Tuesday, August 11, 2009

ஆதி பயோடேட்டா


பெயர் : ஆதி

பழைய பெயர் : தாமிரா

வயது : தொப்பை போடும் வயது அல்ல

தொழில் : பதிவு எழுதுவது

உபதொழில் : மற்ற நேரங்களில் அலுவலகம் செல்வது

நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்

எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்

பிடித்த வேலை : தங்கமணி பதிவு எழுதுவது

பிடிக்காத வேலை : மேலதிகாரி செய்யச் சொல்லுவது

பிடித்த உணவு : ரமா சமைப்பது (வேறு வழியில்லாததால்)

பிடிக்காத உணவு : இனிமேல்தான் கண்டுபிடிக்கணும் (தொப்பையே சாட்சி)

விரும்புவது : நண்பர்களுடன் அரைட்டை அடிக்க

விரும்பாதது : ரமா கடைக்குப் போகச் சொல்லுவது

புரிந்தது : திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது

புரியாதது : எப்படித்தான் மத்தவனெல்லாம் சமாளிக்கிறான் என்பது

சமீபத்திய எரிச்சல் : சுபாவை சமாளிக்க முடியாதது

நீண்டகால எரிச்சல் : ரமாவிடம் பல்பு வாங்குவது(அடிக்கடி)

சமீபத்திய சாதனை : கார்க்கியை வைத்து குறும்படம்

நீண்டகால சாதனை : கேமராவை வைத்துப் படம் காட்டுவது


டிஸ்கி : இதையும், இதையும் படிங்க.

36 பேரு பாராட்டியிருக்காங்க:

தமிழன்-கறுப்பி... said...

சூப்பரு..!!

:)

தமிழ் பிரியன் said...

;-))))

தமிழ் பிரியன் said...

///எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்///
அவ்வ்வ்

ச்சின்னப் பையன் said...

//நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்//

நான் போட்டுட்டேன்பா....

கும்க்கி said...

ஹி...ஹி...ஹொஹைய்யாஹோ ஹிரே.

என்ன கோவமிருந்தாலும் அந்த படத்த நீங்க இப்படி குதறியிருக்க கூடாது அண்ணாச்சி.

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. அண்ணாச்சி கலக்கிபுட்டீங்களே...

சின்ன அம்மிணி said...

/////எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்/////

அப்பாடு நான் அப்பப்ப பின்னூட்டம் போடுவேன்

பட்டிக்காட்டான்.. said...

//நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்//

ஹை.. நானும் நண்பன்தான்..!

நிஜமா நல்லவன் said...

/எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்/


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....அப்போ நான் அவருக்கு எதிரியா? என்ன கொடுமை அண்ணாச்சி இது? இன்னைக்கே இப்பவே அவருக்கு ஒரு பின்னூட்டமாவது போட்டுடுறேன்:)

சரவணகுமரன் said...

சூப்பர் :-)

படம், பாலுமகேந்திரா மாதிரி இருக்குது!

ராமலக்ஷ்மி said...

//எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்//

நல்லவேளையாக இந்த லிஸ்டிலிருந்து சமீபத்தில் என் பெயர் அடிக்கப் பட்டு விட்டதாக மகிழ்கிறேன்:)!

நட்புடன் ஜமால் said...

நான் எதிரி லிஸ்ட்டில் இல்லைப்பா

நண்பன் தான்.

kumar said...

//நண்பர்கள் : பாலோயர்ஸ், பின்னூட்டம் இடுபவர்கள்//

நான் போட்டுட்டேன்பா....

Cable Sankar said...

:)

டக்ளஸ்... said...

அந்த தொப்பி கார்க்கியோடதுதான...?
:)

பித்தன் said...

me too his friends

நிஜமா நல்லவன் said...

/எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்/

இங்க இருந்து அங்க போய் பின்னூட்டம் போட்டுட்டு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டேன்:)

ஸ்ரீமதி said...

சூப்பர் அண்ணா.. :))))))))))))

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

புரிந்தது : திருமணத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பது

புரியாதது : எப்படித்தான் மத்தவனெல்லாம் சமாளிக்கிறான் என்பது//

இதுதான் ஹைலைட்டே.. நிஜமான சந்தேகமே அதுதான். நண்பர்கள் யாரையாவது சந்திக்கையில் நைசாக போட்டு வாங்க ட்ரை பண்ணுவேன். கல்லுளி மங்கனுவோ ஒண்ணுமே சொல்லாம எஸ்ஸாகி போயிடுவானுங்க..

மொத்தத்தில் இன்னிக்கு நான் போடலாம்னு நினைச்ச பதிவு அம்பேல்.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

///எதிரிகள் : பின்னூட்டம் இடாதவர்கள்///
இதை படித்துவிட்டு இன்று பதிவுக்கு வந்து பின்னூட்டிச்சென்றிருக்கிறார்கள் பலர். ரொம்ப நாளைக்கப்புறம் பின்னூட்டம் 50ஐ தாண்டியிருக்கிறது.. அந்த பயம் இருக்கட்டும்.!

(நண்பர்களனைவருக்கும் நன்றி. இன்று கேபிள் சங்கரும் என்னை காரெக்டர்ர்ர்ராக்கி ஒரு பதிவு போட்டிருக்கிறார். கோ இன்ஸிடெண்ட்.!)

பைத்தியக்காரன் said...

:-) :-) :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

பரிசல்காரன் said...

ண்ணாச்சீஈஈஈ..

கடும் கோவம் வருது எனக்கு!

ஒண்ணுமே எழுத நேரமில்லாம எத எழுதலாம்னு நெனைச்சேனோ அத நீங்க முந்தி எழுதீட்டீங்களே...

அனுஜன்யா said...

அண்ணாச்சி, கலக்கல்!

இது என்ன ஆதி வாஆஆரமா? (ஆதி, "வா! ஆ ஆ ரமா!" என்று படித்தால் நான் பொறுப்பல்ல)

அனுஜன்யா

வால்பையன் said...

அண்ணாச்சி எல்லா ரங்கமணிகளுக்கும் பொருந்துர மாதிரி இருக்கே!

நாஞ்சில் நாதம் said...

:))

தாரணி பிரியா said...

ஹை உங்க பயோடேட்டா எப்பங்கண்ணா வரும் :)

அறிவிலி said...

கலக்கல்"டேட்டா"

நேசமித்ரன் said...

;-))))

சூப்பர் :-)

கார்க்கி said...

//அந்த தொப்பி கார்க்கியோடதுதான//

ரொம்ப முக்கியம்...

கலக்கல் அண்ணாச்சி..

//சமீபத்திய சாதனை : கார்க்கியை வைத்து குறும்படம்//

அண்னாச்சி, அது சமீபத்திய சாதனையா? நீங்க என்ன டோண்டு அண்ணாச்சியா?

அத்திரி said...

ஹாஹாஹாஹா................அண்ணாச்சி கலக்கலோ கலக்கல்

வடகரை வேலன் said...

நன்றி தமிழன்
நன்றி தமிழ்
நன்றி ச்சின்னப்பையன்
நன்றி கும்க்கி. அவரு பெரிய கேமராக்கண்ணன். அதான் இப்படி

நன்றி ராகவன். நீங்கதான் ஒரு சூறாவளிச் சுற்றுப்யணம் செஞ்சு எல்லாரையும் கலக்கீட்டிங்க.

நன்றி சின்ன அம்மணி. என்னை மாதிரி எப்பவாது பின்னுட்டம் போடுறவங்கதான் அவரோட முதல் எதிரிகள்.
நன்றி பட்டிக்காட்டான்.
நன்றி நிஜமா நல்லவன். அந்த பயம் இருக்கட்டும்.
நன்றி சரவனன். அவரு எடுக்கும் படமும் பாலு மகேந்திரா மாதிரித்தான் இருக்கும். கார்க்கிய அவ்வளவு அழகாக் காட்டுனாரே பார்க்கல?
நன்றி ராமு.
நன்றி ஜமால். உங்க பேர்லயே நட்பு இருக்கே.
நன்றி குமார்.
நன்றி சங்கர்.
நன்றி டக்ளஸ்.
நன்றி பித்தன்.
நன்றி ஸ்ரீ
நன்றி அமித்து அம்மா
நன்றி ஆதி. எவ்வளவு அடிச்சலும் சிரிச்சிக்கிட்டே தாங்குறியே அது எப்படிப்பா?
நன்றி பரிசல். உனக்கெல்லாம் எழுத ஒண்ணுமே இல்லைன்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? மதுரை எலக்சன்ல பணமே கொடுக்கலைங்கிற மாதிரி.
நன்ரி அனுஜன்யா. வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானுக்கு அடுத்த வாரிசா?
நன்றி வால் எல்லா தங்கமனிகளும் மோசமில்ல. என் தங்கமணி மாதிரி நல்லவங்களும் இருக்காங்க. (அப்பாடா இன்னைக்கு ஒண்ணும் அடி விழாது விட்டில)
நன்றி நாஞ்சில்
நன்றி தா ப்ரியா. என்னோடதா? உண்மையெல்லாம் வெளிய சொல்லக்கூடாதும்மா அப்படியே மெயிடெய்ன் செஞ்சு போய்க்கிட்டே இருக்கணும்.ஆமா.
நன்றி அறிவிலி.
நன்றி நேசமிதரன்.
நன்றி கார்க்கி. அது சமீபத்திய சாதனைதான். அதுக்கப்புறம் யாரையும் அவரு அவ்வளவு அழகாப் பொட்டி புடிக்கல.
நன்ரி அத்திரி.

செல்வேந்திரன் said...

ஓரே எதிரி: மதுரை செந்தில் குமார்

நீண்ட கால எதிரி: ஓ ஹென்றி

ஆகிய இரண்டு வரிகளை விட்டு விட்டீர்களே?!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பரிசல். உனக்கெல்லாம் எழுத ஒண்ணுமே இல்லைன்னு சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? மதுரை எலக்சன்ல பணமே கொடுக்கலைங்கிற மாதிரி.//

இதுக்கு சிரிக்காம இருக்குறது எப்புடி?

அப்புறம் செல்வாவுக்கு ஒரு நாள் இருக்குடி.!

மங்களூர் சிவா said...

:)))))
கலக்கல் அண்ணாச்சி!

தராசு said...

//வயது : தொப்பை போடும் வயது அல்ல

பிடிக்காத உணவு : இனிமேல்தான் கண்டுபிடிக்கணும் (தொப்பையே சாட்சி)//

அப்ப எங்க தலையும் யூத்து தானா????