அன்றாடம் நம் கண்முன் காணும் சிலரைச் சில நாட்களாகக் (ஆண்டுகளாக?) காண்பதில்லை என்பது நமது புத்திக்கு உரைப்பதே இல்லை என்பதான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவ்வாறான ஒரு தேடலில் ஞாபகங்களின் உள்ளடுக்குகளிருந்து கிளர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலர்.
1. ஆப்பக்கார ஆச்சி.
ஆச்சி என்றாலே செட்டி நாட்டு ஆச்சி ஞாபகம் வந்தாலும் ஆச்சி என்பது தென் மாவட்டங்களில் பாட்டியைக் குறிக்கும். ஆப்பக்கார ஆச்சி வித்தியாசமான ஒரு நபர். குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவராகவோ அல்லது மருமகள் கொடுமைக்கு ஆட்பட்டவராகவோ இருப்பார். அவர் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தவியலாத பாசத்தையும் நேசத்தையும் தான் ஆப்பம் விற்கும் இடங்களில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் கசியவிடுவார். இடுங்கிய கண்களினூடான வசீகரச் சிரிப்பு கொள்ளை கொள்வதாக இருக்கும்.
சில சமயம் சம்சாரி வீடுகளில்(வயல் வேலை செய்பவர்கள்) உள்ள குழந்தைகளுக்கு பசி அதிகமிருக்கும் ஆனால் வசதி இருக்காது. ஒன்று அல்லது இரண்டு ஆப்பங்களை சாப்பிட்டுவிட்டு மேலும் ஆப்பத்துக்கு ஏங்கும் கண்களைக் கண்டுவிடும் ஆச்சி, இலவசமாகவே மேலும் இரண்டை வழங்கிச் செல்வார். அதே ஆச்சி மச்சு வீட்டு ஆட்களிடம் பைசா சுத்தமாகக் கறந்து விடுவார்.
இப்பொழுது எங்கேனும் இந்த ஆச்சிகளைப் பார்க்க முடிகிறதா?

2. சேமியாப் பாயாசம் விற்பவர்.
செங்கோட்டை, தென்காசி குற்றாலம் சுற்றுப்புறங்களில் மிகவும் பிரபலமானது இந்த சேமியாப் பாயாசம். பொதுவாக கிராமங்களில் அரிசிப் பாயாசம் அல்லது பருப்புப் பாயாசம்தான் வைப்பர். சேமியாப் பாயாசம் என்பது எட்டாக்கணி. திருவிழா நாட்கள் மற்றும் கடைசி வெள்ளிகளில் சில வீடுகளில் சாத்தியப்படுவது.
எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்கும் ஒரு திரி ஸ்டவ் அல்லது கனன்று கொண்டிருக்கும் கரி அடுப்பு, அதன்மேல் வைத்த அலுமினியப் பாத்திரம். இவ்விரண்டையும் ஒன்றாகக் கட்டி வைத்திருப்பார். அலுமினியப் பாத்திரத்தின் மீதிருக்கும் தட்டு உள்ளிருக்கும் அகப்பையின் காம்பு வெளியே நீட்டிக் கொண்டிருக்க வசதியாக. இன்னொரு கையில் நான்கைந்து கண்ணாடி டம்ளர்கள் வைத்திருப்பார்.
கேட்டவுடன் ஒரு அகப்பையில் கோதி கண்ணாடி கிளாசில் தருவார். நான் சொல்லும் பகுதிகள் ஆரியங்காவுக் கணவாய்க் காற்றும் சிலுசிலுவென குளிரும் அடிக்கும் பகுதி எனவே அவர் தரும் பாயாசம் சுடச்சுட அமுதம் போல இருக்கும்.
”ச்சேமியாப் பாயாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ” என உச்ச குரலில் ஒலித்த இந்தக் குரலைத் தற்போது கேட்டவருண்டோ?

3. எண்ணைக்காரச் செட்டி(யார்?).
ஜாதியை இழிவாகக் குறிப்பிடுதல்ல நோக்கம். அவரது பெயர் பெரும்பாலும் ஏதோ ஒரு பெருமாளாகத்தான் இருக்கும்( ஐய்யம் பெருமாள், சக்திப் பெருமாள், கண்வதிப் பெருமாள்). தலையில் மும்பைவாலாக்கள் வைத்திருப்பதுபோல் ஒரு பெரிய பெட்டி. உள்ளே எண்ணெய்ப் பாத்திரங்கள் இருக்கும். அளந்து ஊத்த உழக்கும், துடைக்க ஒரு துணியும் வைத்திருப்பார்.
ஒரு ஊருக்குள் யாரார் வீட்டில் எத்தனை நபர்கள் யார் வீட்டில் அதிகம் செலவாகும் யார் வீட்டுக்கு வாராவாரம் செல்ல வேண்டும் யார் வீட்டுக்கு மாதம் ஒருமுறை செல்லவேண்டும் என எல்லாவற்றையும் அறிந்து வைத்திருப்பார். என்னதான் கறாராக வியாபாரம் பார்த்தாலும் மதிய உணவு யாராவது ஒரு வாடிக்கையாளர் வீட்டில்தான் இருக்கும். அதற்கு ஒரு ஆழாக்கு எண்ணெய் கூடுதலாகக் கொடுப்பர். ஒரு வகைப் பண்டமாற்றுப் போல. G for H லும், இதயத்திலும் மறைந்து போன இவர்களை எங்கேனும் பார்த்ததுண்டா?

4. உப்புக்காரத் தாத்தா.
ஒற்றைமாட்டு வண்டியில் வரும் இரட்டைநாடி ஆசாமி. இரண்டு மூட்டைகள் உப்பு வைத்திருப்பார். உப்ப்ப்ப்பேஏஏஏஏஎய்ய்ய்ய் என்ற சத்தம் கேட்டதும் அடுத்த வீதியில் இருப்பவர்கூட கிடாப் பெட்டியை தயார் செய்து வைத்திருப்பார்கள். சுப்பையா என்ற பெயர் கிராமங்களில் அதிகம். உப்பு என்றால் கணவரைக் குறிக்குமென வேறு பெயர்களில் உப்பை அழைக்கும் பெண்களிடம் வேண்டுமென்றே வழக்கடிப்பார்.
நாள் முழுவதும் சுற்றி விற்றது போக மீதமுள்ள அரை அல்லது கால் மூட்டையை யாராவது ஒருவர் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு கிளம்பிவிடுவார். மீண்டும் அடுத்த மாதம்தான் வருவார்.
உப்பிட்ட இந்த நல்லவரைக் கூட மறந்துவிட்டோம்.
மேலும் சிலரை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

.

25 பேரு பாராட்டியிருக்காங்க:
வாவ்! படிச்சதும் எனக்கும் சில ஆளுக மனசில வந்து போறாங்க!
ஜவ்வுமிட்டாய்க்காரர்
பொறிகடலைக்காரர்
சாட்டையடிக்காரர்
பைத்தியக்காரிச்சி (female version only)
தண்டோராக்காரர்
பெட்ரோமாக்ஸ்காரர்
ஜட்கா வண்டிக்காரர்
தயிர்காரம்மா.....
இப்படி!
எங்களூரில் வெண்ணைக்காரர்களும், வெத்தலக்காரர்களும், சோடா மண் விற்பவர்களும் மற்றும் பாக்கு விற்பவர்களும் தான் அதிகமா நினைவிற்கு வருகின்றனர்..
ஆஅவ்வ்வ்வ்....!! நல்ல உள்குத்து பதிவு....!! எனக்கும் எங்க எங்க ஊருக்கு அடிக்கடி மாரியம்மன் பொங்கலுக்கு வந்துட்டு போன கரகாட்டகாரி மருத " மயிலு " ஞாபகம்தேன் வருது......!!
நல்ல பதிவு... உங்க பதிவைப் படிச்ச பிறகு தான் இவர்கள் அனைவரையும் நாம் மறந்துவிட்டோம் என்ற நினைவு வருகிறது...
அருமை.... :)
நான் தலைப்பை பார்த்துவிட்டு, குறிப்பிட்ட சிலரைப் பற்றி சொல்லப் போகின்றீர்கள் என்று நினைத்தேன்.
மிக நல்லதொரு நினைவு மீட்சி.
ஆனால், இதில் உப்பு,ஆப்பம்,இடிஆப்பம், போன்ற சில விஷயங்கள், நான் பிறந்த ஊரில்/எங்கள் பகுதியில் இன்னமும் நடைமுறையில் உள்ளது.
அவர் குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தவியலாத பாசத்தையும் நேசத்தையும் தான் ஆப்பம் விற்கும் இடங்களில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் கசியவிடுவார்.//
நிஜம்.
உச்ச குரலில் ஒலித்த இந்தக் குரலைத் தற்போது கேட்டவருண்டோ?
//
இல்லை.
உப்பு என்றால் கணவரைக் குறிக்குமென வேரு பெயர்களில் உப்பை அழைக்கும் பென்களிடம் வேண்டுமென்றே வழக்கடிப்பார்//
சுவாரசியம். என்னன்ன பெயர்கள் என்று குறிப்பிடுங்கள் அண்ணாச்சி.
நான் பார்த்ததும் அதே ஒற்றை மாட்டுவண்டிதான், அதே இரண்டு மூட்டைதான்.. குரல்தான் வேறு.. உச்ச்ச்ச ஸ்தாயியில் "ஏஏஏஏஏஏஏஏஏஏ... கஸ்ஸ்ஸ்ப் புஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்ப்பேபேபேய்ய்ய்ய்ய்ய்.."
பயப்படாதீங்க. உப்பைத்தான் அப்படிச்சொல்வார்.
நல்ல பதிவு
பாண்டிச்சேரியில் மண்ணென்ணை விற்பார்கள். இரண்டு சக்கர வண்டியில் மண்ணென்ணை பெரிய பேரல் கவிழ்த்து போட்டு அதில் பைப் போட்டு இருப்பார்கள்.
இவர்களும் இப்பொது இல்லை. ஏனென்றால் மண்ணென்ணை பயன்பாடு குறைந்து விட்டது மற்றும் இப்படி விற்க இப்போழுது அனுமதி கிடையாது என்று நினைக்கிறேன். இப்போழுது எல்லாம் ரேஷனில் மட்டுமே.
Am I Correct?
ஜவ்வுமிட்டாய் காரர் கண்ணில் வந்தார் அண்ணாச்சி..அதை வாட்சாக செய்து கையில் கட்டி விட்டு ,ஜவ்வ்வ்வுமெட்ட்டாடாடாய்ய்ய்ன்னு ஒரு கத்து கத்துவாரே..ஹும்
அருமை அண்ணாச்சி.... நிஜமாவே மறந்துதான் போயிட்டோம்..
இன்னும்...
குச்சி ஐஸ் விற்பவர்
சோடாக்காரர் (சைக்கிளின் பின்னே மரச்சட்டத்தில் கவிழ்த்த பாட்டிலகளுடன்)
விறகு/கரி வண்டிக்காரர்
ஜம்பர் மிட்டாய்காரர்
பரசுராமன் பால்கோவா....
அண்ணே,
நல்ல நடையில் கிராமத்து அனுபவங்களை
பகிர்ந்தீர்கள்.
இப்போது எல்லாம் ப்ளாஸ்டிக் பாக்கேட்டில் எல்லா பொருளும் கிடைக்கிறதே?
வீடு தேடி வந்த வெள்ளந்தி வியாபாரிகள் எப்படி வருவார்?
இனி இவற்றை எல்லாம்
தக்ஷின்சித்ரா செயற்கை கலை கிராமத்தில் தான் பார்க்கோனும்.
பால்லைஸ்ஸ்ஸ்ஸ் கப்பைஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் - ஒரு டப்பாவ தட்டிகிட்டு வர்ற குச்சி ஐஸ் விக்கிறவர், பழைய இரும்பு சாமானுக்கு பேரீச்ச்ம்பழம்ம்ம்ம் விக்கிறவர் இந்த ரெண்டும் என்னால மறக்க முடியாது.
படிச்சதும் எனக்கும் இந்த ஆளுக மனசில வந்து போறாங்க!
ஒரு தள்ளு வண்டியில சோன்பப்படி விக்கிறவரு, ஊர்றுகாய் விக்கிறவரு இப்பஎல்லாம் பாக்கமுடியிறது கூட இல்ல. அவுங்க எல்லாம் முன்னேர்றிட்டாங்களா? இல்ல வேறு தொழில் பாக்குறாங்களா? இல்ல கிராமத்துல இவுங்க தேவை குறஞ்சு போச்சா?
உங்க பதிவைப் படிச்ச பிறகு தான் இவர்கள் அனைவரையும் நாம் மறந்துவிட்டோம் என்ற நினைவு வருகிறது...
அருமையான பதிவு இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் உலகமயமாக்கல், குறுக்குவழி வியாபார யுக்தி மற்றும் தாறுமாறான விளம்பரம் என்று எவ்வளவோ உள்ளது.
நாங்கள் ஜவ்வு மிட்டாய் விற்பவர் வந்தால் அவர் பின்னாடியே எல்லா தெருவும் சுற்றுவோம், வாய் வழி விளம்பரம் அவருக்கு உதவும், ரவி நீ பாம்பு கட்டிக்க நான் வாட்ச் கட்டிக்கிறேன் என்று எல்லா நண்பர்களும் கைகளில் ஒன்னொன்னு கட்டிக் கொண்டு விளையாடியதெல்லாம் என் பிள்ளைகளுக்கு தெரிய வாய்ப்பில்லை இன்று பிஸ்ஸா, பர்கர், கோக் என்று அவர்களுக்கு நிறைய உள்ளது.
ஜவ்வு மிட்டாய், கமர்கட் எங்கே போனது......
ரொம்ப நல்லாருக்கு அண்ணாச்சி... எங்களூர் தயிர்க்காரம்மாதான் எனக்கு மறக்கமுடியாத/மறந்துவிட்ட கேரக்டர்!
BTW, நான்கூட என்னைப் பத்திதான் எழுதிருக்கீங்களோன்னு நெனைச்சேன்..
//எங்களூர் தயிர்க்காரம்மாதான் எனக்கு மறக்கமுடியாத/மறந்துவிட்ட கேரக்டர்!//
எனக்கும் இதுதான் தோன்றியது படிக்கும்போது..
அண்ணாச்சி!
உங்க அளவுக்கு இல்லைன்னாலும், நானும் காணாமல் போனவர்களைப் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன் எழுதியிருக்கிறேன் :)
http://veyilaan.wordpress.com/2007/08/28/memory/
அடடா...இதேமாதிரி ஒண்ணு ட்ராஃப்ட்லெ இருக்கே..நீங்க முநதிக்கிட்டீஙக!
கருத்துக் கந்தசாமிகள்...
என்னமோங்கண்ணே...எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு..
நல்ல பதிவு
நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html
நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
படிச்சதும் எனக்கும் பலர் மனதில் வந்து போறாங்க!
Nice post...
Why did you change the template?
தங்கள் அந்நியன் கவிதையை தற்போது தான் ஆ.வி.யில்
படித்தேன்.... சூப்பர் ஜி....வாழ்த்துக்கள்
வளையல்காரர், தயிர்காரம்மா இவங்களையும் இப்ப பாக்க முடியறது இல்லை
கலக்கல். கிராமத்து நினைவுகள் மனதை வருடுகின்றன.
ஆ.விகடன் கவிதைக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment