Monday, October 26, 2009

புரிந்ததும் புரியாததும்



சென்ற பதிவு பலருக்குப் புரியவில்லை. புரிந்தவர்களுக்கும் தொடர்பென்னவெனப் புரியவில்லை. பரவாயில்லை. அதை நான் விளக்கப் போவதில்லை. முல்லா கதை ஒன்று மட்டும் சொல்லலாம்.

எதைப் பற்றி என்றாலும் ஒரு கருத்து வைத்திருப்பார் முல்லா. எனவே அவரை மேடையில் ஏற்றி விட்டு கேள்வி கேட்டு கும்மி அடிக்கலாம் என நினைத்த கும்பல் ஒன்று ஒரு விசேச நாளில் அவரை மேடை ஏற்றியது.

மைக்கைப் பிடித்த முல்லா கேட்டார், “நண்பர்களே நான் என்ன பேசப் போகிறேன் எனத் தெரியுமா?”.

கூட்டத்தினர் : ”தெரியாது”

முல்லா : “நான் என்ன பேசப் போகிறேன் என்றே தெரியாதவர்களிடம் பேசிப் பிரயோஜனமில்லை” என்று சொல்லி இறங்கிப் போய்விட்டார்.

மீண்டும் ஒரு முறை முல்லாவை மேடை ஏற்றினர். மைக்கைப் பிடித்த முல்லா கேட்டார், “நண்பர்களே நான் என்ன பேசப் போகிறேன் எனத் தெரியுமா?”.

கூட்டத்தினர் : ”தெரியும்”

முல்லா : “உங்களுக்குத் தெரிந்ததை நான் மீண்டும் பேசுவதில் என்ன பிரயோஜனம்? “என்று சொல்லியவாறே இறங்கிப் போய்விட்டார்.

இந்த முறை அவரை எப்படியும் மாட்டிவிட வேண்டுமென்று முடிவு செய்து அவரை மீண்டும் மேடையேற்றினர். அவரது வழக்கமான கேள்விக்கு ஒரு பாதி ”தெரியும் “ எனவும் மற்றொரு பாதி “தெரியாது” எனவும் பதிலளித்தனர்.

உடனே முல்லா சொன்னார், “ தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”


டிஸ்கி : நண்பர்களே இந்தப் பதிவாவது புரிந்ததா?


.

24 பேரு பாராட்டியிருக்காங்க:

அத்திரி said...

ஹிஹி.அண்ணாச்சி ஒன்னும் புரியல

மணிகண்டன் said...

கிளிக் பண்ணினா கண்ட கண்ட விளம்பரம் வருதே ! பாப் அப் இல்லாத விளம்பரங்கள் வைக்க முடியாதா ?

அந்த கதையிலே கடைசியில முல்லாவ எல்லாரும் அடிச்சி வெளுத்ததை சரித்திரம் நோட் செய்ய விட்டுவிட்டது :)-

கே.ரவிஷங்கர் said...

ரங்காச்சாரி, இப்போது முல்லா அடுத்து ஓஷோ,தெனலிராமன்,ராமகிருஷ்ண பரமஹம்சர்,வரிசையாக குத்துக்கள்(?)
வருமா?

T.V.Radhakrishnan said...

:-)))

அபி அப்பா said...

அண்ணாச்சி வர வர நீங்க குல்லா போடாத முல்லா மாதிரி ஆகிட்டீங்க:-))

போன பதிவு புரிஞ்சுதே எனக்கு! அதுக்கு எதுனா சன்மானம் கிடைச்சா புரியாதவங்களுக்கு புளி போட்டு விளக்குவேன்:-))

இரா.சிவக்குமரன் said...

///வகை: வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்///

ஆமா இல்ல!

சரவணகுமரன் said...

சுத்தம் :-)

கதை மட்டும் புரிஞ்சுது...

ILA(@)இளா said...

சரிங்க. கோனார் உரை எப்போ கிடைக்கும்? பதிவு இருக்கும் ஆனா இல்லே. பிரச்சினை இருக்கு ஆனா எங்களுக்கு என்னான்னு தெரியாது. இருக்கிற கொஞ்ச நஞ்ச முடியையும் நாங்களே பிச்சுக்குவோம்.

//கிளிக் பண்ணினா கண்ட கண்ட விளம்பரம் வருதே ! பாப் அப் இல்லாத விளம்பரங்கள் வைக்க முடியாதா ?//

ஆப்பீஸ்ல ஆப்பு வெச்சிருவாய்ங்கப்பு

கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா.... முன்னைய பதிவு என்னனு படிச்சவங்க கிட்ட கேட்டுக்கறேன்..

பீர் | Peer said...

நல்லவேளை சென்ற பதிவு படிக்கவில்லை ;)

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல நகைச்சுவையான பதிவு வேலன் ..................................நீங்களும் முல்லா தான்

வானம்பாடிகள் said...

அல்லா:))

இராகவன் நைஜிரியா said...

புரிஞ்சுடுச்சு... புரிஞ்சுடுச்சு.

velji said...

முல்லா கதை நல்ல கதை.ஆனா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா...இருங்க cell அடிக்குது..!

velji said...

முல்லா கதை நல்ல கதை.ஆனா நீங்க என்ன சொல்ல வரீங்கன்னா...இருங்க cell அடிக்குது..!

ரோஸ்விக் said...

இதையே இப்ப நம்ம பண்ணினா, அகராதி புடிச்ச நாயின்னு நம்மள செருப்பால அடிப்பாங்களே நண்பா! எனக்கு ஏன்னு புரியல. ஒரு வேல அப்பா இருந்தவங்க எல்லாம் ரொம்ப நல்லவன்களோ...?


http://thisaikaati.blogspot.com

பித்தன் said...

ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல கலக்குங்க.... நானே பித்தன் இன்னும் பெதளிச்சி அலைய வெக்கிரீங்க.... இதெல்லாம் உங்களுக்கே நல்லதா பட்டால் சரி.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

போன பதிவே புரிஞ்சுடுச்சு. இதுதான் புரியலை.

அகல் விளக்கு said...

முல்லா சொல்றது புரியுதுண்ணா......

ஆனா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல

(இப்படித்தான் அடுத்தவங்களுக்கு பிபி ஏத்த கத்துக்கிட்டேன்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரோஸ்விக் said...
இதையே ... அடிப்பாங்களே நண்பா! //

டியர் ரோஸ்விக் மற்றும் சில புதிய நண்பர்களுக்கு,

வேலன் வயதில் மூத்தவர். 'நண்பா' என்று அவரையோ அல்லது அறிமுகமாகும் வேறு யாரையோ அழைக்கும் போது அதன் தொடர்ச்சியாக ஒருமையில் அழைப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. பதிலாக பெயரைக் குறிப்பிடலாம் அல்லது நண்பரே என அழைக்கலாம். பதிவுலகம் தாண்டி நட்பு வளர்கையில் இது மாறுபடலாம். ஆனாலும் குறும்பாக எழுதப்படும் பின்னூட்டங்களில் யோவ், பொறு உன்னை, நீ.. போன்ற பதங்கள் வித்தியாசமாக தெரிவதில்லை.

இது எனது உணர்வு/கருத்து மட்டுமே. ஏற்பது உங்கள் விருப்பம். நன்றி.

ஹுஸைனம்மா said...

போன பதிவு கிரிக்கெட் கமெண்டரிதானே, இதில புரியாம இருக்க என்ன இருக்கு?

(நான் ரொம்ப அப்பாவிப் புள்ளைங்கோ!!)

ச.முத்துவேல் said...

சரி, தெரிஞ்சவங்க யாருன்னு சொல்லிடுங்க அண்ணாச்சி! அவங்கக்கிட்டக் கேட்டுத் தெரிஞ்சுக்கறன்.

க.பாலாசி said...

//உடனே முல்லா சொன்னார், “ தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். தெரியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்”//

யாராவது தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா....எனக்கு இன்னும் தெரியல.

//டிஸ்கி : நண்பர்களே இந்தப் பதிவாவது புரிந்ததா?//

புரியுது ஆனா....புரியல....அவ்வ்வ்வ்வ்....

ரோஸ்விக் said...

//டியர் ரோஸ்விக் மற்றும் சில புதிய நண்பர்களுக்கு,

வேலன் வயதில் மூத்தவர். 'நண்பா' என்று அவரையோ அல்லது அறிமுகமாகும் வேறு யாரையோ அழைக்கும் போது அதன் தொடர்ச்சியாக ஒருமையில் அழைப்பது போல ஒரு உணர்வு ஏற்படுகிறது. //

தவறுதான்... அவரது புகைப்படத்தை பார்த்து அவ்வாறு அழைத்துவிட்டேன்.... அண்ணாச்சி மன்னிக்கவும். :-)