ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அச்சகத்தில் இரவு வேலை இருக்கும், ஞாயிறன்று வெளியாகும் வார இதழ் (tabloid க்கு என்ன தமிழ்?) ஒன்றின் அச்சாகத்திற்காக. நேற்றும்(13-வெள்ளி) இரவில் வேலை நடந்து கொண்டிருந்தது. செட்டிங்க் வைத்துக் கொடுத்து இதேபோல ஒட்டி இறக்குங்கள் எனச் சொல்லிவிட்டு சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்யலாம் என நெட்டைத் திறந்தேன். என்னுடையது வோடாபோன் வழங்கிய சிம் கார்டு பொருத்திய டேட்டா கார்டு.
அடிக்கடி டிஸ்கனக்ட் ஆகிக் கொண்டே இருந்தது என்ன பிரச்சினை எனப் பார்த்தால் டேட்டா கார்டு எண்ணிற்கு இன்கமிங்க் வருவதால்தான் கட்டாகிறது. மொத்தம் 11 மிஸ்டு கால் இருந்தது.
யாரோ தீவிரமாக முயற்சிக்கிறார்கள். என்ன அவசரமோ தெரியவில்லை. எண் தவறு என்பதைத் தெரியப் படுத்தினால் வேறு எண்ணை முயற்சி செய்வார்களே என நினைத்து, என்னுடைய இன்னொரு மொபைலிலிருந்து அந்த எண்ணை அழைத்தேன்.
நான்: ”ஹலோ யாருங்க என் மொபைலுக்கு கால் பண்ணுறது”
குரல் : “ஹலோ நீங்க யாரு” ஒரு பெண் குரல் மிக மெல்லியதாக அடுத்தவருக்குக் கேட்கக்கூடாதென எச்சரிக்கையாக. குரலிலிருந்து போர்வைக்குள்ளிருந்து பேசுவதும் அழுதுகொண்டே பேசுவதும் புலப்பட்டது.
நான் : “நீங்க யாரு? எதுக்கு என்னோட மொபைல்ல கூப்புடுறீங்க?”
குரல் : “நீங்க பாலாவோட பிரண்டா?”
”எனக்கு எந்த பாலாவையும் தெரியாது. நீங்க யாரு?”
“எம்பேரு லதா. நான் ஒரு பிரச்சினையில் இருக்கேன். அந்த எண்ணை என் பிரண்டுதான் கொடுத்தான்”
”அது இண்டர்னெட் பாக்குறதுக்கான எண் அதில நான் யாரையும் அழைத்ததும் இல்லை யாரும் என்னை அழைத்ததும் இல்லை. உனக்கு என்ன பிரச்சினை சொல்லு”
“நான் பாலாவை லவ் பண்ணுறேன்.”
“அதிலென்ன பிரச்சினை? பருவத்துல எல்லோரும் பண்ணுறதுதானே? லவ் பண்ணுற பையன் யோக்கியனா இருந்தாப் போதும்”
”அதாங்க பிரச்சினை. அவன் வேற ஒரு பொண்ணொட சுத்துறான் ”
“அது உன் பிரச்சினை. அதுக்கு எதுக்கு என் மொபைல்ல கூப்பிட்ட?”
”அவன் நம்பர் ஸ்விட்ச் ஆப்ல இருக்கு. இது அவன் பிரண்டு நம்பர்னு சொல்லிக் கொடுத்தான். அதான் கூப்பிட்டேன்“
“சரிம்மா இது என்னோட நம்பர். 6 மாசமா நாந்தான் வச்சிருக்கேன். நீ பேசாமத் தூங்கு. காலையில அவனப் போய் நேர்ல பாரு இல்லன்னா அவனே உன்னைக் கூப்பிடுவான்”
“காலையில நான் உயிரோட இருந்தாத்தானே?”
“என்னம்மா சொல்லுறே?”
“ஆமாங்க நான் அவன மலை போல நம்புனேன்.”
“சரி அதுகென்ன இப்போ”
“என்னைக் கைவிட்டுட்டாங்க”
“இங்க பாரு ராத்திரி 1 மணிக்கு நீ லவ் பண்ணி ஏமாந்த கதைய எதுக்குச் சொல்லுறேன்னு புரியலை. அவம் பேரு பாலாங்கிறதத் தவிர எனக்கு ஏதும் விவரமில்லையே நான் என்ன செய்ய முடியும்?”
”அவன் டெம்போ டிரைவரா இருக்காங்க”
“அப்ப நல்லதாப் போச்சு. அவனையே கல்யாணம் பண்ணிக்க. சீக்கிரம் காசு பணம் சேர்த்து ஒரு டெம்போ வாங்கி நாலு எடத்துல ரெகுலர் வாடகை பிடிச்சு ஒழுங்கா குடித்தனம் நடத்துங்க.”
“அதுக்குத்தாங்க நான் இருபதாயிரம் கொடுத்தேன்”
“என்னது இருபதாயிரமா?”
“ஆமா. கொஞ்சம் நகையும் கொடுத்திருக்கேன்”
“சுத்தம். வேற என்ன கொடுத்தே?”
“என்னையே கொடுத்திட்டேன். அப்புறம் காசு பணம் என்னங்க பெருசு?”
“கிழிஞ்சுது. என்ன தைரியத்துல இதெல்லாம் செய்யுறீங்கன்னு புரியலை எனக்கு”
“நானும் அவனும் மனசாரக் காதலிச்சோம் சார்.”
“இப்ப என்ன ஆச்சு”
“வேறொருத்தி குறுக்கால வந்திருக்கா”
“அப்புறமென்னா மனசாரக் காதலிச்சேன்னு வசனம் பேசுற?”
“அவன் நல்லவந்தான். அவதான் மோசம். எதைக் காட்டி அவன மயக்குனாள்னு தெரியலை”
“சரி நடந்தது நடந்து போச்சு. பேசாம அவன மறந்துட்டு அப்பா அம்மா சொல்லுற பையனக் கல்யாணம் பண்ணிக்க. இதுக்கு எதுக்கு சாகணும்?”
“அப்பா இல்லை சார். இறந்துட்டாங்க. அம்மாதான் கஷ்டப் பட்டு படிக்க வச்சாங்க. படிப்பு ஏறல. கார்மெண்ட்ஸ்சுக்குப் போயிட்டிருந்தேன். இவந்தான் அங்க லோடு அடிக்க வந்து என்னக் கெடுத்திட்டான்”
“அப்பா இல்ல. அம்மா வளர்த்தாங்கன்னா இன்னும் சூதானமா இருக்க வேண்டாமா. நீயும் சேர்ந்து தப்புப் பண்ணீட்டு அவனக் குத்தம் சொன்னா எப்படி?. அம்மா கால விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டு ஒழுங்கா இருக்கிற வழியப் பாரு”
“இல்ல சார் அவள விடக் கூடாது. அவன் நல்லவன் சார்”
இப்படியே போச்சு பேச்சு. ஒரு கட்டத்தில் ஆயாசமாகவே, “ சரி ஏதும் விபரீதமா முடிவு செய்யாதே. தூங்கி எந்திரிச்சீன்னா உனக்கே ஒரு தெளிவு வரும். ஓடிப் போய் ஆறு மாசம் குடும்பம் நடத்துனவளுக எல்லாம் திரும்ப வந்து வேற கல்யானம் செஞ்சு நல்லா இருக்காளுக. நீ ஏதும் தப்பாப் பண்ணிடாத. இப்பதைக்குத் தூங்கு”
“என்னவோ சார் உங்ககிட்டப் பேசின பின்னாடி கொஞ்சம் ஆறுதலா இருக்கு”
“சரி தூங்கு”
நானே கட் பண்ணினேன் லைனை.
இப்ப நான் என்ன செய்ய?.
அந்த பெண் மீண்டும் அழைப்பாள் எனக் காத்திருப்பதா?
இல்லை போலீசில் சொல்லுவதா?
ஒருவேளை சொன்னபடியே தற்கொலை செய்து கொண்டால், அவள் மொபைலில் என் எண் இருக்குமே அது பிரச்சினை ஆகாதா?
அந்த மொபைல் எண்ணை வைத்து முகவரி கண்டுபிடித்து அவள் அம்மாவிடம் அல்லது அண்ணனிடம்(முரடன் - அவளே சொன்னது) சொல்லவா?
இல்லை ஏதோ ஒரு பெண் போரடிக்குதே (ராத்திரி ஒரு மணிக்கு) என்று எனக்கு பல்பு கொடுக்கிறாளா?
இல்லை அவள் சீரியஸாகத்தான் பேசினாளா?
ஒண்ணுமே புரியலை.
14/11/09 காலை 11 மணிக்கு அந்தப் பெண் திரும்பவும் அழைத்தார்.
“ஏம்மா செத்துப் போயிருவேன்னு சொல்லிக் கலாட்டாப் பண்ணீட்டியே?”
“நான் தனியாச் சாக மாட்டேன் சார். செத்தாலும் அவன் கூடத்தான் சாவேன்”
வெளங்கீரும்.
டிஸ்கி : 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் ஏதோ கெட்டது நடக்குமென்பார்கள். அது இதுதானோ?
எந்திரன் - கார்ட்டூன்
30 minutes ago

18 பேரு பாராட்டியிருக்காங்க:
அண்ணாச்சி மீ த ஃபர்ஸ்டா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஓ இது சீரியஸான பதிவா? அதுக்கு சீரியஸா பின்னூட்டம் இடணுமில்ல?
அந்த நம்பருக்கு மறுபடியும் போன் பண்ணி அந்த பொண்ணு உயிரோட இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க....
முடிஞ்சா எதுவும் உதவி பண்ணுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//இல்லை ஏதோ ஒரு பெண் போரடிக்குதே (ராத்திரி ஒரு மணிக்கு) என்று எனக்கு பல்பு கொடுக்கிறாளா?//
]
)))))))))))))))))
//: 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் ஏதோ கெட்டது நடக்குமென்பார்கள். அது இதுதானோ?//
:-)))
பதினோரு மிஸ்ட் கால் அவளே கொடுத்ததுன்னா..உடனே ஃபோன் பண்ணி கன்ஃப்ர்ம் பண்ணுங்க
//tabloid க்கு என்ன தமிழ்?) //
சிறிய செய்தித்தாள்.
அப்புறம் அண்ணாச்சி அந்தப் பெண்ணின் அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்.
அண்ணாச்சி,
ஒண்ணும் பண்ணாதீங்க, லூசுல விடுங்க.
உங்களுக்குனு பார்த்து தான் இந்த மாதிரி பிரச்சனைகளெல்லாம் தேடி வருது.
//: 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வந்தால் ஏதோ கெட்டது நடக்குமென்பார்கள். அது இதுதானோ?//
யாருங்க இப்படியெல்லாம் ஒரு கத கட்டுறது.
அப்பெண்ணின் அம்மாவிடம் தெரியப் படுத்தவும்.
இதற்கு கோவையில் எதுவும் ஹெல்ப் லைன் இல்லையா!?
அவர்களிடம் தகவல் சொல்லிவிடுங்கள்!
எதாவது அந்த பொண்ணு பண்ணிகிச்சுன்னா உங்களுக்கு களி தான்!
ஓ இப்பெல்லாம் சிக்கன் போடுறாங்களோ!
நன்றி ஸ்ரீராம். பொண்ணு உயிரோடதான் இருக்கு. என் உயிரத்தான் எடுத்திட்டாள்.
நன்றி அத்திரி.
நன்றி TVRK சார்.
நன்றி அப்துல்லா. மொபைல் எண்ணை வைத்து முகவரி கண்டுபிடித்து அவஙக வீட்டத் தேடிக் கண்டுபிடித்துன்னு அலையணுமே. உங்களிடம் நேரில் சொல்லியபடி நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்கு அதப் பார்ப்பமே.
நன்றி தராசு. அதான் நம்மள லூசாக்கீட்டாளே.
வாங்க ரமேசு. பாருங்க எப்படியெல்லாம் சோதனை வருதுன்னு? ஒருத்தர் வலை போட்டு இந்த மாதிரி ஆளு மாட்டாதான்னு காத்திருக்கிறார். நல்ல வேளை அவரிடம் மாட்டவில்லை. மாட்டியிருந்தா ஆத்துல போற தண்ணி அய்யா குடி அம்மா குடின்னு ஆக்கியிருப்பார்.
பித்தன் 13th friday virus கேள்விப்பட்டதில்லையா? ஆச்சரியமா இருக்கு. ஆங்கிலேயர்களிடம் இருக்கும் மூட நம்பிக்கை இது.
வாங்க அருண். எப்பன்னு இருப்பீங்க போல? எல்லாத்துக்கும் அய்டியாக் கொடுத்தது நீங்கதான்னு கை காட்டிடலாம். ரெண்டு பேரும் ஜோடியாப் போனப் போகுது.
அந்தப்பொண்ணோட நல்ல நேரம், உங்களுக்கு ஃபோன் பண்ணியிருக்கு. உங்களைப் பத்தி உலகத்துக்கேத் தெரிஞ்சுருக்கு. அண்ணாச்சி, நீங்க பெரிய பிர(ரா)பலமாகிக்கிட்டு இருக்கிறீங்க.
ஒரு நல்ல சிறுகதையப் படிச்ச மாதிரி இருக்குன்னு சொல்ல ஆசைப்பட்டாலும், விசயத்தோட தீவிரம் சொல்லவிடமாட்டேங்குது.
//“என்னவோ சார் உங்ககிட்டப் பேசின பின்னாடி கொஞ்சம் ஆறுதலா இருக்கு”//
இது போல சினிமாத்தனமான வசனங்களை பார்க்கும் போது உங்களை கலாய்க்க தானோ என தோன்றுகிறது..
** சில கொரியன் மாடல் மொபைல்களில் இம்முனையில் பேசும் ஆண் குரலை மறு முனையில் பெண்குரலாக கேட்கும் படி துல்லியமாக மாற்றும் வசதி உள்ளது.
நல்லாத்தான் வைரஸ் உங்கள டேமேஜ் பண்ணியிருக்கு
அண்ணாச்சி இப்படியேல்லாம் கூட கொடுமை நடக்குதா ?
1 மணிக்கு நல்லாதான் கேட்கிறாங்க டீடெய்லு :)))
தெரியும் இருந்தாலும் இதெல்லாம் சுத்த மூட மட நம்பிக்கை.... என்பது என் எண்ணம். இருந்தாலும் இதுபோல் யாராவது சொல்லக் கேட்டால் நம்மையும் அறியாமல் அதன் மீது ஒரு எச்சரிக்கை உணர்வு வருகிறது.
"அவசர உதவிக்கு அணுகவும் அண்ணாச்சியை"ன்னு கோயமுத்தூர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கா என்ன? நெட் நம்பரைக் கூட விடாம தொரத்தரங்களே !!
அண்ணாச்சி எவ்ளோ நல்லவரு! அட்வைஸ் சொல்லீட்டு வுட்டுட்டாரே!
Post a Comment