Monday, December 14, 2009

கஞ்சி வரதப்பா

தனிக்குடித்தனம் போவதென்பது ஒரு கனவாகத் திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே தொடங்கி விடும். மெதுவாக சண்டை போட்டோ இல்லை சமாதானமாகவோ அந்த நாளும் வந்து விடும். வெளியூரில் வேலை பார்க்கும் நண்பர்களுக்கு வேறு வழியில்லை. ஆரம்பத்தில் குஷியாக இருந்து நாளாக நாளாக எப்படி மாறுகிறது ஓவ்வொரு நிலையிலும்? கீழ பாருங்க.

*****************************************************************************************

ஏங்க எத்தனை மணிக்கு வருவீங்க?

ஏம்ப்பா

இல்லை இன்னைக்கு முள்ளங்கி சாம்பார், அவரைக்காய் பொரியல், பச்சடி, மோர்க்குழம்பு, ரசம், தயிர் தாளிச்சு வச்சிருக்கேன். சீக்கிரமா சப்பிட வாங்க.

சரி சரி நீ என்ன பண்ணியிருந்தாலும் லன்ச் டயத்துலதான் வர முடியும்

*****************************************************************************************

எத்தனை மணிக்கு வருவீங்க?

ஏம்ப்பா?

இன்னைக்கு புளிக்க்குழம்பு வச்சு உருளைக்கிழங்கு, பொடிமாஸ், ரசம் பண்ணீருக்கேன் தயிர் இருக்கு. சாப்பிட வாங்க.

சரிப்பா வந்துடறேன்.

*****************************************************************************************
.
எத்தனை மணிக்கு?

ஏம்ப்பா?

இன்னைக்கு வத்தக் குழம்பு வச்சு அப்பளம் பொரிச்சிருக்கேன் தயிரும் ஊறுகாயும்.

சரிப்பா.

*****************************************************************************************

ஏங்க?

ஏம்ப்பா?

இன்னைக்கு ரசம் வச்சு பருப்புச் சட்னிதான் வச்சிருக்கேன்.

சரிப்பா.

*****************************************************************************************

வருவீங்களா?

ஏம்ப்பா?

இன்னைக்கு ஒன்ணும் பண்ணல. அங்கியே ஏதாச்சும் சப்பிட்டுக்குங்க.

உனக்கு?

நான் ரெண்டு தோசை ஊத்திக்கிறேன்.

சரிப்பா.

*****************************************************************************************

ஏங்க வரும்போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்திருங்க.

*****************************************************************************************

இந்த நிலை எல்லோருக்கும் வந்தே தீரும் . என்ன ஆளாளுக்கு நேரம் வேறுபடும். தப்பிக்க முடியாது. அம்மா கைப்பக்குவத்தில் தயாராகும் சாப்பாட்டு ஐட்டங்கள் மனசிலாடுவதும் நாக்கில் எச்சில் ஊறுவதும் பக்க விளைவுகள்.

.

22 பேரு பாராட்டியிருக்காங்க:

கோவி.கண்ணன் said...

அண்ணாச்சி, அசைவ ஐட்டங்களையே காணுமே !

வடகரை வேலன் said...

கோவி,

அது ஞாயிறு மட்டும்.

செந்தில் நாதன் said...

அண்ணாச்சி சொன்னா சரியாதான் இருக்கும்...பின்னுட்டம் போடுறவங்க எந்த நிலைல இருக்கிங்கனு சொன்னா சுவாரசியமா இருக்கும்....ஹீ ஹீ..

நான் இன்னும் ஒத்த கட்ட... அம்மா கைல சாப்புடுற ஜாதி...

Cable Sankar said...

அண்ணாச்சி நீங்க தனிகுடித்தனம் எப்ப போனீங்க..?:)

வடகரை வேலன் said...

செந்தில்,
பேச்சிலரா கடையில சாப்பிட்டவன்கூட அதுக்கு இது பரவாயில்லைன்னு அட்ஜஸ்ட் பன்ணிக்குவான். உங்க பாடுதான் திண்டாட்டம்.
:-))))))

கேபிள்,

நமக்கு ஆரம்பமே தனிதான். அப்ப (1989) நான் ஆவடியில் இருந்தேன்.

Vinita said...

பழைய ஞாபகம் போல. குழந்தைகள் வரும் போது தான் பெற்றவர்கள் ( இரு பக்கமும் ) அருமை தெரியும்.

சென்ஷி said...

அண்ணாச்சி, அருமையான பதிவு :)

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஏங்க வரும்போது எனக்கும் சாப்பாடு வாங்கி வந்திருங்க//
வ‌ந்து ச‌மைச்சி கொடுத்துட்டு போங்க‌ன்னு சொல்லாத‌ வ‌ரைக்கும் ந‌ல்ல‌து

வடகரை வேலன் said...

நன்றி வினிதா.

நன்றி சென்ஷி

நன்றி கரிசல்காரன்

அனுஜன்யா said...

என்னது! முதல் நான்கு நிலைகளை என்னைக்குமே பார்க்கலியே. சம்சார சாகரம்னாவே இப்படித்தான் போலன்னு நினச்சுட்டேன்.

அனுஜன்யா

ஆயில்யன் said...

:))) சூப்பரூ - அனுபவ மொழிகள் மைண்ட்ல வைச்சுக்கிடறேன்!

எம்.எம்.அப்துல்லா said...

:)))

நாஞ்சில் நாதம் said...

:)
:(

பரிசல்காரன் said...

:-))

தராசு said...

தனி"குடி"த்தனத்துல இந்தப் பிரச்சைனையே இருக்காது அண்ணாச்சி.

Romeoboy said...

அண்ணே எனக்கு இன்னும் சாம்பார் , ரசம் , பொரியல் , தயிர் கிடைக்குது , கிடச்ச வரைக்கும் சந்தோசமா இருக்கேன் .. இன்னும் எத்தனை நாளுக்கோ ..

விக்னேஷ்வரி said...

பெண் பாவம் வேண்டாம் சித்தப்பு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன திடீர்னு ஞானம்? ஊட்ல ஏதா பிரச்சினையா? வயிறு காயுதா? ஹிஹி..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனுஜன்யா said...
என்னது! முதல் நான்கு நிலைகளை என்னைக்குமே பார்க்கலியே. சம்சார சாகரம்னாவே இப்படித்தான் போலன்னு நினச்சுட்டேன்.
//

இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன். விளையாட்டுக்குச்சொன்னாரோ என்னவோ.. நான் சிரிச்சாலும் சேம் பிளட். அவ்வ்வ்..

cheena (சீனா) said...

அன்பின் அண்ணாச்சி

நான் டே ஒன்லேந்து தனிக்குடித்தனம் தான் - வுடுங்க

ஆமா நான் கூட 1983-84லே ஆவடிலேதான் வேலை செஞ்சேன் - தெரியாமப் போச்சே - பாத்துருக்கலாமே

நல்வாழ்த்துகள்

பட்டாம்பூச்சி said...

:)

அத்திரி said...

அண்ணாச்சி அண்ணி இந்த பதிவ படிச்சாங்களா