Thursday, August 27, 2009

606 டேக்குகள் வாங்கிய விளம்பரப் படம்

ஒரு விளம்பரத்துக்காக என்ன பாடுபடுகிறார்கள் எனப் பாருங்கள்.




விளம்பரங்கள் பற்றிய தொடக்க நிலைப் புரிதலுக்கு லக்கி எழுதிய சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் என்ற புத்தகம் படிக்கலாம். சென்னை வந்தால் லேண்ட் மார்க்கில் உள்ள புத்தகங்களை , குறிப்பாக விளமபர சம்பந்த புத்தகங்களை மேய்வது வழக்கம். அலிக் பதம்ஸீ (லிரில் சோப், சர்ஃப் லலிதாஜி, காமசூத்ரா காண்டம்கள் போன்ற புகழ் பெற்ற விளம்பரங்களை உருவாக்கியவர்) எழுதிய டபுள் லைப் என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்.

தண்டோரா போன்றோர் விளம்பரத்துறையில் தங்கள் அனுபவங்களைப் பதிவாக எழுதினால் என்னைப் போல் வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் கத்துக் குட்டிகளுக்கு உதவியாக இருக்கும்.

ஐஸ் கிரீம் விளம்பரங்கள் எப்படி எடுக்கப் படுகின்றன என்ற வீடியோ ஒரு முறை பார்த்திருக்கிறேன். அவ்வளவு சூடான பல்புகளைப் போட்டு எரிக்கும் இடத்தில் ஐஸ் கிரீம் எப்படி உருகாமல் இருக்கிறது என்று தெரியுமா?

உண்மையில் அது ஐஸ்கிரீம் அல்ல. தெர்மோக்கோல் துகள்கள்; வர்ணம் பூசப்பட்டவை. ஐஸ் கிரீமிலிருந்து பறக்கும் புகை சிகரெட் புகை எனத் தெரிய வரும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

.

40 பேரு பாராட்டியிருக்காங்க:

Mahesh said...

அருமையான பகிர்வு.... 1000 டேக் வாங்கியிருந்தாலும் கூட worth the effort !!

என்னோட விளம்பர அனுபவங்களைப் பத்தி ரொம்ப நாள் முன்னால எழுதியிருந்தேன்.... http://thuklak.blogspot.com/2008/11/blog-post_08.html

Mahesh said...

கடைசில கார் சக்கரத்துல ஒரு எலுமிச்சம் பழம் நசுங்கற மாதிரி வெச்சுருந்தா ஒரு indianisation கிடைச்சுருக்குமோ? :)))))))))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே கலக்கல் விளம்பரம் அண்ணே. 606 டேக்குகள் வாங்கியது என்றதும் என்னமோ நினைச்சேன். சூப்பரா இருக்குண்ணே..

T.V.Radhakrishnan said...

கலக்கல் விளம்பரம்

சரவணகுமரன் said...

விளம்பரங்கள் என்றும் சுவாரஸ்யமானவை

சங்கா said...

சூப்பரா இருக்குங்கோ! பகிர்வுக்கு நன்றி.

இரா.சிவக்குமரன் said...

அருமையான க்ரியேடிவிட்டி. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்..

முரளிகண்ணன் said...

பலமுறை பார்த்த விளம்பரம். தகவல் புதிது.

தண்டோரா ...... said...

அண்ணாச்சி..நானும் ஏற்கனவே பார்த்துவிட்டேன்..பாஸிடிவ் செயின் ரீயாக்‌ஷன்..நல்ல பட்ஜெட்..அதுக்கும் மேல் கிரியேட்டிவ் சுதந்திரம்...பாண்டீன் ஷாம்பூவின் ஒரு விளம்பரம்.கவிதைதான்.லின்க் அனுப்புகிறேன்..அப்புறம் நாங்களும் குண்டுசட்டிலதான் குதிரை ஓட்றோம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அய்யய்யோ எல்லாரும் நல்லாயிருக்குதுங்கிறாங்களே.. விடியோ தெரியமாட்டேங்குதே.. ஊட்ல போயிதாம் பாக்கணும்.!

ஆ.முத்துராமலிங்கம் said...

நான் இப்பதாங்க பார்க்கரேன் இந்த விளம்பரத்தை. ரொம்ப சரம்பட்டுருபாங்கங்கரத பார்த்தாலே தெரியுது.

தண்டோரா ...... said...
This post has been removed by the author.
பேரு முருகேஷ் பாபு said...

நல்ல விளம்பரம்... என்ன கொடுமையின்னா இதை நாம கோலங்களுக்கு நடுவிலேயும் அரசிக்கு நடுவிலேயும் பார்க்கணும்..!

பிரியமுடன்...வசந்த் said...

சுவாரஸ்யமான விளம்பரம் அண்ணாச்சி

கதிர் - ஈரோடு said...

வாவ்.... சூப்பர்

ghost said...

கலக்கல் விளம்பரம் இதுக்கு எத்தன டேக் வேணாலும் போகலாம்

மண்குதிரை said...

aachchiriyamaana visiyamthaan

யுவகிருஷ்ணா said...

அண்ணாச்சி!

விளம்பர உருவாக்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம்.

ஒன்று : தீம் உருவாக்கம், இரண்டு : எக்ஸிக்யூஷன்!

இது இரண்டில் தீம் உருவாக்குவதுதான் கடினமானது என்பது என் அனுபவம். இன்று எக்ஸ்கியூட் செய்ய போதுமான அளவுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி இருக்கிறது.

பி.கு : ஐஸ்க்ரீம் விளம்பரங்களை எடுக்க வேறு சில டெக்னிக்குகளும் இருக்கின்றன. இண்டஸ்ட்ரியல் போட்டோகிராபர் யாராவது உங்களுக்கு நண்பர்களாக இருந்தால், ஜாலியாகப் பேசிப்பாருங்கள். ஏராளமான ஆச்சரியங்கள் கிடைக்கும்!

வடகரை வேலன் said...

மகேஷ்,

ஏற்கனவே உங்க பதிவப் படிச்சு பின்னூட்டம் இட்டிருக்கேன்.
// மகேஷ்,

விளம்பரத்துறை நம்ம கறபனைக்குத் தீனி போடுவதோடு சவாலாகவும் இருக்கும்.

நம்ம விளம்பரம் பாப்புலராகும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனி.
November 10, 2008 2:14 AM //


நன்றி ராகவன்.

நன்றி TVRK சார்.

நன்றி சரவணக் குமார்.

நன்றி சங்கா.

நன்றி சிவா

நன்றி முரளி

நன்றி மணி. ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவில்லையா? உங்க பச்சையப்பாஸ் சில்க் விளம்பரம் ஒன்று போதுமே?

ஆதி உங்களுக்கு மிகவும் பிடிக்கும் இந்த விளம்பரம்.

நன்றி முத்து

நன்றி பாபு

நன்றி வசந்த்

நன்றி கதிர்.

நன்றி கோஸ்ட்.

நன்றி மண்குதிரை

நன்றி லக்கி. ஆமாம் சமீபத்தில் சிமிண்ட் மூட்டை ஒன்றின் விளம்பரத்திற்காக, மூட்டையில் சிமெண்டிற்குப் பதிலாக பொரி அடைத்துப் படம் பிடித்தோம். அப்பொழுதுதான் சாக்குப் பை படம் பிடிக்க வாகாக இருக்குமென்பதால்.

தீமைக் கன்சீவ் செய்வதும் முக்கியம் அதேபோல டெலிவரியும்.

yaazini said...

Viyapa irukupa....!!!

கக்கு - மாணிக்கம் said...
This post has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...

ஐஸ் கிரீம் விளம்பரங்களில் காட்டப்படும் "ஐஸ் கிரீம்" உண்மையான ஐஸ் கிரீம் அல்ல. "அது உருளைகிழங்கின் மாவால் தயாரிக்கப்பட்டு அதன் மீது வண்ணங்ககளும் பிற அலங்கார பொருட்களானா பாதாம், பிஸ்தா போன்றவைகள் தெர்மோ கோலினால் ஆனவை " என்ற வியப்பான தகவல்களை தோட்டா தரணி ஒரு பேட்டியில் கூறியது நினைவுக்கு வருகிறது.

நல்ல சுவையான பதிவு . வாழ்த்துகள்.

தாரணி பிரியா said...

super ad anna

thanks for sharing :)

பித்தன் said...

//நல்ல பட்ஜெட்..அதுக்கும் மேல் கிரியேட்டிவ் சுதந்திரம்...பாண்டீன் ஷாம்பூவின் ஒரு விளம்பரம்.கவிதைதான்.லின்க் அனுப்புகிறேன்..அப்புறம் நாங்களும் குண்டுசட்டிலதான் குதிரை ஓட்றோம்//

அண்ணே தண்டோரா கருத்துடன் நானும் உடன் படுகிறேன். நாம குண்டு சட்டியிலதான் குதிரை ஓட்டுகிறோம். நானும் ஒரு ஐந்து வருடம் விளம்பரத் துறையில் பணியாற்றி இருக்கிறேன்.

ஒரு பெரிய இனிப்பு வியாபாரி, அவருக்கு நிறைய கடைகள் இந்தியாவைத் தாண்டியும் வியாபித்திருக்கிறது ஒரு நாள் எங்கள் கம்பெனிக்கு வந்து ஒரு vilambaram வேண்டும் endraar.

ஆஹா கொரவ கேளுத்தியே கிடைக்கலன்னு காத்திருந்த நமக்கு, சொறா சிக்கிடிச்சின்னு, என் பாஸு ரொம்ப 'பீல்' ஆயிட்டாரு.

எல்லா டீம் மெம்பரையும் கூப்பிட்டு ஸ்டோரி போர்டு ரெடி பண்ணுங்க, நாளைக்கு அவர் வர்றாருன்னு அசத்தலா அட்வைஸ் கொடுத்தாரு. எல்லாரும் அவங்கவுங்க கற்பனை குதிரைய கூட்டிகிட்டு உலகம் பூரா சுத்துனாங்க.

மறுநாள் இனிப்பு எங்க ஆபிஸ் வந்துது, சொல்லுங்கண்ணே... என்ன பட்ஜெட்டு, என்ன மீடியம்னு கேட்க்க.... நம்மாளு இனிப்பு சொன்ன பதிலுல.... இனிமா தின்னா மாதிரி ஆயிடிச்சி.

நாங்க டிவி, ரேடியோன்னு யோசிக்க இனிப்பு சார் பளுன்னுல வேணும்னு சொல்ல, பொங்குன காவிரிய பொடி டப்பால அடக்கினாமாதிரி புஸ்ஸுன்னு போயிடிச்சி...

பட்டிக்காட்டான்.. said...

அருமை..

விளம்பரம் பார்த்துள்ளேன்..

அதற்கு பின்னால் உள்ள செய்தி புதியது..

யாத்ரா said...

அருமையான விளம்பரம். முதலில் எங்கள் கஸ்டமரின் சப்ளையர் மீட்டில் தான் இந்த விளம்பரத்தைப் பார்த்தேன். பகிர்வுக்கு நன்றி.

வால்பையன் said...

அந்த கோண்டா விளம்பரம் உண்மையிலேயே அமேசிங்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அட !!!!!!!!!

வெங்கிராஜா said...

முரளி அண்ணன் சொன்னதையே ரிப்பீட்டுகிறேன். :) லக்கி அண்ணனின் பின்னூட்டம் கூட சுவாரசியமாகவே இருக்கிறது. ;)

azhagan said...

This is a very nice ad. Great effort.BY the way, have you ever wondered why people put so much effort(?!?) to produce a totally nonsensical, vulgar ad film?(Have you seen the recent Britannia bourbon, Bolero maxi,Tata docomo(airplane sequence), Axe ads?)Is there really any creativity in these ads?

வடகரை வேலன் said...

நன்றி யாழினி

நன்றி மாணிக்கம்.

நன்றி தாரணி

நன்றி பித்தன்.எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. பெரிய பிரிண்டிங் வேலை ஒண்ணு இருக்கு உடனே வாங்க அப்படிம்பாங்க. அடிச்சுப் பிடிச்சுப் போனா ஆடிரம் விசிட்டிங்க் கார்டும்பாங்க. கடுப்பா இருக்கும்.

நன்றி யாத்ரா. ஆட்டொமொபைல் லைன்ல இருக்க உங்களுக்கு இது பிடிக்கும்னு நினைச்சேன்.

நன்றி வால்.

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி முரளி.

நன்றி அழகன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அருமை வேலன் ஸார்..!

D.R.Ashok said...

super sir... nice one

venkat said...

சூப்பரா இருக்குங்கோ!

ஆதிமூலகிருஷ்ணன் said...

Mahesh
August 27, 2009 11:55 PM
கடைசில கார் சக்கரத்துல ஒரு எலுமிச்சம் பழம் நசுங்கற மாதிரி வெச்சுருந்தா ஒரு indianisation கிடைச்சுருக்குமோ? :))
//
எப்பிடிண்ணே இப்பிடில்லாம்.?

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஏற்கனவே பார்த்ததுதான், ரசனையானதுதான். ஒரு இடத்தில் தொடர்ச்சியாக டயர்கள் ஸ்லோப்பில் மேலேறுவது நம்ப முடியாததாய் இருக்கிறது. ஏதாவது டகால்டி வேலை பண்ணியிருப்பாங்களோ?

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

மங்களூர் சிவா said...

/
Mahesh said...

கடைசில கார் சக்கரத்துல ஒரு எலுமிச்சம் பழம் நசுங்கற மாதிரி வெச்சுருந்தா ஒரு indianisation கிடைச்சுருக்குமோ? :)))))))))
/

இது இது க்ரியேட்டிவிட்டி. இதுகூட இல்லாம எடுக்கிறாங்க விளம்பரம்
:)))))))))))))

நாஞ்சில் நாதம் said...

அருமையான பகிர்வு....

கிரி said...

//உண்மையில் அது ஐஸ்கிரீம் அல்ல. தெர்மோக்கோல் துகள்கள்; வர்ணம் பூசப்பட்டவை. ஐஸ் கிரீமிலிருந்து பறக்கும் புகை சிகரெட் புகை எனத் தெரிய வரும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?//

அப்படியா!