Thursday, November 26, 2009

கதம்பம் - 26/11/09

தனிப்பதிவிட்டும், பின்னூட்டமிட்டும், நேரிலும், மின்னஞ்சலிலும், குறுஞ்செய்தியிலும், கை பேசியில் அழைத்துமென வாழ்த்து மழையில் நனைத்த உள்ளங்களுக்கு நன்றி.

**********************************************************************************

சென்ற பிறந்தநாள்தான் மறக்க முடியாத ஒன்று. மாலை 5.50 மும்பை-கோவை ஏர் டெக்கான் ப்ளைட்டுக்கு டிக்கட் கையில். கஸ்டமர் இடத்திலிருந்து வெளியேறும்போது மனி 5.30. ஏர் போர்ட்டை அடையும்போது மனி 6.15. மீண்டும் அனுஜன்யா வீட்டிற்குசென்று அடுத்த நாள் காலை விமானத்தில் வரலாமா? அல்லது மதியம் 3.45 க்குக் கிளம்பும் ஜெயந்தி ஜனதாவில் வரலாமா? என யோசித்தவாறே தங்கமணியை அழைத்துக் கேட்டால், “ என்ன செய்வீங்களோ தெரியாது காலை 7 மணிக்கெல்லாம் வீட்டில் இருக்கணும் பிறந்த நாளும் அதுவுமா வீட்டுல இல்லாம?” ன்னு திட்டுனாங்க.

சரின்னு அக்பர் டிராவல்ஸ்ல இருந்த அழகான பொண்ணைப் பார்த்து பாதி இந்தியிலும் மீதி ஆங்கிலத்திலும் கெஞ்ச 7.45 மணி பெங்களூர் கிங் பிஷரில் இடமிருக்கிறது” என்றார்.

இரண்டு மனி நேரம்தான். அங்கிருந்து ஆம்னி பஸ்ஸில் போய் விடலாமென டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமென்றார்கள். 9.00 மணிக்குக் கிளம்பி 11.15க்கு பெங்களூர் வந்து அங்கிருந்து ஆம்னி பஸ் நிறுத்தம் வந்தால் ஒரு பேருந்தும் இல்லை. பின் அரசு பஸ்கள் இருக்குமிடத்திற்கு வந்து பேருந்து ஏறுகையில் மணி 12.00. முதல் குறுஞ்செய்தி பரிசலிடமிருந்து, தொடர்ந்து மற்றவர்களிடமிருந்து. சேலம் வழியாக கோவை வந்து சேரும்போது மணி 9.00 ஆகிவிட்டது. நன்றாக உறங்கி விட்டேன்.

மாலை எழுந்து அனுஜன்யாவிற்கு போன் செய்து வந்து சேர்ந்ததைச் சொல்லலாமென்றால் அவர் போனை எடுக்கவே இல்லை. வீட்டில் அழைத்துச் சொன்னேன். அப்பொழுதுதான் துப்பாக்கிச் சூடு பற்றிய தகவலே தெரியும்.
இரவு 10 மணிக்குத்தான் அனுஜன்யாவிடம் பேச முடிந்தது. நிம்மதி.

**********************************************************************************

இரண்டு நாட்களாக அடைமழையாக இருந்தபோதும் நேற்று என் மனைவியை வெறுப்பேத்துவதற்காக சின்னவளைப் பார்த்து, “ஐஸ் கிரீம் சாப்பிடலாமா?” என்றேன்.

என் மனைவியின் முறைப்பைத் தவிர்த்தவாறே, “ ஆனா எனக்கு அருண் ஐஸ் கிரீம்தான் வேண்டும்” என்றாள்

“ஏன்” என்ற என் கேள்விக்கு, “அந்தக் கம்பெனிதான் ஐஸ் கிரீம் எப்படித் தயார் செய்கிறார்கள் என்பதைப் பார்வையிட எங்களை அழைத்திருக்கிறார்கள். அடுத்த வாரம் போகிறோம்” என்றாள்.

ஐஸ் கிரீம் என்றாலே அந்தக் குழந்தைகளுக்கு இனி அருண் ஐஸ் கிரீம்தான் ஞாபகம் வரும். மார்க்கெட்டிங்கில் பலவகை உண்டு என்றாலும் இது புது விதம்.

இது ஒன்றும் பெரிசில்லை மைக்ரோசாப்ட் கடைபிடிக்கும் வழிமுறைதான் என்கிறான் நண்பன். அட ஆமால்ல?

***********************************************************************************

டீலா நோ டீலா பெரிதாகக் கவரவில்லை. ரிஷியின் அலட்டல் எரிச்சலூட்டுகிறது. பங்கேற்பவரின் திறமைக்கு சவால் எதுவும் இல்லை. வெறும் குருட்டதிர்ஷ்டம்தான்.

தியரி ஆப் எலிமினேசனும், பிராபபிலிட்டியும் என பெரிய வார்த்தைகளைப் போட்டு ஜல்லி அடித்தாலும் மூணு சீட்டு விளையாட்டைப் பெரிய அளவில் விளையாடுவதாகத்தான் தோன்றுகிறது. அதைத் தெருவில் வைத்து விளையாடினால் போலீஸ் பிடிக்கிறது. இது அங்கீகரிக்கப் பட்ட சூதாட்டம். போலீஸ் அதிகாரிகளும் விளையாடுவர் ஒரு நாள்.

ஒரு ரவுண்ட் ரம்மி 320 நாக் அவுட் விளையாடலாம். மூளைக்கும் வேளை அதே சமயம் நண்பர்களுடன் ஜாலியாகப்பொழுதும் போகும். அரைமணிக்கொரு தின்பண்டமும் (போண்டா,வடை,பஜ்ஜி) காபியும் கிடைத்தால் ஏறக்குறைய சொர்க்கம்.

**********************************************************************************

பொதுவாக வோடபோனின் விளம்பரங்கள் கவிதை என்றால்; ஒரு செகண்ட் ஒரு பைசாவிற்கான விளம்பரங்கள் ஹக்கூ வகை.

பிரமாதம், சாரி, குட்மார்னிங் மூன்றிலுமே இருவரின் முகபாவங்கள் மற்றும் உடல்மொழி அற்புதம்.

O & M தான் அவர்களுக்கு ஆட் ஏஜென்சி. அதனால்தான் தரமாக இருக்கிறது போலும்.

இதைத்தான் கிராமத்தில் துட்டுக்குத் தக்கன பணியாரம் என்பார்கள்.

ஏர்டெல்லின் ரோமிங்க் விளம்பரம் சற்று கவனமாகப் பார்த்தால்தான் புரியும்.

**********************************************************************************

கரிசல் எழுத்து என்றாலே நம் ஞாபகத்திற்கு வரும் பெயர் கி ரா தான். சில வட்டாரச் சொற்களுக்குத் தனி அழுத்தமும் நளினமும் அவர் எழுத்தில்தான் கிடைக்கப் பெற்றன. ஏப்பை சோப்பை, பொங்கிப் பெறக்கி போன்ற பதங்களைத் தனியாகப் படித்தால் எந்த அர்த்தமும் தெரிவதில்லை. அதே சமயம் அவர் எழுதும் போது புது படிமம் கிடைக்கிறது.

அவர் தொகுத்த கரிசல் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன். அனேகம் பேர் கரிசல் இலக்கியம் படைத்துக் கொண்டிருந்தாலும் வெளியே தெரியாமல் இருந்திருக்கிறார்கள். பூமணி, செயப்பிரகாசம், கு.அழகிரி, சோ.தர்மன், தமிழ்ச்செல்வன்(பூ), கோணங்கி, சுயம்புலிங்கம், மேலண்மை, தணுஷ்கோடி போன்றவர்களின் கதைகளை ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறையும் நாகரீகமும் வெளிப்படுகிறது.

அன்னம் வெளியீடான இப்புத்தகம் ரூ 120 க்குக் கிடைக்கிறது.




Picture courtesy : kwernerdesign.com

.

37 பேரு பாராட்டியிருக்காங்க:

இரா.சிவக்குமரன் said...

ஆன்-சைட் ல மாட்டிக்கிட்டதனால, இணையத்த அணுக முடியல.
தாமதமா சொன்னாலும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என் பேர சொல்லி ஒரு ஐஸ்க்ரீம்(தமிழ்ல என்ன?) அதிகமா சாப்பிடுங்க..

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணாச்சி பிறந்தநாள் வாழ்த்துகள். அந்த கரிசல் புத்தகத்தின் பெயரென்ன?

வடகரை வேலன் said...

நன்றி சிவா. மொபைலில்கூட அழைக்க முடியாத அளவுக்கு வேலையா?

நன்றி முரளி. புத்தகத்தின் பெயர் கரிசல் கதைகள்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி.!

என்னோட ஆல் டைம் ஃபேவரிட் கி.ராதான் அண்ணாச்சி.!

செ.சரவணக்குமார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா. கி.ரா வாசிப்பின் சில புதிய கதவுகளைத் திறந்து வைப்பார்.

ஸ்வாமி ஓம்கார் said...

அடுத்த தெருவில் இருந்தாலும் இணையம் மூலம் இணையும்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!

ரவிச்சந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

அன்புடன்,
-ரவிச்ச்ந்திரன்

அ.மு.செய்யது said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!அண்ணாச்சி !!!

இடுகை சுவாரஸியம் !!

எந்த வார்த்தை ஜாலமும் பாசாங்கும் இல்லாத அப்பழுக்கற்ற
கதைகள் கி.ரா வினுடையது.ஏற்கெனவே ஒரு கதை தொகுதி வாங்கி வைத்திருக்கிறேன்.கரிசல் கதைகளும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.

புத்தக கண்காட்சியில் சந்திப்போம்.

தமிழன்-கறுப்பி... said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணன்.

(ரொம்ப லேட்டா சொல்லறனோ இருந்தாலும்..)

தியாவின் பேனா said...

பிறந்தநாள் வாழ்த்துகள்.

Seemachu said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி..

ரொம்ப நல்லா எழுதறீங்க..

இராகவன் நைஜிரியா said...

அண்ணாச்சி பிறந்த நாள் வாழ்த்துகள்.

சில மணித்துளிகளே உங்களிடம் பேசி கொண்டு இருந்தாலும், மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டீர்கள்.

கதம்பம் - நல்ல மணம் வீசுகின்றது.

gulf-tamilan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

நாகா said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி..!

பட்டிக்காட்டான்.. said...

பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாச்சி..

பட்டிக்காட்டான்.. said...

அய்யய்யோ அடுத்த நாள் பொறந்துடுச்சா??!!

செந்தில் நாதன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

Cable Sankar said...

கதம்பம் நல்லாருக்கு.. ரொம்ப நாளா ஆளையே காணம்.. ஆணி ரொம்ப அதிகமோ.

குப்பன்.யாஹூ said...

yes, as we all know earlier, Deela no deela is not picked up , it takes long time to open your blog.

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி

அப்பாவி முரு said...

தாமதமாய் சொன்னாலும், தரமாய் சொல்வேன்...


பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணாச்சி!!!

:)

நர்சிம் said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி

மண்குதிரை said...

நீங்கள் குறிப்பிடும் அத்தனை கரிசல் எழுத்தக்காரர்களும் மிகவும் பிடித்தவர்கள் மேலாண்மையைத் தவிர அவரை இன்னும் வாசித்ததில்லை.

கதம்பம் நன்று.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கார்த்திக் said...

பிறந்தநாள் வாழ்துக்கள் அண்ணாச்சி

இந்த கதைதொகுப்புலையும் கோணங்கின் எழுத்துமட்டும் புரியவே இல்லை அண்ணாச்சி
வெயிலோடு போய் கதை ரொம்ப நல்லா இருந்துதுங்க மறுபடியும் படம் பாத்த பீலிங் :-))

விக்னேஷ்வரி said...

Belated Birthday Wishes Annachi.

☼ வெயிலான் said...

// ஐஸ்க்ரீம்(தமிழ்ல என்ன?) அதிகமா சாப்பிடுங்க //

பனிக்கூழ் சிவா!

க.பாலாசி said...

//இது அங்கீகரிக்கப் பட்ட சூதாட்டம். போலீஸ் அதிகாரிகளும் விளையாடுவர் ஒரு நாள்.//

mmmm....nadakkalaam

வடகரை வேலன் said...

நன்றி ஆதி. அவருக்கு முன்னும் பின்னும் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருந்தாலும் தனி அடையாளம் ஏற்படுத்தியவர் அவர்.

நன்றி சரவணக்குமார்

நன்றி ஓம்கார்.

நன்றி ரவி.

நன்றி செய்யது. ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

நன்றி தமிழன் கறுப்பி

நன்றி தியா

நன்றி சீமாச்சு.

நன்றி ராகவன். தொலைபேசி வாழ்த்துக்கும் சேர்த்து.

நன்றி கல்ஃப் தமிழன்

நன்றி நாகா

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி செந்தில் நாதன்

நன்றி சங்கர்.

நன்றி ராம்ஜி

நன்றி சென்ஷி

நன்றி அப்பாவி

நன்றி நர்சிம்

நன்றி மண்குதிரை

நன்றி அமித்து அம்மா

நன்றி கார்த்தி

நன்றி விக்கி

நன்றி வெயிலான்

தண்டோரா ...... said...

Happy birthday annachi

Mahesh said...

ரொம்ப நாளைக்கப்பறம் மணமா ஒரு கதம்பம்....

கி.ரா., மேலாண்மை... எனக்கும் ரொம்ப பிடித்த எழுத்தாளர்கள்.... (அப்பறம் ஏன் நீ இப்பிடி கேவலமா எழுதறன்னு கேக்கக் கூடாது :))

Mahesh said...

பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணாச்சி... .42 தானெ??

ரோஸ்விக் said...

அண்ணாச்சி பிறந்தநாள் வாழ்த்துகள்.

உங்க போட்டோவை பாத்துட்டு...ரொம்ப வயசு கம்மியானவர்னு நினச்சிட்டேன் அண்ணாச்சி...:-)

ச.முத்துவேல் said...

அடடே ! உங்கப்பிறந்த நாள் தெரியாமப்போயிட்டேனே. தெரின்சிருந்தா நானும் பேசி, எம்மனசு நிறைவடைஞ்சுருப்பேன்.

பரவாயில்லை.இப்ப, வாழ்த்துக்கள்.

கதம்பம் வழக்கம்போல், புதுப் பகிர்வுகளுடன்.

ச.முத்துவேல் said...

அடடே! உங்கப் பிறந்த நாள் தெரியாமப்போயிடுச்சே.தெரிஞ்சுருந்தா நானும் பேசி என் மனசு நிறைவாகியிருக்கலாம்.

பரவாயில்ல.இப்ப வாழ்த்துக்கள்.

கதம்பம் வழக்கம்போல், புதுப் பகிர்வுகளுடன்.தொலைக்காட்சி பார்க்கல்லாம் நேரம் கிடைக்குதா!

T.V.Radhakrishnan said...

தாமதமா சொன்னாலும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கும்க்கி said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி...