.

கார்னர் சைட் என்றார் அப்பா
கட்டாயம் வாங்கிடச் சொல்லி
வரைவோலை அனுப்பினேன்
வாஸ்து நாளொன்றைப் பார்த்து
வரச்சொல்லி தொலைபேசினார்
சேர்த்து வைத்த விடுமுறைகள்
செலவாகக் கிள்ம்பினேன்
பூமி பூஜை முடிந்த கையுடன்
வங்கி மேலாளருக்கொரு வணக்கம்
கேட்டது எல்லாம்(!?)
கொடுத்ததும் கிடைத்தது
வீட்டுக் கடன்
நல்லதொரு முகூர்த்த நாளில்
புது மனை புகு விழாவும் ஆயிற்று
எவ்வித மாற்றமுமின்றி
எப்போதும் போல்
கழிகிறது வாழ்க்கை
அம்மா வீட்டில் அவளும்
அரபு நாட்டில் நானுமாய்
pict courtesy :resortpointe.com
.

26 பேரு பாராட்டியிருக்காங்க:
அண்ணாச்சி! அருமை
மிக அருமை.
நல்லா இருக்கு அண்ணாச்சி
சேர்த்து வைத்த விடுமுறைகள்
செலவாகக் கிளம்பினேன்
அரபு நாட்டில் நானுமாய்
அயல் தேசத்தில் நானுமாய்
நல்ல அழகாகச் சொல்லிவிட்டீர்கள் பெரும்பாலான குடும்பங்களின் தற்போதைய வாழ்க்கை நிலையை.
//அம்மா வீட்டில் அவளும்
அரபு நாட்டில் நானுமாய்//
அருமை அண்ணாச்சி...
கவிதை நல்லா இருக்கு.
நிறைய வீடுகளின் யதார்த்தம்.
நல்ல கவிதை.
வெள்ளி முடிந்து சனிக்கிழமை இந்தக் கவிதை வந்தது மிகப் பொருத்தம் அண்ணாச்சி.
Nice :)
நல்லா இருக்கு அண்ணாச்சி
வெளி நாட்டில் வேலைக்காக வாழ்பவர்களின் மனதில் உள்ளதை அழகாகப் படம் பிடித்துக் காண்பித்துவிட்டீர்கள் அண்ணாச்சி.
கவிதை நல்லாயிருக்கு அண்ணாச்சி!
;-)
அருமை
கவலைய விடுங்க. பணம் சம்பாதிச்சுட்டு திருப்பி வாங்க.
:)
நன்றி அத்திரி.
நன்றி ராமு
நன்றி ஜோதி
நன்றி அகல்விளக்கு
நன்றி ரிஷபன்
நன்றி அருணா
நன்றி பரிசல்
நன்றி ராஜலட்சுமி
நன்றி பித்தன்
நன்றி ராகவன்
நன்றி சுந்தர்
நன்றி ஜின்னா
நன்றி திகழ்
நன்றி பின்னோக்கி
நன்றி கலகலப்ரியா
ஏன் அம்மா வீட்டில் என யாராவது கேட்பார்கள் என நினைத்தேன் யாரும் கேட்கவில்லை.
அதே போல் பின்னோக்கி உட்கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை போல. திரும்பி வர முடியாத மாயச் சுழல் அது என்பதுதான் என் ஆதங்கம்.
நல்லா இருக்குங்க வேலன்.
//ஏன் அம்மா வீட்டில் என யாராவது கேட்பார்கள் என நினைத்தேன் யாரும் கேட்கவில்லை//
அப்படி கேட்டால் உங்கள் கவிதையின் அர்த்தமே மாறிப்போகுமே வேலன்! யாரும் இல்லாத வீட்டிற்கு தான் இவ்வளோ கஷ்டப்படுகிறார்கள் என்பதை நீங்கள் கூற வருகிறீர்கள். அதை வலியுறுத்தத்தான் அவரை அம்மா வீட்டில் இருப்பதாக காட்டி இருக்கலாம் என்று நினைத்து இருக்கலாம், இது என் கருத்து மட்டுமே.
சரி நீங்க சொல்லுங்களேன் இப்ப..தெரிந்து கொள்கிறோம்! (இப்பவாவது) :-)
so realistic
:--))
கிரியை வழிமொழிகிறேன்.
நல்ல கவிதை.!
அருமை
//ஏன் அம்மா வீட்டில் என யாராவது கேட்பார்கள் என நினைத்தேன் யாரும் கேட்கவில்லை.//
பலகாலமா நடந்துட்டு வர்றதுதான், அதனாலத்தான் யாரும் கேக்கலை.
இப்ப, ஒரு முன்னேற்றம் என்னன்னா “அவளும் நானுமாய்
அரபு நாட்டில்”
அருமையான இடுகை வாழ்த்துகள்
நல்ல கவிதை
தரமாக உள்ளது.
நல்ல நடை
சார். நீங்கள் கோவையில் வசிப்பதாக எழுதியிருந்ததால், இக்கவிதை, சொந்த அனுபவம் இல்லை என்ற நிலையில், ஆறுதல் கூறுகிற அளவிலேயே பணம் சம்பாதித்துவிட்டு வாருங்கள் என்று எழுதியிருந்தேன்.
மனைவி, அம்மா வீட்டில் - இதனை கவனிக்கவில்லை.
நல்ல கவிதை.....
Post a Comment