Friday, August 14, 2009

ஊஞ்சலாட்டம்



கை மீறிச் சென்ற காரியங்களின்
எதிர்மறை விளைவுகள்
துக்கம் கவியச் செய்கின்றன
பெருமழைக்கு முன்னான
கருமேகம் போல்

வார்த்தைகளின் கூர்மையில்
காயம்பட்டுச்
சிந்தும் ரத்தத்துளிகள்
வரைகின்றன
யாருக்கும் புரியாத ஓவியங்களை

என்றாலும்

கடந்து செல்பவளின்
இடுப்புக் குழந்தை
கண்விரிய சிரித்த
கையசைப்பிலும்

குறுகலான சந்தில்
ஸ்கூட்டியில் எதிர்ப்படும்
பெண்ணின் குழப்ப முகபாவங்களும்
குறுகுறுப்புடன் சொல்லும் சாரியும்

சைடு ஸ்டாண்ட் போட்ட பைக்கின்
கண்ணாடியில் தலை சீவும்
ஒற்றைக்கால் இளஞனின்
சந்தோஷமும்

என
வேறொரு உலகமும் விரிகிறது

நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை.




.

20 பேரு பாராட்டியிருக்காங்க:

kartin said...

யதார்த்தங்களுடன் பிணைந்து உறவாடுகிறது இக்கவிதை...
சைடு ஸ்டாண்ட் இளைஞர்களைப் புன்சிரிப்புடன் கடக்கிறேன்!!

அனுஜன்யா said...

நல்லா இருக்கு வேலன். எனக்குப் பிடிச்சிருக்கு.

அனுஜன்யா

தண்டோரா ...... said...

கைமீறி செல்லும் காரியங்களின் விளைவுகள் எதிர்மறையாகத்தானே இருக்கும்.பின் எதிர்மறை என்ற வார்த்தை அனாவசியம்தானே..

(ஜ்யோவ்ராம்சுந்தர் இப்படித்தான் கேப்பாரு??)

டக்ளஸ்... said...

மிஸ்டர். தண்டோர..
சும்மாவே இருக்க மாட்டீங்களா...?

அண்ணாச்சி, கவிதை நல்லாருக்கு.

தண்டோரா ...... said...

மிஸ்டர். தண்டோர..
சும்மாவே இருக்க மாட்டீங்களா...?

அண்ணாச்சி, கவிதை நல்லாருக்கு/

தம்பி டக்ளஸ் நீ ஜியோவுக்கு தமிழ் வாத்தியாரா?

கதிர் - ஈரோடு said...

//கண்விரிய சிரித்த
கையசைப்பிலும்//

//குறுகுறுப்புடன் சொல்லும் சாரியும்//

ஆகா... இதயத்தை வருடும் வரிகள்

ஊர்சுற்றி said...

ஊசலாட்டம்தாங்க.

பிரபாகர் said...

//நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை//

நண்பா,
உங்களை படித்து தொடர ஆரம்பித்திருக்கிறேன்... யதர்த்தமாய், எளிமையாய், ஏற்புடையதாய் இருக்கிறது.

கலக்குங்கள்...

பிரபாகர்.

நர்சிம் said...

அருமை அண்ணாச்சி

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு அண்ணாச்சி.

நாடோடி இலக்கியன் said...

அருமை,மிகவும் ரசிக்கும் படியான கவிதை அண்ணாச்சி.

அன்றாட நிகழ்வுகளை கவிதையாக்கும் உங்களின் கவி பார்வைக்கு ஒரு ராயல் சல்யூட்.

மண்குதிரை said...

kavithai nalla irukku. rasiththeen

mankuthiray

sakthi said...

யதார்த்தமாய் ஒரு கவிதை வேலன் அண்ணா அருமை

பட்டிக்காட்டான்.. said...

//.. ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை. ..//

:-)

:-(

மங்களூர் சிவா said...

அட்டகாசம்

படிச்சவுடனே
பளீர்னு புரியுது! ஒருவேளை இது கவித இல்லையோ???
:)

பித்தன் said...

நல்லா இருக்கு

மஞ்சூர் ராசா said...

நிதர்சனத்தை சொல்கிறது

நாணல் said...

யதார்த்தமா அழகா இருக்குங்க கவிதை...

//நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும்
இடையேயான
ஊசலாட்டமாகக்
கடக்கிறது வாழக்கை.///

நிதர்சனமான உண்மை....

Nundhaa said...

nice

பா.ராஜாராம் said...

//வார்த்தைகளின் கூர்மையில் காயம் பட்டுச்சிந்தும் ரத்த துளிகள்//திடுக்கிடுகிறது.கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு வேலன்.