Thursday, September 24, 2009

கதம்பம் - 24-09-09

அக்பர் அரசவையில் ஒரு நாள் விவாதமொன்று எழுந்தது; பூமியின் மையப் புள்ளி எதுவென. எவருக்கும் தெரியவில்லை, பீர்பாலும் அரசவையில் இல்லை அச்சமயம். பிறரெல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர், பீர்பால் வசமாக மாட்டப் போகும் வினா இதுவென.

சற்றுத் தாமதமாக சபைக்கு வந்த பீர்பால் உள்ளே நுழைகையிலேயே கண்டுகொண்டார் ஏதோவொன்று தன்னை நோக்கி எய்யப்படுமென. கேள்வியும் அவரை நோக்கி வீசப்பட, சட்டென வெளியேறினார். விடை தெரியாமல் வெளியேறினார் என அனைவரும் ஆர்ப்பரித்திருக்க, மீண்டும் உள்ளே வந்தவர் வெளியே அழைத்தார் அரசரை.

தரையில் தான் ஆணியறைந்த ஒரு இடத்தைக் காட்டி, “ இதுதான் பூமியின் மையப்புள்ளி ” என்றார் அரசரிடம். திகைத்த அரசர் “எப்படி?” என வினவ.

“இல்லையென மற்றவர்களை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்” என்றார்.

இதைப் போலத்தான் இருக்கிறது, ஒரு திரைப்படத்தை ஆளாளுக்கு அலசிப் பிழிந்து காயப் போட்டிருப்பது. இதுதான் மையப்புள்ளி என அவரவருக்கு விருப்பமான இடத்தில் ஆணி அறைந்து கொண்டிருக்கிறார்கள். தமிழன் மலையாளி என்ற புது கோணத்தை யாரும் சிந்திக்கவில்லை என அறச்சீற்றம் கொண்டிருக்கிறார் ஆசிப்.

மொத்தத்தில் உ போ ஒருவன் சீரியஸ் படமாக இருக்குமென நினைத்தால் நல்ல காமெடிப் படமாக ஆகிவிட்டது.

***********************************************************************************


அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. நல்ல மொழி நடையுடன் மூன்றாவது வரியில் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறார். கடலூர் பகுதிகளில் கண்மணி குணசேகரன், தங்கர் பச்சான் (குடி முந்திரி- படித்திருக்கிறீர்களா?) இருவரையும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அழகிய பெரியவன் எழுத்து என்னை ஈர்த்து விட்டது.

தான் காதலிக்கும் பெண்ணின் தாயார் கரகம் ஆடுபவள் என்பதால் கரகாட்டத்தைத் தவிர்க்கும் முகமாக வெளியூர் சென்றுவிடும் கதை நாயகன், திரு விழா முடிந்திருக்குமெனத் திரும்பி வர, அப்பொழுது ஏற்படும் களேபரத்தில் ரசாபாசமாகி விடுகிறது. மிச்சத்தை நீங்களே படியுங்கள் நல்ல வாசிப்பனுபவம்.

முன்பே வேறு சமயம் தலைப்புக் கதையான நெரிக்கட்டை வாசித்திருக்கிறேன். எனினும் மொத்தமாக வாசிக்கையில் எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிற்து. யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியீடான இச்சிறுகதைத் தொகுப்பின் விலை 50 ரூபாய் மட்டுமே.


**************************************************************************************

விகடனில் வந்த அந்நியன் கவிதைக்கு அழைத்துப் பாராட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அதைவிட மோசமான அனுபவம் சமீபத்தில். எனது பக்கத்து வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள். வாங்கி மாதக்கணக்காக ஆகியும் கிரகப் பிரவேசம் நடத்தப்படாமலே இருந்தது. ஒரு நாள் இரவு 11.00 மணிக்கு பேச்சுச் சத்தம் கேட்கவே வெளியே சென்று பார்த்தால் வீட்டின் உரிமையாளரும் இன்னும் இருவருமிருந்தனர்.

”காலையில் கிரகப் பிரவேசம் செய்கிறோம்” என்றார்.

“பால், தண்ணி எது வேண்டுமானாலும் கேளுங்கள்” என்றேன்.

“இல்லை சார் எவ்வரிதிங் இஸ் கம்ப்லீட்லி அர்ரேன்ஜ்டு” என்றார்.

காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை செய்து விட்டு 6:30 இண்டெர் சிட்டியைப் பிடித்துச் சென்னை சென்றுவிட்டார்களாம்.

அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?


**************************************************************************************

காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும், சி ஐ டி லாரஸையும் ஜானி நீரோவையும் மறக்க முடியாது. அ கொ தீ க பற்றி உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? (கா கா தே கா இன்னும் இருக்கிறாதா மிஸ்டர் குமாரி ஆனந்தன்?)

காமிக்ஸ் பிரியர்களுக்கான வலைத்தளம் இதோ.


**************************************************************************************

நேசமித்ரனின் கவிதை ஒன்று இம்முறை.

வார்த்தைகளை வசக்கிப் போட்டுக் கவிதை நெய்து கொண்டிருக்கும் காலத்தில் வார்த்தைகள் தானக வந்து விழுந்தாற்போல நேர்த்தியா இருக்கிறது.


பிறை மீதேறி
உன் பெயர் சொல்லி தீக்குளிப்பேன் என்றவன்
நுரைக்க நுரைக்க கழிவறையில் ஆணுறை கழற்றிய போதே
மாற்றி விட்டான் அலைபேசி எண்ணை...
வருத்தம் எதுவும் இல்லை
உவந்து கொடுத்தேன்
தேவையாய் இருந்தது எனக்கும்
ஆனால் முத்தத்தை எச்சிலாக்கிய நொடி
விடைபெறுகையில் வேசி மகன்
வேறு பெயர் சொல்லி விளித்ததே...!

நேசமித்ரன்


34 பேரு பாராட்டியிருக்காங்க:

நாடோடி இலக்கியன் said...

அண்ணாச்சி,

ஆணி மேட்டர் நச்.

Nundhaa said...

I have always love Nesamithran's poetry ... they are so intensely beautiful ...

டம்பி மேவீ said...

enakku suppandi than romba pidikkum chinna vayasil.....neenga sonna comics ellam enga native la kidaikathu....sari inimel padithu parkkiren

கதிர் - ஈரோடு said...

நேசமித்ரனின் கவிதை அற்புதம்

நன்றி

தராசு said...

பீர் பால் மேட்டர் சூப்பர் அண்ணாச்சி, அதுக்கும் உ.போ.ஒ வுக்கும் ஒரு கனிக்ஷன் குட்த்துனுக்கற பாரு, ஷோக்கா கீது.

கும்க்கி said...

உள்ளேன் அய்யா....

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகிய பெரியவனின் நெரிக்கட்டு சிறுகதைத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது //

பகிர்வுக்கு நன்றி

உங்களின் முதல் அறிமுகத்தில்தான் கண்மணிகுணசேகரனின் எழுத்துக்கள்
படித்தேன். அருமையான வாசிப்பனுபவம் அது. மிகவும் நன்றி.

இராகவன் நைஜிரியா said...

இன்றைய கதம்பம் - ரொம்ப பிடிச்சு இருந்தது.

நேசமித்ரன் கவிதைகள் தனி ரகம். அருமையா எழுதுகின்றார் அன்பர்.

அக்னி பார்வை said...

///அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?
///

innum ulakamee theriyaama irukkiRiinga ,raaththir ungka kitta kirha pirvesamnnu sonnathukku santhooshapadunga

பட்டிக்காட்டான்.. said...

கவிதை அருமை..

எம்.எம்.அப்துல்லா said...

அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?

//

வீட்டுக்கு வந்து போகாம பாத்ரூம் வந்துட்டு போனாங்கபோல :)

Mahesh said...

பீர்பால் கதைய கச்சிதமா ஃபிக்ஸ் பண்ணிட்டீங்க.... :))))

இங்க சிங்கப்பூர்ல பல கிரகப்பிரவேசங்கள் நீங்க சொல்லியிருக்கற மாதிரிதான் நடக்குது !!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

எம்.எம்.அப்துல்லா said...
அடப் பாவிகளா வீடு கிரகப் பிரவேசம் என்பது நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்திருந்து மகிழ வேண்டிய ஒரு விசேசமல்லவா? அவர்கள் வாழ்த்துக்களும் ஆசிகளும் வேண்டாமா?

//

வீட்டுக்கு வந்து போகாம பாத்ரூம் வந்துட்டு போனாங்கபோல :)

//

இன்னும் சிரிச்சிகிட்டிருக்கேன்..

கதம்பம் மணக்குது.!

இரா.சிவக்குமரன் said...

present sir

வேந்தன் said...

பீர்பால் கதை சூப்பர் ;)

தண்டோரா ...... said...

ஆஆஆஆ...நீ...நீ

நல்லா அடிச்சு இருக்கீங்க

அனுஜன்யா said...

நேசன் கவிதைகளின் வசீகரம் அழகிய வார்த்தைகளும், ஆழமான சிந்தனைகளும் ஒருங்கே வருவதில்தான். அழகிய பெரியவன் யாரும் தவற விடாமல் படிக்க வேண்டிய முக்கிய எழுத்தாளர்.

கதம்பம் ரொம்ப நல்லா, சுவாரஸ்யமாக இருக்கு.

அனுஜன்யா

க.பாலாஜி said...

நேசமித்ரனின் கவிதை வரிகள் அருமை...

உங்கள் பார்வையின் உ.போ.ஒ. வின் விமர்சனங்களை உங்களின் பார்வையில் சொன்னது நல்லாருக்கு...

Ramesh said...

Nice!

Ramesh said...

What happened to parisalkaaran.com

Can you inform him plz, if you have his contacts?

சுரேகா.. said...

அண்ணாச்சி கதம்பம் கம கமன்னு இருக்கு!

ஒரு வேண்டுகோள்..
அந்த சிறுகதைத்தொகுப்பு வேணுமே!

வடகரை வேலன் said...

நன்றி பாரி.
நன்றி நந்தா.
நன்றி மேவி. இரும்புக்கை மாயாவி எங்க காலத்து ரஜினிகாந்த்.
நன்றி கதிர்.
நன்றி அரசு.
நன்றி கருணா.

நன்றி அமித்து அம்மா. தமிழ்ச்செல்வின்னு இன்னொரு எழுத்தாளர் இருக்காங்க. அவங்களோட ”கற்றாழை”, ”அளம்”, ”கீதாரி” நாவலகளைப் படிங்க.

நன்றி ராகவன். தம்பி நலமா?

நன்றி அக்னிப் பார்வை.

நன்றி பட்டிக்காட்டான்.

நன்றி அப்துல்லா. வீடுங்கிறது சிலபேருக்குச் செங்கல் கட்டிடம் போல. சிலருக்குத்தான் அது குடியிருக்கும் கூடு.

நன்றி மகேஷ்.

நன்றி ஆமூகி.

நன்றி சிவா.

நன்றி வேந்தன்.

நன்றி அனுஜன்யா.

நன்றி பாலாஜி.

நன்றி ரமேஷ். இப்பொழுது சரியாக இருக்கிறது.



நன்றி மணிஜி.

வடகரை வேலன் said...

சுரேகா,

உங்க முகவரியை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

கார்க்கி said...

ஆணி அடிச்சது போல சொல்லிடிங்க.. ஆணியை புடு.. அடிக்க வேணாம்..

பா.ராஜாராம் said...

நல்ல கதம்பம்,பகிர்வு.
நேசனின் இந்த கவிதை தளத்தில் வாசிக்காதது.அருமை.நன்றி வேலன்.

Pradeep said...

Very Nice

பித்தன் said...

ஆணி மேட்டர் நச்.....

நேசமித்ரன் said...

உங்கள் தளத்தில் எனக்கான அறிமுகம் என்னை நெகிழ்வும் நன்றியும் மிக்கவன் ஆக்குகிறது. உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றிகள்

மேவி said...

sir en blog pakkam vanga


என் பிளாக்யை வந்து பாருங்க

பின்னோக்கி said...

//காலை 6 மணிக்குப் பார்த்தால் யாரையும் காணோம். 4 மணிக்கே பூஜை

முற்றிலும் உண்மையான விஷயம். நிறைய குற்றங்கள் நடப்பதற்கு, இந்த அந்நியத்தன்மை காரணமென சொல்கிறார்கள்.

பின்னோக்கி said...

//காமிக்ஸ் பிரியர்களால் இரும்புக்கை மாயாவியையும்

போன மாதம் கூட லயன் காமிக்ஸ் வெளியிடுவோர் இரும்புக்கை மாயாவி கதையை, தங்கள் “காமிக்ஸ் கிளாசிக்ஸ்” புத்தகத்தில் வெளியிட்டார்கள். விலை 10 ரூபாய். இப்பொழுது கடைகளில்.

1980 கால காமிக்ஸ்க்கு இந்த வலைதளம் அருமை. நண்பர் ரஃபீக் எழுதுகிறார்.

http://www.comicology.in/

butterfly Surya said...

அனைத்தும் அருமை.

வீட்டை வாங்கியவர்கள் சென்னையில் இருக்கிறார்கள்//// Note this point annachi..

கிருஷ்ண பிரபு said...

தங்கர் பச்சான் - படைப்புகள் எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கின்றன வடகரை வேலன். பகிர்விற்கு நன்றி...

கனவுகளின் காதலன் said...

மதிப்பிற்குரிய நண்பர் வடகரை வேலன் அவர்கட்கு, உங்கள் மின் மடல் முகவரி கிடைகவில்லை என்பதால் இங்கே எழுதிக் கொள்கிறேன்.

என் வலைப்பூவிற்கு நீங்கள் வழங்கி வரும் அன்பான ஆதரவிற்கு என் உளமார்ந்த நன்றிகள் நண்பரே.

மனதோடு நடைபயிலும் சுகமான எழுத்துக்கள் உங்களுடையவை. பாராட்டுக்கள்.