Monday, June 30, 2008

காத்திருந்த காதலி



”சங்கர்”

”சொல்லு கெளரி”

”நல்லா இருக்கியா?”

”ம், நீ எப்படி இருக்க?”

”ஏன் ரெண்டு நாளா கூப்பிடல?”

”கொஞ்சம் வேலை இருந்துச்சு”

”என் ஞாபகம் இருந்தாச் சரி”

”சராசரி காதலி மாதிரியே பேசுர”

”வேற என்ன செய்ய? நானும் நம்ம கல்யாணம்னு எப்பன்னு கேட்டுட்டே இருக்கேன், நீயும் மழுப்பீட்டே இருக்கே”

”புரிஞ்சுக்கோ கெளரி, இப்பத்தான் ஒரு தொழில் அமைஞ்சுருக்கு. கொஞ்சம் சுதாரிச்சுக்கிறேன்”

”என்னவோடா, நீ சொல்லும்போது புரியிற மாரி இருக்கு ஆனா மனசுதாங் கேக்கமாட்டேங்குதுவ” என்றவாறே அலுப்புடன் போனை வைத்தாள்.



கெளரியின் தந்தை பம்ப் தொழில் நிறுவனம் ஒனறை நடத்தி வருகிறார். கெளரி தந்தைக்கு உதவியாக நிர்வாகத்தைக் கவணிக்கிறாள்.

சங்கரின் தந்தை வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர்.

சங்கரும் கெளரியும் பள்ளித் தோழர்கள், ஒரே கல்லுரியில் படித்த நெருக்கம் காதலை இதயத்தில் விதைத்தது.

தங்கள் காதலைத் தெரியப் படுத்தியதும், ஆரம்ப காலகட்ட சிறு எதிர்ப்புக்கு பிறகு பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதில் இருவருக்கும் மகிழ்ச்சி.

சங்கர்தான் திருமணம் தற்பொழுது வேண்டாம், ஒரு வருடம் கழித்துச் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டிருக்கிறான்.

தன் நண்பன் கார்த்திக்குடன் சேர்ந்து ஆரம்பித்த கேட்டரிங் செர்விஸ் காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இந்த சமயத்தில் திருமணம், கவணச்சிதறலுக்கு வழி வகுக்கும் என்பதால் ஒத்திப் போட்டிருக்கிறான்.



மூன்று மாதங்கள் கழித்து ஒரு நாள்,

”கெளரி, நான் கார்த்திக், கொஞ்சம் கங்கா ஹாஸ்பிடல் வர முடியுமா?”

”ஏன்? யாருக்கு என்னாச்சு?”

”இல்ல சங்கருக்குச் சின்ன ஆக்சிடெண்ட். பலமா ஒன்னும் இல்ல. உடனே வா ப்ளீஸ்”

(கார்த்திக் சொன்னதுல பாதி மெய் மீதிப் பொய்)

இந்தக் கதையைப்
பரிசல் காரன்
தொடர்ந்தது இங்கே ,
வெயிலான்
தொடர்ந்தது இங்கே ,
கிரி தொடர்ந்தது இங்கே
ஜெகன் தொடர்ந்தது இங்கே
tbcd தொடர்ந்தது இங்கே
கயல்விழி தொடர்ந்தது இங்கே
மை ப்ரன்ட் தொடர்ந்தது இங்கே     
கோபிநாத்
தொடர்ந்தது  இங்கே
கப்பி தொடர்ந்தது இங்கே

Wednesday, June 25, 2008

5 பாடத்திலும் 100/100 - கல்லூரி மாணவி சாதனை.






திருப்பூரைச் சேர்ந்த சுகன்யா என்ற மாணவி B.Sc. (maths) கடைசி செமஸ்டரில் எழுதிய 5 பாடத்திலும் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவர் L.R.G அரசு கலைக் கல்லூரியில் படித்த இவர் இதுவரை மொத்தம் 12 பாடங்களில் 100/100 வாங்கியிருக்கிறார்.

இவரது சாதனை குறித்து பாரதியார் பல்கலைக் கழகத் துனை வேந்தர் ,“இந்த பல்கலைக் கழகத்தில் இதுவரை நிகழ்த்தப் படாத சாதனை இது. இதற்காக மாணவி சுகன்யாவையும் அவரது கல்லூரி ஆசிரியர்களியும் பாராட்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

சுகன்யா பற்றிய முக்கிய விபரங்கள்

- தந்தை சிறு பாத்திர வியபாரி
- தயார் பனியன் கம்பெனியில் வேலை
- +2 படித்தது தமிழ் வழிக் கல்வியில்
- தனியாக டியூசன் எதுவும் படிக்கவில்லை.


தற்பொழுது வேலையில் சேர்ந்து விட்ட சுகன்யா, சிறிது இடைவெளி விட்டு படிப்பைத் தொடர உள்ளார்.

தமிழ் வழிக் கல்வி பயின்று ஆங்கிலம் மூலம் கல்ல்லுரிப் படிப்பைத் தொடர்ந்த்தது கடினமாக் இருந்ததா என்ற கேள்விக்கு சுகன்யாவின் பதில் கீழே.

புது பயிற்று மொழியில்தான் படித்தாக வேண்டும் என்ற உண்மையை ஏற்றுக் கொண்டு, முழு ஈடுபாட்டுடன், நமது முழுத்திறமையை வெளிப்படுத்தினால் வெற்றி பெறுவதை யாரலும் தடுக்க முடியாதது.


வலையுலக அன்பர்கள், பின்னுட்டமிடுவதை விட ஒரு சிறு பாராட்டுக் கடிதம் தங்கள் கைப்பட எழுதி, R.சுகன்யா, L.R.G அரசு கலைக் கல்லூரி, பல்லடம் ரோடு, திருப்பூர் - 642604, என்ற முகவரிக்கு அனுப்பினால், மிகவும் மகிழ்வேன். கவரில் மறக்காமல் 100 / 100 க்கு வாழ்த்துக்கள் என்று தெளிவாகக் குறிப்பிடவும்.

கடிதம் அனுப்பியதை, பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள்

இதைப் பதிவிடும் போது எனது வலப்பதிவுக்கு வருகை தந்திருந்தவர்கள் எண்ணிக்கை 2144. தற்பொழுது (26 - 9:30 காலை) 2278. பார்க்கலாம் எத்தன கடிதம் என்று.

Sunday, June 22, 2008

இருபால் பெயர்கள்


இருபால் பெயர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு இட வேண்டும் என்று யோசனை செய்திருந்தேன்.

பரிசல்காரனின் எதிர்பாராத திருப்பம் பதிவைப் பார்த்தவுடன் இதோ.

  • பாரதி
  • தமிழ்
  • விஜி
  • ஜானகி (ராமன்)
  • சீதா (லட்சுமி, ராமன், பதி)
  • ரமணி
  • ராதா (கிருஷ்ணன்)
  • சந்திரா (சேகர்)
  • வித்யா (சாகர்)
  • முத்து (லட்சுமி)
  • சுதா(கர்)
  • அன்பு
  • கெளரி (சங்கர்)
  • மதி
  • சக்தி
  • ஜோதி
  • மணி
  • சத்யா
  • ஜீவா
  • பாலா
  • கலை (செல்வன், அரசன்)
  • எழில்
  • மலர்
  • மஞ்சு
  • பழனி (அம்மாள், அப்பா)
  • இசக்கி
  • தரணி
  • ராமு
  • கவி
  • கார்த்தி
  • மனோ
  • மாணிக்கம்
  • ஞாணம்
  • கிருபா
  • பிரபா
  • சபரி
  • பரணி
  • காளி
  • கனகு
  • துர்கா
  • சூர்யா
  • ராஜாமணி
  • அபி (நயா)
  • கிரன்
  • மது
  • மதி
  • தாமரை
  • பச்சை
  • வெள்ளை
  • பிச்சை
  • மீனாட்சி
  • ஜக்குபாய்
  • ரியா(ஸ்)
  • அருள்
  • ஆதி
  • கோவிந்தா
  • மல்லீ
  • ஜெயா
உங்களுக்குத் தெரிந்த பெயர்களைப் பின்னூட்டமிடவும்.

Saturday, June 21, 2008

யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களை நடிக்க வைக்க ஆசைப்பட்டு பெரிய பெரிய இயக்குனர்கள் உங்க வீட்டு வாசல்ல வந்து நின்னா யார் இயக்கத்துல நடிப்பீங்க?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்



1. பாலசந்தர் 2. பாலு மகேந்திரா 3. கே.எஸ். ரவிக்குமார் 4. கே. பாக்யராஜ் 5. பி. வாசு 6. விக்ரமன்

அப்படின்னு லதானந்த பாத்து விஜயகோபால்சாமி கேக்குராருங்க.

அவரு பதில் நாளைக்கு. நம்ம பதில் இன்னைக்கு.


அவரு மட்டுந்தான் படம் வர்ரதுக்கு முன்னால விமர்சனம் போடுவாரா?

ஆப்சன் 4 பாக்யராஜ்தான் சரியாயிருக்கும்.

பாக்யராஜ் கலர் கலரா ட்ரெஸ் போடுவாரு. இவரு கலர் கலராப் பதிவு போடுவாரு.

பாக்யராஜ் பட கதானாயகன், நெறையாப் படத்துல அவரே,

கொஞ்சம் அப்பாவி,
கொஞ்சம் குறும்பன்,
கொஞ்சம் குசும்பன்,
கொஞ்சம் வீரன்,
கொஞ்சம் படிப்பாளி

இப்படி கலந்துகட்டி வேஷம் போடுவாரு.

நம்மாளும் இப்படி பல பதிவு போட்டுருக்கார்.

இவரு எவ்வளவு அப்பாவியா தன்னைப் பத்தி எழுதி்யிருக்காரு பாருங்க.

இங்க எப்படி குறும்பு செய்றாரு பாருங்க.

இங்க இவரோட குசும்பு பாருங்க.

புத்திசாலி மாதிரி படம் போடராரு.

எவண்டா என்னக் கேள்வி கேக்குறதுன்னு சவால் இங்க.

நடுவுல இலக்கியப் போட்டி வேற.

கொஞ்சம் சுய எள்ளல் ஒரு ஓரமா.


நல்ல கதையும் எழுதிருக்காருங்கோ


பாப்போம் அவரு ஆப்ஷன் யாருன்னு.

Friday, June 20, 2008

தற்கொலைக்குத் தயாரானவன்






தற்கொலைக்குத் தயாரானவன்

பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்

அவன் கையில்
குடும்பப் புகைப்படமொன்று கிடைக்கிறது
அதிலிருந்து தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்கத் துவங்குகிறான்

எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுண்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது.

-
ராஜி பத்மனாபன் - நான்காம் பாதை - சிற்றிதழிலிருந்து

Sunday, June 08, 2008

INSIGHT IN2 DECISION MAKING

A group of children were playing near two railway tracks, one still in use while the other disused. Only one child played on the disused track, the rest on the operational track.

The train is coming, and you are just beside the track interchange. You can make the train change its course to the disused track and save most of the kids. However, that would also mean the lone child playing by the disused track would be sacrificed. Or would you rather let the train go its way?

Let's take a pause to think what kind of decision we could make................ .. ... ..

scroll down


















Most people might choose to divert the course of the train, and sacrifice only one child. You might think the same way, I guess. Exactly, I thought the same way initially because to save most of the children at the expense of only one child was rational decision most people would make, morally and emotionally.

But, have you ever thought that the child choosing to play on the disused track had in fact made the right decision to play at a safe place?

Nevertheless, he had to be sacrificed because of his ignorant friends who chose to play where the danger was.

This kind of dilemma happens around us everyday. In the office, community, in politics and especially in a democratic society, the minority is often sacrificed for the interest of the majority, no matter how foolish or ignorant the majority are, and how farsighted and knowledgeable the minority are.

The child who chose not to play with the rest on the operational track was sidelined. And in the case he was sacrificed, no one would shed a tear for him.

The great critic Leo Velski Julian who told the story said he would not try to change the course of the train because he believed that the kids playing on the operational track should have known very well that track was still in use, and that they should have run away if they heard the train's sirens.

If the train was diverted, that lone child would definitely die because he never thought the train could come over to that track! Moreover, that track was not in use probably because it was not safe.

If the train was diverted to the track, we could put the lives of all passengers on board at stake! And in your attempt to save a few kids by sacrificing one child, you might end up sacrificing hundreds of people to save these few kids.

While we are all aware that life is full of tough decisions that need to be made, we may not realize that hasty decisions may not always be the right one.

"Remember that what's right isn't always popular... and what's popular isn't always right."

Everybody makes mistakes; that's why they put erasers on pencils.

Saturday, June 07, 2008

ஜெயமோஹனின் தேர்வு

ஜெயமோஹன் தனது வலைத்தளத்தில் நல்ல கட்டுரைகளைப் பதிவு செய்கிறார்.

பொதுவாக அவரை வலைப்பக்கங்களில் திட்டுபவர்களே அதிகம்.

ஒருவரைப் பற்றிய முன்கூட்டியே உருவாக்கிக் கொண்ட பிம்பத்தின் அடிபடையில் விமர்சிப்பதைத் தவிர்த்து, எழுத்துக்களையும் படைப்புக்களையும் விமர்சிப்பது ஆரோக்யமானது.

அவரது சமீபத்திய பதிவு தேர்வு.

அந்தப் பதிவில் கண்டுள்ளவாறு ஏதோ ஒரு விதத்தில் நாமும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

நம் கல்வி முறை குறித்த ஒரு ஆரோக்கியமான விவாதத்திற்கு வித்திட்டிருக்கிறார்.

உங்கள் கருத்தையும் பதிவிடலாமே.

Friday, June 06, 2008

எங்களுக்கு ஒரு அறை இருந்தது


கவிதைகளை 3 வகைப்படுத்தலாம்

புலவருக்குப் புரியும்

இந்த வகைக் கவிதையப் புரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்சமாவது படிச்சிருக்கனும். இது நம்ம பேட்டை இல்லை. நாம ஏதாவது சொல்லப் போக, யாராவது அரு பழ வேல என்று தொடங்கும் புலவர் சரிக்குச் சரி கூப்பிடுவாங்க. நம்மால முடியாது. விட்டுடுவோம்

நம்ம அண்ணன் லதானந்த் கூட வெண்பாப் போட்டி வெச்சுறுக்கார். வெண்பா எத்தனை, வெறும்பா எத்தனை தேருதுன்னு பார்க்கலாம்.



யாருக்கும் புரியாது

பின் நவீனத்துவம், கட்டுடைத்தல், அழகியல், முற்போக்கு போன்ற வார்த்தைகள் நிரம்பியது. முக்கியமான தகு்தி யாருக்கும் புரியக்கூடாது. எழுதுறவங்களுக்குப் புரியு்மான்னு என்னைக் கேக்கக் கூடாது.

நிறைய உதாரணம் தரலாம். ஆனால் கட்டற்ற சுதந்திரம் தரும் பயம் காரணமாக தவிர்த்துவிடலாம்.

‘நினைவின் காட்டுப்பாதை
கரிய குதிரை
நான் அலையும்போது
யாரின் குரல்?’

மனசு கஷ்டமா இருக்கும்போது இந்த மாதிரிக் கவிதைகளைப் படிக்க நேர்ந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும். ஹெவியா இன்ஸுரன்ஸ் எடுத்துக்குங்க.

இந்த மாதிரிக் கவிதை எழுதுவது பத்தி ஜெயமோஹன் எழுதியிருக்கார் இங்கே


எல்லோருக்கும் புரியும்

இதுதாங்க நம்ம வகை. படிக்க ஆரம்பிச்ச மூனாவது அடியிலேயே நம்மை உள்ள இழுத்துடனும்.

படிக்கும்போதோ அல்லது முடிச்ச உடனேயோ நாமும் இது போல் அநுபவிச்சிருக்கமே என்று உணர வைக்க வேண்டும்.

கால‌ம் (ஆக‌ஸ்‌ட் 1991) எ‌ன்ற ‌சி‌ற்‌றித‌ழி‌ல் சமயவேல் எழுதிய எங்களுக்கு ஒரு அறை இருந்தது க‌விதையை த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் தளத்திலிருந்து கொடுத்துள்ளேன்.


ஆசிரமம் தெருவில்
எங்களுக்கு ஒரு அறை இருந்தது
நகரத்தில் எதனிடமும் ஒட்டுப்பட முடியாமல்
கூரைகளுக்கு மேல் மிதந்த
மிகச் சிறிய அறை அது.

சார்மினார் கோல்டுபிளேக் வில்ஸ் பில்டர்
செய்யது பீடிப் புகைகளூடே
விதம் விதமாய் உரையாடும் முகங்கள்
பேச்சுகள் பகிர்வுகள் விவாதங்கள்
துண்டன் துண்டமாய் வெட்டி அலசினோம்
வாழ்க்கையை

சமயத்தில் அறை நகர்ந்து
காந்தி மைதானத்தில் கூடும்
புற நகர்ச் சாலை பாலச் சுவர்
அல்லது மேடேறிக் கதிரேசன் மலை சேரும்
எங்கும் பேச்சுத்தான்

வாழ்வின் விசாரத்தை எப்பவும்
கூடவே இழுத்துக் கொண்டு
அலைந்தது எங்கள் அறை

உலகைச் சீரமைப்பதற்கான கருவிகளை
ஏராளமாய் உற்பத்தி செய்து (தலைகளில்)
அறை முழுவதும் தொங்க விட்டோம்

எது குறித்தும் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல்
அறைச் சுவர்கள் பிரியமுடன் கொடுத்த
சுதந்திரத்தை எல்லோரும் தின்று வந்தோம்

எங்கோ சாப்பிட்டோம்
எப்போதோ தூங்கினோம்
எல்லா இடங்களிலும் டீ குடித்தோம்
அவன் காசு கொடுத்தான்
இவன் சிகரெட் வாங்கினான்
சதா புகைப் பிடித்தோம்
இளந்தாடியுடனும், குறுஞ்சிரிப்புடனும்
ஒருவன் பாட்டில்கள் கொண்டு வந்தான்
இட்லிகளும் புரோட்டாக்களும்
பார்சலில் வந்தன
விதமான போதையில்
எல்லாவற்றையும் மிகத் தெளிவாக
விளங்கிக் கொண்டோம்

அறைக்காற்றில்
எங்கள் பெருமூச்சுகளையும்
ஆத்மாக்களையும் கலந்தோம்

நண்பர்கள் கூடக்கூட
அறை அகன்று விரிந்தது
ஒருவர் பாயில் மூவர் தரையில்
இருவர் சேரில்
படியில் இருவர் நியூஸ் பேப்பரில் ஒருவர் என
தாறுமாறாய் படுத்து
நிம்மதியாகத் தூங்கினோம்

அறையை விட்டுக் கிளம்பி
குடும்பம் கட்டியிருக்கும் நாங்கள்
வீட்டையும் அறையையும் இணைக்க முடியாமல்
திணறிக் கொண்டிருக்கிறோம்.


நீங்க படிச்ச நல்ல கவிதைய அறிமுகப்படுத்துங்களேன்.

Thursday, June 05, 2008

J.K.ரித்திஷ் அடுத்த சூப்பர் ஸ்டார்


இன்னும் மூனறு வருடங்களில் J.K.ரித்திஷ் சூப்பர் ஸ்டாராகிறார் என ஆரூடம் கூறியிருக்கிறார் 'நாயகன்' இயக்குனர்


'கானல் நீர்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். படம் வெற்றிபெற்றதோ இல்லையோ கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு கடஅவுட்களிலும் போஸ்டர்களிலும் இவரது முகம் பரிட்சயம்.

தமிழக அமைச்சர் சுப.தங்கவேலுவுக்கு இவர் பேரன் உறவு என்பதுடன் இராமநாதபுர மக்கள் தங்கள் மனசுக்குள் ரித்திஷூக்கு கோயில் கட்டி கும்பிடுகின்றனராம். எட்டாம் வள்ளலுக்கு பிறகு எண்ணிக்கை உயர்த்தும் அளவிற்கு வள்ளலாகவும் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
ரித்திஷ் இரண்டாவதாக நடித்துள்ள படம் 'நாயகன்'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அனிதா. இன்னொரு நாயகனாக ரமணாவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடித்துள்ள இப்படத்தை சரவண ஷக்தி இயக்கியுள்ளார். மரியா மனோகர் இசையமைப்பில் முத்துவிஜயன், யோகி, க.செழியன், கார்த்தி்க் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் பாடல்களையும், ட்ரெயிலர்களையும் வெளியிட, குடிசை மாற்றுவாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் பெற்று்கொண்டார். பாடல் சி.டி.யை செய்தி துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பெற்றுக்கொண்டார். படத்தின் ட்ரெயிலரை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார்.

விழா முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஜெயகுமார் ரெட்டி, "இரண்டு கோடி ரூபாய் படஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இப்போது எட்டு கோடி ரூபாய் பட்ஜெட்டை தொட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தின் நாயகன்தான். இராமநாதபுர மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கையும், மரியாதையையும் பார்த்தபிறகு படத்தை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்தோம். ரித்திஷ் - அனிதா ஆடிப்படும் பாடல் காட்சிக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இயக்குனர் சரவண ஷக்தி போசியபோது "அடுத்த மூன்று ஆண்டுகளில் ரித்திஷ் தமிழ்நாட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவார் என பாராட்ட" ரித்திஷ் முகத்தில் பெருமிதத்தின் எல்லை.

ஒரு வலையும் சில பின்னல்களும்









வலைப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. படத்தின் மேல் க்ளிக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.