
சிதம்பரம் ஆசிரியர் போன் செய்திருந்தார். “தம்பி என் மருமகனை உங்களிடம் அனுப்புகிறேன் ஏதோ ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள்” என்றார்.
மறுக்க முடியாது. ஒரு காலத்தில் அவர் வீட்டில்தான் குடியிருந்தோம் மேலும் எனக்கும் சில விஷயங்கள சமயத்தில் உதவியிருக்கிறார். “சரி வரச்சொல்லுங்க சார்” என்றேன்.
மருமகன் இளைஞர் என நினைக்காதீர்கள். அவருக்கும் ஆச்சு வயசு 35. இரு குழந்தைகள் பெரியவள் 2 ஆம் வகுப்பு, சின்னவள் யு கே ஜி. மனைவி அரசு பள்ளி ஆசிரியை.
அடுத்த நாள் வந்திருந்தார். “மாமா நீங்க வேலை வாங்கித் தருவீங்கன்னு சொன்னாரு” என்றபடியேதான் பேச்சை ஆரம்பித்தார். நான் அவர் நலம், அவர் மனைவி குழந்தைகள் நலம் முதலியவற்றை விசாரித்தறிந்தபின், “சரி பயோ டேட்டா கொடுங்கள்”என்றேன்.
”எடுத்து வரவில்லை” என்றார்.
“சரி இந்தப் பேப்பரில் எழுதிக் கொடுங்கள்” என்றேன்.
கடவுளே இது போல ஒரு பயோ டேட்டாவுக்கு எவனுமே வேலை கொடுக்க மாட்டான். பி காம் படித்திருக்கிறார் என்பதைக்கூட எழுத மறந்து விட்டார்.
”சரி என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க” என்றதற்கு, “ எதுவாக இருந்தாலும் சரி”
“இல்லைங்க அடிப்படையா இவ்வளவு தேவைன்னு இருக்குமே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அதான் அவ சம்பாதிக்கிறாளே அப்புறமென்ன? இப்பக்கூட எங்க மாமனாருக்காகத்தான் வேலைக்கு போறேன்” என்று மேலும் அதிர்ச்சியூட்டினார்.
“சரி உங்க பயோடேட்டாவை மெயில் அனுப்புங்கள்” எனச்சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
விரக்தியுற்று அமர்ந்திருக்கையில், “சார்” அழைத்தது விக்னேஷ்
“சொல்லு விக்கி”
“இந்த வாரம் எவ்வளவு பேப்பர் சார்?”
“20000 ஏம்பா?”
“இல்ல சார் இந்த வாரம் காபிஸ் அதிகம் வரும்னு சொன்னீங்களே அதுதன் இன்னும் ரெண்டு பசங்க ஏற்பாடு செய்து கொள்ளலாமான்னுதான் கேட்டேன்”
“போதும் போன தடவை வந்த மாதிரி 10 பேர் வந்தாப் போதும்.”
“சரி சார்” என்று கட் செய்தான்.
விக்கினேஷ் கல்லூரி மாணவன். விடுமுறை நாட்களில் சின்னச் சின்ன வேலைகள் செய்து தனக்கான கல்விச் செலவை தானே பார்த்துக் கொள்வான். என் அச்சகத்தில் அச்சடிக்கப்படும் வார இதழ் ஒன்றை மடித்துத் தரும் வேலை, ஒவ்வொரு சனிக்கிழமை 10 பேரை அழைத்து வருவான், ஒரு பத்திரிக்கைக்கு இவ்வளவு எனப் பேசி வாங்கிக் கொள்வான். அவர்களுக்கான கூலி போக அவனுக்கும் ஓரளவுக்கு கையில் நிற்கும். சில சமயங்களில் இரவு வேலை இருந்தாலும் செய்வான்.
ஆசிரியரின் மருமகன் போன்றோர் அவநம்பிக்கையை வழியெங்கும் விதைத்துச் சென்றாலும், விக்கி போன்ற இளைஞர்கள்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
.

30 பேரு பாராட்டியிருக்காங்க:
//இப்பக்கூட எங்க மாமனாருக்காகத்தான் வேலைக்கு போறேன்” //
:(
சின்ன வயதில் இருந்தே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற உணர்வு பள்ளியிலும், உறவுகளாலும் ஊட்டப்பட்டது. அப்படி ஒரு சொந்தங்கள் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் போல் இருக்கிறது.
சரிதான்.
இந்த நிகழ்ச்சி எனக்கும் பெருமையளிப்பதாக கருதுகிறேன்
எனென்றால் நானும் பேப்பர் போட்டு அதில் வந்த வருமானத்தில்தான் கனிணி கற்றுக் கொண்டேன்
///ஆசிரியரின் மருமகன் போன்றோர் அவநம்பிக்கையை வழியெங்கும் விதைத்துச் சென்றாலும், விக்கி பேன்ற இளைஞர்கள்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.///
என்ன பண்றது நாட்டுல இப்படியும் சில பேர் இருக்காங்க
அற்புதமான இடுகை
இரு துருவமும் தவிர்க்க முடியாதது
நல்ல பதிவு... இதுபோலுன் சில மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள்..
முப்பத்தைஞ்சி வயசு வரைக்கும் சும்மாவே இருந்தவனை திடீர்னு வேலைக்குப் போன்னு சொன்னா எப்படி?!
தலைவரே..உங்ககிட்டயே பயோடேட்டாவா?
அந்த marumagana paththi vida vendiyathu தானே இதெல்லாம் boomiyil vaazalainnu யார் azuthathu
ஞாயிற்றுகிழமை ஹிண்டு இருந்தா கொடுங்களேன்னு பத்து வீட்டுல கலெக்ட் பண்ணி கடையில போட்டது ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது
ஆதங்கம் நியாயமானதே..
தலைப்பும் மிகப் பொருத்தமானது
நன்றி சின்ன அம்மிணி. நீங்க சொன்னது முக்கியமான கருத்து.
நன்றி ராஜு
நன்றி பிஸ்கோத்து. சின்ன வயசுல கத்துகிற இது போன்ற வாழ்க்கைப் பாடங்கள் நல்ல முதலீடு.
நன்றி கோஸ்ட்.
நன்றி கதிர்.
நன்றி அக்கிலீஸ்
நன்றி செல்வா. அது மாதிரித்தான் சில மேனேஜர்களும் 13 வருசம் சும்மா இருந்திட்டு திடீர்னு வேலை செய்யச் சொன்னா பயந்துருவாங்க. :-)))))).
நன்றி மணி. நாம பயோடேட்டா போட்டா டரியலா இருக்குமில்ல.
நன்றி பித்தன்.
நன்றி லோஷன்.
நல்லா இருக்கு!
//மருமகன் இளைஞர் என நினைக்காதீர்கள். அவருக்கும் ஆச்சு வயசு 35.//
அனுஜன்யா சார்பில் என் கண்டனங்கள்! 35ன்னா இளமை போய்டுமா என்ன?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா????
இந்த மருமகனை அப்பவே வளைச்சிருக்கணும்ணே.
இந்த மாதிரி மருமகனுங்க நெறைய பேரு இருப்பாங்களோ. :((
விக்கி மாதிரி இளைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தால் இன்னும் அவர்க்ள் முன்னுக்கு வர வாய்ப்புள்ளது.
:(((
யோவ் பரிசல், உன் சார்பா கண்டனம்னு சொல்ல வந்தால்..
என்ன இருந்தாலும் யூத்துங்க ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம் :)
ஒரு ஆளு சுகமா, ஹாயா இருந்தா இந்த உலகத்துக்கு ஏன் இவ்வளவு கோவம்? சரி சரி அடிக்க வராதீங்க. அந்த 'மருமகனை' நானும் கண்டிச்சுக்கிறேன்
அனுஜன்யா
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
இப்படியும் சில மனிதர்கள். தன்மானம் எனபதே இவங்களுக்கு கிடையாதா?
1.மக்கட் பதர்
2.ஓடினால்தான் ஆறு. தேங்கினால் குட்டை..
உங்களுடைய இந்த ரெண்டு பதிவும் ஞாபகம் வந்தது.
//சின்ன அம்மிணி Says:
September 8, 2009 9:11 AM
//இப்பக்கூட எங்க மாமனாருக்காகத்தான் வேலைக்கு போறேன்” //
:(
சின்ன வயதில் இருந்தே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற உணர்வு பள்ளியிலும், உறவுகளாலும் ஊட்டப்பட்டது. அப்படி ஒரு சொந்தங்கள் கிடைக்கவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும் போல் இருக்கிறது.//
நிச்சயமாக கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
இவர்கள் அடுத்தவர்கள் ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்பவர்கள.
இவர்களுக்காக உழைப்பவர்களை உழைக்க வேண்டியிருப்பவர்களை எண்ணி மனம் மிகவும் வேதனைபடுகிறது.
சரியாதான் சொன்னீங்க அண்ணாச்சி!
ஆமா.. அவருக்கு வேலை வாங்கி குடுக்கபோறிங்களா?
/இளைஞர் என நினைக்காதீர்கள். அவருக்கும் ஆச்சு வயசு 35/
இப்படி கவுத்திட்டீங்களே அண்ணாச்சி!
37 வயசானாலும் நாங்க இன்னும் யூத்ன்னு நினைச்சுகிட்டு தான் பொழப்ப ஓட்டிகிட்டு இருக்கோம். சபைக்குறிபப்பிலிருந்து மேற்கண்ட வார்த்தகளை நீக்குமாறு, துணை முதல்வரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பயோடேட்டா நீங்களே எழுதிக்கொடுத்துருக்கலாம் சார்....பாவம்...
//விக்கி போன்ற இளைஞர்கள்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.//
நிச்சயமா......
நாஞ்சில் சொன்னதைத்தான் நானும் சொல்லவந்தேன். என்ன பண்றது? ரெண்டும்தான் இருந்துதொலைக்கிறது.
செல்வேந்திரன் said...
முப்பத்தைஞ்சி வயசு வரைக்கும் சும்மாவே இருந்தவனை திடீர்னு வேலைக்குப் போன்னு சொன்னா எப்படி?//
ஹிஹி.. அவரு ஒண்ணும் அதுவரை சும்மா இருக்கலை.
வேலை கேட்டு, வேறொருத்தர் மூலமா வர்ற பல பேர் கிட்ட என்ன வேலை நமக்கு தெரியும், என்ன வேலைக்கு போலாம்-அப்பிடிங்கிற தெளிவு இல்லங்க. என்ன வேலைங்க உங்களுக்கு வேணும்னு, கேட்டாக்க, எதுனாலும் பரவாயில்லீங்க'னு சொல்லுவாங்க.
அதே மாதிரி பயோ-டேட்டா பத்தின அறிவு இந்த மாதிரி ரெண்டுங்கெட்டான் ஆளுங்களுக்கு கெடயாது.
நான் ஒருத்தர் கிட்ட பயோ-டேட்டா கேட்டதுக்கு, ஒரு வெள்ளை பேப்பர்ல முகவரி எழுதி குடுத்துட்டு போனாரு. அவரு படிச்சது? எம்-காம்.
நன்றி பரிசல். அனுவ ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க?
நன்றி தராசு. இந்த மாப்பிள்ளையைப் பார்க்கும்பொதே நான் வேண்டாம்னு சொன்னேன்.
நன்றி அமித்து அம்மா.
நன்றி கார்க்கி
நன்றி அனுஜன்யா. இதுக்கெல்லாம் வருத்தப் படாதீங்க. பரிசலுக்கு உங்க இளமை(யின் ரகசியத்தின்) மேல பொறாமை.
நன்றி ராகவன்.
நன்றி நாஞ்சில்
நன்றி வரதராஜ்.
நன்றி கலை. அவருக்காக இல்லையெனினும் அவரது மாமனாருக்குக்காக வாங்கி கொடுக்கனும்.
நன்றி ஸ்ரீனி. 35 வயசுக்காகச் சொல்லலை. 35 வயசாகியும் பொறுப்பில்லையேன்னுதான்.
நன்றி வசந்த். பயோடேட்டா நாம எழுதிக் கொடுக்கக்கூடாது. எழுதுனத சரி பண்ணிக் கொடுக்கலாம்.
நன்றி ஆதி.
நன்றி சிவா
விக்கி மாதிரி பசங்கள பத்திரமா பார்த்துக்கங்க அண்ணாச்சி. தொடர்ந்து ஆதரவு குடுங்க. அந்தப் பையன் கல்விக்காக எதுவும் உதவி தேவையின்னா சொல்லுங்க ,இது மாதிரி பையனுங்க நல்லா படிச்சு மேல வரணும் அண்ணாச்சி.
அண்ணே
உண்மயிலேயே அவர்கள் இருவரும் வெவ்வேறு துருவங்கள் தான்.
உங்கள் போன்ற சொந்த தொழில் செய்வோர் இதுபோல மாணவர்களை ஊக்குவிப்பது மகிழ்சியாக உள்ளது.
நானும் அப்படி வந்தவன் தான்.
மிக்க நன்றி
:(
Post a Comment