சென்ற வார விகடனைத் தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. அதில் வெளியான அப்துல்லாவின் கவிதை சமீபத்தில் நான் படித்த கவிதைகளுள் மிக முக்கியமானது. வெகு அநாயசமாக மூன்று தலைமுறை வாழக்கையைப் பரண் என்ற உயிரில்லாத பொருளால்(படிமம்) விவரித்துக் காட்டுகிறார். உறவுச்சிக்கல்களும், இருந்தும் இல்லமல் அந்நியப் படுதலும் அழகாக எழுதப் பட்டிருக்கிறது.
நா முத்துக்குமாரின் தூர் கவிதைக்கு நிகரான ஒன்று இது; என்னைப் பொறுத்த வரையில். விகடனில் வாசிக்காத, வாசிக்க விகடன் கிடைத்திராதவர்களுக்காக.
பரண்
அப்பா காலம்வரை
கட்டப்பட்ட அத்தனை வீடுகளிலும்
அறைகள் இருந்தனவோ
இல்லையோ
நிச்சயம் பரண்கள் இருந்தன.
பழையன கழிந்தனவோ
இல்லையோ
கண்டிப்பாய் பரண் ஏறின.
ஒவ்வொரு வருடமும்
போகிக்குப் பரண்கள்
ஒழுங்குபடுத்தப்படும்
என்றேனும் ஒரு நாள்
தேவைப்படும் என்று
பரண் ஏறிய பொருட்கள்
சீனியாரிட்டி அடிப்படையில்
சீகிரமாய் விடை பெறும்.
சம்பளம் சற்று அதிகமான்வுடன்
பூர்வீக வீட்டை இடித்துவிட்டு
மாடர்னாய் அமைந்ததென்
புது வீடு.
எக்ஸ்சேஞ்ச் மேளாவில்
பொருள் மாற்றம் நடப்பதால்
பொருட்களோடு
பரணும் விடை பெற்றது.
”மாத்திரை நேரத்துக்ச சாப்பிடுங்க
உடம்பைக் கவனமா பாத்துக்கிடுங்க”
சொல்லிவிட்டு என் மகன்
வேலைக்காக
விமானம் ஏறியபோது
வீடே பரணாய்
மாறிப் போனது.
எந்திரன் - கார்ட்டூன்
24 minutes ago

13 பேரு பாராட்டியிருக்காங்க:
அன்பின் அண்ணாச்சி
பகிர்ந்தமைக்கு நன்றி
அப்துல்லாவின் கவிதை அருமை
பரண் பறி போனது இயல்பாயும்
வீடே பரணாய் ஆனது நச்சென்றும் சொல்லப்பட்ட கவிதை
ஆயிரம் பொருள் சொல்லும் இறுதி வரிகள்
நல்வாழ்த்துகள் அப்துல்லா
அண்ணாச்சி உங்கள் அன்பில் நனைகின்றேன்.
Already read in vikatan.
Good one. Thanks for sharing again.
இன்றளவும் நெஞ்சில் நிற்கும் கவிதை தந்த அப்துல்லாவுக்கும் மீண்டும்
அதை பகிர்ந்த வேலன் அவர்களுக்கும் நன்றிகள் !!!
அப்துல்லா அண்ணாச்சி கவிதை நச்!
இழந்த சொர்க்கங்களைப்பற்றின அருமையான கவிதை...பகிர்தலுக்கு நன்றி அய்யா.
எளிமையான அணுகுமுறையோடு கூடிய நல்ல கவிதை!
ஏற்கெனவே ரசித்ததுதான்..
ரசித்த...என்ற வார்த்தையே உதைக்கறாப்புல இருக்கு...ஹூம்.
//விமானம் ஏறியபோது
வீடே பரணாய்
மாறிப் போனது.//
:(( இன்றைய சூழலை சொல்லும் வரிகளின் வலி உணர்கின்றேன்...
பகிர்ந்தமைக்கு நன்றி
உங்களின் கவிதையை இந்த வார ஆனந்த விகடனில் படித்தேன். பாராட்டுக்கள்.
ரொம்ப நல்ல கவிதை, அப்துல்லா அவர்களுக்கு வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.
அண்ணாச்சி இன்றைய விகடனில் உங்கள் கவிதை அருமை.
வாழ்த்துகள்.
வடகரைவேலன்,
உங்களது கவிதையை விகடனில் சமீபமாக பார்த்தேன். திரும்ப படிக்க வைக்க கூடிய வகையில் சிறப்பாக இருந்தது. வாழ்த்துக்கள்
Post a Comment