Wednesday, July 29, 2009

மக்கட் பதர்

அலுவலகத்திற்கோ அல்லது உங்கள் இல்லத்திற்கோ கொரியர் டெலிவெரி செய்பவரைக் கவனித்திருக்கிறீர்களா? ஆறு மாதத்திற்கு முன் வந்த அதே நபர்தானா? ஆமெனில் இன்னும் ஆறுமாதம் அல்லது ஓரிரு வருடங்கள் கழித்தும் இதே கொரியர் டெலிவரி பாயாகத்தான் இவரது வாழக்கை கழியுமா? இல்லையெனில் அவர் எங்கே?

யோசித்துப் பாருங்கள். கொரியர் டெலிவெரி செய்ய என்ன விதமான தனித் திறமை தேவை? கொடுத்த முகவரியில் டெலிவெரி கொடுக்க வேண்டும் குறித்த நேரத்தில்; அவ்வளவே. இரண்டு வருடங்கள் கொரியர் டெலிவெரி செய்தவருக்கும் இப்பொழுது புதிதாகச் சேர்பவருக்கும் பெரிய வித்தியாசமில்லை. சொல்லப் போனால் கொரியர் கம்பெனிகள் புதியவர்களைத்தான் விரும்புகின்றனர். குறைந்த சம்பளம். துடிப்பாக வேலை செய்வர்.

18 லிருந்து 25 வயதிருக்கும், ஒரு மொபைல் வைத்திருப்பார், காதில் எப்பொழுதும் இருக்கும் ஏர் போன். குறைந்த பட்சம் ஒரு டி வி எஸ் 50 அல்லது சைக்கிள். காலையில் 3 மணி நேரம் டெலிவரி மாலையில் 3 மணி நேரம் பிக்கப். சம்பளம் ஊருக்குத் தகுந்தாற்போல் 2500 லிருந்து 5000 வரை.

எல்லாம் சரி. எத்தனை வருடங்கள் இப்படி? அதன் பின்?

இன்னொரு இளைஞனைப் பாருங்கள் வெறும் 2000 ரூபாய் சம்பள்த்தில் பொறியியல் நிறுவனம் ஒன்றில் உதவியாளனாக வேலைக்குச் சேர்கிறான். ஆர்வமுடன் கற்றுக் கொண்டால் 4 வருங்களில் அவன் கையில் ஒரு தொழிலும் நல்ல சம்பளமும்.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் எல்லா இளைஞர்களும் அழுக்குப் படாமல் வேலை செய்யவே விரும்புகின்றனர். உடல் வருத்திப் பாடுபட எவரும் தயாராக இல்லை.

இவர்களையும் கவனியுங்கள்.

1. கிரிடிட் கார்டு பணம் வசூலிப்பவர்
2. பெர்சொனல் லோன் / கார் லோன் பணம் வசூலிப்பவர்
3. மொபைல் பில் / தொலைபேசி பில் பணம் வசூலிப்பவர்
4. டெலி மார்க்கெட்டிங் செய்பவர்கள்
5. டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் டெமான்ஸ்ட்ரேட்டர்கள்.
6. துணிக்கடை சேல்ஸ் மேன்கள்


இவர்கள் எல்லோருக்கும் பொதுவான அம்சங்கள் : எந்தவித உத்தியோக உயர்வும் சொல்லிக் கொள்ளும்படி சம்பளமும் கிடைக்காத இந்த வேலைக்கு மட்டுமே செல்லும் ஆர்வம்.

அடுத்த பத்தாண்டுகளில் இவ்வாறான இளைஞர்களால்தான் சூழப்பட்டிருப்போம். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் எதறகும் பிரயோசனப்படாத ஒரு இளைஞர் கூட்டம்.

இன்னொரு சுரண்டல் நடக்கிறது கார்ப்பொரேட் கம்பெனிகளில். 100 பேர் வேலை பார்க்கும் இடமொன்றில் நேரடியாக நிறுவனத்தில் சட்டப் படி வேலையில் இருப்பது 30 பேர்களே(ON ROLL). மீதப் பேர்களெல்லாம் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் (OFF ROLL).

இந்த ஆப் ஆசாமிகள் ஆன் ஆசமிகள் சொல்லும் வேலைகளை இரவு பகல் பாராமல் செய்வதும், என்றாவது ஓரு நாள் நாமும் ஆன் ரோல் ஆசாமி ஆகிவிடுவோம் என கற்பனையில் இருப்பதும் நிறுவன ஆன் ரோல் உழியர்களுக்கு வரப் பிரசாதம்.

எதெல்லாம் ஆன் ரொல் ஆசாமி செய்யவேண்டியது எதெல்லாம் ஆப் ரோல் ஆசாமி செய்ய வேண்டியது என்ற தெளிவில்லாததால் 6 ஆயிரம் அல்லது 7 ஆயிரம் சம்பளத்துக்கு 40 ஆயிரம் சம்பளக்காரன் செய்ய வேண்டிய வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த் ஒரு ஆப் ரோல் இளைஞன். அவர் தயாரித்த டாக்குமெண்ட் ஒன்றில் நான் கேட்ட சந்தேகம் எதையும் தெளிவுபடுத்த அவரால் முடியவில்லை.

நான் : “ஆனந்த், ஏன் 12% என்றால் ரிஜக்சன்?”

ஆனந்த் : ”அதெல்லாம் தெரியாது சார். 12%க்கு மேல இருந்தா அக்சப்டட். இல்லன்னா ரிஜக்சன். இதத்தானே நானும் 3 வருசமாச் செய்கிறேன்”

இவர் ஆன் ரோலில் வர வாய்ப்பில்லை என்பதை உணரும்போது இவருக்கு என்ன எதிர்காலம் இருக்கு?

அறுவடை முடிந்து களத்துமேட்டில அடித்துக் குவிக்கப் பட்ட குவியலில் இருந்து நெல் வீட்டுக்கும் பதர் குப்பைக்கும் போவதை ஒத்ததிது. தாங்கள் பதரென்பதை அறியாத வகைக்கு அறியாமை அவர்களை வஞ்சிக்கிறது

குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?


.

31 பேரு பாராட்டியிருக்காங்க:

Ravi said...

very very good post. I was in one such job long time ago. Though i did not realize this then, 'Quest for a better job' propelled me out of that job..

நிஜமா நல்லவன் said...

:)

நட்புடன் ஜமால் said...

குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?]]

சரியே அண்ணாச்சி.

ஆ.ஞானசேகரன் said...

//அடுத்த பத்தாண்டுகளில் இவ்வாறான இளைஞர்களால்தான் சூழப்பட்டிருப்போம். நிச்சயமற்ற எதிர்காலத்துடன் எதறகும் பிரயோசனப்படாத ஒரு இளைஞர் கூட்டம்.//

தேவையா நேரத்தில் தேவையான இடுகை.... பாராட்டுகள்

SP.VR. SUBBIAH said...

////குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?////

இதைவிடக் கொடுமையான சூழல் உள்ளது.
விவசாயக் கூலிகள்.
மாதத்தில் எத்தனை நாட்கள் வேலை கிடைக்கும் என்பது தெரியாது.
வாங்கும் கூலி எகிரும் விவலைவாசியில் அரை வயிற்றுக் கஞ்சிக்குத்தான் பற்றும்!

தராசு said...

//தாங்கள் பதரென்பதை அறியாத வகைக்கு அறியாமை அவர்களை வஞ்சிக்கிறது//

இல்லண்ணே, என்னால ஒத்துக்க முடியல.

//ஆனால் பிரச்சினை என்னவென்றால் எல்லா இளைஞர்களும் அழுக்குப் படாமல் வேலை செய்யவே விரும்புகின்றனர். உடல் வருத்திப் பாடுபட எவரும் தயாராக இல்லை.//

உடல் வருத்திப் பாடுபட்டவன் எவனும் பதரானதில்லை.
நான் பணிபுரியும் இடங்களில் இப்படி, ஆபீஸ்பாயாகவும், டிரைவராகவும் உள்ள பலருக்கு வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்து, இன்று அவர்கள் ஒரு சூப்பர்வைசர் லெவெலுக்கு வந்துள்ளார்கள்.

பதராவதும் நெல்லாவதும் அவரவர் முயற்சியில் தான் அண்ணாச்சி.

Vijay said...

நான் திருப்பூரில் பார்த்துள்ளேன். சில நேரங்களில் எந்த வேலையானாலும் ஒக்கே என்று வருவார்கள். மதுரை சைடிலிருந்து நிறைய இப்போ வருகிறார்கள் என கேள்வி. செய்யும் தொழில் என்று அதற்க்கு மட்டும் கற்றுவிட்டு, அதிலேயே காலம் தள்ளுவார்கள். வார சம்பளம் அந்த வாரத்தில் செலவாகும். வருடம் ஒரு போனஸ், ஊதிய உயர்வு. கந்து வட்டி செலவு. மனைவியும் வேலையில் என்று போகும் அவர்களின் வாழ்க்கை முறை. குழந்தைகளை கூட பதினான்கு வயதில் இன்னொரு கம்பெனியில் சேர்த்துவிடுவார்கள். சிறிய கைகள் தேவை பனியன் அடுக்கி கட்ட. ஸ்ட்ரயிக் என்று வந்தால், அவர்கள் பாடு திண்டாட்டம் தான். சிலர் வெளிநாடு ( துபாய் ) சென்று அதே பனியன் தொழில் செய்துள்ளார்கள். அந்த பணத்தை வைத்து பனியன் கான்ற்க்ட் தொழில் செய்து முன்னேறிய பலர் உண்டு.

--
அன்புடன்
விஜயஷங்கர்
பெங்களூரு

வடகரை வேலன் said...

Thanks Ravi. I am happy that you are out of that trap.
நன்றி நிஜமா நல்லவன்.
நன்றி ஜமால்.
நன்றி ஞானசேகரன்
நன்றி சுப்பையா சார்.
நன்றி அரசு.

பதராவதும் நெல்லாவதும் அவரவர் கையில். நிர்பந்தம் ஒரு புறம் அவர்களை அழுத்துகிறது. உடனே 4500 சம்பளம், செல் போன், வண்டி என்பதான ஒரு பகட்டு அவர்கள் கண்களை மறைக்கிறது. குடும்பத்தினரும் அதற்குக் கட்டாயப் படுத்துகிறார்கள்.

பித்தன் said...

//குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான்.//

கோவி.கண்ணன் said...

அண்ணாச்சி வரவர உங்கப் பதிவு தலைப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கு. ஏன் இப்படி ? நீங்களும் பின் நவீனத்துவ புயலில் சிக்கிட்டிங்களா ?

நாஞ்சில் நாதம் said...

\\\\குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?////

கண்டிப்பா அண்ணாச்சி.

இந்த வலி எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா ஒரு 3 மாசம் டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் டெமான்ஸ்ட்ரேட்டரா வேலை பார்த்துள்ளேன் .

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க அண்ணாச்சி, வழக்கம் போல்.

பெங்களூர் புதியவன் said...

தீரா மாதவராஜ் மாதிரியே எழுதறீங்க. சவுத் சைடு... நல்ல தமிழ். இப்போ தான் அவர் ப்ளாகையும் படிச்சேன்.

கூரியர் ஆட்கள் பத்தி ஒன்னு சொல்லியே ஆகணும். என்னோட எம்.பி.ஏ ப்ராஜக்ட் சென்னையிலிருந்து வந்தது. எங்க கம்பனியிலே முழு பேர் இருந்தா தான் வாங்குவாங்க. ஷார்ட் பேருலே ( எப்பவும் போல ) ஷங்கரலிங்கம் பதிலா ஷங்கர்னு கொடுத்திட்டேன். திருப்பி அனுபிட்டாங்க. நல்ல வேலை மொபையில் நம்பர் இருந்தாலே, அந்த கூரியர் ஆள் கூப்பிட்டான். நான் வெளியே போய் வாங்கினேன். தேங்க்ச்னு ஒரு இருபது ரூபா கொடுத்தேன். அவன் கண்களில் சந்தோசம். சில சமயம் படிச்ச ஆட்களை விட ( எங்க தத்தி ரிசப்சனிச்டு ) அவீங்க பெட்டர் அன்னாசி. நிலைச்சு நிப்பாங்க ஒரு இடத்திலே.

இன்னொரு விஷயம்... ஆறு மாசம் ஒருக்கா ரெகுலரா ஒரு டென்டிஸ்ட் கிட்டே போவேன். அங்கே வேலை பாக்குறே அக்காவை பார்த்து சிரிப்பேன். தமிழ் தான். நல்ல இருக்கீங்களானு கேப்பேன். ஒரு நாள், சரியான பல் வலி. கருப்பட்டி மிட்டாய் ஊரிலே சாப்டது , கடலை உள்ளே சிக்கிடுச்சு போல. பெங்களூர் வந்து டென்டிஸ்ட் கிட்டே போனா, அவீங்க இல்லே. அந்த அக்கா தான் க்ளீன் பண்ணி வுட்டாங்க. சரி ஆகிடுச்சு. பழக்கம் மட்டும் இல்லாம இருந்திருந்தா, க்ளீன் பண்ணாமே பல்லே போயிருக்கும். டாக்டரும் கரக்டா பண்ணுனே சொன்னாங்க.

ஒரு சைகாலஜி புத்தகத்தில் படிச்சேன், யாருக்கு நாங்க சிம்பத்தி கொடுக்கிறோமோ, அவீங்க இன்னும் நல்ல பேர் வாங்கனும்னு நினைப்பாங்களாம் . நீங்க சொன்ன வரிகள், சின்ன புன்முறுவல்,நிச்சயம் தேவைங்க!

coolzkarthi said...

அண்ணே அருமையாய் சொல்லி உள்ளீர்கள்....உயர்ந்து வரும் வேலை வாய்ப்பின்மையில் இது செய்யவாவது முயற்சிக்கிறார்களே....

அமிர்தவர்ஷினி அம்மா said...

குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். //

நம்மால் செய்யமுடிந்தது அதே.

Raju said...

Nice. I read the same in Plus 2 English Prose as "On saying Please". Not exact, but similar thoughts!

மஞ்சூர் ராசா said...

நீங்கள் சொல்லும் பலரும் அதே தொழிலில் இருப்பதில்லை என்பதும் பலர் இதை நேரப்போக்கு போல செய்கிறார்கள் என்பதும், பலர் வேறு வேலை கிடைக்கும் வரை செய்கிறார்கள் என்பதும், பலர் இதிலேயே இருந்து முன்னேறுகிறார்கள் என்பதும் குறிப்பிடப்படவேண்டி உள்ளது. ஒரு சிலர் மட்டுமே தபால்காரர்களை போல கடைசிவரை அதையே செய்துக்கொண்டிருப்பார்கள்.

T.V.Radhakrishnan said...

பயனில் பதிவல்ல இது

Vinitha said...

Scintillating!

எங்களுக்கு காலையில் பால் போடும் பையனுக்கு அவ்வப்போது சில நூறு கொடுப்பேன். நன்றாக படி என்பேன். வேறு சிலர் அவன் காது பட, இவனெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது என்பார்கள்... நன்றியோடு படித்தவன், இந்த வருடம் வேலூரில் இடம் கிடைத்து எஞ்சினீரிங் செல்கிறான். பணம் கொடுப்பது அவன் முதலாளி மற்றும் பேங்க் லோன் ( கேரண்டோரும் முதலாளி தான்...) முயற்சி தளராமை தேவை எதற்கும்!

சிறு தொழில் என்ன... எத்தொழிலும் ஒ.கே! அம்பானி கூட எமேனில் பெட்ரோல் போட்டு, வரும் சில்வர் காசை விற்று தான் நிறைய பணம் வைத்து பாம்பேயில் யார்ன் ட்ரேடிங் ஆரம்பித்து இன்று சொத்துக்கு சண்டை போடும் இரு மகன்களோடு ரிலையன்ஸ் நடத்துறாங்க!

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

सुREஷ் कुMAர் said...

ஒருவேள நானும் இங்க பதரா போய்டுவனோ..

சீக்கிரம் எதாச்சும் பண்ணனும்போல..

பல்புக்கு புது கனெக்சன் கொடுத்ததுக்கு நன்றி அண்ணாச்சி..

☼ வெயிலான் said...

அமைதி நல்ல பதிவுகளாகிறது.

வாயிற்காப்போர் வேலைக்கு வருபவர் தான் ஆகக்கடைசிப் பதர்.

திகழ்மிளிர் said...

:)
/
அண்ணாச்சி வரவர உங்கப் பதிவு தலைப்புகளைப் பார்த்தால் பயமாக இருக்கு. ஏன் இப்படி ? நீங்களும் பின் நவீனத்துவ புயலில் சிக்கிட்டிங்களா ?/
;)))))))))))))))

வார்த்தை சூன் 2009 இதழில் தங்களின் சதுரங்கம் கவிதையைப் படித்தேன். மீண்டும் ஒரு முறை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துகள்

முகம் பற்றிய கவிதையை நேரம் கிடைக்கும்போது தங்களுடன்
பகிர்ந்துக் கொள்கின்றேன்

அன்புடன்
திகழ்

மங்களூர் சிவா said...

/
குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?
/

சூப்பர் அண்ணாச்சி!

love your job, not your company.

cheena (சீனா) said...

அன்பின் அண்ணாச்சி

அருமை அருமை இடுகை அருமை

வாழ்வில் முன்னேற வேண்டுமாயின் தன்னைத்தானே தயார் செய்ய வேண்டும் - அபாடிச் செய்பவர்கள் விழுக்காடு மிகக் குறைவே -கிடைப்பது போதும் என எண்ணுபவர்களே அதிகம்.

என்ன செய்வது

நம்மால் செய்ய இயன்ற புன்னகையை அளிப்போம் - தேவை என வ்நதால் ஆவன செய்வோம்.

நல்வாழ்த்துகள்

நர்சிம் said...

இந்தப் பதிவோடு முழுக்க முழுக்க முரண்படுகிறேன் அண்ணாச்சி.

நிறைய காரணங்களால்..

அடிவயிற்றில் நெருப்பிருக்கும் எவனும் 20வயதில் எந்த வேலை செய்பவன் என்றாலும் முன்னேறுவது உறுதி.

கார்க்கி said...

அருமை அண்ணாச்சி

வடகரை வேலன் said...

நன்றி பித்தன்.
நன்றி கோவி.
நன்றி நாஞ்சில் நாதம்.
நன்றி விக்னேஷ்வரி
நன்றி புதியவன்.
நன்றி கார்த்தி
நன்றி அமிர்தவர்ஷினி அம்மா.
நன்றி ராஜு
நன்றி மஞ்சூர் ராசா.
நன்றி TVRK சார்.
நன்றி வினிதா.
நன்றி சுரேஷ்.
நன்றி வெயிலான்
நன்றி திகழ்.
நன்றி சிவா.
நன்றி சீனா சார்.
நன்றி நர்சிம்.
நன்றி கார்க்கி.

கிர்பால் said...

பதரின்றி நெல்மணிகளும் விளையுமோ?
குப்பைக்குப் போவதனாலேயே பதர் கீழ்மையடைந்து விடுமோ?


செய்யும் தொழிலைத் திருந்தச் செய்யும் பட்சத்தில் எத்தொழிலும் நற்தொழிலே.

ஊர்க்குட்டைகள் ஆறாய் எழுந்து ஓடிவிட்டால் ஊருக்குள் தாகம் தீர்ப்பது யார்?

////குறைந்தபட்சம் அவர்கள் மீதொரு சினேகப் புன்னகை புரிவோம். நம்மால் முடிந்தது அதுதான். சேவைக் குறைபாட்டுக்கு அவர்கள் மீது எரிந்து விழாமல் புரிந்து நடந்து கொள்வோம். சரிதானே?////

அனைவரும் பின்பற்ற வேண்டிய பழக்கம்.

நல்ல பதிவு அண்ணாச்சி.

நாணல் said...

நல்ல பதிவு...

ஆதிமூலகிருஷ்ணன் said...

கருத்துகள் ஏற்புடையன.

சமீபத்தில் ஆஃப் ரோலில் டேட்டா எண்ட்ரிக்காக வந்த ஒரு பையன் பண்ணிய கூத்து.. சின்ன மேட்டர்தான். எதுக்கும் பெரிய பின்னூட்டமா போடுறதை விட தனிப்பதிவாகவே போட்டுடறேன். நேரம் கிடைக்காத இந்த நேரத்தில் விருட்டுனு எழுத இதுதான் சரியா இருக்கும்.

பட்டிக்காட்டான்.. said...

நல்ல பதிவுங்க..

இதுல பேருந்து நிலையத்துல தைலம், டயரி விக்குராங்களே அவங்கள விட்டுடீங்க..!

தினமும் நாலஞ்சு டயரி வித்து எப்படி வாழ்க்கைய நடத்துறாங்கன்னு நானும் நிறைய முறை யோசிச்சு பார்த்துருக்கேன்..

விடை தான் தெரியல..??!!