Saturday, December 12, 2009

எட்டுத் திக்கும்


எங்கே? என்ற கேள்விக்கு
கிழக்கென்றான் முதலாமவன்
மறுதலித்த மற்றவன்
மேற்கென்றான்.

வடமேற்கென்றான்
வண்டியில் இருந்தவன்
இல்லை இல்லை
வடகிழக்கென்றான்
வாயில் பீடியுடன் ஒருவன்.

தென்மேற்காக இருக்குமோ
என சம்சயித்தார் தொந்தி ஆசாமி
தென் கிழக்காகவும் இருக்கலாமென்றார்
வட்டச் செயலாளர்.

வடக்கையும் தெற்கையும்
எவரும் சொல்லவில்லையெனினும்
ஒன்று புரிந்தது

இவர்களுக்கு
எங்கே என்று தெரியவில்லை;
கூடவே திசைகளும்.



டிஸ்கி : எந்த உள்குத்தும் இல்லை. அட நம்புங்கப்பா.

டிஸ்கி 2 : திட்டத் தோன்றினால் நிரந்தர யூத்(?!) அனுஜன்யாவைத் திட்டலாம் அவர்தான் தொலைபேசியில் அழைத்துக் கவிதை எழுதச் சொன்னவர்.



.

7 பேரு பாராட்டியிருக்காங்க:

க.பாலாசி said...

கவிதை ரசிக்கவைக்கிறது....

//டிஸ்கி : எந்த உள்குத்தும் இல்லை. அட நம்புங்கப்பா//

இப்டி சொன்னவுடனேதான் சந்தேகப்படத் தோணுது தலைவரே....

அத்திரி said...

அண்ணாச்சி உங்களுக்கும் உரையாடல் கவிதை காய்ச்சலா//

அனுஜன்யா அண்ணாச்சி அடுத்து சென்னை வரட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டும்.....

அனுஜன்யா said...

ரொம்ப நல்லா வந்திருக்கு வேலன். யார் என்ன சொன்னாலும் கவிஞர்கள் தம் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா?

அத்திரி சொல்வதெல்லாம் ஒரு அன்பில்தான் :)

அனுஜன்யா

பிரியமுடன்...வசந்த் said...

//இவர்களுக்கு
எங்கே என்று தெரியவில்லை;
கூடவே திசைகளும்.//

இந்த வரிகளில் புரிந்துவிட்டது சார்..

ரொம்ப நல்லாயிருக்கு சார்..!

பித்தன் said...

naan thaai madiyil thalai vaiththiruppathanaal (i'm now in chennai) entha oru pathivukkum pathil ezutha mudiyavillai aanaal ellaap pthivugalaiyum padikkiren.

aanaal intha pathivukku pathil ezutha kazhuththaip pidiththu ihuththu vanthuvitteergal.

nakkal romba oovaro. rasikka mudinthathu anne kuththuna kuththil moonji mugara ellaam penthuduththu.

ஆதிமூலகிருஷ்ணன் said...

இவர்களுக்கு
எங்கே என்று தெரியவில்லை;
கூடவே திசைகளும்//

இவர்களுக்கு
எங்கே (போவது) என்று(ம்) தெரியவில்லை;
கூடவே திசைகளும் (தெரியவில்லை) ??

அல்லது

இவர்களுக்கு
எங்கே (போவது) என்று தெரியவில்லை;
கூடவே திசைகளு(க்கு)ம் ??

அல்லது

.....

என் பின்னூட்டத்துக்கு 24 மணி நேரத்துக்குள் பதில் சொல்லாவிட்டால் வயித்தால போகும்.!

Nundhaa said...

இவர்களுக்கு(ம்)
எங்கே என்று தெரியவில்லை - என்று
லேசாக மாற்றிக் கொண்டு அதோடு முடித்துகொண்டு படித்துக் கொள்கிறேன் :)