.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது எனக்குத் தோழர்கள் இருவர்; எம்.பாலசுப்ரமணியனும், சண்முக சுந்தரமும். பெரும்பாலும் மூவரும் ஒருவர் வீட்டில் விளையாடுவதும் படிப்பதுமாகக் கழிந்த பருவம். அப்படி ஒரு முறை இருவரும் என் வீடு வந்திருந்த போது. கிராமத்திலிருந்து வந்திருந்த என் அத்தை (அப்பாவின் அக்கா) கேட்டார், ” நீ என்ன ஜாதிடா?”
பாதிச் சாப்பாடு தட்டில் இருக்க எழுந்து போனவன்தான் சண்முகம். அதன் பின் ஆண்டிறுதி வரை என்னுடன் அவன் பேசவே இல்லை. மேற்படிப்புக்கு அவன் வேறு பள்ளிக்கும் நான் வேறு பள்ளிக்கும் சென்றுவிட்டோம். அவன் என்ன ஜாதி என்பது பற்றிய அக்கறை ஏதுமற்றுத்தான் பழகினோம் என்றாலும் அத்தை விதைத்த அந்த விதை எங்களிடையே ஒரு விரிசலை ஏற்படுத்தி விட்டது.
அதைப்போலத்தான் இப்பொழுதும் வலையில் நடக்கிறது. பொதுவான கருத்துக்களை எழுதியும் பழகியும் வந்த நண்பர்கள் இப்பொழுது கட்சி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். If you are not with me, you are against me. என்ற சித்தாந்தம் இங்கு நன்றாகச் செல்லுபடியாகிறது.
மேலும் பின்னூட்டம் இடும் சிலரும் இதுதான் தக்க வாய்ப்பென்று தங்கள் மன வக்கிரங்களையும் இறக்கி வைக்க இது களம் அமைத்துத் தருகிறதென்ற அடிப்படைப் புரிதல் இரு சாரரிடமும் இல்லை என்பது மிக வருத்தமேற்படுத்துகிறது.
அடிப்படைப் பிரச்சினையை ஒட்டியும் வெட்டியும் பேசுவதை விட்டு,, கிளைவாய்க்கால்களை வெட்டி வெட்டி அவரவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருக்க, ஆறு வற்றிப் போனதுதான் சோகம்.
நான் வீடு வாங்கப் பணம் போதாமல் தவித்த போது கை கொடுத்த பதிவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான். கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டன. இப்பொழுதுதான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன். இன்னொருவருக்கு இன்னும் இரண்டு மாதங்களாவது ஆகும். அவர்கள் எதைப் பார்த்து எனக்கு உதவினார்கள்?. இத்தனைக்கும் ஒருவரை நான் நேரில் பார்த்ததுகூட இல்லை அப்பொழுது. இருவருமே நான் கேட்காமல் என் நிலையறிந்து தானாக முன் வந்து என் வங்கிக் கணக்கை வாங்கி பணம் அனுப்பினார்கள்.
நல்ல அறுசுவை விருந்தைப் பரிமாறி நடுவில் மலத்தையும் வைக்கும் உங்கள் நாகரீகம் அருவெறுப்பூட்டுகிறது எனக்கு. சலிப்பும் அயர்ச்சியும் மேலோங்குகிறது.
என்றாலும் உங்களைப் போன்றவர்களை இனங்கண்டு ஒதுங்கிப் போகவும் போலல்லாதவர்களை அறிந்து கொண்டு நட்பு பாராட்டவும் வாய்த்திருக்கிறது. எனக்கது போதும் எப்போதும்.
வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது. நாமே அதை வலிந்து சிக்கலாக்கிக் கொள்கிறோம்.
டிஸ்கி : இது என் போன்று எந்தக் கட்சியிலும் இல்லாத மிதவாதிகளுக்கு. மதவாதிகளுக்கு இங்கிடமில்லை.
டிஸ்கி 2: நன்றி முரளிக் குமார் பத்மனாபன்.
.
எந்திரன் - கார்ட்டூன்
33 minutes ago

55 பேரு பாராட்டியிருக்காங்க:
என்னைப் பொருத்த அளவில் தனி மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களாகவே அடையாளம் என்று எதையாவது (குறுக்காக அல்லது தலையில், நெற்றியில்) அணிந்து கொள்ளும் போது அது அவர்களையும் நம்மையும் (ஏ)மாற்றிவிடுகிறது.
/என்னைப் பொருத்த அளவில் தனி மனிதர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களாகவே அடையாளம் என்று எதையாவது (குறுக்காக அல்லது தலையில், நெற்றியில்) அணிந்து கொள்ளும் போது அது அவர்களையும் நம்மையும் (ஏ)மாற்றிவிடுகிறது./
என் கருத்தும் இதுவே..
/வாழ்க்கை மிகவும் அழகானது, அதை உணரும்போது/
உணர வேண்டும் அவ்வ்ளோதான்!
// ” நீ என்ன ஜாதிடா?”
பாதி சாப்பாடு தட்டில் இருக்க எழுந்து போனவன்தான் சண்முகம். அதன் பின் ஆண்டிறுதி வரை என்னுடன் அவன் பேசவே இல்லை//
ம்.. ரொம்ப பாதித்தது.....
சரியான நேரத்தில் மிகச்சரியான இடுகை.
//நான் வீடு வாங்கப் பணம் போதாமல் தவித்த போது கை கொடுத்த பதிவர்களில் ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான். கிட்டத்தட்ட 8 மாதங்களாகி விட்டன. இப்பொழுதுதான் ஒருவருக்குத் திருப்பிக் கொடுத்திருக்கிறேன்.//
நீங்க எந்த மதத்துக்காரருக்கு பணத்தை முதல்ல திருப்பித் தந்தீங்க.. (இதை வச்சு நீங்க எந்த கட்சின்னு கண்டுபிடிப்போமுல்ல..) :-))
//சில நல்லவர்கள் இரு பக்கமும் ஆதரவு(?????) தெரிவிக்கிறார்கள்.//
அதனாலதான் அவங்களை நீங்க நல்லவங்கன்னு சொல்லி இருக்கீங்க அண்ணாச்சி :)
//ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான்.//
ஆஹா இது என்ன புதுமதமா இருக்கு? கவரிமான் தெரியும் புள்ளிமான் தெரியும் அது என்ன முஸல்மான்:))))
//சென்ஷி said...
//சில நல்லவர்கள் இரு பக்கமும் ஆதரவு(?????) தெரிவிக்கிறார்கள்.//
அதனாலதான் அவங்களை நீங்க நல்லவங்கன்னு சொல்லி இருக்கீங்க அண்ணாச்சி :)//
வாவ்!
ரிப்பிட்டேய்ய்ய்ய்!
சரியா புரியலைங்க.....கடைசியா...என்ன சொல்ல வர்றீங்க வேலன் ?
யார் என்ன சொன்னா உங்களுக்கு என்ன...உங்க வேலையை பார்த்துட்டு அமைதியா போக வேண்டியது தானே....என்று சொல்கிறீர்களா?
எதிர்ப்பே தெரிவிக்காத கருத்தோ பதிவோ, சரியான கருத்தாக, பலரும் அங்கீகரிக்கப்பட்ட கருத்தாக பலருக்கு தோன்றுமே ...அது சரியா ?
இதுல ஒரே மேட்டர் தான், தனி மனித தாக்குதல்கள் இருந்தது தான் வருத்தப்படவேண்டிய மேட்டர்!
//குசும்பன் said...
//ஒருவர் இந்து, ஒருவர் முஸல்மான்.//
ஆஹா இது என்ன புதுமதமா இருக்கு? கவரிமான் தெரியும் புள்ளிமான் தெரியும் அது என்ன முஸல்மான்:))))//
இந்த அண்ணாச்சிக்கு ஆசிப் அண்ணாச்சி தான் கடன் கொடுத்து இருக்கிறார்னு கண்டு பிடிச்சிட்டேன். அண்ணாச்சிக்கு அண்ணாச்சி தான் உதவுவாங்கன்னு பழமொழி கூட இருக்கே.
நன்றி கோவி. நீங்கள் சொல்லுவதும் சரிதான்.
நன்றி அருணா.
நன்றி கண்ணா
நன்றி சென்ஷி
நன்றி குசும்பா
நன்றி ஆயில்ஸ்
நன்றி கபிலன்.
நடந்த விவாதங்கள் எல்லாம் சரியான கருத்து மோதல்கள்தானா?
முதலில் இதைப் போன்ற ஒரு சென்சிட்டிவான விஷயத்தை எழுதலாமா? எல்லோருக்கும் அடிப்படை நம்பிக்கை எனச் சிலது இருக்கு. அதைக் கேள்வி கேட்கும் விதமாக எழுதலாமா?
எதிர் வினையாற்றியவர்களாவது நாகரீகமாக நடந்து கொண்டார்களா? இவர்கள் செய்ததைப் பார்க்கும்போது அவர்கள செய்தது சரிதானோ என எண்ணத் தோன்றுகிறதல்லவா?
மேலும் மத வாதிகள் வந்து இடும் பின்னூட்டங்களை ரிலீஸ் செய்வதும் அதர்கு சிரத்தையுடன் பதில் சொல்வது தகுந்த செயலா. அப்ப உங்க அடிப்படை நோக்கமே இதுதானோ?
இதற்குப் பேசாமல் நான் ஒரு மதவாதி என ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சனை இல்லை அல்லவா?
எதிரி யாரென்றே தெரியாமல் என்ன சமர் இது?
எத்தனை பிரச்சினகக்கு அமைதியாக இருத்தல் நல்ல தீர்வாக அமைந்திருக்கிறது தெரியுமா?.
சொல்லப் பட்ட ஒவ்வொரு வார்த்தைக்கும் சொல்லப்படாத அர்த்தங்கள் எண்ண்ற்றவை உள்ளனவல்லவா? பொது இடத்தில் பேசும் போது வார்த்தைகளில் நாகரீகமான கவனம் வேண்டாமா?
சரியான நேரத்தில் சரியான பதிவு அண்ணாச்சி....
இரண்டு பதிவுகளிலும் வந்த பின்னூட்டங்களில் சில மிக காரமாக இருந்தது. அது மனதை வருத்தியது. இந்த பிரச்சினை இத்தோடு முடிவுக்கு வந்தால் சந்தோஷமே.
சஞ்சய்,
சந்தோஷமாக இருக்கிறது உன் மைனஸ் ஓட்டிற்கு.
ஆனால் வருத்தமாக இருக்கிறது. முன் முடிவுகளுடன் பிரச்சினையை அனுகுவது குறித்து.
இது பற்றி மேலும் விவாதிக்க விரும்பவில்லை.
அண்ணாச்சி அப்ப நீங்க சஞ்சய் ஒருத்தருக்காகதான் பதிவு எழுதினீங்களா? அதுக்கு முன்னாடி பதிவு அருமைன்னு சொன்னவங்க எல்லாம் என்ன லூசா(பரிசல் சொல்லியிருக்கிறார்)? சஞ்சய் சொன்னா பதிவை தூக்கிடுவீங்களா?
//லூசா(பரிசல் சொல்லியிருக்கிறார்)? //
அதானே.. :))
மற்றவரின் மூக்கை சொறியும் விதத்தில் அவர் ஆரம்பித்தது தவறு....எதிர்ப்பதிவு சரி என்பது என் கருத்து. கருத்து, விவாதம்னு வரும்போது ஒரு சில சமயங்களில் எல்லை மீறுவது ரொம்ப இயல்பானது. ஆனால், அது தனிமனித தாக்குதல்களாக இல்லாமல் கருத்து மோதல்களாக மட்டும் இருந்தால் ஆரோக்கியமானது.
"முதலில் இதைப் போன்ற ஒரு சென்சிட்டிவான விஷயத்தை எழுதலாமா? எல்லோருக்கும் அடிப்படை நம்பிக்கை எனச் சிலது இருக்கு. அதைக் கேள்வி கேட்கும் விதமாக எழுதலாமா? "
ஹி ஹி...இதே கேள்வியை தமிழ் ஓவியாவின் பதிவுகளில் கேட்பீர்களா வேலன் ?
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...மதவாதின்னா யாரு ? அவங்க தகுதிகள் என்ன ?
அது என்ன மிதவாதி ?
பதிவு திரும்ப வந்தே ஆகவேண்டும், இல்லையென்றால் நாளை முதல் என் பேச்சை கேட்டு தெலுங்கானாவில் பந்த்!
What happened? Why did you delete the post? I came to read, but it has gone missing.
இத நான் எதிர்பாக்கல :(
If anyone has got his post, please email to me. Grateful.
thiruvananthapuraththaaan@gmail.com
என்ன அண்ணாச்சி இப்டி குற்ற உணர்வை உருவாக்கறிங்க?. மீண்டும் இந்தப் பதிவை வெளியிட வேண்டும் என விரும்புகிறென். மனதில் பட்டதை சொல்வது தவறா? எல்லா சூழ்நிலையிலுமே போலியாகவே நடந்துக் கொள்ள வேண்டுமா?. உங்கள் பதிவை ஒட்டித் தானே பின்னூட்டமிட்டேன். தனி நபர் தாக்குதல் எதுவும் இல்லையே. ஏன் பதிவை நீக்க வேண்டும்?.
சை.. நான் வரறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி டைட்டில் போட்டுருவீங்களே.. என்ன நடந்துச்சு, ஒண்ணியும் புரியலை.!
கபிலன்,
சுமஜ்லா எழுதியது மிகவும் தவறு. அதை அவர் பதிவிலேயே இரண்டு முறை பின்னூட்டமிட்டிருக்கிறேன்.
அதே சமயம், அவர் செய்த தவறை சரி செய்ய நாமும் தவறு செய்வதுதான் ஞாயமா? எதிரிக்கு எதிரி நண்பன் எனபதெல்லாம் சரியா?
அவர்மீது இருக்கும் கோபத்தில் உங்கள் கட்சி ஆசாமிகள் செய்யும் தவறு உங்கள் கண்ணை மறைக்கவில்லையா?
ஹி ஹி என்ற உங்கள் நக்கல் எதற்கு என்று புரியவில்லை. இருந்தாலும் நான் நேர்மையாக்வே பதில் சொல்கிறேன்; தமிழ் ஓவியா யார் என்றே எனக்குத் தெரியாது. அதனால் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.
ஆனால் சுமஜ்லா, கலகல்ப்ரியா, பிரபாகர் போன்றோர் பதிவுகளைப் படிப்பவன் என்பதாலும் தோழி மயிலின் கணவர் ராம் என் நண்பர் என்பதாலும் இதை எழுதுவது சரியாக இருக்கும் என நினைத்தே எழுதினேன்.
மதவாதி மிதவாதி வித்தியாசம் தெரியாமலா இவ்வளவு விவாதம் செய்கிறீர்கள்? ஆச்சர்யமாக இருக்கிறது.
என் கடைசி ரெண்டு பின்னூட்டம் புரியாதவர்களுக்காக இந்த பின்னூட்டம்.
சஞ்சய் போட்ட ஒரு பின்னூட்டத்துக்காக வேலன் பதிவை டெலிட் செஞ்சுட்டு அங்க " பதிவு நீக்கப்பட்டுவிட்டது" என்று மட்டும் எழுதி வெச்சிருந்தார். அதுக்காகதான் பதிவை திரும்ப போட சொல்லி போட்டது என் பின்னூட்டங்கள்!
(விளக்கம் ரொம்ப முக்கியம்)
நிதானமான அதே சமயம் நேர்மையான பதிவு அண்ணாச்சி!
பதிவைக் காணவில்லை. கண்டுபிடித்து அனுப்புங்கள் என்ற நண்பர்களின் ஏகப்பட்ட கோரிக்கைகளையடுத்து தேடிப் படிக்க முடிந்தது :)
"சுமஜ்லா எழுதியது மிகவும் தவறு. அதை அவர் பதிவிலேயே இரண்டு முறை பின்னூட்டமிட்டிருக்கிறேன்.
அதே சமயம், அவர் செய்த தவறை சரி செய்ய நாமும் தவறு செய்வதுதான் ஞாயமா? "
சரிங்க. ஒருத்தர் நம்மைப் பற்றி தவறான தகவல்களைத் தருகிறார். அதற்கு அமைதி காக்க வேண்டுமா ? பதில் சொல்ல வேண்டுமா ?
"அவர்மீது இருக்கும் கோபத்தில் உங்கள் கட்சி ஆசாமிகள் செய்யும் தவறு உங்கள் கண்ணை மறைக்கவில்லையா? "
யார் மீதும் கோபம் இல்லை. என்னாங்க வேலன் அதுக்குள்ள எங்க கட்சி ஆசாமிகள்னு சொல்றீங்க. உண்மையை சொன்னா சம்பந்தப்பட்டவர்களின் பதிவுகள் பக்கம் நான் அதிகம் போனது கூட கிடையாது.
தம்மால் உடன்படமுடியாத கருத்துக்களை நிராகரிக்கலாம்.
தமக்கு எதிரான கருத்துக்களுக்கு,அவதூறு கூறும் பதிவுகளுக்கு பதில் தருவதில் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.
"மதவாதி மிதவாதி வித்தியாசம் தெரியாமலா இவ்வளவு விவாதம் செய்கிறீர்கள்? ஆச்சர்யமாக இருக்கிறது."
நிஜமாகவே எனக்கு சரியான விளக்கம் தெரியாது. தெரிந்தவர்கள் விளக்குங்கள்!
இவ்வளவு சென்சிட்டிவான விஷயத்தை, அனானி பேருல வந்து திட்டாம, தைரியமா எதிர் பதிவு போடுற துணிச்சல் அவங்களுக்கு இருக்குறது சந்தோஷம்.
இந்தப் பதிவைப் படிச்சிட்டு, யார் என்ன சொன்னா நமக்கென்னன்னு போயிடுவாங்களோன்னு தான் விவாதம் செய்றேன்.
மற்றபடி எந்த கோபத்துடனும் இல்லை.
தங்களைப் புன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்!
TVRK சார் மற்றும் சென்ஷி தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. பதிவில் அவ்வரிகளை நீக்கி விட்டேன் கூடவே உங்கள் பின்னூட்டத்தையும்; நீங்களே கேட்டுக் கொண்டபடி.
தலைவரே மேட்டர் ரொம்ப சீரியஸா இருக்கு, எங்க இருந்து இதன் புள்ளி ஆரமித்தது ??
enakku entha sandaiyum theriyaathu naan romba nallavan. Entha katchiyum theriyaathu so so so ............... vaazhga valamudan.
புரியல..
இப்பத்தான் 3 idiots பாத்துட்டு வந்தேன்!
so, 'ALL IZZ WELL' :)
அன்பின் அண்ணாச்சி
ஒண்ணூமே புரில - என்ன எழுதினீங்க - என்ன ச்ஞ்செய் சொன்னாரு - ஏன் பதிவ நீக்கினீங்க - ஏன் மறுபடி போட்டீங்க - சென்ஷி என்ன சொன்னாரு - எந்த வரிகள நீக்கினீங்க - தலயப்பிச்சிக்கறேன்
நல்வாழ்த்துகள் - ஆமா இன்னிக்கு கூரியர் அனுப்பியாச்சு ( இதென்னனு யாரும் கேக்காதீங்க - இடுகைக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல )
அண்ணாச்சி,
நல்ல நேரத்தில் தேவையான பதிவு.
ஒரு விஷயம்:
“இது என் போன்று எந்தக் கட்சியிலும் இல்லாத மிதவாதிகளுக்கு. மதவாதிகளுக்கு இங்கிடமில்லை.”
இவர்களுக்கு உங்கள் பதிவில் இடமில்லை - அப்படிங்கறாமாதிரி தொனி வருது, பதிவுலகில் இடமில்லைன்னு சொல்ல வந்தீங்கன்னு நெனைக்கிறேன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அன்புள்ள வடகரை வேலன்,
இந்தப் பின்னூட்டம் ஒரு தன்னிலை விளக்கமுன்னு வச்சுக்குங்க. பிரசுரிக்காமல் இருந்தால் மகிழ்வேன்.
எப்படியோ இந்த கலவரபூமியில் நான் மாட்டிக்கிட்டதை நினைச்சு.....
அவுங்களுக்கு நான் போட்ட பின்னூட்டம் இதுதான். நம்ம நேரம் இது முதல் பின்னூட்டமா அமைஞ்சுபோச்சு.
அருமையான பதிவில் இப்படி ஏன் எழுதுனீங்கப்பா?
//நற்குடியில் பிறந்தவர்கள் அனைவரும் நிச்சயமாக பர்தாவை விரும்புவார்கள். //
பர்தா போடாமல் விரும்பாமல் இருக்கும் பல நல்லவர்களை எனக்குப் பழக்கம் இருக்கேப்பா. அவர்கள் நல்ல குடும்பத்து மக்கள்தான்.
இதுக்குத்தான் அவுங்க என்னென்னமோ சொல்லிட்டாங்க. அப்புறம் நல்ல நற்குடின்னாங்க. அப்புறம் இன்னொரு இடத்தில் நற்குடின்னா ராயல் ஃபேமிலின்னு சொல்லி இருக்காங்க.
போகட்டும் எல்லோரும் இந்நாட்டு மன்னர்ன்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.
//முதல் பின்னூட்டம் வந்ததும், அதைத்தான் அனைவரும் பிடித்துத் தொங்குகிறார்களே தவிர, நான் சொல்ல வந்தததை விளங்க தயாராக இல்லை!// இப்படியும் சொல்லி இருக்காங்க.
போகட்டும் எல்லாப் பழியும் துளசிக்கே!!!
இப்போ எல்லோரும் ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கிறோம்.
எல்லோருக்கும் அவரவர் கருத்து சரியே. சில நாட்கள் சென்றால் நாம் அனைவருமே இதை மறந்து வேறு வேலை பார்க்க சென்று விடுவோம்.
உங்கள் கருத்தை அறிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி
சுமஜ்லாவின் பதிவில் அந்த நற்குடி என்ற சொல்லுக்கு நானும் அந்த பதிவிலேயே கண்டனம் தெரிவித்து விட்டேன்.
அன்பின் உ.த,
உங்கள் பின்னூட்டத்தை நீக்க வேண்டியது அவசியமாகிறது. பிரச்சினை சுமுகமாக முடியவேண்டும் என்ற என் எண்ணத்தை ஒட்டி அது அமையவில்லை என்பதால்.
மன்னிக்கவும். நன்றி.
அன்பின் அக்பர்,
பிரச்சினையின் அடினாதம் அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறாது. இருந்தாலும் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டார்கள்.
ஆனால் கொட்டிய வார்த்தை கொட்டியதுதான். இழந்த்த இந்த அபிமானத்தை சுமஜ்லா மீண்டும் பெற முடியாது. என்னைப் போன்றவர்கள் அவர் மீது வைத்திருந்த மதிப்பிற்கு அவரே பங்கம் விளைவித்துக் கொண்டார்.
யார் செய்தது சரி, யார் செய்தது தவறு என்பதைத் தாண்டி நடந்ததைத் தவிர்த்திருக்க முடியாதா என்ற கேள்வி ஒரு சுய அலசலைத் தரக்கூடும்; கூடவே தெளிவையும்.
தங்ககள் கருத்துக்கு நன்றி.
அன்பின் துளசி மேடம்,
தங்கள் பின்னூட்டம் என்ன அது ஏன் நீக்கப்பட்டது என்பது எனக்கும் இன்னும் பலருக்கும் தெரியாமலே இருந்தது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அதை நீக்க வேண்டியதில்லை.
ஆத்திரத்தில் இருக்கும்போது எந்தக் காரியத்தையும் செய்யக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம் நம் அனைவருக்கும்.
அக்பர்,
பிரச்சினை நற்குடி என்ற வார்த்தை மட்டுமல்ல. அதை அவர் எழுதியதும் பின்னூட்டமிட்டவர்கள். பர்தா அணியாத நல்ல முஸ்லிம் பெண்களும் இருக்கிறார்களே என்றுதான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சுமஜ்லா பிடிவாதமாக தான் சொன்னதுதான் சரி என இப்பொழுதுவரை தீவிரமாக இருப்பதும் இது இருமத்தவரும் துவேசத்தை விதைக்க வழி செய்ததும்தான் வருத்தம் தரும் விஷயம்.
அசல் நன்று..! படித்தேன்..! விளக்கம் படித்த பின்னும்... இவ்வாறான சுட்டுதலை ஏற்றுக் கொள்ள முடியாத ஜீவனாக என்னைக் கருதியதில், தவறுதலாக உங்கள் பேனா முனை என் கண் இமை மேல் சற்று கீறி விட்டுச் சென்றது..! :).. எழுதும்போதும், இப்பொழுது பலவிதமான எதிர்வினைகள் தவிர்த்துப் பார்க்கும் பொழுதும்,, நான் சுட்டியது தவறாகப் படவில்லை..! ஆனால் எதிர்வினைகளின் அலைக்கழிப்பில், மிகவும் உணர்ந்தேன்.. 'தவறுதான்'.. :)..!
follow up..
அன்பின் ப்ரியா,
எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்புக் கிடையாது. எழுத்து என்ற ஒரு புள்ளியில் நாம் இஅனைந்து அதன் பின் ஒன்றாகப் பயணிகத் துவங்குகிறோம். துவக்கத்தில் விழுந்த நன்மதிப்புக் இடையில் ஊறு வரும்போது மனம் அதிர்கிறது, ஏமாற்றமடைகிறது. இவரா இப்படிச் செய்தார் என்ற ஏமாற்றம் அதனால் எழும் கையாலாகத்தனம் கோபமாக மாறி வெறுப்பாக வெளிப்படுகிறது. அவ்வளவே.
எழுதித் தீர்க்க வேண்டியவைகள் ஏராளம் இருக்க இதை எழுத வேண்டாமே என்பதுதான் என் ஆதங்கம். பிடிக்கதவர்களை ஒதுக்குவதுதான் நல்ல தண்டனை; விளைவு சற்று தாமதமாகத்தான் வருமென்றாலும்.
ஆம்..! உண்மை..! நன்றி..:)
மீண்டும் பதிவை வெளியிட்டதற்கு நன்றி. நான் நீக்கியப் பின்னூட்டங்களும் மீண்டும் போடவா? :)) அப்படிப் போட்டால் மீண்டும் நீக்கிவிடுவீர்களா? :((
இப்பத்தான் இங்ஙன வந்தேன்.
புரிந்த மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.
நல்லபடியாக மெச்செஜ் எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு போனால் நல்லது. ஜாதி மதம் வைத்து பேசுவது, உதவி நடுவது தவறு!
வேலன், உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.
ஒரு மனிதன் தன்னை எப்படி அடையாளம் கண்டு கொண்டிருக்கிறானோ அதைப் பொறுத்தே அவன் சமூகத்தைப் பார்க்கிறான். அவன் தன்னை அடையாளம் கண்டு கொண்ட விதம் உயர்வாக இருந்தால் அதன் வெளிப்பாடு அன்பாகவும், நட்பாகவும், பெருமிதமாகவும், எல்லாரையும் கை தூக்கி விடுவதாகவும் இருக்கும். தாழ்வாக இருந்தால் அதன் வெளிப்பாடு வெறுப்பாகவும், விரோதமாகவும், துக்கமாகவும், குறை கூறுவதாகவும் இருக்கும்.
ஜாதி ஒரு அடையாளமே அன்று.
ஜாதி அடிப்படையில் தன்னையோ, பிறரையோ உயர்வாகவோ தாழ்வாகவோ பார்ப்பது அறிவீனம்.
அதிலும் எந்தச் சாதியையாவது திரும்பத் திரும்ப 'நீ மட்டம்... நீ மட்டம்' என்று சொல்லிக் கொண்டே இருப்பது அச்சத்தையும், இயலாமையையும், தன்னம்பிக்கையின்மையையும் காட்டுவதோடு 'நீ ஒசத்தி' என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பது போன்றது.
அதை அறிவிலிகள் செய்யட்டும். நாம் செய்ய வேண்டாம்.
நாம் மனிதர்களை மனிதர்களாகப் பார்த்து இந்தச் சமூகத்துக்கு முன் மாதிரியாக இருப்போம்.
நாமெல்லோரும் ஒரே ஜாதி. ப்ளாக்கர் ஜாதி!
http://kgjawarlal.wordpress.com
//பிரச்சினை நற்குடி என்ற வார்த்தை மட்டுமல்ல. அதை அவர் எழுதியதும் பின்னூட்டமிட்டவர்கள். பர்தா அணியாத நல்ல முஸ்லிம் பெண்களும் இருக்கிறார்களே என்றுதான் கேட்டிருக்கிறார்கள். ஆனால் சுமஜ்லா பிடிவாதமாக தான் சொன்னதுதான் சரி என இப்பொழுதுவரை தீவிரமாக இருப்பதும் இது இருமத்தவரும் துவேசத்தை விதைக்க வழி செய்ததும்தான் வருத்தம் தரும் விஷயம்.//
உங்கள் கருத்துக்களுடன் நான் உடன் படுகிறேன்.
இது உண்மையிலேயே வருத்தம் தரும் சம்பவம்தான்.
Post a Comment