Monday, July 20, 2009

புலம்பலின் காற்தடங்கள்


8 மணிக்குப் பெரியவள்
8.30 க்குச் சின்னவள்
9.00 க்கு மனைவி
கூடவே நானும்
என யாவரும்
வெளியேறிய பின்

பூட்டிய கதவுகளுக்குள்
தனிமையில் தவித்து
ஆவலாதிப் புலம்பல்களை
வெளியேற்றுகிறது வீடு

மாலை திரும்பி
வீடு திறக்கையில்
கிடைத்த இடைவெளியில்
முட்டி மோதி
வெளியேறுகின்றன
அரூபக் காற்தடங்களை
சுவரெங்கும் பதித்தபடி.





இதே பாடற்பொருளில், நண்பர் அ.மு. செய்யதுவின் கறையான்கள் அறித்த மீதிக் கதவுகள் பதிவையும் வாசியுங்கள்.


.

37 பேரு பாராட்டியிருக்காங்க:

தராசு said...

படித்தேன், ரசித்தேன்.

பிரியமுடன்.........வசந்த் said...

முதல் தடவை வேலன் சாருக்கு பின்னூட்டமிடுகிறேன்....இதுக்காக இப்போதான் தங்களை வாசிக்கிறேன் தவறாமல் வாசித்துவிடுவேன் தங்கள் எழுத்துக்களை..எங்கே நான் பின்னூட்டமிட்டால் சின்ன பொடியன் என்று நினைத்துவிடுவீர்களோ என்றுதான்...பின்னூட்டங்கள் இடுவதில்லை.....முடிவு செய்திட்டேன் இனி பின்னூட்டலாமென்று....

கவிதை அழகு........

டக்ளஸ்... said...

"புலம்பல்"ன்னது நான் ஏதோ நம்ம "ஆதி" அங்கிள் பத்தின பதிவோன்னு நெனைச்சு வந்தேன் அண்ணாச்சி...
கவிதை நல்லாருக்கு.

அனுஜன்யா said...

நல்லா இருக்கு வேலன். உயிரில்லாப் பொருட்கள் என்று பொதுவாக எண்ணுபவைக்கு உயிர் கொடுப்பது கவிஞர்களின் வாடிக்கை. உங்கள் கவிதை படித்ததும் அது தான் தோன்றியது. கூடவே, வா.மணிகண்டனின் இந்தக் கவிதையும் நினைவுக்கு வந்தது. (அது முற்றிலும் வேறு என்றாலும்)

சுவரில் ஊர்ந்த கதைகள்

தன் நாவுகளால்
என் கண்ணீரையும்
அசைவற்ற விழிகளில்
நிர்வாணத்தின்
நெளிவுகளையும்
பதிவு செய்திருக்கிறது
-இந்தச் சுவர்.
இப்போது
படிமமாக்குகிறது.
சுண்ணாம்பினை
உதிர்த்து,
தனக்கான ஓவியங்களை.

Mahesh said...

இன்னிக்கு இருக்க்ற ந்யூக்ளியர் ஃபேமிலி அமைப்புல ஒவ்வொரு வீடும் இப்பிடித்தான் இருக்குமோ?

நிஜமா நல்லவன் said...

ரசிக்க வைக்கும் வரிகள்!

கே.ரவிஷங்கர் said...

கவிதை நல்லா இருக்கு. நம்ம ஊரு
ஒரு மிடில் கிளாஸ் வீடு படம் போட்டிருக்கலாமே. பாரின் வீடு தவிர்த்திருக்கலாம்.

கவிதையோடு ஒன்றலாம்.

மண்குதிரை said...

rasiththeen

"அகநாழிகை" said...

அண்ணே,
கவிதை நன்றாக இருக்கிறது. யாருமற்று வெறுமையான வீட்டில் புழங்கக்கூடிய காற்றில் கலந்த பேச்சு பற்றிய எண்ணங்களை அழகாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். குடும்பத்திற்குள் நிகழும் நேசம், பகைமை, பாசம், அன்பு, காதல் எல்லாவற்றுக்குமான மௌன சாட்சியான நிற்பது வீடுதானே.

நன்றாக இருக்கிறது கவிதை, ரசித்தேன்.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

நட்புடன் ஜமால் said...

அருமை அண்ணாச்சி.


[[முட்டி மோதி
வெளியேறுகின்றன
அரூபக் காற்தடங்களை
சுவரெங்கும் பதித்தபடி.
]]

வித்தியாசமான சிந்தனை.

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப அருமையா இருக்கு வேலன். பாராட்டுக்கள்

நேரம் இருக்கும்போது இதையும் படிக்கவும். நண்பர் செய்யதுவின் "கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்"

http://amsyed.blogspot.com/2009/07/blog-post.html

பித்தன் said...

அருமையான கவிதை, தனிக் குடும்பத்தின் அவல நிலையை ஒரு ஹைக்கு போல் ஆனால் முகத்தில் அடித்தார்போல் சொல்லியுள்ளீர்கள்.

VIKNESHWARAN said...

இது கவிதை தானே?

வடகரை வேலன் said...

நன்றி அரசு.

நன்றி வசந்த். எழுத்துதான் நிக்கும். நீங்க பணக்காரனா, பெரிய ஆபீசரா, அழகானவரா(?!) இப்படி உயர்வு பாத்தெல்லாம் யாரும் பாராட்டுறதில்லை.

பிடிச்சிருந்தா பின்னூட்டம். அவ்வளவுதான்.

நன்றி டக்ளஸ். இதுவும் ஒரு புலம்பல்தான்.

நன்றி அனுஜன்யா. நா.மனிகண்டனின் கவிதை அருமை.

நன்றி மகேஷ். அதுதான் நிதர்சனம். கிராமத்து வீடுகளில் பூட்டாத கதவுகளைல் வாழ்ந்து, இந்த நிலை கண்டு மருளுகிறேன்.

நன்றி நிஜமா நல்லவன்

நன்றி ரவி ஷங்கர். வீடு படம் கிடைக்கவில்லை. இதுதான் இருந்தது.

நன்றி மண்குதிரை

நன்றி வாசு, மின்னஞ்சலில் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கும்.

நன்றி ஜமால்.

நன்றி நவாஸ். படித்தேன் ரசித்தேன். என் பதிவிலேயே சுட்டியும் வைத்தேன்.

நன்றி பித்தன்.

நன்றி விக்கி. ஆமா இதென்ன சந்தேகம். லேபிலில் அப்படித்தான் போட்டிருக்கேன். எனவே இது கவிதைதான். மேலும் இத்தனை பேர் ஒத்துக் கொண்டதால் அது உறுதியும் ஆகி விடுகிறது.

டக்ளஸ்... said...

\\நன்றி அனுஜன்யா. நா.மனிகண்டனின் கவிதை அருமை.\\

அது நா.மணிகண்டன் இல்லை அண்ணாச்சி.
வா.மணிகண்டன்..!
:)

தண்டோரா said...

உங்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள ஆசை..

S.A. நவாஸுதீன் said...

\நன்றி நவாஸ். படித்தேன் ரசித்தேன். என் பதிவிலேயே சுட்டியும் வைத்தேன். /

வேண்டுகோளை ஏற்றது மட்டுமல்ல, அதை சிறப்பித்தும் உள்ளீர்கள்.

ரொம்ப நன்றி நண்பா

புதுகைத் தென்றல் said...

மிக மிக அருமை

லவ்டேல் மேடி said...

// 8 மணிக்குப் பெரியவள்
8.30 க்குச் சின்னவள்
9.00 க்கு மனைவி //



அட பாவமே......!!! இப்போ சீரியல் பேரெல்லாம் மாத்தீட்டாங்களா....?




நல்ல அசைபோடக் கூடிய கவிதை.....!! நல்லாருக்குங்ன்னோவ்......!!!



வாழ்த்துக்கள் .......!!!

அ.மு.செய்யது said...

பூட்டிய‌ வீட்டின் புல‌ம்ப‌ல்க‌ளை நேர்த்தியாக‌ ர‌சிக்கும் ப‌டி ப‌திவு செய்திருக்கிறீர்க‌ள்.

மேற்கோள் காட்டிய ந‌ண்ப‌ர் ந‌வாஸூக்கும்,அத‌ற்கு சுட்டு கொடுத்த உங்க‌ளுக்கும்
ந‌ன்றிக‌ள்.

நாஞ்சில் நாதம் said...

ரசித்தேன்.

தாரணி பிரியா said...

எங்க வீடும் இப்படிதான் அண்ணா :). சாயந்திரம் கதவை திறந்ததும் வெளிய போற காத்து இன்னிக்கு என்ன புலம்புச்சோ அப்படின்னு இனி நிறைய யோசிக்க வைக்கும் :)

மங்களூர் சிவா said...

/
அனுஜன்யா said...

நல்லா இருக்கு வேலன். உயிரில்லாப் பொருட்கள் என்று பொதுவாக எண்ணுபவைக்கு உயிர் கொடுப்பது கவிஞர்களின் வாடிக்கை.
/

கண்டிப்பாக.

வீட்டை பற்றிய கவிதை அருமை.

Jeeves said...

அண்ணாச்சி,

அருமையா இருக்கு

T.V.Radhakrishnan said...

ரசித்தேன்.

யாத்ரா said...

கவிதை மிகவும் பிடித்திருக்கிறது அண்ணாச்சி.

அத்திரி said...

அண்ணாச்சி மிகவும் அருமை

Nundhaa said...

இந்தக் கவிதை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது

ஆ.முத்துராமலிங்கம் said...

கவிதை நல்லா இருக்கு.
அ.மு.செயதுவின் பதிவை முன்பே படித்தேன் அதுவும் நன்றானது!

மணிநரேன் said...

நன்றாக இருந்தது. வார்த்தைகளை ரசித்தேன்.

'இனியவன்' என். உலகநாதன் said...

கவிதை நல்லா இருக்கு அண்ணாச்சி.

இய‌ற்கை said...
This post has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

மிகச்சிறப்பான கவிதை அண்ணாச்சி, ஆனால் எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.

தலைப்பைப்பார்த்துவிட்டு முதலில் என்னைத்தான் பாராட்டி எதையும் எழுதி வைத்துவிட்டீர்களோ என்று ஆவலோடு ஓடி வந்தேன்.. ஹிஹி.. ரொம்பத்தான்..

கார்க்கி said...

அண்ணாச்சி..
அருமை

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

நல்ல சிந்தனை - ஒருவரும் இல்லா வீட்டில் வீடே புலம்பினால் ....

அரூபக் காற்தடங்களை சுவர்களீல் பதித்தல்

நல்லா இருக்கு

நாடோடி இலக்கியன் said...

இப்போதுதான் கவிதை பழகுகிறேன், அதனால் அவசரமின்றி நிதானமாக வாசித்து புரிந்து கொண்டு பின்னூட்டம் போடலாமென்றிருந்தேன்.

கவிதை அருமை.

சேரல் said...

ரசித்தேன்.
-ப்ரியமுடன்
சேரல்