Showing newest 2 of 8 posts from December 2008. Show older posts
Showing newest 2 of 8 posts from December 2008. Show older posts

Wednesday, December 31, 2008

மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு

சென்ற பதிவில் நெல்லைக் கண்ணன் கவிதை ஒன்றைப் பின்னூட்டமாக இட்டிருக்கிறார் பரிசல்.

தமிழ்க்கடவுள்
முருகன் கோவிலில்
நீண்ட வரிசை
ஜனவரி 1.

இதில் ஏதும் தவறிருப்பதாகத் தெரியவில்லை. காலண்டர் வருடம் ஜனவரி 1 ல் தொடங்குவதைத்தானே காலகாலமாகக் கடைபிடித்து வருகிறோம்? அன்று வருடத்தின் முதல்நாள் எனவே செண்டிமெண்டாகக் கோவிலுக்குப் போவது சரிதானே?

கோடை விடுமுறை கழிந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தை, முதள் நாள் உடை, ஷீ, பேக், புத்தகம், பேனா என புதியனவாக, ஒரு உற்சாகத்துடன் செல்லுவது போலத்தான் இதுவும்.

மேலும் இந்தியர்கள் மொழியால் பிரிக்கப்பட்டிருக்கின்ற வேளையில், தமிழ்ப் புத்தாண்டு, தெலுங்குப் புத்தாண்டு, மலையாளப் புத்தாண்டு போன்றவை வேறு வேறு தேதியில் வருகின்றன. இந்தியா முழுமைக்குமான ஒரு புத்தாண்டு என்பது இதுதானே, வேறென்ன செய்ய?

என்னுடைய வாடிக்கையாளர்கள், சென்னை, பெங்களூரு, கொச்சி மற்றும் மும்பையில் இருக்கின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு ஒரே நாளில் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்ல.

புத்தாண்டு பற்றிய போஸ்டர் ஒன்று ஈரோடு முழுவதும் ஒட்டப்பட்டிருக்கிறது கீழ்க்கண்ட வாசகத்துடன்.

மானமுள்ள தமிழா, தை முதல் நாள்தான் புத்தாண்டு

தை முதல் நாள்தான் புத்தாண்டு தொடங்குகிறதா இல்லையா என்பதைத் தள்ளி வைத்து விட்டு, ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடுவதில் என்ன தீமை என்று யாராவது சொல்லுங்கள். குடி கும்மாளம்தான் கொண்டாட்டம் என்பதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. அது தவிர்த்து இதைக் கொண்டாட வேறு வழியிருக்கிறது. குறைந்த பட்சம், வாழ்த்துச் சொல்லி இனிப்புப் பரிமாறிக் கொள்ளத் தடை ஒன்றுமில்லையே?

சில தீர்மானங்களை எடுக்கவும் ( அதை கடைபிடிக்கிறோமா என்பது வேறு) அன்று நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து வாழ்த்துச் சொல்லவும் மற்றுமுமொரு சந்தர்ப்பம். ஆனால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சொல்லும் தகுதி யாருக்கு இருக்கிறது.

பெயருக்கு முன் இனிசியல் ஆங்கிலத்தில்தான் போடுகிறோம்.

கேக் வெட்டித்த் பிறந்த நாள் கொண்டாடுகின்றோம்.

பேண்ட் சர்ட் அணிந்துதான் தமிழை வளர்க்கின்றோம்.

ஆங்கிலத் தேதியில்தான் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றோம்.

தமிழ்
புத்தாண்டு அன்று தொடங்கும் காலண்டர் எதுவும் இல்லை.

தமிழக
அரசு ஊழியர்களுக்கான டயரி ஆங்கிலப் புத்தாண்டுக்குத்தான்.

அரசாங்கக் கலண்டர்கள் ஆங்கில புத்தாண்டுக்குத்தான்.

ஜனவரி
முதல் டிசம்பர் வரைதான் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை நாட்கள்கணக்கிடப்படுகின்றன.

ஜனவரி
1 அரசே புத்தாண்டு தினம் என விடுமுறை அளித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, தை முதல்நாளைப் பொங்கலாகக் கொண்டாடும் விதமாக உழவர்கள் வாழ்க்கை இருக்கிறதாவெனில் இல்லை என்பதே நிதர்சனம்.

உழவன்

அறுவடை செய்து
பொங்கல் வைத்தது
அந்தக் காலம்
அவனே
ரேசன் கடைக்
க்யூவில்
நின்று
பொங்கல் வைப்பது
கஷ்டகாலம்.


டிஸ்கி : தமிழ்ப் புத்தாண்டு அன்று HAPPY NEW YEAR ன்னு ஆங்கிலத்துல வாழ்த்துச் சொல்லுவது நகைமுரண் இல்லையா?

Tuesday, December 30, 2008

கதம்பம் - 30/12/08



அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஒவ்வொரு புத்தாண்டும் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளையும், சவால்களையும்அதை சாதிக்க புது உத்வேகத்தையும் அளிப்பதாகத்தான் இருக்கிறது.

******************************************************************

காந்தியடிகளால் இந்தியாவின் சொத்து என்று புகழப்பட்ட ஜீவா, வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்கிறார். எதிரே வரும் அவரது நண்பர் ஜீவாவைப் பார்த்து , “ தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

அதற்கு ஜீவா, “ பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார்.

அது சரி கையிலே என்ன வச்சிருக்கீங்க?”

தோழர்கள் கொடுத்த கட்சி நிதிஎன்றார் ஜீவா.

பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே?” என்றார் நண்பர்.

கட்சி நிதின்னு தோழர்கள் தந்த பணத்திலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம். அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தான் அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றும் செயலாக இருக்கும்என்றபடியே நடையைக் கட்டினார் ஜீவா.

பெருமூச்சு விடுவதைத் தவிர நம்மால் ஒன்றும் செய்ய இயலாது இப்பொழுது.


*********************************************************************

தமிழுக்கு சாகித்ய அகாடமி வழங்கும் விருது ெரும்பாலும் விமர்சனங்களுட்பட்டே இருந்திருக்கிறது. ஒரு விதி விலக்காக இந்த வருடம் யாரும் விரல் நீட்டிக் குறைபட முடியாத, முழுவதும் தகுதி உள்ள ஒருவருக்குக் கிடைத்திருக்கிறது.

பிரபல மிழ் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குமின்சாரப்பூஎன்ற அவரது சிறுகதை தொகுப்பிற்காக அரசின் சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள மேலாண்மறைநாட்டை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (59). ஊர் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலத் துணைச் செயலாளரான இவர், 5ஆ‌ம் வகுப்புவரை படித்துள்ளார், பலசரக்கு கடை வைத்துள்ளார்.

இவரது சிபிகள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்துள்ளேன். ஒரு கிராமத்திலிருந்து டவுனுக்குக் கிளம்பும் டவுன் பஸ்ஸில் ஏறும் பயணிகளின் மன நிலையை பதிந்திருப்பார். யாரும் யாருக்கும் எதையும் விட்டுத்தரத் தயாராக இல்லாத உறுதியுடன் இருப்பர். ஆனால் சக பயணியான நிறைமாதக் கர்ப்பிணிக்கு பிரசவ வலி எடுத்ததும் எல்லோரும் அவரவர் வழியில் உதவுவதுடன், ஒத்துழைப்பும் நல்குவர்.

இந்த வித்தியாச மன நிலையை மிக அழகாகப் படம் பிடித்திருப்பார். அவரது கதை மாந்தர்கள், இத்தரத்தினரே.

விருது பற்றிய மாதவராஜின் பதிவு .

***************************************************************

எது கவிதை என்பதில் அவரவருக்கான அபிப்ராயம் அவரவருக்கு, எனினும்பொதுவான கருத்து அது எழுதியவர் உணர்ந்ததை படிப்பவருக்குக் கடத்தவேண்டும் என்பதே.

கவிதை என்பதற்கான இலக்கணம் வெவேறெனினும், மேற்ச்சொன்ன இலக்குஎட்டப்படுமாயின், அது எவ்வாறாக இருப்பினும் கவிதைதான்.

விகடனில் வெளியானஇந்த முத்திரைக் கவிதைகள் அவ்வகை.


மனசு


சோகக் கலவை
பூசிய முகங்கள்
எறும்புத் தொடர்தலாய்
துக்க விசாரிப்புகள்
இறுதிச் சடங்குகளில்
இனிய நண்பன்
கவலைக்குள் முங்கி
தேகம் நனைக்கையில்
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய
பத்தாயிரக் கடனை
பத்தினியிடம்
சொல்லியிருப்பானா..?

- பா.கீதா வெங்கட்


உயிரின் ஒலி

வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை

- மகுடேசுவரன்


செவலையெனும் சித்தப்பு

அப்பா போனதுக்கப்புறம்
செவலைதான்
எங்களுக்கு சோறுபோட்டுச்சு.

மூட்டை ஏத்தி வந்தப்ப
கால்முறிஞ்ச செவலையை
அடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.

எங்களை விட்டுப் பிரிந்த
செவலை இறந்துபோனாலும்
எந்தத் தப்பிலாவதும்
தவுலிலாவதும்
அழுதுகொண்டுதானிருக்கும்
எங்களைப்போல.

- சிவராஜ்

***************************************************

ரயிலில் இரு பெண்மணிகள், சுமார் 35 வயதிருக்கும், தங்களுக்குள் யார் வயதுகுறைவு என்பது குறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர், பிரண்ட்லியாகத்தான். இருவரும் தங்கள் வயது 25 லிருந்து ஒன்றோ இரண்டோதான் அதிகம் என்பதைநிறுவ மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர்.

பொறுக்க முடியாமல் அருகில் அமர்ந்திருந்த
50 வயசுக்காரர் எழுந்து சொன்னார்,

என்னக் கொஞ்சம் அப்பர் பெர்த்துக்கு ஏத்தி விடுறீங்களா?”

ஏங்க

இல்ல எனக்கு வயசு
12 தான் ஆச்சு , மேல ஏற முடியாது, அதுதான்