ஒரு நாட்டின் பிரசிடெண்டைக் கதாபாத்திரமாக வைத்தெல்லாம் நாவல் எழுதுகிறார்களே அதே போல தமிழில் சாத்தியமா என்று வியந்திருக்கிறேன். சுஜாதா சில முயற்சிகள் செய்தார் எனினும் அதை பூடகமாகவே செய்ய வேண்டிய நிர்பந்தமிருந்தது அவருக்கு.
முதல்வனில், முதலமைச்சர் திருக்குறள் சொல்லும் தமிழறிஞராக வந்தது சர்ச்சையைக் கிளப்பியது ஞாபகமிருக்கக்கூடும். அதன் காரணமாகவே ரஜனி அப்படத்தைத் தவிர்த்தார் எனவொரு பேச்சும் உண்டு.
உன்னைப் போல் ஒருவனில் நடித்திருக்கும்(!?) முதலமைச்சர் குரல் நல்ல முயற்சி. அந்த வசனங்களும் கத்தி மேல் நடப்பது போலத்தான். குறிப்பாக , “ இது நமது தேர்தல் வெற்றியைப் பாதிக்காதே ?” எனக் கேட்கும்போது உண்மைக்கு வெகு அருகில் எழுதப் பட்ட வசனம் இதுவாகத்தான் இருக்கக்கூடும். அக்குரலில் வெளிப்பட்ட வசனங்கள் யாவும், சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் இம்மி பிசகாமல் இப்படித்தான் இருந்திருக்கும் என்பது போல இருந்தது.

திரைப்படத்தைத் திரைப் படமாகப் பார்க்காமல் ஏதோ சமுதாய விரோதச் செயல் செய்து விட்டது போல வந்த விமர்சனங்கள் ஒட்ட மறுக்கின்றன. இப்படம் தீவிர வாதத்தைப் போதிக்கிறது பார்த்தவன் தீவிரவாதியாகிவிடும் அபாயம் இருக்கிறதென்றெல்லாம் கூக்க்குரல். எங்கள் ஊர் பக்கம் சொல்வார்கள் ”எதால சிரிக்கதுன்னு யோசிக்கிறேன்” என்று. தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?
இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது. கமல் எப்படி நல்ல படம் எடுக்க முடியும்? அவர்தான் அவாளாயிற்றே? ரக விமர்சனங்களை எழுதியவர்கள் மன நோய்க்கு ஆட்பட்டவர்களேயன்றி வேறெப்படி இருக்க முடியும்?
அடுத்த முறை கமல் படம் எடுக்குமுன் இந்த அய்யாசாமிகளிடம் அக்மார்க் முத்திரை பெற முயற்சிப்பது நல்லது. ஏனெனில் படத்துக்குச் சென்ஸார் சர்டிஃபிகேட் கிடைக்கிறதோ இல்லையோ இந்த அறிவு(இல்லாத) ஜீவிகளின் முத்திரை முக்கியம்.
இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை, இந்த இடம் லாஜிக் உதைக்கிறது என உருப்படியாக எழுதுங்கள். அதை விட்டு விட்டு கமல் ”மூலம்” வந்தவ்ர் போல நடக்கிறார் என எழுதுவது முறையா? இந்தளவுக்கு வேறெந்தச் சமுதாயமும் கலைஞன் மீதான தனிமனித வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதில்லை.
தான் பட்ட அவமானங்களையும் இழப்புகளையும் வலியையும் வேதனைகளையும் உள்வாங்கி, அதை உரமாக்கிக் கொண்டு அடுத்த படைப்பைத் தரும் கலைஞனுக்குக் குறைந்த பட்ச மரியாதை செய்யாவிட்டால்கூடப் பரவாயில்லை; தயவு செய்து அவமரியாதை செய்யாதீர்கள். இதை எல்லாக் கலைஞனுக்கும் பொதுவாகத்தான் சொல்கிறேன்.
உங்களுக்குப் பிடிக்கவில்லையா பிடிக்கவில்லை என எழுதுங்கள். எப்படி இப்படியெல்லாம் எடுக்கலாம் எனக் கேள்வி கேட்கும் அதிகாரம் யார் வழங்கியது? ஒரு பைசாகூடச் செலவு செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் கோடிகளில் செலவு செய்து எடுக்கப் பட்ட படத்தை குப்பை எனச் சொல்வதில் இருக்கும் நகைமுரண் அயற்சியை ஏற்படுத்துகிறது.
கேபிள் சங்கர் போன்ற துறைசார்ந்தவர்கள் எழுதும் விமர்சனத்திற்கும் பிறர் எழுதிய விமர்சனத்திற்கும் உள்ள வித்தியாசங்களைப் பாருங்கள். எதை வேண்டுமானாலும் என் தளத்தில் எழுதுவேன் என்பது உங்கள் உரிமையானாலும் அடுத்தவனைப் பற்றிய அவதூறு எழுதுமுன் ஒரு நொடியாவது யோசியுங்கள். ஏனெனில் அக்கலைஞனும் உங்களைப் போல் ஒருவன் அல்லது உங்களில் ஒருவன்.
மற்றபடி, படம் இஸ்லாமியச் சகோதரர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிக்கிறது என்பது சொத்தை வாதம். ஏனெனில் படத்தயாரிப்பில் இஸ்லாமியச் சகோதரர்களும் பங்களித்திருக்கின்றனர். அதைவிட முக்கியம் ஹிந்தியில் கமல் வேடத்தைச் செய்திருந்தவர் நஸ்ருதீன் ஷா. இந்தச் சுட்டியில் முக்கிய பங்களிப்பைச் செய்தவர்களின் பெயர்கள் இருக்கிறது.
வடவள்ளி காளிதாஸ் திரையரங்கில்தான் இப்படத்தைப் பார்த்தேன். குத்துப் பாட்டும், கேலிக்கூத்தான காமெடிகளும், பறந்து பறந்து தாக்கும் (பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பரிகசிக்கும்) சண்டைகளுமற்ற ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி அரங்கை விட்டு வெளியே வருபவர்கள் பேசுவதிலிருந்த பொதுவான கருத்து.
”I've failed over and over and over again in my life and that is why I succeed” Michael Jordan
இவ்விரண்டு விமர்சனங்களும் என்னைக் கவர்ந்தவை. படத்தைப் பாராட்டியதற்காக அல்ல. நல்ல நடைக்காகவும், நேர்மையாகத் திரைப் படத்தை அலசியிருப்பதற்காகவும்.
.

30 பேரு பாராட்டியிருக்காங்க:
நீங்கள் குறிப்பிடும் அந்த விமர்சனத்தை நானும் படித்தேன். நிச்சயம் கண்டிக்க/திருத்திக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.
சரியாய் சொன்னீர்கள்... அது மாதிரி எழுதுபவர்களின் வயது , கமலின் அனுபவத்தில் பாதி கூட இருக்காது... இவர்களெல்லாம் !!!!...
\\தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா?\\
சாட்டையடி அண்ணாச்சி...
வாழ்த்துக்கள்
//ஆள்மாறாட்டம் ஏற்படுத்தும் சம்பவங்கள் சுவையான நாவலாக விரியும்.//
அப்டியா ...?
தமிழ்ப் படத்தின் வில்லன் இறுதியில் சாகிறான் அல்லது குறந்தபட்சம் நல்லவனாக மாறுகிறான். அதன்படி தமிழகமே நல்லவர்களின் கூடாரமாக இருந்திருக்க வேண்டுமல்லவா? //
இப்படியெல்லாம் சரியா பேசினா பைத்தியக்காரன்னு சொல்ல போறாங்க அண்ணாச்சி.
இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது. //
இந்த வியாதியைக் குணப்படுத்துவது எப்படி எனத் தெரியவில்லை.
ஆண்மையான, நேர்மையான கோபம் அண்ணாச்சி. மதிக்கிறேன்.
அருமையான நேரான பதில்..
நல்ல நேரத்தில் வந்த நல்ல இடுகை.
//மற்றபடி, படம் இஸ்லாமியச் சகோதரர்களை வன்முறையாளர்கள் எனச் சித்தரிக்கிறது என்பது சொத்தை வாதம்//
படத்தில் ஆரிப் கதாபாத்திரம் அருமை. சரியான விதத்தில் எழுதியிருக்கிறீர்கள்.
தெளிவான பதில்கள். சாடுவோர்கள் இதை படித்தாவது தெளியட்டும்.
நன்றி வேலன்.
பிரபாகர்.
செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் // அதுவும் முதலாளிமார்கள் வங்கிக்கடன் வாங்கி வைத்திருக்கும் அலுவலகக் கம்ப்யூட்டரில்...
படம் சொல்கிற நேரடி விஷயங்களையே கிரகித்துக்கொள்ள வழி இல்லாதவர்கள் நுண்ணரசியல், புண்ணரசியல், புண்ணாக்கு அரசியல்களைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்...
நல்லா சொன்னீங்க அண்ணாச்சி.....
அண்ணாச்சி, அந்த டைப் விமர்சனங்களுக்குக் காரணம் படம் பிடிக்காததால் அல்ல, படம் நல்லா இருக்கே என்ற வயித்தெரிச்சலில்... படத்தில் இந்துத்வா தெரிகிறதோ இல்லையோ, இந்த மாதிரி மனிதர்களின் வக்கிரம் விமர்சனங்களில் நன்றாக தெரிகிறது.. துடைச்சிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்..
முத்திரைப் பதிவு!!
வரிகளுக்கு நடுவுலயே படிச்சுப் படிச்சு, அரசியல் பண்ணிப் பண்ணி... அவங்களுக்கு இதெல்லாம் புரியுமா??
இப்படிக் கூட விமர்சனம் எழுதலாமே...
எக்ஸலண்ட்
நன்றி சிவா.
நன்றி புள்ளி.
நன்றி நிகழ்காலத்தில்.
நன்றி தருமி ஐயா. படித்துப் பாருங்கள் சுவையான நாவல்.
நன்றி விக்கி.
நன்றி கேபிள்.
நன்றி ராகவன்.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி பிரபாகர்.
நன்றி செல்வா.
நன்றி சாமி.
நன்றி வெண்பூ.
நன்றி மகேஷ்.
நன்றி கதிர்.
செகண்ட் லேடி கிடக்கட்டும், தி மேன், இர்விங் வாலஸ் எழுதின புத்தகம் தான்! ஒரு கறுப்பர் தற்செயலாக அமெரிக்க ஜனாதிபதி ஆவதும், அதைத் தொடரும் நிகழ்வுகளும் என்று மனித மனங்களின் பல்வேறு தன்மையைத் தொட்டுச் செல்லும் நல்ல கதை. இன்றைக்கு உண்மையிலேயே, ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன், அதுவும் பரக் ஹுசேன் ஒபமா என்று முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு ஜனாதிபதியானதும் சாத்தியப்பட்டிருக்கிறது.
அப்புறம் இந்த கமல் விவகாரம்..நல்ல கலைஞர் தான்! கலையோடு, வேறு சில விவகாரங்களைக் கிளப்புவதால் தான் கல்லடி பட வேண்டியிருக்கிறது.
பரமக்குடியில் இருந்து தவழ்ந்தே வந்து பெரியார் திடலுக்கு வர இத்தனை ஆண்டுகள் ஆனதாக, வீரமணியோடு ஒரே மேடையில் பேசினது, அவர் பாராட்டினது முதல் தேவர்மகன் படம் எடுத்து ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் உயர்த்திப் பிடிக்கிற மாதிரி...சமீபத்தில் ஹோட்டலில் ரூம் போடுவது இப்படி இன்னும் நிறைய இருக்கிறது
ஒரு கலைஞனாக இருப்பதால் கல்லடி விழவில்லை. தன்னுடைய சௌகரியத்திற்குத் தகுந்த மாதிரி நியாயங்களைப் பேசுவதால் தான்!
மிகவும் அருமையான விமர்சனம்..
//.. இன்னொரு வியாதி படைப்பை விமர்சிக்காமல் படைப்பாளியை விமர்சிப்பது ..//
நான் ரசித்த வரிகள்..
உள்ளேன் அய்யா....
பறந்து பறந்து தாக்கும் (பூமியின் ஆகர்ஷண சக்தியைப் பரிகசிக்கும்)
இந்த லொள்ளுதான வேண்டாங்குறது.
டமில் ஹீரோஸ என்னான்னு நெனச்சுட்டிருக்கிங்க...?
200 அல்லது 300 பேரை அடிச்சு துவைக்கறவங்களுக்கு இதெல்லாம் சாதா ரணமில்லையா..?
செல்வேந்திரன் said...
செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள் // அதுவும் முதலாளிமார்கள் வங்கிக்கடன் வாங்கி வைத்திருக்கும் அலுவலகக் கம்ப்யூட்டரில்...
இது தேவையா...?
தனி மனித தாக்குதல் வேண்டாமே...
அசத்தல்...
//இர்விங் வாலஸ் எழுதிய செகண்ட் லேடி புத்தகத்தை வாசித்திருப்பீர்கள்.//
இப்ப இதுக்கு நான் ஆமாம் சொல்லனுமா?அல்லது இல்லை சொல்லனுமா?
அண்ணாச்சி செம கலக்கல்!
இன்னும் வருதுபாருங்க பதிவு, டிசைன் டிசைனா யோசிப்பாய்ங்க போல!
நல்ல பதிவு. படைப்பை விமர்சிப்பது தான் சரி. ஒவ்வொரு படத்திலும் யாருக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள், ஏன் வைத்தார்கள் என்று அலச ஆரம்பித்தால் அ, ஆ, இ, ஈ என்று தான் பெயர் வைக்க வேண்டும் :-).
என் விமர்சனத்தையும் ஒரு முறை பாருங்கள்!!
http://senthilinpakkangal.blogspot.com/2009/09/blog-post_18.html
தெளிவான கருத்துகள்.
அண்ணாச்சிக்கு ஜே...
வடகரைவேலன் அவர்களே,
எல்லா விரலும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
எப்படி உங்களுக்கு ஒரு கருத்தோ , அதே மாதிரி , ஆசிப்
அண்ணாச்சி அவ்ருடைய விமர்சனத்தை எழுதியுள்ளார்.
//அதை விட்டு விட்டு கமல் ”மூலம்” வந்தவ்ர் போல நடக்கிறார் என எழுதுவது முறையா?
கமல் இந்த படத்தின் தொடக்கத்தில், ஒரு 50 வயதுக்காரனின் இயற்கை உபாதைகளோடு காட்டுகிறேன் என்றார். அதற்காகத்தான் அந்த மாதிரி நடை. மேலும் ஒரு நன்பகத்தன்மைக்காக. இதை புரியாமல் விமர்சிப்பவர்கள், படத்தை சரியாக பார்க்காதவர்கள். அவர்களைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டாம்
//ஒரு பைசாகூடச் செலவு செய்யாமல் கூகிள் வழங்கும் இலவச தளத்தில் இருந்து கொண்டு கூப்பாடு போடுபவர்கள்
என்னங்க இது இந்த தாக்கு தாக்குறீங்க :). சீக்கிரமே சொந்த வலைத்தளம் போக வெச்சுடுவீங்க போலயிருக்கே :)
சிறந்த ஆங்கிலப்படத் தரத்திலும் தமிழ்ப்படம் தயாரிக்கலாம் என்பதற்கு உன்னைப்போல் ஒருவன் நல்ல சான்று.
இது Wednesday இன் மறு ஆக்கம் என்றாலும் இஸ்லாமியப் பெண்ணிற்கு நடந்த அவலம் போன்ற விடயங்கள் சில Wednesday இல் இல்லாதவை.
தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது எனும் வாதம் சரியான புரிந்து கொள்ளலின்மையால் எழுகின்ற வாதமே.
எதிர்மறையின் எதிர்மறையாகச் சொல்லப்பட்டிருக்கின்ற செய்தியைப் புரிவது கடினமல்லவே.
இன்று பல விடயங்கள் பாமருனுக்கல்ல படித்தவனுக்குத்தான் புரியவைக்க வேண்டியிருக்கிறது.
பாமரனால் உருவாகும் பிரச்சினைகள் ஒன்றும் பாரதூரமானவை அல்ல.
Post a Comment