
//“நான் சஞ்சய். ஆனா சாரு இங்க இல்லை சென்னைல இருக்காரு”
//
//இரவெல்லாம் எனக்குத் தூக்கமில்லை. சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானேன்னுதான்.
//
ஹா ஹா,கலக்கல் அண்ணாச்சி.
அவ்வப்போது எழுதுங்க அண்ணாச்சி பெரிய கேப் எடுத்துக்காதீங்க.
மீண்டும் தமிழ்மணத்தில் முதல்பக்கத்தில் இந்த பதிவை வரசெய்யவே இந்த பின்னூட்டம்:)
//“என்ன இல்ல சார் நொள்ள சார் நான் ரவுண்ட்ஸ்லதான் இருக்கேன் அங்க வரவா?”//
சார் நான் 5 ரவுண்ட்ஸ் முடிச்சதால் இங்க இருக்கேன், வாங்கசார் கம்பெணி கொடுங்க என்று சொல்லி இருக்கனும் அவன்:)
குசும்பன் said...
ஒருவாளி பினாயில் போட்டாவது வாயை கழுவுங்க அப்பதான் உங்க வாய் சுத்தம் ஆவும்... மாமனை போய் ....எப்படி அண்ணாச்சி உங்களுக்கு மனசு வந்துச்சு?:((((
//
பதிவே செம காமெடியா இருந்ததுன்னா, இது அதுக்கும் மேல..
ஆனா அண்ணாச்சி, உங்களையும், சஞ்சயையும் நினைச்சா கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்குது. நான் உங்க இடத்துல இருந்திருந்தா இந்த ஐடியாவும் வந்திருக்காது. சஞ்சய் இடத்துல இருந்திருந்தா உடனே புரிஞ்சிருக்கவும் மாட்டேன், அப்படியே புரிஞ்சிருந்தாலும் சமாளிச்சிருக்கவும் மாட்டேன். டைமிங் ரொம்ப மூக்கியம் இல்ல.. இதெல்லாம் படிச்சாவது மண்டையில டைமிங்சென்ஸ் வருதான்னு பாப்போம். :-((
//இரவெல்லாம் எனக்குத் தூக்கமில்லை. சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானேன்னுதான்.
//
கர்மம்..கர்மம்
//ஒருவாளி பினாயில் போட்டாவது வாயை கழுவுங்க அப்பதான் உங்க வாய் சுத்தம் ஆவும்... மாமனை போய் ....எப்படி அண்ணாச்சி உங்களுக்கு மனசு வந்துச்சு?:(( //
பினாயில்போட்டு வாயை சுத்தம் பண்ணிடலாம். மனசை???
அண்ணாச்சி இந்த இடுகையின் மூலம் நான் அறிந்துகொண்ட விஷயங்கள்
1) உங்களுக்கு விவஸ்தையில்லை (யாரை சார் போட்டு கூப்பிடுறதுன்னு தெரியாது??)
2) மாமன் சஞ்சய் மண்டையில் மசுரு இல்லாவிட்டாலும் கொஞ்சூண்டு அறிவு இருக்கு :)))
நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல...
இருந்தாலும் நீங்க இப்படிச் செய்வீங்கன்னு எதிர்பாக்கல அண்ணாச்சி...
//சஞ்சயை சார் போட்டுக் கூப்பிட வச்சிட்டானே//
:-D
அப்டியே சஞ்சய் சாரோட செல்நம்பர் கொடுத்துட்டிங்கன்னா எங்களுக்கும் உபகாரமா இருக்கும் :-)
ரெண்டுபேரோட presence of mind super
இது நல்ல ஐடியாவா இருக்கே!
இனிமே சஞ்சய் அங்கிள் எனக்காக அடிக்கடி கமிஸ்னர் அவதாரம் எடுக்க வேண்டியிருக்கும்!
அடடா...இந்த ப்ரமோஷன் எப்போ?
“ஐய்யய்யோ... இவன்னு தெரியாம கும்புடு போட்டுட்டேனே... ரெண்டு கையையும் அடுப்புல வச்சு கருக்கிறனும்” ண்ணா.... கடைசியா இது தானுங்ணா தோணுச்சு உங்களுக்கு....
ஆண்டவா!
சஞ்சய்’ன் நிலை தெரியாம மோதறீங்க. போயும் போயும் AC போஸ்டா தர்றது. ஆமா ஏசி- ஸ்பிலிட் ஏசிங்களா?
ஹா ஹா .. கிளைமாக்ஸ் தான் செம ட்விஸ்ட் தல ..
eppidi annaachi, unkalukku mattum ippadilam?
:) சிரிக்க வைச்சிட்டீங்க :)
:) :) :)
அண்ணாச்சி, சூப்பர்!
ஏன் கோவை இவ்ளோ குளு குளுன்னு இருக்குன்னு இப்பதான் புரியுது..!
சூப்பர் சஞ்சய் சார்!
அண்ணாச்சி இப்ப பாவத்தை நான் வாங்கிக்கிட்டேன் போதுமா?
:)
haa haa
:)))))))))))
Post a Comment