நவீன விருட்சம் இந்த இதழ் புதுக்கவிதை தொடங்கி 50 ஆவது வருட இதழாக மலர்ந்திருக்கிறது. அடியேனின் கவிதை - தக்கைகள் அறியா நீரின் ஆழம் - அதில் பிரசுரமாகி இருக்கிறது. எனவே எனக்கும் ஒரு பிரதி அனுப்பியிருக்கிறார் அழகிய சிங்கர்.
இரண்டாம் பக்கத்தில் முதல் படைப்பாக பிரசுரமாகி இருப்பது அனுஜன்யாவின் பிக்பாக்கட் கதை. மிக மகிழ்ச்சியாக இருந்தது. அச்சில் வாசிக்க மிக நன்றாக இருந்தது. வலையில் வாசிக்கும்போது ஏதோ ஒன்றை இழந்தாற்போலத்தான் இருக்கிறது.
ஜெ மோ வலையில் எழுதுவதை தொகுப்பாக தற்பொழுது நிகழ்தல் என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். புத்தகமாக வாசிக்க அருமையான அனுபவம்.
*********************************************************************************
சென்றவாரம் குடும்பத்துடன் கொச்சி, குருவாயூர் ஒரு அவசரச் சுற்றுலா சென்றிருந்தேன். கொச்சியின் தட்பவெட்ப நிலை பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். 2 மணிக்கு நல்ல வெயில் 2.05க்கு பலத்த மழை சாலையில் நடமாட்டமே இல்லை. 2.10 சுத்தமாக வெறித்து விட்டது வெயிலும் அடிக்கிறது. ஸ்விட்ச் போட்டாற்போல சாலையில் ஜன நடமாட்டம்.
மேரி, ஆனி, ஜார்ஜ், எலிசி, விக்டோரியா, டோமினி, ரெஜினா, அன்னி, ஜோய், ராபர்ட் என பத்துக் குழந்தைகள் பெற்று வளர்த்தும் என்னை எடுத்து வளர்த்த ரோசம்மா விதைத்த விதைதான் மலையாளக் கரையோரம் ஒதுங்கச் சொல்கிறதோ என்னவோ?
கொச்சியிலிருந்து குருவாயூர் சென்று திரும்பினோம். குருவாயூரில் அருமையான தரிசனம். குழந்தைக் கிருஷ்ணனைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு தெம்பு வந்து விடுகிறது. கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.
*********************************************************************************
ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை.
அதே போல டாடா டோகோமோவின் விளம்பரங்களும் நன்றாக இருக்கிறது. கோல் போட்டவன் குதூகலம் சங்காக மாறுவது நல்ல நகைச்சுவை.
உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே.
*********************************************************************************
யாத்ரா, வாசு, நந்தா, சேரல், ரெஜோ, முகுந்த், முத்துவேல் போன்றோர்கள் நல்ல கவிதைகள் படைத்துவரும் அதே நேரத்தில் கவனிப்பையும் பெற்றுவிட்டார்கள். அவர்களைபோலவே நல்ல கவிதைகள் எழுதிவரும் கார்த்தி (அல்லது கார்ட்டின்?) எழுதிய இக்கவிதை என்னைக் கவர்ந்த்த்து.
வீட்டில் அலமாரி நிறையப் புத்தகங்கள் இருந்தாலும் மேஜை நிறைய வார, மாத இதழ்கள் இருந்தாலும் சுண்டல் அல்லது வேர்க்கடலை மடித்திருந்த காகிதத்தைத் திருப்பித் திருப்பிப் படிப்பது ஒரு சுகம். அதைத்தான் பேசுகிறது இக்கவிதை.
கூம்புகளுக்குள்
நீங்கள்
பாலிதீன் பைகளைப்
புறக்கணித்து விட
இன்னுமொரு காரணம்
இந்த வேர்கடலைப் பேப்பர்கள்
கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும்
கவிதையோ
கதை போன்றவொன்றோ
இருக்கலாம்
இரண்டு பக்கங்களுக்குள்
தீக்குளித்து
என்றோ செய்தியானவன்
எண்ணெய்த் தீற்றலோடு
தென்படலாம்
கடைசி வார்த்தை மட்டும்
யாருக்கோ சிக்காத
குறுக்கெழுத்துப் புதிரொன்றும்
சிக்கிக் கொள்ளலாம்
ஆகவே
அடுத்த முறையேனும்
வீசியெறியாமல்
விரித்துப் பார்த்துவிடுங்கள்
கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு..
பின்பக்கத்தில்
சொப்பனஸ்கலிதம் தீர்க்கும்
விளம்பரம் இல்லாதிருப்பது உத்தமம்.
- கார்த்தி என்
*********************************************************************************
கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.
கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.
.
எந்திரன் - கார்ட்டூன்
47 minutes ago

38 பேரு பாராட்டியிருக்காங்க:
நவீன விருட்சம் கவிதைக்கு மகிழ்ச்சி + வாழ்த்து.
கார்டின் கவிதை பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி, அங்கேயும் ஒரு முறை படித்தேன்.
நவீன விருட்சம் இதழ் படித்தேன், நண்பர்களோடு நாம் அந்த பிரதியில் இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நவீன விருட்சம் கவிதைக்கு வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
அனுஜன்யாவிற்கும் வாழ்த்துக்கள்!
/கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது./
உங்கள் ஆசை நிறைவேறிட வாழ்த்துக்கள்!
/ஏர்டெல்லின் விளம்பரங்கள் எப்போதும் தரமிக்கவையாகவும் கற்பனைவளமிக்கதாகவும் இருக்கும். காகிதக் கப்பலை மழையில் நனையாமல் காப்பாற்றும் குழந்தைகள் விளம்பரம் நல்ல கவிதை./
ஆஹா...எனக்கு மிகப்பிடித்த விளம்பரம்.
/உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே./
ஹா..ஹா..ஹா...
கவிதைப் பகிர்விற்கு நன்றி.
/10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்./
சூட்டு நாய்களை சாப்பிட்டார்னு தானே போடணும்:))))))
நவீன விருட்சம் கவிதைக்கு வாழ்த்துக்கள்
நல்ல கவிதை.....
// கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது. //
ம்ம்...ம்ம்.... !! இருக்காதா பின்ன.......!!
// உடனே ஒரு லோக்கல் விளம்பரம் வந்து கழுத்தறுப்பதுதான், சென்னைவாசிகளின் பாஷையில், படா பேஜாராக் கீது மாமே. //
தமிழ் மொழியை ஏன் இப்படி புறக்கணிக்கிறீர்கள்...!! தமிழை வளர்ப்போம்...!! தாய் நாட்டை காப்போம்....!!
// இந்த வேர்கடலைப் பேப்பர்கள்
கூம்புகளைப் பிரிப்பதில்
மட்டும் கவனமிருக்கட்டும் //
கடலை போடும் சுகமே தனி 'ங்க தலைவரே.....!!
// கெட்டியான பேப்பரென்றால்
அட்டைப் பட நாயகிக்கும்
அதிர்ஷ்டமுண்டு.. //
எனக்கும் இப்படியொருக்கா ஷகிலா மேடத்தோட படம் வந்துச்சு... அதிஷ்ட்டகார பய நான் .........
உங்களுக்கும் அனுஜன்யாவுக்கும் வாழ்த்துக்கள்.
கடலை பேப்பர் கவிதை அட்டகாசம்
மொழிபெயர்ப்பு காமெடி, கேரளா விசிட் என மணக்கும் கதம்பம்
அண்ணே,
கவிதை சூப்பர்.
அந்த நாய் மேட்டர், "சேட்டன்மார் ஹோட் டோக் ன்னு பரஞ்சாலே, ஒரு ச்சூடூள்ள பட்டின்னு விஜாரிச்சதாயிருக்கும்."
கதம்பம் வெகுவான மகிழ்ச்சி.
நவீன விருட்சம் நம் பதிவர்களின் பலர்ருடைய எழுத்தை தாங்கி வந்திருப்பது மிகவும் சந்தோசமான விசயம்.
கார்த்தியின் கவிதை பிரமாதம் அவரை தொடர்ந்து நானும் வாசித்து வருபவன்.
நல்ல கவிதை எழுத கூடியவர்.
நன்றி.
orey தேங்காய் எண்ணைய் வாசமாய் இருக்கிறது.. டூரின் பாதிப்பா அண்ணாச்சி..:)
வா(வ்!)ழ்த்துகள் அண்ணாச்சி!
வாசம்..
வாழ்த்துகள் அண்ணாச்சி
கவிதைக்கு வாழ்த்துக்கள்.... இதுபோல் இன்னும் பல வர வாழ்த்துக்கள்.....!இறுமாப்போடு.... பித்தன்
நன்றி பாபா.
நன்றி யாத்ரா
நன்றி நல்லவன்.
நன்றி TVRK சார்.
நன்றி மேடி.
நன்றி முரளி
நன்றி தராசு.
நன்றி முத்துராமலிங்கம்.
நன்றி சங்கர்.
நன்றி பரிசல்
நன்றி நர்சிம்.
நன்றி பித்தன்
navina virutsa kavithaikku
vaashththukkal
nanban karthi n kavithai pakirvukku nanri
வாழ்த்துகள்
நவீன விருட்சம் படித்தேன் - வாழ்த்துகள் ... kartin நான் தொடர்ந்து வாசிக்கும் கவிஞர் ... பகிர்வுக்கு நன்றி
அண்ணாச்சி, வாழ்த்துக்கள்!
குருவாயூர் யானை தவலை போனீங்களா? 65 யானைகளை ஒரே இடத்தில் காணலாம். கதம்பம்
அருமை. அனுஜன்யாவிற்கும் வாழ்த்துக்கள்!
congrats for the kavithai.
nice translation abt hot dog
:-)
நவீன விருட்சம் கவிதை குறித்து மிக்க மிகிழ்ச்சி அண்ணாச்சி.
/
கேரளாவைச் சேர்ந்த ஜோய் செஸ்ட்நட் வசிப்பது அமெரிக்காவில். அங்கு நடந்த ஒரு போட்டியில் 10 நிமிடத்தில் 38 ஹாட் டாக் சாப்பிட்டு முதல் பரிசைப் பெற்றார்.
கேரளாவில் அதைச் செய்தியாக வெளியிடும்போது 10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். செய்தியை வெளியிட்டது கம்யூனிஸ்ட் தோழர்களின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கை.
/
haa haa
:)))))))))))
கலக்கறாங்க போங்க!
இதுக்கு நான் போட்ட கமென் எங்க அண்ணாச்ச்சி?
வாழ்த்துகள் உங்களுக்கும், அணுகுண்டுவுக்கும்..
//கேரளாவில் செட்டில் ஆக வேண்டுமென்ற ஆவல் வெறியாக மாறிக் கொண்டிருக்கிறது.//
வடகரையை மறந்துராதிங்க அண்ணாச்சி...........
உங்களுக்கும்,அனுஜன்யா அண்ணாச்சிக்கும் வாழ்த்துக்கள்
நவீன விருட்சம் கவிதைக்கு வாழ்த்துக்கள் வேலன் அண்ணாச்சி!
கவிதை அருமை..
கடைசி துணுக்கும்...
சொல் கிடைக்கப் பெறாத இன்னொரு தருணமேற்படுத்திவிட்டீர்கள்!!
இங்கு நீங்கள் அளித்திருப்பது ஒரு தக்கையை மூழ்கடித்துவிட்ட பேரன்பு!!
விவரிக்கவியலாக் கணத்தில், உங்களுக்கான வாழ்த்துக்கள் சுமந்துகொண்டு வழி வருகிறேன் :))
கதம்பம் இப்ப தான் பாத்தேன். படிச்சேன். நவீன விருட்சம் எனக்கு இன்னும் வந்து சேரவில்லை வேலன். அச்சில் படித்தாலே அதன் இன்பம் தனிதான். அச்சில் வந்த எல்லா நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.
கார்த்தி - ம்ம், சரி சரி நீங்க முந்திக் கொண்டு விட்டீர்கள். நான் அங்க போயி கொஞ்ச நாட்கள் ஆயிடுச்சு. இந்தக் கவிதை ரொம்ப நல்லா வந்திருக்கு.
என்ன வேலன், நாம் கோவையில் செட்டில் ஆகலாம்னு பார்த்தா, நீங்க கேரளா போறீங்க? ஒரு வேளை அதனால தானா?
இந்தக் கதம்பம் ரொம்ப நல்லா இருக்கு.
அனுஜன்யா
//10 நிமிடத்தில் 38 நாய்களைச் சாப்பிட்டார் என மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்//
அதையும் தப்பாத்தான் மொழிபெயர்த்துருக்காங்க தோழர்கள். 10 நிமிடத்தில் 38 சூடான நாய்களை சாப்பிட்டார் அப்டின்னுல்ல மெழிபெயர்திருக்கனும்?
Post a Comment