Saturday, October 24, 2009

வல்லுனர் ரங்காச்சாரி


”அடுத்த பந்தை வாலாஜா முனையிலிருந்து வீச இருப்பவர் மார்ஷல். எதிர் கொள்ளவிருப்பவர் ஸ்ரீகாந்த்”

”வீசும் கை விக்கெட்டின் மேல் வர வீசினார். சற்று அளவு குறைவாக வந்து விழுந்த பந்தை முன்காலிலே சென்று ஓங்கி அடிக்கிறார். அவருக்கு அது ஆறு ரன்களைப் பெற்றுத்தருமா ? இல்லை நான்கா? இல்லை இல்லை எல்லைக் கோட்டின் அருகே இருந்த தடுப்பாளர் அதைப் பிடித்து விடுகிறார். இத்துடன் ஸ்ரீகாந்தின் ஆட்டம் முடிவுக்கு வருகிறது. அவரது ஓட்ட எண்ணிக்கை 12345 இந்திய அனியன் ஆட்ட எண்ணிக்கை 67890”


”இந்தப் பந்தைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன வல்லுனர் ரங்காச்சாரி அவர்களே?”

“பந்தை வீசியவரும் இன்ஸ்விங்கர் என்ற வகையிலே நன்றாகத்தான் வீசினார். அதை அடித்தவரும் கவர் டிரைவ் என்ற முறையில் அதை நன்றாக அடித்து ஆடினார். எல்லைக் கோட்டின் அருகே பிடித்தவரும் நன்றாகப் பிடித்துவிட்டார்”

”மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டம் காணக் கிடைக்கிறது”

”நன்றி ரங்காச்சாரி அவர்களே”



டிஸ்கி : நான் வன்முறையாளன் அல்ல என என்னை அழைத்துச் சொன்ன அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

29 பேரு பாராட்டியிருக்காங்க:

அறிவிலி said...

ஹா.. ஹா... ஹா...

வெண்பூ said...

ஒண்ணுமே புரியல அண்ணாச்சி.. :(

க.பாலாசி said...

//”மொத்தத்தில் ரசிகர்களுக்கு நல்ல தரமான கிரிக்கெட் ஆட்டம் காணக் கிடைக்கிறது”//

அப்படியா....

உள்ளர்த்தங்கள் ஏதாவது இருக்கிறதா? எனக்கு புரியல...கிரிக்கெட்டத்தவிர...

நாடோடி இலக்கியன் said...

புரியுது ஆனால் புரியல அண்ணாச்சி.

:)

அனுஜன்யா said...

??????

வடகரை வேலன் said...

நன்றி அறிவிலி

நன்றி வெண்பூ. இது புரியலையா?

நன்றி பாலாசி. இது தற்குறிப்பேற்ற அணி. சொல்ல வருவதைப் பிறிதொன்றின் மேலேற்றிச் சொல்வது.

நன்றி நாடோடி. புரியும். புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சாச் சரி.

நன்றி அனுஜன்யா.

மாதவராஜ் said...

இது கிரிக்கெட் கமெண்ட்ரி அல்ல என்பதையறிந்து கொண்டேன்.

SanjaiGandhi said...
This post has been removed by the author.
T.V.Radhakrishnan said...

:-)))

தண்டோரா ...... said...

அண்ண்ண்ண்ண்ண்ண்ணே..நாளைக்கு நைட் பாருக்கு வரீங்களா?

இராகவன் நைஜிரியா said...

ம்... புரிந்தது...

Mahesh said...

சத்தியமாப் புரியல.... :(

பிரியமுடன்...வசந்த் said...

ஹ ஹ ஹா

:))

மங்களூர் சிவா said...

something wrong -னு மட்டும் புரியுது!
:((

SanjaiGandhi said...

நான் நினைத்தவர் இல்லை என்பதால் அந்த பின்னூட்டம் அழித்துவிட்டேன்.
இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. :(

வெண்ணிற இரவுகள்....! said...

என்ன சொல்ல வரிங்கன்னு சுத்தமா புரியல .......
உச்சன் தல விர்ர்ர்

velji said...

ரங்காச்சாரி தெளிவாக சொல்லிவிட்டார்!

கும்க்கி said...

”கிடக்குறது கிடக்கட்டும் கெழவிய தூக்கி மனையில வை” என்றானாம்..

அடிக்கடி ஏஞ்சல் டி.வி. பாருங்கண்ணே....சொன்னா கேக்கமாட்டீங்க...

திகழ் said...
This post has been removed by the author.
பித்தன் said...

எந் உச்சி மண்டையில கிர்ருங்குது, இத்த நா படிச்சா சுர்ருங்குது..... அண்ணனப் பாத்தாலே டர்ராகுது..............

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))

ஜெரி ஈசானந்தா. said...

"மொட்டத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டாலும் போட்டேள், நன்னா விபரமா தான் போட்டுருக்கேள்."

இரா.சிவக்குமரன் said...

/// வடகரை வேலன் said...

புரியும். புரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சாச் சரி.///

அது சரி ..

அமிர்தவர்ஷினி அம்மா said...

வெண்பூ said...
ஒண்ணுமே புரியல அண்ணாச்சி.. :(


வழிமொழிகிறேன்

வால்பையன் said...

இதிலிருக்கும் உள்குத்து என்ன?

விக்னேஷ்வரி said...

லேபிள் டாப்பு. :)

அகல் விளக்கு said...

அண்ணா!!!!!!!!!!

முடியலண்ணா.....

வானம்பாடிகள் said...

:)

Varadaradjalou .P said...

புரியல. புரியல. ஒண்ணுமே புரியல