சென்ற வார வெள்ளிக் கிழமை கமலும் காதலும் நிகழ்ச்சிக்கு விவிஐபி பாஸில் அழைத்துச் சென்றார் செல்வேந்திரன். எஸ் பி பி, சித்ரா போன்ற சீனியர்களுடன் ஹரிச்சரன், கார்த்திக், மதுமதி, ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி போன்றோரும் வந்திருந்தனர். நிகழ்ச்சி சிறப்பாகவே நடந்ததெனினும் திருஷ்டிப் பரிகாரமாக அமைந்தது அர்ச்சனாவின் தொகுத்து வழங்கலும் ஸ்ரீராம் பார்த்தசாரதி கொலை செய்த ஜேசுதாஸின் அண்ணாவின் நல்ல பாடல்களும்.
தான் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலேயே பேசிக்(பினாத்திக்? ) கொண்டிருந்தார் அர்ச்சனா. அர்ச்சனா டவுன் டவுன் என்ற பேரோசை அவர் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.
கண்ணே கலைமானே போன்ற நல்ல பாடலையெல்லாம் தேவையில்லாத சங்கதிகளைப் போட்டு கடித்துத் துப்பினார் ஸ்ரீராம். ஒரே ஆறுதல் ஹரிச்சரனும், கார்த்திக்கும். இருவரும் எஸ்பிபியுடன் இணைந்து பாடினார்கள். நிறைவாகவே செய்தனர் இருவரும். அதிலும் இளமை இதோ இதோ பாடலை ஹை பிட்ச்சிலும் நன்றாகப் பாடினார் ஹரிச்சரன். சொர்க்கம் மதுவிலே பாடலை கார்த்திக் அபாரமாகப் பாடினார். அவரது உடல் மொழி - வீட்டுக்கு அடங்காத பிள்ளை என்ற தோற்றத்தைத் தந்தாலும் எஸ் பி பியிடம் அவர் காட்டிய மரியாதை மெச்சத்தகுந்தது.
ஒரு பாட்டுக்கு சைந்தவி மேடைக்கு வர அவரிடம் எஸ் பி பி , “ இந்தப் பாடலை நான் பாடிய போது நீ பிறந்திருக்கக்கூட மாட்டே. ஆனாலும் உன்னை மாதிரி இளைய பாடகருடன் பாட சந்தர்ப்பம் கிடைத்தது நான் செய்த பாக்கியம் ”என்றார். அநியாயத்துக்கு மாடஸ்டா இருக்கார். அதனால்தான் இத்தனை இளைஞர்கள் பாட வந்தாலும் அவர் கொடி பறக்குது போல.
************************************************************************************
வந்தணா என்ற பெண் பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். பரிட்சையில் காப்பி அடித்து மாட்டிக் கொண்டார். பெற்றோரை அழைத்து வரச் சொன்னதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டாராம். எல்லோரும் பள்ளியில் கொடுமை செய்கிறார்கள் எனப் பேசிக் கொண்டிருக்க என் மனைவியின் தரப்பு (ஆசிரியை) வேறு விதமாக இருக்கிறது.
இதெல்லாம் மாணவரை ஆசிரியர் அடிக்கக் கூடாது என்ற சட்டத்தால் வந்ததுதான். முன்பெல்லாம் ஆசிரியர் மாணவரை அடிப்பதும் திட்டுவதும் சகஜமாக இருந்தது. நாலு பேருக்கு முன்னால் திட்டினாரே எனப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள் திட்டவே பயப் படுகின்றனர். எனவே கொஞ்சம் சத்தமாகப் பேசினாலும் திட்டுவதாக நினைத்துக் கொண்டு அதி தீவிர முடிவுக்கு ஆளாகின்றனர்.
அது சரி காப்பி அடித்தது சரியா?
************************************************************************************
மதிலுகள் என்ற அடூர் கோபால கிருஷ்ணன் திரைப் படத்தை உங்களில் சிலர் பார்த்திருக்கக் கூடும். அது பற்றிய புத்தகம் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. காலச்சுவடு வெளியீடு.
வைக்கம் முகமது பஷீர் எழுதிய மதிலுகள் நாவலை விட, நாவல் எந்தச் சூழ்நிலையில் எழுதப் பட்டது என்ற ராஜவிள ரமேசனின் கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது.
அந்நாவல் திரைப்படமாக்கப் பட்ட விதம் பற்றிய அடூரின் கட்டுரையும் முகியமான ஒன்று. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்திருப்பவர் கவிஞர் சுகுமாரன். அவரை 13ஆம் தேதி நடக்கவிருக்கும் சிறுகதைப் பட்டறையில் சந்திக்கலாம்.
மீண்டும் அப்படத்தைப் பார்க்கும் ஆவல் எழுகிறது.
*************************************************************************************
இசை என சிற்றிதழ் பரப்பில் அறியப்படும் சத்திய மூர்த்தி கோவைக்காரர். பார்ப்பது மருந்தாளுநர் உத்தியோகம் என்றாலும் கொள்ளை கொள்வது கவி மனங்களை. பழகுவதற்கு இனிய இவரை சமீபத்தில் வ உ சி பூங்காவில் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தது ஒரு இனிய அனுபவம். உறுமீன்களற்ற நதி என்ற கவிதைத் தொகுதி காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியாகி இருக்கிறது.
கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது
கர்த்தர் வருகிறார்
அவர் நமக்காய் கொண்டு வரும்
புளித்த அப்பங்கள்
ரொம்பவே புளித்து விட்டன
ஆனால், கர்த்தர் வருகிறார்
உங்கள் அன்பில்
நண்பர்களுக்கு சலிப்பேறி விடலாம்
உங்கள் காதலியை
புத்திசாலிகள் களவாடிக் கொள்ளலாம்
கர்த்தர் வருகிறார்
பாதி வழியில் அவர் வாகனம்
பழுதாகி நின்று விட,
அவர் நடந்து வருகிறார்
ஆனாலும் கர்த்தர் வருகிறார்
இன்னுமொரு தேர்தல் முடியட்டும்
இன்னொரு மக்களாட்சி மலரட்டும்
கர்த்தர் வருகிறார்
எப்போதும் மிரட்டிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் மிரட்டட்டும்
எப்போதும் இறைஞ்சிக் கொண்டிருப்போர்
இன்னும் கொஞ்சம் இறைஞ்சட்டும்
இரட்சிப்பின் நாயகர் வருகிறார்
கர்த்தர் ஒருவரே
அவருக்கு உதவியாளர்கள் யாருமில்லை
அவரே எல்லா இடங்களுக்கும்
வர வேண்டி இருக்கிறது
ஆனாலும் அவர் வருகிறார்
நீதியின் மீது பசிதாகமுடையோருக்கு
இன்னும் கொஞ்சம் பசிக்கட்டும்
வெகு காலம் பற்கடிப்பில் உள்ளோர்
இன்னும் கொஞ்சம் கடிக்கட்டும்
கர்த்தாதி கர்த்தர் வருகிறார்
இன்னும் கொஞ்சம் எரிகணைகள் வீழட்டும்
இன்னும் கொஞ்சம் ஓலங்கள் கூடட்டும்
கர்த்தர் வருகிறார்
பயப்படாதே சிறு மந்தையே!
கர்த்தர் on the way.
- இசை (சத்ய மூர்த்தி)
************************************************************************************
புதுசா எழுத வந்தவர்களில் என்னைக் கவர்ந்தவர் ரமேஷ் விஜய். தமிழ் நகைச்சுவை என்ற இவரது வலைத்தளத்தை நீங்களும் பாருங்களேன். நல்ல நகைச்சுவைக்கு உத்திரவாதம்; யோசிக்கவும் வைக்கிறார் சில பதிவுகளில்.
************************************************************************************
பிறந்தாளுக்கு வாழ்த்துச் சொன்னதும், ”அண்ணாச்சி நெஞ்சத் தொடுறா மாதிரி எதாவது சொல்லுங்க”ன்னார் சஞ்சய்.
“பனியன்” அப்படின்னேன் நான். அதுக்கப்புறம் லைன்ல வரவேயில்லை.
.
எந்திரன் - கார்ட்டூன்
34 minutes ago

28 பேரு பாராட்டியிருக்காங்க:
09-09-09 09:09 இந்த டைம்ல இங்க துபாய்ல Flying Train விடுறாங்க..
09-09-09 09:09 இந்த டைம்ல நீங்க கதம்பம் விடுறீங்க..
இரண்டு நிகழ்ச்சியிலேயும் கலந்துகிட்டேனே!!
அண்ணாச்சி உஙக்ளிடம் இருந்து மெயிலில் அந்த நகைச்சுவை தளத்திற்கு லின்க் வந்தது. பார்த்தேன்.. ஆனால் பலவும் மெயிலில் வந்த ஜோக்குகளே..
நான் கூட 09-09-09 09:09 இங்கவுள்ள டைம்ல பின்னூட்டம் போடலாமுன்னு இருந்தேன்! ஆனா.. அதுக்கு முன்னாடி யாராவது போட்டுடாங்கன்னா....?
மீத த 1,ஒன்னேகால்,ஓன்னரை,ஒன்னேமுக்கால்,2ஏஏஏஏஏஏ!
அந்த பள்ளி மாணவி தற்கொலையில் அவர் காப்பியடித்தார் எனும் செய்தி மறக்கடிக்கப்பட்டுள்ளது. அப்போ என்ன தப்பு செஞ்சாலும் கண்டிக்க கூடாதா?
இது ஒன்னு மட்டும் புரியல அண்ணாச்சி. போன வாரம் பெரம்பலூர் பக்கத்துல குடிச்சுட்டு பைக் ஓட்டிக்கிட்டு வந்தவங்க சென்னை திருச்சி சாலையில போன வேகத்துல கார்ல மோதி ரெண்டு பேரு விழுந்துட்டாங்க. ஒரு ஆளு அங்கயே காலி, இன்னொருத்தரு கோமால இருக்காரு. இதுல அவங்க வந்தது தப்பான பக்கத்துல. குடிச்சுட்டு வண்டிய வேகமா ஓட்டியிருக்காங்க. அவங்க வர்றத பார்த்துட்டு கார் ட்ரைவர் கார நிறுத்திட்டாரு. அப்டியும் நின்ன கார்ல மோதி விழுந்துருக்காங்க. சுத்தி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்த மக்கள் உடனே அந்த கார் ட்ரைவர அடிக்க போயிருக்காங்க. இது என்ன நியாயம்னு தெரியலை. தப்பான பாதையில வந்தாலும், நிறுத்திட்ட கார்ல மோதினாலும் அடி கார் ட்ரைவருக்குன்னா, அது என்ன நியாயம்? மக்களோட மனநிலை ஏன் அப்டி இருக்கு?
இப்ப இந்த தற்கொலையில் இந்தப் பொண்ணு பரிட்சையில காப்பி அடிச்சத கண்டிசது தப்பா? மரணம் எல்லா தப்பையும் மறக்கடிச்சுருமா? அந்த பள்ளி மேல அந்தப் பெண்ணோட பெற்றோர் புகார் குடுத்துருக்கதாகவும், வழக்கு பதிவு செஞ்சுருக்காங்கன்னும் படிச்சேன். அப்போ இனிமே எந்த பள்ளியிலயும் காப்பி அடிக்கிறத கண்டுக்காம விட்ரலாமா? செய்யிற தப்பையெல்லாம் செஞ்சுட்டு, அத எதிர்கொள்ளும் தைரியம் இல்லாம தற்கொலை செஞ்சுகிட்டா அந்த தப்பையெல்லாம் மறந்துடனும்னு ஒரு மனநிலை இருக்கது ரொம்ப மோசம்.
பனியன்னு சொன்னதுகப்புறமும் அவர் ஏன் பேசப்போறார்.?
அந்த நகைச்சுவை பதிவுகள் எல்லாமே ரொமபவும் பழைய, மெயில் ஜோக்குகள் நிறைய.. அண்ணாச்சி
அந்த நெஞ்சைத் தொடற சமாச்சாரம் கலக்கல் அண்ணாச்சி,
ஜோசப் பால்ராஜை வழிமொழிகிறேன்.
ஸ்ரீராம் பார்த்தசாரதியா அப்பிடி பாடினாரு? ஆச்சரியமா இருக்கு...
arumai, isaiyin kavithai pakirvukku nanri
இது என்னங்க இது இப்படி எழுதறாங்க.. காப்பி அடிக்கறது எல்லாம் பெரிய விசயமா? சிறு வயதில் காப்பி / பிட் அடிக்காதவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் (அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளா விட்டாலும்).
எல்லார் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டு பெற்றோர்களையும் கூட்டி வா (எதுக்கு இதுக்கு பெற்றோர்???) என மிரட்டப்பட்டதால் தான் அப்பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்.
உண்மையில் அங்கு ஆசிரியர்களாயிருப்பவர்கள் செய்திருப்பது கொலை.
//அதனால்தான் இத்தனை இளைஞர்கள் பாட வந்தாலும் அவர் கொடி பறக்குது போல.
//
ஆமாண்ணே. இன்னைக்கும் அவருக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஒத்துக்கிட்டார்னா ஒரு பயலுக்கும் வாய்ப்பு கிடைக்காது. என்னைய கூப்பிடாதீங்கன்னு கெஞ்சி கேக்குறாரு.அப்படியும் ஒரு நாளைக்கு 2 பாடல் ரெக்கார்டிங் பண்ணிக்கிட்டுதான் இருக்காரு.அவரா பார்த்து போதும் போங்கடான்னு விட்டுட்டுப்போனால்தான்.
:)
ஊர்மேல போவாளாம் சொன்னா அழுவாளாம் என்ற சொலவடை எங்க ஊரில் உண்டு.
நான் படிக்கும் போதெல்லாம்....? என் அப்பவோ, அம்மாவோ எங்கள் வகுப்பாசிரியரை காணும்போதெல்லாம், "படிக்கலைன்னா....? கண்ணு ரெண்டையும் விட்டு நல்ல சாத்து சாத்துன்னு சாத்துங்க என்பார்கள்". அதுபோல் நிறைய நடந்தும் இருக்கிறது.
தீட்டாத வைரமும்,
உளிபடா கல்லும்,
ஏர்படா மண்ணும்,
வியர்க்காத உடம்பும்,
வீண் வீண் வீண்......
நன்றி கலை.
நன்ரி கார்க்கி. அப்படியா? என்றாலும் நான் படிக்காததாக இருந்ததால் பரிந்துரைத்தேன்.
ஜோ கீழ சுந்தர் சொல்லியிருப்பதைப் பாருங்க. எனக்கு என்ன புரியலைன்னா. காப்பி அடிச்சதக் கண்டுக்காம விட்ட மத்த குழந்தைகளும் கெட்டுப் போக மாட்டார்களா? அப்ப எதுக்கு ஆசிரியர் எல்லாம்?
நன்றி சங்கர்.
நன்றி அரசு
நன்றி மகேஷ். ஸ்ரீராம் நல்லாப் பாடுவார்னுதான் போனோம். ஆனா அவரு கர்நாடக சங்கீதக் கச்சேரிகள்ல பிர்கா பாடுவாங்களே அது போல பாடினார். கண்ணே கலைமானே பாட்டை எங்க ஊரு மல்லி சேரி ஆர்க்கெஸ்ட்ராக் காரங்களே நல்லாப் பாடுவாங்க.
நன்றி மண்குதிரை.
நன்றி சுந்தர். அப்ப காப்பி அடிக்கிறதச் சரிங்கிறீங்களா? நானும் பிட்டடிச்சு மாட்டியிருக்கேன். ஒரு வாரம் கிளாஸ்ல நின்னுகிட்டே இருன்னுட்டாரு வாத்தியார். பசங்க பன்ணுன கிண்டல் கூட பரவாயில்லை நான் சைட் அடிச்ச பொண்ணுங்க முன்னாடி அவமானப் பட்டதுதான் கொடுமை. ஆனா கிளசுக்கு ரெண்டு பேரு மூணு பேரு இருந்ததுனாலயும் அவங்க நம்ம நல்லதுக்குத்தான்னு ஒரு புரிதல் இருந்துச்சு. இப்ப இல்லையே. மேலும் பெற்றோர்கள் தரும் அழுத்தமே காரணம். பெயிலானா திட்டுவாங்களே தவிர ஏன்ன்னு அனலைஸ் பண்ணுவதில்லை.
நன்றி அப்துல்லா. நிகழ்ச்சி முழுவதும் அவர் எல்லோரையும் பாராட்டியும் எடுத்துக் கொடுத்தும் ஊக்கப்படுத்தியவாறே இருந்தார்.
நன்றி பித்தன்.
//தீட்டாத வைரமும்,
உளிபடா கல்லும்,
ஏர்படா மண்ணும்,
வியர்க்காத உடம்பும்,
வீண் வீண் வீண்......//
நல்லா இருக்கு.
அண்ணாச்சி, விவாதம் பண்றேன்னு நினைக்காதீங்க.
காப்பி அடிக்கறது தப்பு இல்லைன்னு சொல்லலை. ஆனா அத தற்கொலைக்குத் தூண்டற அளவுக்குத் தண்டிக்கறது ஒப்பீட்டளவுல மிகப் பெரிய தப்பா தெரியுது. காப்பி அடிச்சு மாட்டினா ஆசிரியர்கள் நிச்சயம் தண்டிப்பார்கள். ஆனால் பெற்றோர்களைக் கூட்டிவரச் சொல்லி அவர்களிடம் (சாதாரணமாக) மாட்டிவிட மாட்டார்கள்.
எந்த அளவிற்கு அவமானப் பட்டிருந்தால் அப்பெண் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கக் கூடும்!
சுந்தர்,
காப்பி அடிப்பதும், மாட்டிக் கொள்வதும் பெற்றோரை அழைத்துவரச் சொல்வதும் நடைமுறைதானே?
தங்கள் குழந்தை அந்தளவுக்கு சென்சிட்டிவ் எனில் பெற்றோர்தான் பொறுப்பாக இருக்க வேண்டும். அந்தப் பள்ளியில் சேர்ப்பதே மதிப்பெண்ணைக் குறி வைத்துத்தான். அப்படியிருக்க ஆசிரியர்களைக் குற்றம் சொல்லி பிரயோசனமில்லை. என் பெண் என்ன மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை எனச் சொல்ல பெற்றோர் தயாரா?
வழக்கம் போல சிறப்பான கதம்பம்.
காபியடித்ததில் ஜோஸபின் கருத்துகளே என்னுடையதாயினும் இவ்வளவு ஃப்ரஜைலாக அந்தப்பெண்ணை வளர்த்த பெற்றோரே, அதைக்கண்டுகொண்டு திருத்தாத ஆசியர்களே குற்றவாளிகள் என நான் நினைக்கிறேன்.
//ஜ்யோவ்ராம் சுந்தர் Says: September 9, 2009 11:58 AM
இது என்னங்க இது இப்படி எழுதறாங்க.. காப்பி அடிக்கறது எல்லாம் பெரிய விசயமா? சிறு வயதில் காப்பி / பிட் அடிக்காதவர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் (அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளா விட்டாலும்).
எல்லார் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டு பெற்றோர்களையும் கூட்டி வா (எதுக்கு இதுக்கு பெற்றோர்???) என மிரட்டப்பட்டதால் தான் அப்பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறாள்.
உண்மையில் அங்கு ஆசிரியர்களாயிருப்பவர்கள் செய்திருப்பது கொலை. //
சுந்தர் அண்ணா, உங்க கருத்தை முழுமையா மறுக்கிறேன்.
கல்வியையும் விட ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் போதிப்பது தான் ஆசிரியர்களுடைய முக்கிய கடமை.
ஏற்கனவே ஆசிரியர்கள் மாணவர்கள அடிக்க கூடாது, திட்டக்கூடாதுன்னு சொல்லி பல சட்டத்திட்டங்கள் வந்தாச்சு. இதுக்கு பயந்துகிட்டே பல ஆசிரியர்கள் மாணவர்கள் செய்யிற தப்ப உடனே வீட்டுக்கு கூப்பிட்டு பெற்றோர்கள்கிட்ட தான் சொல்றாங்க. இந்தப் பள்ளியிலும் அதே மாதிரி நடந்துருக்கலாமே. எப்டி தற்கொலைக்கு தூண்டுணாங்கன்னு சொல்றீங்க?
அப்ப இனிமே ஆசிரியர்கள் எல்லாம் பாடம் நடத்துறத தவிர வேற எதையும் கண்டுக்க கூடாதுன்னு சொல்றீங்கள?
என்னவோ ஆசிரியர்கள் என்றால் புனிதர்களைப் போலவும் அவர்களுக்கு மாணவர்களை அடிப்பதற்குண்டான லைசன்ஸ்களை கேள்வி கேட்காமல் வழங்க வேண்டுமென்றும் இன்னும் சிலர் அப்படி லைசன்ஸ் இல்லாததால்தான் குழப்பமே என்று சொல்வதையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த மாதா பிதா குரு தெய்வம் போன்ற ஹம்பக்களில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்னும் சொல்லப் போனால் மக்களின் இந்த மனப்பான்மையிலிருந்துதான் பிரச்சனை தொடங்குகிறது என்றே நினைக்கிறேன்.
கலக்கல்
மிக அருமை அண்ணாச்சி
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
இன்றைய பல மாணவர்கள் பலரிடம் இருக்கும் மனநிலை.... நான் படிக்க கட்டுற ஃபீஸ்ல தான் ஆசிரியர்கள் சம்பளம் வாங்கறாங்க.. அதனால அவர்கள் நமக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டவர்கள் என்பதுதான்... இதற்கெல்லாம் யாரைக் குத்தம் சொல்றது?:-(
எல்லாமே நல்லா தொகுக்கப்பட்டிருக்கு.
மாணவியின் மரணம் வருத்தமளிக்குது அண்ணாச்சி இதுக்கு ஆசிரியர்கள்தான் காரணம்...
”கர்த்தர் வருகிறார்” கவிதைய படிச்சிட்டு பின்னூட்டம் போடாம போனா என் நாத்திகத்துக்கு அர்த்தமேயில்ல!
அருமையான கருத்துகள்!
”கர்த்தர் வருகிறார்” கவிதைய படிச்சிட்டு பின்னூட்டம் போடாம போனா என் நாத்திகத்துக்கு அர்த்தமேயில்ல!
அருமையான கருத்துகள்!
மொத்தத்தில் கதம்பத்தில் நெஞ்சைத் தொட்ட அண்ணாச்சி வாழ்க.
//மக்களோட மனநிலை ஏன் அப்டி இருக்கு? //
நிறைய விஷயங்களில் அப்படித் தான் ஜோஸப்,இது அந்த பொது புத்தின்னு சொல்லுவாங்களே அதில் வருமா?
//பிறந்தாளுக்கு வாழ்த்துச் சொன்னதும், ”அண்ணாச்சி நெஞ்சத் தொடுறா மாதிரி எதாவது சொல்லுங்க”ன்னார் சஞ்சய்.
“பனியன்” அப்படின்னேன் நான். அதுக்கப்புறம் லைன்ல வரவேயில்லை.//
:)
சிறப்பான கதம்பம் அண்ணாச்சி.
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. :(
Post a Comment