Friday, September 18, 2009

நெருநல் உளனாகி


தாயமோ, ஓரெண்டோ,
சோநாலோ, ஓராறோ
அல்லது ஈராறோ
எது விழுமென
எவருக்கும் தெரியாது

ஏற்றம் தரவென
ஏணிகள் காத்திருப்பது போலவே
படங்கொண்டாடும் பாம்புகளும்
காத்திருக்கின்றன
விடங்கொண்ட பற்கள் நீட்டி

நெருநல் உளனாகி
இன்றவனை இல்லாதோனாக்கும்
எழுதிமேற்செல்லும்
விதியின் கைகளாடும் விளையாட்டிது

உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை




படம் உதவி : சுப்பையா சார்வாள்.


.

26 பேரு பாராட்டியிருக்காங்க:

பிரியமுடன்...வசந்த் said...

//ஏற்றம் தரவென
ஏணிகள் காத்திருப்பது போலவே
படங்கொண்டாடும் பாம்புகளும்
காத்திருக்கின்றன
விடங்கொண்ட பற்கள் நீட்டி//

நடப்புலகம் பற்றிய உண்மையான் வரிகள்

ஏன் சார் இந்த பாம்புகள் ஆட்டத்துக்குள் வந்தது மனிதனால்தானே அதேமாதிரி அந்த பாம்பை உருவாக்குன மனுஷனுக்கும் அதெ குணம் இருப்பது விதியா? சதியா?

T.V.Radhakrishnan said...

உண்மை வரிகள்

ஆரூரன் விசுவநாதன் said...

மறைந்த இலக்கிய தென்றல் அடியாரின் "மனைவி" காவியத்தில் "லாட்டரி சீட்டு" நினைவிற்கு வருகிறது.

அருமை

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

பாண்டியன் புதல்வி said...

உங்கள் மொழி ஆளுமை பிரமிக்க வைக்கிறது...அருமை அருமை

ஜெரி ஈசானந்தா. said...

இனிமையான வரிகள். நன்றாக இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

//ஏற்றம் தரவென
ஏணிகள் காத்திருப்பது போலவே
படங்கொண்டாடும் பாம்புகளும்
காத்திருக்கின்றன
விடங்கொண்ட பற்கள் நீட்டி//

//உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை//

வெகு அருமை.

ஈர வெங்காயம் said...

அண்ணாச்சி,
பாம்புகள் துரத்தாவிட்டாலும்..
வாழ்க்கை ருசிக்காதே..

பகடை உவமை அருமை, இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல..

நேசமித்ரன் said...

ரொம்ப நல்லா இருங்குங்க
அருமை

கெக்கே பிக்குணி said...

மிக அருமைங்க!! ஆனா கவிதை புரியும் அளவுக்கு வாழ்க்கை பிடிபடும் போது வயதாகி விடுகிறது....

பரமபதம், பகடைன்னு நல்ல உவமைகள். வாழ்த்துகள்

இரா.சிவக்குமரன் said...

அருமையான சொல்லாடல்கள்.

'நெருநல்' னா என்னங்க?

சுரேகா.. said...

//உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை//

உருள்வதும் நாமே!
உருட்டுவதும் நாமே!
உருட்டப்படும் வாழ்க்கைக்காக!

அற்புதமா சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி!

"அகநாழிகை" பொன்.வாசுதேவன் said...

கவிதை எனக்கு பிடித்திருக்கிறது.
வார்த்தைப் பிரயோகம் அருமை.

முகவை மைந்தன் said...

சிறப்பான பாடல். சோநாலு பொருள் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.

'இன்றவனை இல்லாதோனாக்க' ன்னு வரணுமோ?

'ஏற்றம் தரவென' என்று தொடங்கும் அடிகளில் எதுகையும் மோனையும் சிறப்பான ஓசை நயத்தைத் தருகின்றன.

மோனை
ஏற்றம் - ஏனிகள்
படம் - பாம்பு

எதுகை
படம்
விடம்

@இரா.சிவக்குமரன்
'நெருநல்' னா நேற்றுன்னு பொருள். கன்னடம், தெலுங்கிலும் இந்த சொல் மருவி அன்றாட உரையாடல்ல இருக்கு.

தராசு said...

ரசித்தேன், வாழ்த்துக்கள்.

கலையரசன் said...

உண்மைதான் தலைவா!

Mahesh said...

:(

தியாவின் பேனா said...

அருமை

வாழ்த்துக்கள்

மஞ்சூர் ராசா said...

ஏணி பாம்பு, வாழ்க்கை

நல்ல பொருத்தம்.

வாழ்த்துகள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

செம்மை.!

பித்தன் said...

அற்புதமா சொல்லியிருக்கீங்க அண்ணாச்சி!

மங்களூர் சிவா said...

/
உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை
/

கண்டிப்பா!

ஊர்சுற்றி said...

ஆ.வி.யில் உங்க கவிதை. வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

ஆனந்த விகடனில் ‘அந்நியன்’ கவிதையும் அருமை!

butterfly Surya said...

அருமை அண்ணாச்சி..

கலக்கல்..

Nundhaa said...

பிரயோகமொழி பிரவாக நடை ... கவர்கிறது ... ஆனால் முடித்த விதம் தான் மிகச் சாதாரணமாக இருக்கிறது

அமிர்தவர்ஷினி அம்மா said...

உருள்வது பகடையெனினும்
உருட்டப்படுவது வாழ்க்கை //

ஆழமான கவிதை