Saturday, December 19, 2009

அது ஏன்?


1. என்னதான் தங்கமணி சொல்லுறதுக்கு நாம நோன்னு சொன்னாலும் கடைசில அவங்க சொல்லுறதுதான் நடக்குது. நாமும் அதைத்தான் செய்கிறோம். தெரிந்திருந்தும் உடனே நோ சொல்கிறோமே; அது ஏன்?

2. என்னதான் நாம் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்தாலும் அது தங்கமனியிடம் இருக்கும் கலராகவோ அல்லது டிசைனாகவோ அமைந்து விடுகிறதே; அது ஏன்?

3. தங்கமணியின் பெற்றோர் வரும் நாள் பார்த்து அலுவலகத்தில் அதிக வேலையும் வீட்டுக்குத் தாமதமாக வரும்படி அமைகிறதே; அது ஏன்?

4. அலுவலகத்தில் சூப்பராகப் பொய் சொல்லி சமாளிக்கும் நாம் தங்கமணியிடம் சொல்லும் பொய்யின் சாயம் மட்டும் உடனே வெளுத்து விடுகிறதே; அது ஏன்?

5. சாதாரணமா தங்கமணி சொல்லும் 10 பொருட்களை வாங்கி வருகிறோம். ஆனா மறக்காம வாங்கிட்டு வாங்கன்னு சொல்லுறது மட்டும் மறந்து போயிடுதே; அது ஏன்.

6. நல்ல பசியோட வரும் அன்னைக்குப் பாத்து முடியலைங்கன்னு ஏதாவது சுலபமான ஐட்டம் சமைச்சு வக்கிறாங்க. ஆனா நல்லா ஒரு பிடி பிடிச்சுட்டு வர்ர அன்னைக்கு சூப்பரா சமைச்சு வைக்கிறாங்களே; அது ஏன்.

7. ஒவ்வொரு திருமண நாளன்றும், இனிமே தங்மணி எதிர்பார்க்கிற மாதிரி நல்ல ரங்கம்ணியா நடந்துக்கணும்னு சபதம் எல்லாம் எடுத்துட்டு, அடுத்த நாளே ஆகப்பெரிய பல்பு வாங்குறோமே; அது ஏன்?

8. தங்கமணி கையில இருக்க வரைக்கும் சமத்தா இருக்கிற நம்ம குட்டிமணிகள் நம்ம கைக்கு வந்ததும் கரெக்டா ஒன் பாத்ரூம் போறாங்களே; அது ஏன்?

9. ஒரு ப்ரண்ட அவாய்ட் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருப்போம். அவன் வந்து கூப்பிட்டது, டக்குன்னு சட்டைய மாட்டிக்கிட்டு கிளம்பிடறமே; அது ஏன்.

10. அரைமணி நேரம் பதிவப் படிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டு பதிவப் படிக்க ஆரம்பிச்சா இன்னும் அரைமணி நேரம்னு நீட்டிட்டே போயி தங்கம்ணிகிட்ட திட்டு வாங்குறோமே: அது ஏன்?


.
.

9 பேரு பாராட்டியிருக்காங்க:

சரண் said...

இந்த மாதிரி கேள்விகளுக்கு விடை தெரியாமதாங்க நாங்களும் தேடிகிட்டே இருக்கோம். வீட்டுக்கு வீடு நிலைப்படி. சரிதான் விடுங்க.

பரிசல்காரன் said...

எங்கியோ படிச்ச மாதிரி இருக்குங்க அண்ணாச்சி...

தராசு said...

ஆதி கூட அதிகமா சேர்க்கை வெச்சுக்காதீங்கன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கறீங்களே அது ஏன்??

ச்சின்னப் பையன் said...

ஏன்? ஏன்? ஏன்?

cheena (சீனா) said...

நாங்க எல்லாம் கேள்வியே கேக்கறதேல்ல - அது அப்படித்தான் - என்னா சரியா

அன்பின் வேலன் நல்வாழ்த்துகள்

ஹுஸைனம்மா said...

அண்ணே, நீங்களுமா?

ச.முத்துவேல் said...

அண்ணாச்சி எழுதற எதப்படிச்சாலும், நான் எப்பவும் சூப்பருன்னே சொல்லிட்டிருக்கிறேனே அது ஏன்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

பரிசல்காரன் said...
எங்கியோ படிச்ச மாதிரி இருக்குங்க அண்ணாச்சி...//

இதுல சில பாயிண்ட்ஸ் நாம போட்ட பல பத்துகளில் ஏதும் வந்திருக்குதோ என்னவோ.?

mayil said...

டீச்சர் ஊரில் இல்லன்னு கேள்வியா கேக்கறீங்க ?? என்ன தைரியம்.. இருக்கட்டும் அவங்க வரட்டும் இதெல்லாம் அப்படியே போட்டுதறேன். :))