Saturday, December 26, 2009

எத்தனையெத்தனை முத்தங்கள்

.



சென்ற வாரம் நண்பரொருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். மிக மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அவருக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள். உச்சபட்ச மகிழ்ச்சிக்குக் காரணம் கேட்டத்தில் தன் வம்சச் சங்கிலி அறுபடாமல் அடுத்த தலைமுறை தொடர்கிறது என்பதே என்றார்.

பாட்டிகள் தாத்தாக்கள் பேரக்குழந்தைகள் மீது மிக அதிக அன்பும் பாசமும் உடையவராக இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? குழந்தைகள் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகளை ரசித்தவாறே நாட்களை நகர்த்துவர். வாழ்க்கைப் போராட்டத்தில் சற்று நின்று இளைப்பாறி தன் குழந்தகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் போனதை சரிசெய்வது போன்றது அது.

பிரசவ வார்டுகளில் காத்திருக்கும் அப்பாக்களின் கண்களில் தெரியும் ஆர்வத்தை விட தாத்தா பாட்டிகளின் ஆர்வம் அளவுக்கதிகமாகவே இருக்கும். பேரக் குழந்தைகளுடனான வாழ்வில் தங்கள் பால்யத்தை மீண்டும் வாழ்வதாக உணருகிறார்கள். தன் வாழ்வை மீண்டும் ஒரு முறை வாழ்வதான ஒரு ஒப்புமை போல.

நண்பரின் பரவசத்தை வார்த்தைகளில் இங்கே வடித்திருக்கிறேன்.

அங்கங்கே ஞாபகம் இருக்கிறது
அம்மாவின் முத்தங்கள்
வேர்வையும்
மஞ்சள் வாசமும் கலந்து

அடுத்து வந்த முத்தங்களில்
வாசமேதுமில்லை வீச்சம்தான்
பூண்டு, வெங்காயம்
அங்கு விலாஸ் புகையிலை
சொக்கலால் ராம்சேட் பீடி
சில சமயம்
சாராயமும் கூட

பெப்பர்மிண்ட் வாசம்
கலந்திருந்தது
ஒண்ணாப்பில்
கலா கொடுத்த முத்தத்தில்

குட்டிக்குரா வாசமிருந்தது
13ல் பானு கொடுத்ததில்

பயமும் பதட்டமுமே
மிஞ்சியதால்
வாசம் மறந்துவிட்டது
17ல் ராதாவிடம்
வாங்கியதில்

மண்டபத் தனிமையில்
மாலை கழுத்திலாட
பட்டு சரசரக்க
மனைவியின் முதல் முத்தம்

தொட்டுத் தூக்கும்போதெல்லாம்
கிட்டிய பட்டு மகளின்
எச்சில் முத்தம்

இவை யேதும் ஈடாகா
என் மகளின் மகளின்
பால் வாசம் வீசும்
பச்சை முத்தத்திற்கு

.

11 பேரு பாராட்டியிருக்காங்க:

Vinitha said...

செந்தில் ஒரு முறை சொன்னது ஞாபகம் வருது... என் மகன் பிறந்தவுடன், என் நெஞ்சில் காலால் கொடுத்த அடிக்கு ஈடாகாது நான் கவுண்டரிடம் வாங்கும் ( காசு ) அடி.

சின்ன அம்மிணி said...

நல்லா இருக்கு
டெம்ப்ளேட் பின்னூட்டம்தான் ஏன்னா கவிதை நல்லா இருக்கு :)

தமிழ் பிரியன் said...

Bharathi's "uchi mugarkaiyil kalveri kolluthadi" paatu peran pethiyai konjuvorukku saalap porunthum.

பித்தன் said...

naalaa irukku saare. namakku antha baakkiyam innum kittala

cheena (சீனா) said...

பால் வாசம்வீடும் பச்சை முத்தத்திற்கு ஈடு இணையே இல்லை

நல்ல கவிதை - ரசித்தேன் - நல்வாழ்த்துகள்

கண்மணி said...

அருமை

கண்மணி said...

அருமை

பின்னோக்கி said...

வியட்நாம் வீடு படத்தில், சிவாஜி சொல்லும் வசனம் நியாபகத்துக்கு வருகிறது.

தமிழ் பிரியன் said...

\\\கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி \\\

என்று வரும்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

தராசு said...

என்னது, தாத்தாதான் உங்க நண்பரா,

அண்ணாச்சி, உங்கள என்னைப் போல யூத்துன்னல்ல நெனச்சேன்.

கவிதை கலக்கல்