சிவராமனுக்கும், சுந்தருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள். எத்தனை பெரிய காரியத்தைச் செய்திருக்கிறீர்கள்! பாராட்ட வார்த்தைகள் இல்லை.
எழுத ஊக்குவித்ததுமட்டுமல்லாமல் அடுத்த போட்டிக்கு இன்னும் பலரைத் தயார் செய்திருக்கிறீர்கள். பின்னூட்டங்கள், பதிவுகள் மூலமாகப் பாராட்டுவதைத் தாண்டி இது நேரடி ஊக்குவித்தல்.
என் கதை(!?) தேர்வாகவில்லை எனினும் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். வென்றவர்களில் பலர் என் நண்பர்கள். மீதிப்பேருடன் நட்பு பாராட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
குறிப்பாக ரெஜோ வாசன். உயிரோடை சிறுகதைப் போட்டியிலும் வென்றவருக்கு இது இன்னுமொரு சிறப்பு. என் கதம்பம் ஒன்றில் இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன். இன்னும் பல உயரங்களை அடைவார்.
தமிழன் கறுப்பி என்ற பெயரில் எழுதி வரும் காண்டீபராஜ் அறிமுகமானது தமிழ்பிரியன் மூலமாக. நல்ல நண்பர். மயக்கும் மொழி நடைக்குச் சொந்தக் காரர்.
காண்டீபன் தன்னுடைய பரிசுபணத்தை ஏழைக் குழந்தை ஒன்றுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தரப் பயன்படுத்தச் சொன்னார். ஆகஸ்ட் மாதம் ஆகிவிட்டது எல்லாக் குழந்தைகளும் தேவையான நோட்டுக்களை வாங்கியிருப்பார்கள். மேலும் ரோட்டரி மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் மே மாதமே நோட்டுக்களை வழங்கி விடுகின்றன. அரசாங்கமே புத்தகங்களை இலவசமாக வழங்குகிறது. எனவே நல்லதொரு எளிய ஆங்கிலம்-தமிழ் அகராதி வாங்கிக் கொடுக்கலாம். 100 ரூபாய் அளவில் வாங்கினால் 15 குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காலம் முழுவதும் பயனுள்ளதாக இருக்குமெனச் சொன்னேன். சரி எனச் சொல்லியிருக்கிறார்.
என் மனைவி வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மானவர்களுக்குக் கொடுக்கலாம். 15 பேருக்கு மட்டும் கொடுத்தால் மற்ற மாணவர்கள் ஏமாற வாய்ப்பிருக்கு. வேறு எவருக்காவது தங்கள் பரிசுப்பணத்தை இவ்வாறு உபயோகமாக்க என்ணம் இருப்பின் சிவராம்னுக்கும் எனக்கும் மெயில் அனுப்புங்கள்.
ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று கொடியேற்றியபின் பரிசளித்தால் குழந்தைகளும் மகிழ்வர் ஆசிரியர்களுக்கும் பரிசை வழங்குவதற்காக ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியமிராது.
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டும், கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்களும்.
இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
காண்டீபராஜுக்கு என் தனிப்பட்ட நன்றி கலந்த வணக்கங்கள்.
பி.கு : சென்னையிலிருக்கும் பதிவர்கள் பதிப்பகத்தாரிடம் பேசி ச்லுகை விலைக்கு அகராதியை வாங்கித் தர முடிந்தால நலம். அதன் பலன இன்னொருக் குழந்தைக்கு புத்தக வடிவில் அளிக்க முடியும். 20% தள்ளுபடி கிடைத்தால் 3 புத்தகங்கள் மேலும் வாங்க முடியும்.
.

15 பேரு பாராட்டியிருக்காங்க:
நல்ல முயற்சி! தமிழன் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்!
ரெஜோ வாசனுக்கு வாழ்த்துகள். முன்னாடியே நீங்க சொல்லி அவரோட கதை ஒண்ணு படிச்ச ஞாபகம். அந்தக் கதையும் நல்லா இருந்தது.
காண்டிபராஜ் - நம்ம அய்ஸ், சரவண குமாருக்கு நெருங்கிய நண்பர். அவருக்கும் வாழ்த்துகள். பரிசுத் தொகை பற்றிய அவர் முடிவுக்கு சிறப்புப் பாராட்டுகள்.
இப்படி ஐடியா கொடுக்கும் உங்களுக்கும் பாராட்டு சொல்ல வேண்டும்.
அனுஜன்யா
//காண்டீபன் தன்னுடைய பரிசுபணத்தை ஏழைக் குழந்தை ஒன்றுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித் தரப் பயன்படுத்தச் சொன்னார். ஆகஸ்ட் மாதம் ஆகிவிட்டது எல்லாக் குழந்தைகளும் தேவையான நோட்டுக்களை வாங்கியிருப்பார்கள். மேலும் ரோட்டரி மற்றும் பிற தொண்டு நிறுவனங்கள் மே மாதமே நோட்டுக்களை வழங்கி விடுகின்றன. அரசாங்கமே புத்தகங்களை இலவசமாக வழங்குகிறது. எனவே நல்லதொரு எளிய ஆங்கிலம்-தமிழ் அகராதி வாங்கிக் கொடுக்கலாம். 100 ரூபாய் அளவில் வாங்கினால் 15 குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். காலம் முழுவதும் பயனுள்ளதாக இருக்குமெனச் சொன்னேன். சரி எனச் சொல்லியிருக்கிறார்.//
காண்டீபனுக்கு வாழ்த்துகள்...
பரிசு தொகையை.. நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற அவரது எண்ணத்திற்கும், அதனை மேலும் நல்லதொரு முறையில் விழைந்திட்ட உங்களது முயற்சியும் பாரட்டதக்கது..... இருவரும் இணைந்து மேலும் இது போன்ற முயற்சிகளை எடுத்திட... இறைவனை பிராத்திக்கிறேன்...
Congrats!! and keep going.....
தமிழன் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்!
நல்ல முயற்சி அண்ணாச்சி.
வாழ்த்துக்கள்.
நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். அண்ணாச்சி, உங்களுக்கும் நண்பர் காண்டீபராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.
நல்ல முயற்சி! தமிழன் கறுப்பிக்கு வாழ்த்துக்கள்! உடன் உங்களுக்கும்.
// புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் //
இது தான் என் பள்ளியின் இலச்சினையில் உள்ள வரிகள்....
நல்ல முயற்சி அண்ணாச்சி.வாழ்த்துக்கள்
ம்ம்ம்..ரொம்ப அழகான பூங்கொதது!
நல்ல முயற்சி அண்ணாச்சி.வாழ்த்துக்கள்
நல்ல ஊக்கம்.நண்பர் தமிழன் கறுப்பிக்கு வாழ்த்துக்களும் அன்பும்.
வாழ்த்துக்கள்
நண்பர்கள் அனைவருக்கும்
உங்களுக்கும்
i would like to help providing the dictionaries to poor kids. can you let me know how much is needed and how i can send the money?
i would like to be small help in this.
Ravi
Post a Comment